கீழக்கரை திமுக இளைஞரணி துணை அமைப்பாளருக்கு கல்வி ரத்னா “நம்பிக்கை நட்சத்திர” விருது..

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம் மற்றும் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தனித்திறமை கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து சென்ற ஆண்டு முதல் விருதுகள் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கி கௌரவப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு பலருக்கும் இராமநாதபுரத்தில் கேணிக்ரையில் உள்ள யாஃபா மஹாலில் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (11/11/2020( மாலை நடைபெற்றது. இதில் […]

சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவருக்கு “கல்வி ரத்னா” விருது..

இன்று (11.11.2020) இராமநாதபுரத்தில் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் நினைவாக கல்வி ரத்னா விருது பல்வேறு சமூக ஆர்வலருக்கு விருது வழங்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கல்விச்சேவை மற்றும் சமூக சேவை செய்துவரும் பல்வேறு விருதுகளைப் பெற்ற முன்னாள் ரோட்டரி சங்கத்தின் தலைவரும் மாவட்ட ரெட்கிராஸ் புரவலரும் மாகிய டாக்டர் எஸ் சுந்தரத்திற்கு ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு நவாஸ் கனி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத்  நினைவாக கல்வி ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

கீழக்கரை இளைஞருக்கு “கல்வி ரத்னா”..சமூக சேவகர் விருது..

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம், தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தனித்திறமை கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான கல்வி ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு “சமூக சேவகர்” பிரிவில் கீழக்கரை கிளாசிஃபைட் நிறுவனர் SKV.ஷேக் சமூக சேவையே பாராட்டி “நம்பிக்கை நச்சத்திர விருது”  இராமநாதபுரத்தில் கேணிக்ரையில் உள்ள யாஃபா மஹாலில் இன்று […]

கீழக்கரையில் முதியவருக்கு கத்திக்குத்து… மரணம்.. ஒருவர் கைது…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை தட்டான் தோப்பு தெருவை சேர்ந்த சிவனடிமை மகன் தவசி வயது 55 என்பவரை அப்பகுதியில் வசிக்கும் முத்துச்சாமியின் மகன் சேகர் வயது 45 என்பவர் முன்விரோத காரணமாக கத்தியால் வயிற்றுப் பகுதியில் குத்தி விட்டார்.அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி அளித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது என மருத்துவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம்தை தொடர்ந்து கீழக்கரை காவல் […]

மதுரையில் 300 கிலோ கஞ்சாவுடன் கண்டெய்னர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது..

மதுரை மாநகருக்கு கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது.TN -38/BC – 2506என்ற எண்ணுள்ள கண்டெய்னர் லாரி மதுரை மாநகர் சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்கு அருகே கன்டெய்னர் லாரி ஒன்று வந்தபோது தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டதில் கஞ்சா மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டு அதிர்ந்தனர். தனிப்படை போலீசார் போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கட்டதேவன் […]

கீழக்கரையில் வெல்ஃபேர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம்..

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல் வேறு அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக இறங்கியுள்ளளர். இந்நிலையில் கீழக்கரைக்கு வெல்ஃபேர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கீழக்கரைக்கு சில தினங்களுக்கு முன்பு வருகைபுரிந்தனர், அச்சமயத்தில் கீழக்கரையில் வெல்ஃபேர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கீழக்கரையில் கொரோனா இல்லை… ஆனா இருக்கு.. அதிமுக சார்பில் தீபாவளி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி.. காற்றில் பறந்த சமூக இடைவெளி…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் அதிமுக சார்பில் உசேனியா திருமண மண்டபத்தில் நகரச் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையில் அதிமுகவினருக்கு தீபாவளி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர். இந்நலத் திட்டத்தைத் பெறவ சுமார் 500க்கு மேற்பட்ட நபர்கள் அரசு அறிவித்த சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக ஒன்றோடு ஒன்று […]

விபத்து உண்டாக்கும் வகையில் இருந்த கருவேல மரத்தை நீக்கி சாலையை சரி செய்த வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இளைஞர் நற்பணி மன்றம்..

