துபாயில் சிங்கப்பூர் பொருட்களின் முகவரி “மொலினா டிரேடிங்” தற்போது புதிய முகவரியில்…

துபாய் நகரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு வாய்ப்பை உண்டாக்கும் இடம் என்றால் மிகையாகாது.  அந்த அளவிற்கு உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் துபாய் மண்ணை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அங்கு வரும் மக்களுக்கு அதுவும் முக்கியமாக தென்னிந்தியாவில் இருந்து வாழ்வாதாரத்திற்காக வருகை தரும் மக்களுக்கு அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், ஊரில் உள்ள தங்கள் சொந்தங்களுக்கு வெளிநாட்டு பொருட்களை, அதுவும் தென்னிந்திய மக்கள் அதிகமாக விரும்பும் சிங்கப்பூர் பொருட்களான சென்ட், தைல […]

கீழைநியூஸ் இணையதள செய்தி எதிரொலி.. மதுரை மாநகராட்சி துரித நடவடிக்கை… வியாபாரிகள் மகிழ்ச்சி..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 83 வது வார்டு வடக்கு கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள வடுக காவல் கோவில் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த காரணத்தினாலும் ஸ்மார்ட் சிட்டி வேலை நடப்பதாலும்.  ஹாலோ பிளாக் கற்கள் பெயர்ந்து சேறும் சகதியுமாக இருந்தது. இதனால் அப்பகுதியை வியாபாரிகளும் பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிய நிலையில் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று (09/12/2020) கீழை நியூஸ் […]

மதுரையில் குடியிருப்பு பகுதியில் 6 அடி நல்ல பாம்பு சாரை பாம்பு பின்னி பிணைந்து நடனம் ஆடியதை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு மாடக்குளம் பகுதியில் இன்று (09/12/2020) மாலை குடியிருப்பு நிறைந்த பகுதியான இப்பகுதியில் 6 அடி நல்ல பாம்பும்,  சாரைப்பாம்பும் பின்னி பிணைந்து நடனமாடியது சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக குடியிருப்பு பகுதியில் நடனம் ஆடியதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். பின் செல்போன்களில் வீடியோ பதிவு செய்தது சமூக வலைதளங்களில் பரவியது.  குடியிருப்பு பகுதிகளில் இரு பாம்புகள் நடனமாடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]

கீழக்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகமா இல்லை… குப்பை கொட்டும் கூடாரமா.?…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பலஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்தது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலம், தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதனால் கடும் இட நெருக்கடி ஏற்ப்பட்டது. இதையடுத்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தனிகட்டிடம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பொதுப்பணிதுறை மூலமாக சுமார் 20 லட்சம் செலவில் நகராட்சிக்கு அருகிலேயே கட்டிடம் […]

சாலைகள் பெயர்ந்தது… வியாபாரிகள் வருமானம் காலியானது.. ஆழ்ந்த நித்திரையில் மதுரை மாநகராட்சி…..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 83 வது வார்டு வடக்கு கிருஷ்ணன்கோவில் அருகே உள்ளே உள்ளது வடுககாவல் கோவில் தெரு உள்ளது. இப்பகுதியில் பல் வேறு சிறு தொழில் வியாபாரிகள் உள்ளனர். இந்த பகுதியில் கடந்த வாரங்களுக்கு முன்னர் பெய்த மழையால் சாலைகள் முழுவதும் சேதம் அடைந்து, பதிக்கப்பட்டிருந்த ஹாலோபிளாக் கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து  செல்ல முடியாத அளவுக்கு  சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தகவல் கொடுத்தும் […]

விவசாயிகளுக்கு ஆதரவான பாரத பந்த்… கீழக்கரையிலும் எதிரொலித்தது…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டித்தும் வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக கீழக்கரை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் மகாலிங்கம் தலைமையிலும் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நகர தலைவர் பைசல் முன்னிலையிலும் கீழக்கரை வி.ஏ.ஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் […]

அதிமுக ஆதரவாளர்கள் திமுக எம்.பி ராசா உருவபொம்மை எரிப்பு… இராமநாதபுரத்தில் கலவர சூழல்…

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை அவதூறு பேசிய திமுக .எம்பி., ஆ.ராசா உருவ பொம்மையை அதிமுக., வினர் ராமநாதபுரம் அரண்மனை முன் இன்று (08.12.2020 காலை எரித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அதே பகுதியில் நின்று கொண்டிருந்த திமுக.வினர் எதிர் கோஷத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து கூட்டத்தில் இருந்து கற்கள், காய்கறி, கல், காலணியை வீசி திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவத்தை போட்டோ எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர் மார்பில் காயம் ஏற்பட்டது, அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் […]

கீழக்கரையில் கார்த்திகை சோமவாரம் நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

மதுரை வைகை ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு. போலிசார் விசாரணை…

மதுரை ஆரப்பாளையம் அருகே மறவர் 2வது தெரு பகுதியை சேர்ந்த முருகன் – முத்து தம்பதியினருக்கு 4பெண் குழந்தைகள் இருந்துள்ளது. மூத்த பெண்குழந்தைகளான சுஜி மற்றும் ஸ்ருதி (12)வயதுஆகிய இருவரும் நேற்று (06/12/2020) மாலை வைகை ஆற்றில் குளிக்கசென்றுள்ளனர். இதனையடுத்து இருவரையும் காணவில்லை என பெற்றோர்கள் கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தேடிவந்தனர். இந்நிலையில் இரு சிறுமிகளின் உடல்கள் ஆரப்பாளையம் மற்றும் எல்.ஐ.சி பாலம் அருகே சடலமாக மிதந்து கொண்டிருப்பதை பார்த்த   பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]

கீழக்கரை அருகே விபத்தில் இளைஞர் பலி.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கும்மிடு மதுரை செல்லும் சாலையில் உத்தரவை கொதக்கோட்டையைச் சேர்ந்த குப்பமுத்துவின் மகன் கருப்பையா வயது 28 இளைஞர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளாகினர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

அம்பேத்கர் நினைவு நாள்.. பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை…….

