ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் முறையீடு நாளை (03/11/2020)விசாரணை…..

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு வழக்கறிஞர்கள் நீலமேகம் முகம்மது ரஃபி ஆகிய 2 பேர் இன்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தனர். அதில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த சூதாட்டத்தை தடை செய்ய தடை விதிக்க வேண்டும் . மேலும் ஆன்லைன் ரம்மி விளம்பரம் குறித்த நடித்த நடிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இந்த […]

கீழக்கரையில் வீரகுல தமிழர் படை சார்பில் தமிழ்நாடு தின கொண்டாட்டம்…

கீழக்கரையில் தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர்1ம் தேதியை கௌரவிக்கும் வண்ணம் வீரகுல தமிழர் படை சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாவட்ட செயலாளர் மதுகணேஷ், கீழக்கரை நகர் பொறுப்பாளர்கள் முருகா, அஜித், பிரபு, விக்ரம்,கோபி, ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்

சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயிலில் நவாஸ்கனி எம்பி ஆய்வு…

இராமநாதபுரம் கீழக்கரை அருகே உள்ள சேதுக்கரையில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் புனித தீர்த்தகரை உள்ளது. இந்த தீர்த்தக்கரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக தினம் தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளானர். பெண்களுக்கு உடை மாற்றும் அறை, குடிநீர், மற்றும் தர்ப்பணம் செய்வதற்கு புதிய கட்டிடம், மேலும் கார்த்திகை மாதம் தொடங்க இருப்பதால் சபரிமலைக்குப் போகும் பக்தர்கள் சேதுக்கரையில் கடலில் நீராடி மாலை அணிவது வழக்கம் எனவே அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற […]

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

ஆளுநரின் நடவடிக்கை என்பது வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால் தற்போதைய தமிழக ஆளுநரின் நடவடிக்கை அதனை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது முதல் ஆளுநருக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதிகாரத்தை, வானளாவ அதிகாரமாக எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆகவே, தற்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற […]

கீழக்கரை காவல்நிலைய புதிய கட்டிடம் திறப்புவிழா காண்பது எப்போது??..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல்நிலையம் கடந்த 1987ம் ஆண்டு காவல்நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தநிலையில் அந்த கட்டிடத்தின் மேல் கூரைகள் மற்றும் சுற்று சுவர்கள் இடிந்து விழ தொடங்கியது.இந்நிலையில் தற்காலிகமாக அருகில் உள்ள காவல்துறை குடியிருப்பு பகுதியில் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடம் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என காவல்துறையினர் அபோதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பழைய காவல்நிலைய […]

எதிரும்.. புதிரும்.. ஓர் இடத்தில்.. எடப்பாடியும்… ஸ்டாலினும் ஒரே நேரத்தில் வந்திறங்கியதால் மதுரை விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு.. போட்டி போட்டு இருகட்சியினரும் வரேவேற்பு..

மதுரை விமான நிலையத்தில் ஒரே விமானத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும்,  திமுக தலைவர் மு க ஸ்டாலின் வருகை தந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை வரவேற்க வந்த முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ராமகிருஷ்ணன் மூக்கு கண்ணாடி உடைந்து கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் கம்பம் ராமகிருஷ்ணனுடன் சமாதன பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து,  மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி […]

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளே கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் ஹிதாயத் இளைஞர் நற்பணிமன்றம் சார்பாக முற்றுகை போராட்டம்..

கீழக்கரையில் இன்று (27/10/2020) நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளே கண்டித்து கீழக்கரை  கீழக்நாகர தமிழர் கட்சி மற்றும் ஹிதாயத் இளைஞர் நற்பணிமன்றம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண் இளங்கோவன் தலைமையில் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் ராஜ், கீழக்கரை நாம் தமிழர் கட்சி செயலாளர் வாசிம் அக்ரம், நகர் தலைவர் மன்சூர் தீன், ஹிதாயத் இளைஞர் நற்பணிமன்றம் செயலாளர் பயாஸ் அலி ,மற்றும் துணை செயலாளர் அன்வர்ஷா ஆகியோர் முன்னிலையிலும் […]