வண்ணாங்குண்டில் இருந்து மேதலோடை செல்லும் தார்சாலையின் ஓரங்களில் கருவேல மரங்கள் படர்ந்து இருந்ததால் அவ்வழியாக வரும் வாகனங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி, விபத்துக்குள்ளாகும் நிலை உருவாகியது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக களத்தில் இறங்கிய வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இளைஞர் நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் உடனடியாக கருவேல மரங்களை அகற்றி சாலையை சீர்படுத்தினர். செய்தி:- வண்ணை SH Basith துபாய்., கீழை நியூஸ் வெளிநாட்டு செய்தியாளர்.

Mugavai Educational & Empowerment Trust (MEET) மற்றும் எக்ககுடி முஸ்லிம் வாலிபர் சங்கம் இணைந்து அரசு போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டம் எக்ககுடியில் ஞாயிற்றுக்கிழமைMugavai Educational & Empowerment Trust (MEET) மற்றும் எக்ககுடி முஸ்லிம் வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய அரசு போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  (8-11-2020) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முகவை எஜுகேஷன் என்பவர்மென்ட் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் Er.M.ஹமீது சாலிஹ்  தலைமை வகித்தார்கள், எக்ககுடி இமாம் முகம்மது ஜரித் அன்வாரி அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்து வரவேற்புரை நிகழ்த்தினார். எக்ககுடி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் நூர்முஹம்மது ஹாஜியார், ஜமாத் செயலாளர் அஸ்கர் அலி, ஊராட்சிமன்றத் தலைவர் […]

மதுரை மண்ணில் மைந்தர்கள் சார்பாக குழந்தைகள் தினவிழா…விதைகள் வினியோகம்..

வரும் நவம்பர் 14, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்போம், வனங்களை பாதுகாப்போம் என்ற நோக்கத்துடன் நாட்டு காய்கறி விதைகள் அடங்கிய பேப்பர் விதைப்பென்சில், துணிப்பைகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் நிறுவனர் G.K.அழகுராஜா வழங்கினார். பென்சில் விதைகளை விதைத்து, பராமரிப்பு செய்து வளர்க்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பென்சில் விதைகளை பற்றி விளக்கும் பொழுது’ குறும்பயிர்களான தக்காளி, பச்சை மிளகாய், பூசணி, அவரை உள்ளிட்ட பல்வேறு காய் மற்றும் பழங்களின் விதைகள் […]

கீழக்கரை அருகே நாய் கடித்து புள்ளிமான் படுகாயம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளமோர் குளம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் புள்ளி மான் படுகாயமடைந்தது. பின்னர் கிராம மக்கள் மானை மீட்டு சிகிச்சைக்காக கீழக்கரை கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைப்பற்றி கீழக்கரை உட்கோட்ட வனசரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

இராமநாதபுரம் அருகே குளம் உருவாக்கி மதில் சுவர் கட்டிய சரித்திர கல்வெட்டு கண்டுபிடிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே வளநாடு முருகன் கோயில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக வேளானூர் பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமி தகவலின்பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டைப் படி எடுத்து படித்து ஆய்வு செய்தார். இது குறித்து வே.ராஜகுரு கூறியதாவது, “வளநாடு முருகன் கோயில் வளாகத்தில் இரண்டரை அடி அகலம், 1 அடி உயரம் உள்ள செவ்வக வடிவிலான ஒரு பலகைக் கல்லில், 11 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. […]

கீழக்கரை நகராட்சியின் மெத்தன போக்கு… நோய்த்தொற்றும் அபாயம் ஏற்படும் நிலை….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசிய வண்ணம் உள்ளது. புதிய பேருந்து நிலையம், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றன. தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரத்திற்கு பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்க பேருந்து நிலையத்திற்கு அதிகளவில் செல்கின்றனர், ஆனால் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு கழிவுநீர் […]

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் மின் வெட்டு இருளில் பரிதவித்த கர்ப்பிணிகள்..

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், பிரசவ வார்டு, குழந்தைகள் நலம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை உள்பட பல்வேறு பிரிவுகளில் 250க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதில் பிரசவ வார்டில் இன்று மாலை 4 மணியில் இருந்து மின்வெட்டு நீடித்தது. இருள் சூழ்ந்த வார்டில் கர்ப்பிணிகள் உதவிக்கு வந்த பெண்கள் அச்சமமடைந்தனர். இதனையடுத்து கர்ப்பிணிகளுக்கு உதவி வந்தவர்கள் இன்று (06/11/2020) இரவு 7:45 மணியளவில் சாலை மறியலுக்கு முயன்றனர். ராமநாதபுரம்- […]

கனமழையிலும் சமூக சேவையில் களம் இறங்கிய வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் சங்க இளைஞர்கள்..

திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டில் நேற்று(05/11/2020) இரவு முதல் கனமழை பெய்ததால் மழை நீர் பெரிய ஊரணிக்கு செல்லும் வாய்க்கால்களில் ஆங்காங்கே தேங்கி நின்றது, தேங்கி நின்ற மழை நீரை பெரிய ஊரணிக்கு செல்வதற்கு கனமழை கூட பாராமல் மக்களின் நலனுக்காகவும் ஊரின் தேவைக்காவும் லஜ்னத்துல் இர்ஷாத் சங்கத்தின் சார்பாக மழைநீர் ஊரணிக்கு செல்வதற்கு வாய்க்கால்கள் சரி செய்தனர். கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் மழைநீர் வாய்க்கால் சரி செய்த லஜ்னத்துல் இர்சாத் இளைஞர் நற்பணி மன்றத்தின் […]

கீழக்கரையில் வீடு புகுந்து இளம்பெண் கற்பழிப்பு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மனைவி வயது 23 இவருக்கு திருமணமாகி 15நாட்கள் ஆகிறது. அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் வயது 38 அந்தப் பெண்ணின் கணவர் ஆறுமுகம் சுகுமார் இருவரும் நண்பர்கள் இன்று காலை வீட்டில் வெளியே மது அருந்திவிட்டு கஞ்சா போதையில் இருந்துள்ளனர். பின்பு ஆறுமுகம் வெளியில் செல்ல வீட்டுக்கு வெளியே மது, கஞ்சா போதையில் இருந்த சுகுமார் புதுப் பெண்ணான ஆறுமுகத்தின் மனைவியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். […]

5 ஏக்கருக்கு மேல் பதிவு செய்த 6,901 விவசாயிகளுக்கு காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல், மிளகாய், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து  பயிர்கள், பருத்தி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் ஆண்டில் 1,20,816 விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீட்டுத்  தொகையாக ரூ.533.5 கோடி, 2017-18ம் ஆண்டில் 1,44,803 விவசாயிகளுக்கு ரூ.472.182 கோடி, 2018-19ம் ஆண்டில் 82,106 விவசாயிகளுக்கு ரூ.304.625 கோடி மற்றும் 2019-20ம்  ஆண்டிற்கு 2,727 விவசாயிகளுக்கு […]

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை..அகற்றக்கோரி ராமேஸ்வரம் சாலையில் இரவில் மறியல்…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் உமையாள்புரம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கடந்த ஓராண்டுக்கும் மேலாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. டாஸ்மாக் கடை திறந்தால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று இரவு (நவ.3) கடையை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டனர். மேலும் ஆவேசமடைந்த பொதுமக்கள், ராமநாதபுரம்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் […]

டிப்பர் லாரி மோதி மின்கம்பம் சாய்ந்தது…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நடுத் தெருவில் ஜும்மா பள்ளி பின்புறம் ஜல்லிகள் ஏற்றி வந்த டிப்பர் லாரி மரத்தின் மீது மோதி மரக்கிளைகள் மின் கம்பியின் மீது பட்டு மின் கம்பம் சரிந்து விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்சார ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி வைத்தனர். பின்பு அப்பகுதிக்கு தற்காலிகமாக மின்சாரம் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். புதிய மின்கம்பத்தை நாளை நடுவதாக தெரிவித்தார்கள். கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

இஸ்லாமிய இறைதூதர் மீது அவதூறு… பிரான்ஸ் நாட்டின் அதிபரை கண்டித்து மதுரையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக ஆர்ப்பாட்டம்..

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்டம் சார்பாக நபிகள் நாயகம் மீது அவதூறு பரப்பும் பிரான்ஸ் நாட்டையும், அதன் அதிபர் மெக்ரோனையும் கண்டித்து, நவம்பர். 2 மாலை மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது அப்துல்லாஹ் ஸஆதி, தலைமை வகித்தார். செயலாளர் முஹம்மது பைசல் மக்தூமி வரவேற்புரை நிகழ்த்தினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுசெயலாளர் அர்ஷத் அஹமது அல்தாபி,கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட தலைவர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!