இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் இன்று திருக்குவளையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருந்த திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததைக் கண்டித்து இன்று (20/11/2020) தமிழகமெங்கும் பல இடங்களில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது தலைமையிலும், இளைஞரணி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் முன்னிலையிலும் சுமார் 30 க்கு மேற்பட்டோர் கீழக்கரை முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் மறியல் செய்தனர். […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரை இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டு.. ஆனால் மைதானம் இல்லை … மைதானமாகிய கடற்கரை..
கீழக்கரையில் இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களாக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பல குழுக்களாக கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகிறார்கள். ஆனால் முறையான விளையாட்டு திடல் இல்லாமல் மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதுபோக்கும் இடமான புதிய பாலத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலமையை மாற்றி அமைத்து அரசு உடனே இளைஞர்களுக்கு விளையாட திடல் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
கீழக்கரையில் திமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக கழகம் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுரையின்படி நடைபெற்றது. இக்கூட்டமானது கீழக்கரை நகர் திமுக அலுவலகத்தில் நகர கழக செயலாளர் பஷீர் அஹமது தலைமையிலும் இளைஞரணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் மாவட்ட தி.மு.க. சார்பாக வழக்கறிஞர் முனியசாமி மேற்பார்வையிலும் வாக்குசாவடி பூத் PLA 2முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் அனைத்து பாக பூத் முகவர்களும் கலந்து கொண்டனர். கீழை நியூஸ் […]
தன்னலமற்ற சமூக சேவையில் “உயர்ந்த மனிதன்”..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் வசித்து வரும் உயர்ந்த உள்ளம் கொண்ட உன்னத மனிதனாக செயல்பட்டு வருபவர் பெயிண்டர் தொழில் செயும் மீரான் முகைதீன் கிளி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் இந்த மனிதர்தான். கீழக்கரையில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் அவதியான நிலை உருவாகியுள்ள நிலையில் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் இந்த உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் தானாக முன்வந்து அப்பகுதியில் தேங்கியிருக்கும் […]
காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு விருது…….
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமிக்கு குறுங்காடுகளுக்கான வேல்டு கின்னஸ் அவார்டுக்கான சான்றிதழை கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார் இ.ஆ.ப வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஏர்வாடி ஊராட்சியில் ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப இன்று (11/09/2020) ஏர்வாடி ஊராட்சியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். அதன் பின் ஏர்வாடியில் குறுங்காடுகள் திட்டத்தின் கீழ் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் மரங்களை பார்வையிட்டார். இந்த வருகையின் பொழுது ஏர்வாடி ஊராட்சியின் பல்வேறு தேவைகள் குறித்து ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் KMV செய்யது அப்பாஸ் கோரிக்கை மனு அளித்தார். இறுதியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் […]
பனைக்குளம் அரசு பள்ளி ஆய்வக உதவியாளரிடம் ரூ.1000 லஞ்சம் கருவூல பெண் ஊழியர் கைது…
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் பாத்திமா ரசியா சுல்தானா. அரசு ஊழியர்களுக்கான இதர படி படிவம் எண் 70 நகல் தொடர்பாக உச்சிப்புளியில் உள்ள மண்டபம் சார் கருவூல கணக்காளர் களஞ்சிய ராணியை தொடர்பு கொண்டார். அப்படிவத்தை நகல் எடுத்து தர பாத்திமா ரசியா சுல்தானாவிடம், களஞ்சியராணி ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து பாத்திமா ரசியா சுல்தானா, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இன்று காலை புகார் கொடுத்தார். இதனையடுத்து […]
கீழக்கரையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்..
கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் 18.11.2020 அன்று மாலை அறக்கட்டளை நிறுவனர் M.K.E.உமர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மின்ஹாஜ் பள்ளி ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது ஆலிம் இறைமறை வாசித்து துவங்கி வைத்தார். முகம்மது சிராஜுதீன் வரவேற்றார். தலைமை உரையாற்றிய எம்.கே.இ.உமர், கீழக்கரையில் மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிபணிந்து விடாமல் தடுக்கும் பொறுப்பு அவரவர்களின் பெற்றோர்களுக்கு உண்டு என்றும் போதை குறித்த தீங்கினை அவ்வப்போது எச்சரிக்க வேண்டிய கடமை சமூக […]
கீழக்கரையில் காவல்துறை சார்பில் மனு விசாரிப்பு சிறப்பு முகாம்….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்படி தனியார் திருமண மண்டபத்தில் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் ஆய்வாளர் விஸ்வநாத் முன்னிலையில் மனு விசாரிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கீழக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மக்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியதில் நிலுவையில் உள்ள மனுக்களை சிறப்பு முகாமில் உடனடியாக விசாரித்து தீர்வு காணப்பட்து. இதில் சார்பு ஆய்வாளர் செல்வராஜ், சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். […]
கீழக்கரையில் கார்த்திக்கை சோமவாரம்…..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திக்கை சோமவாரத்தை முன்னிட்டு மூலவருக்கு சங்கில் புனித நீர் ஊற்றி அபிஷேக,ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை பிரதேஷ வழிபாட்டுகுழு செய்திருந்தனர்.