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்…

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு,வடக்குத் தெரு ஜமாஅத் மற்றும் வடக்குத் தெரு இளைஞர்கள் இணைந்து மூன்று நாட்களுக்கு (26,27&28) கபசுர குடி நீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களும் ஆர்வமாக கலந்து கொண்டு விநியோகத்தில் ஈடுபட்டனர் என்பது சிறப்பம்சம்…

கீழக்கரையில் உலமாக்களுக்கு இலவச மனை நல்லுள்ளம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரஹ்மானியா நகர் பகுதியில் வசிக்கும்  MMK காசிம் என்பவர் தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை கீழக்கரையில் உள்ள (ஆலிம்கள்) உலமாக்களுக்கு இலவசமாக வழங்கினார். அதை அவர்கள் கீழக்கரை நகர் உலமா சபை என்னும் பெயரில் தொழுகைப் பள்ளியும், அதில் ஒரு பக்கத்தில் அலுவலகமும் கட்ட முடிவு செய்து இன்று (26/10/2020) அருவலகம் கட்ட அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இதில் கீழக்கரையில் உள்ள முக்கியஸ்தர்கள், ஆலிம் உலமாக்கள் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள உலமாக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். […]

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இன்று (25/10/2020) ஏர்வாடி கல்வி தர்ம அறக்கட்டளை(EECT Trust) மற்றும் இக்ரா ஐ.ஏ.எஸ் அகடமி சார்பில் அரசு போட்டி தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு முகாம்..

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இன்று (25/10/2020) ஏர்வாடி கல்வி தர்ம அறக்கட்டளை(EECT Trust) மற்றும் இக்ரா ஐ.ஏ.எஸ் அகடமி சார்பில் ஏர்வாடி அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ குத்பா பள்ளிவாசல் வளாகத்தில்  அரசு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்  நூற்றுக்கணக்கான மாணவர்களும்  மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்சியில் சிறப்பு பேச்சாளர்களாக இக்ரா ஐ.ஏ.எஸ் அகடமியில் இருந்து அக்பர், யாசர் அரபாத், மஹாதிர் ஆகிய மூவரும்  அரசு போட்டித்தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு […]

கீழக்கரையில் ஆயுதபூஜை கொண்டாட்டம்…

கீழக்கரையில் இன்று பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது. தாங்கள் பயன்படுத்தும் வாகனம் கடைகளில் உள்ள பொருட்கள், அனைத்தையும் சுத்தம் செய்து. பழங்கள்,பொரி, கடலை, அவள், கொண்டைக்கடலை, போன்றவற்றை வைத்து பூஜை செய்தார்கள். கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

பசும்பொன்னில் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு….

இராமநாதபுரம் மாவட்ட கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை கமுதி, பசும்பொன் ஆப்பநாடு விளையாட்டு கழகம் சார்பில் தன்னார்வ ரத்த தான முகாம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி பசும்பொன்னில் இன்று (25.10.2020) நடந்தது. ஆப்பநாடு விளையாட்டு கழக தலைவர் எம்.பழனிச்சாமி தலைமை வகித்தார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை பொது மேலாளர் கி. அழகு முனி, பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் பி.சத்தியநாதன் முன்னிலை வகித்தனர். ஆப்பநாடு […]

கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேட்டில் நடைபெற்ற 17வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டி…

கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேடு பகுதியில் 17வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட்  முதலாம் ஆண்டு tournament இன்றை (25/10/2020) நடை பெற்றது. இதில் ஆர்வத்துடன் 11 அணிகள் பல்வேறு தெருக்களில் இருந்து கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு  ஹஜாஸ் தலைமை வகித்தார். மேலும் முஜீபுர்ரஹ்மான் ஒருங்கிணைப்பு பணிகளை செய்தார். இதில் இறுதி சுற்றில் SKT_MCF  மணல்மேடு கிரிக்கெட் அணி முதல் பரிசாக ரூ.1000 ரூபாயை  SDTU மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கீழை அஸ்ரப், முஹம்மது பாக்கர் மற்றும் SDPI செயல்வீரர் காதர் […]

இராமநாதபுரத்தில் 1,688 புகையிலை பாக்கெட்கள், 683 மது பாட்டில்கள் பறிமுதல்…129 பேர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம்  உச்சிப்புளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஜோதிமுருகன், தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் மதுவிலக்கு தீவிர வேட்டையில் இன்று (25.10.2020) அதிகாலை ஈடுபட்டிருந்தனர். வெள்ளரி ஓடை கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் குணசேகரன் தனது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவரது வீட்டை சோதனையிட்டதில் 180 மில்லி அளவுள்ள 353 மதுபாட்டில்கள் ,375 மில்லி அளவுள்ள 24 மதுபாட்டில்கள் மற்றும் 750 மில்லி அளவுள்ள 52 பீர் பாட்டில்கள் என 429 […]

கீழக்கரையில் நவராத்திரி விழா… கொலு படிக்கட்டுகள் அமைத்து அலங்கரிப்பு..

இந்தியாவில் தமிழகம் உட்பட அனைத்து இடங்களிலும் நவராத்திரியை ஒட்டி கொலு வைத்து கொண்டாடப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையிலும் பல்வேறு இடங்களில் கொலு வைக்கப்பட்டடுள்ளது. இந்த விழாவை ஒட்டி வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள முக அலங்கார நிலையம் வைத்திருக்கும் அசோகன் வீட்டில் வைத்திருக்கும் கொலு படிக்கட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருடைய வீட்டில் மிகவும் அழகாகவும்,  அருமையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அன்பு நகரில் அமைந்துள்ள இவரது வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி 1 முதல் 10 நாட்களுக்கு நவராத்திரி […]

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று 24.10.2020 நகர செயலாளர் பாசித் இலியாஸ் தலைமையிலும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் அற்புதகுமார் மற்றும் நகர் நிர்வாகிகள் முன்னிலையிலும் கீழக்கரை காவல் நிலையத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் மனுவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன்MP மீது சமூக வலைதளங்களில் அவதூறை பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த குஷ்பு, கல்யாணராமன், காயத்ரி ரகுராம், ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

கீழக்கரையில் தொடர் போதைப்பொருள் சோதனை பொதுமக்கள் மகிழ்ச்சி…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் அதிகமாக இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டு வருகிறார்கள். இப்பகுதிகளில் அரசு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான புகையிலை, ஆன்ஸ், பான் மசாலா போன்ற போதைப்பொருட்களை இளைஞர்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் உத்தரவின்படி உட்கோட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையில், தலைமை காவலர் கலை மன்னன், காவலர் சௌந்தரபாண்டி, காவலர் ஜெயகணேஷ், கீழக்கரையில் இருக்கும் அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை செய்து பல […]

பெரும் உயிர் சேதத்தை தடுக்குமா மின்சார வாரியம்……..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளுவாடி கிராமத்தில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஊரின் முக்கிய வழிப்பாட்டுத் தலமான பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் (மின் மாற்றி) டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த மின் கம்பத்தை சரி செய்யாவிட்டால். பெருத்த உயிர் சேதம் ஏற்படும் என்று ஊர் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதைப்பற்றி கீழக்கரை மின்சார வாரியத்தில் பலமுறை தகவல் சொல்லியும் எவ்வித […]

கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்… SDTU பாராட்டு..

இன்று 23/10/2020 தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கும் கடைகளை ஆய்வு செய்து காவல்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதியில் கீழக்கரை சார்பு ஆய்வாளர்கள் ரமேஷ் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த செயலை இராமநாதபுரம் மாவட்ட  SDTU தொழிற்சங்கம் மாவட்ட நிர்வாகம் பாரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்த நடவடிக்கையை இத்தோடு நிறுத்திவிடாமல் தொடரும் கடைகளுக்கு அபாதாராம் விதிக்க வேண்டும். இதனால் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கீழக்கரை […]

SDPI மதுரை சார்பாக தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களுக்கான விருது விழாவில் “கீழை நியூஸ்” நிருபருக்கு விருது..

மதுரை SDPI கட்சி சார்பாக தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியாலர்கள் என பேரிடர் காலம் மற்றும் பிற சமயங்களில் சமுதாய சேவை புரிந்தவர்களை அடையாளம் கண்டு பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதில் மதுரை மாவட்ட “கீழை நியூஸ்” நிருபர் வி.காளமேகத்துக்கு ஊடகவியல் மூலம் சிறந்த சமூக பணியாற்றிமைக்காக SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் 22/10/2020 அன்று நடைபெற்ற விழாவில் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கி “ஊடகவியலாளர்களின் சிறந்த சமூக சேவகர்” என  கௌரவிக்கப்பட்டர். வி.காளமேகம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!