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு தீபாவளிப் புத்தாடை பரிசு…….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் அருளாடும் பெருமாள் தலைமையில், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் முன்னிலையில், கீழக்கரை சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி அன்று ஏழை எளிய குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். மேலும் கீழக்கரை நகர், இராமநாதபுரம் நகர்,ஏர்வாடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் நன்றியுரை கூறினார். கீழை நியூஸ் SKV முகம்மது […]
காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகளுக்கு தடுப்பூசி..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகளுக்கு பி.பி.ஆர் என்ற ஆட்டுக்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி முயற்சியால், உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்பு இராமநாதபுரம், டாக்டர். இராதாகிருஷ்ணன் அறிவுரை படி, கீழக்கரை கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். ஜெயபிரகாஷ், ஏற்பாட்டின் பேரில், கால்நடை ஆய்வாளர் பூங்கோதை, கால்நடை பராமரிப்பு உதவியாளர் துரோபதை ஆகியோர் அடங்கிய குழுவினால் ஆட்டுக்கொல்லிக் நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டது இதில் மாவட்ட […]
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல். தீபாவளிக்கு முதல் நாள் தொடங்கி தற்போது வரை மதுரையில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரை புறநகர் பகுதியில் மிக தாழ்வாக உள்ள பல்வேறு இடங்களில் […]
மதுரையில் இளைஞர்கள் இருவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை: ஒருவர் தலையை தேவாலயம் முன்பு வைத்து சென்ற பயங்கரம்-பரபரப்பு…
மதுரை செயின்ட் மேரீஸ் சர்ச் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. சாலையில் நடந்து சென்ற பெண்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த காவலர்கள் ஓடிவந்தனர். அதற்குள் இளைஞனின் தலையை தனியாக எடுத்து சென்று செயின்ட் மேரீஸ் தேவாலயம் முன்பு வைத்து விட்டு மர்ம கும்பல் தப்பியது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் இணை ஆணையர் சிவபிரசாத் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடம் […]
மதுரையில் தொடரும் தீ விபத்து… கவனக்குறைவா?… பாதுகாப்பு குறைபாடா??..
மதுரை தெற்கு வெளி வீதியில் இன்று (14/11/2020) அதிகாலை காலை துணி மொத்த விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் 2 தீயணைப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள் மற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் இன்று (14/11/2020) இரவு 8 மணி அளவில் தீ விபத்து நடந்த பகுதி மஞ்சநகார தெரு மஹால் இரண்டாவது தெருவில் அமைந்துள்ள ஏகே […]
இராமநாதபுர புதிய ஆட்சியர் முதல்வருடன் மரியாதை நிமித்த சந்திப்பு..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த வீர்ராகவராவ் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் சட்டவிரோதமாக தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவ கழிவும்.. அதனால் ஏற்படும் சுற்றபுற கேடும்…அரசு நடவடிக்கை எடுக்குமா??
மதுரை மாவட்டம் கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் மர்ம நபர்கள் லாரியில் கொண்டு வந்த மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைத்ததால், புகை மண்டலம் சூழும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்று 13/11/2020 அதிகாலை லாரியில் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்த மர்ம நபர்கள் கப்பலூர் தொழிற்பேட்டையின் பின்புறம் ரயில்வே கேட் அருகே கொட்டி தீ வைத்துள்ளனர். இதனால் ந பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு […]
மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண் மரணம் போலீஸ் விசாரணை…
மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண் மரணம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அப்பெண் மும்பையை சேர்ந்தவர் லட்சுமிஅய்யர் 68. என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருக்கவே கதவை தட்டியும் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது மயங்கிய நிலையில் துதெரியவந்தது. இதை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது.லெட்சுமி ஐயர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து லாட்ஜ் […]
கீழக்கரையில் ஆப்செட் உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம்…….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (12/11/2020) துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் கீழக்கரை சரகத்திற்கு உட்பட்ட ஆப்செட் அச்சகம் உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நெருங்குவதால் பத்திரிக்கை, வால் போஸ்டர், நோடிஸ், பிளக்ஸ் போன்ற விளம்பரம் பிரசுரம் அடிக்கும் போது அச்சகத்தின் பெயர் மட்டும் அச்சக உரிமையாளர் தொலைபேசி எண் கட்டாயம் அந்த பிரசுரத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நோடிஸ் போன்ற விளம்பரங்கள் அடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் முழு முகவரியை பெற்று […]
கீழக்கரை அரசு மருத்துவமனையில் உலக தரம் நாள் நிகழ்ச்சி…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனை சார்பில் இன்று (12/11/2020) உலக தரம் நாள் விழா கொண்டாடப்பட்டது. கீழக்கரை அரசு மருத்துவனையின் தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் தலைமையில் டாக்டர் ராஜேஸ்வரன் டாக்டர் ஜெய துர்கா தேவி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புல்லானி ஒன்றிய வட்டார வள மருத்துவர் ராசிக்தீன் மருத்துவனையில் உள்ள சிறப்புஅம்சங்களை பற்றி விளக்கினார். மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உதவிய கீழக்கரையில் உள்ள பைத்துல்மால் டிரஸ்ட் மற்றும் தனியார் டிரஸ்ட் நிறுவனங்கள் பல செல்வந்தர்கள் கீழக்கரை அரசு […]
You must be logged in to post a comment.