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவர்தம் உருவசிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில்  மாநில செய்தி தொடர்பாளர் குப்புராமு, மாநில செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், இராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

கீழக்கரையில் சட்டமேதை அம்பேத்கருக்கு நாம்தமிழர் கட்சி சார்பில் நினைவு நாள் மரியாதை..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை மற்றும் சின்னமாயாகுளம் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன், இராமநாதபுரம் தொகுதி தலைவர் மணிவண்ணன், இராமநாதபுரம் தொகுதி செயலாளர் குமார், திருவாடானை தொகுதி தலைவர் முகம்மது, திருவாடானை தொகுதி செயலாளர் லெனின் பிரபு,தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்  வெங்குளம் […]

கீழக்கரையில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு…

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்டப் பொருளாளர் விடுதலைச் சேகரண் தலைமையிலும் மாவட்டச் செய்தி தொடர்பாளர் சத்தியராசு வளவன் , இராமநாதபுரம் தொகுதிச் செயலாளர் அற்புதக்குமார் முன்னிலையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கீழக்கரை அடுத்துள்ள சின்னமாயாகுளம் கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அனுவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ்குமார் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பஞ்சநாதன், திருப்புல்லாணி ஒன்றியச் […]

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சியர் ஆய்வு..

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜா ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் இன்று (04/12/2020)  ஆய்வு செய்தனர். புரேவி புயல் காரணமாக திருபுல்லாணி ஒன்றியம், களிமண்குண்டு, தினைக்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாயகுளம், சின்ன மாயகுளம், விவேகானந்தபுரம், பாரதிநகர் போன்ற கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகளை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் […]

கீழக்கரையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புரெவி புயல் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தலைமையில் தலைமை பொறியாளர் முகம்மது மீரான், சுகாதார ஆய்வாளர் பூபதி, சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், எலக்ட்ரீசியன் ரமேஷ் ஜெயபிரகாஷ் மற்றும் ஊழியர்கள் கீழக்கரை கடற்கரை பகுதியில் உள்ள மரங்களை வெட்டி விட்டனர். அதைப்போல் மின்வாரிய சார்பில் கீழக்கரை தெருக்களில் மின் கம்பியில் மேல் விழுந்திருக்கும் மரங்களை மின்சார மின்பாதை ஆய்வாளர் வெல்லிமலை தலைமையில் சரவணன், வசந்த ராஜ், […]

கீழக்கரை திமுக சார்பில் உதவி பொருட்கள்……….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் புரெவி புயல் எதிரொலியாக கீழக்கரையின் அமைந்துள்ள நான்கு புயல் நிவாரண முகாம்களை பார்வையிட்டனர். பின்பு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புயல் நிலவரத்தைப் பற்றி கேட்டறிந்தனர் திமுக சார்பில் மக்களுக்காக எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் முகாம்களை பார்வையிட்டு மக்களுக்கு உணவு வகைகள் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, இளைஞர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், […]

பார்த்திபனூர் மதகணை வந்த வைகை தண்ணீர் இராமநாதபும் பாசனத்திற்கு திறப்பு….

தமிழக முதல்வர் உத்தரவின்படி, வைகை அணையிலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று (03.12.2020) பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன் (இராமநாதபுரம்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தண்ணீரை மலர் தூவி வரவேற்று, பார்த்திபனூர் மதகணையிலிருந்து இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீரை திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் , […]

கீழக்கரையில் ரெட் கிராஸ் சார்பாக புயல் சம்பந்தமான விழிப்புணர்வு பரப்புரை..

கீழக்கரை கடற்கரை பகுதியில் புயல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது சார்பாக ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில் பொருளாளர் சி.குணசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.சுந்தரம், ஜெ.முகம்மது ஹசன், எம். ரமேஷ் (ஜே.ஆர்.சி கன்வீனர்), கே. ராஜன், எ.வள்ளிவினாயகம் (YRC மாவட்ட அமைப்பாளர்) எ.மலைக்கண்ணன் ஆயுட்கால உறுப்பினர்கள் சிவகார்த்திகேயன், பேராசிரியர் எபன் பிரவீன் குமார், செய்யது ஹமீதா கலை கல்லூரி YRC அமைப்பாளர் முனைவர் ஆனந்த், மற்றும் பேராசிரியர்கள் சுரேஷ், ராஜேஸ்வரன், […]

49வது ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்திற்கு கூடுதல் பெருமை சேர்த்த AG-CARS நடத்திய “RIDE WITH PRIDE” பேரணி..

ஐக்கிய அரபு அமீரகத்தில் 49 வது தேசிய தினத்தை முன்னிட்டு AG Cars சார்பாக “Ride with Pride” என்ற பதாகை ஏந்திய வாகன அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு மம்ஸாரில் அமைந்துள்ள கார்ஸ் சோதனை நிலையத்தில் இருந்து தொடங்கி ஜுமைராவில் நிறைவடைந்தது. இதில் அணிவகுப்பில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கு பெற்றது. அந்நிறுவனத்தில் பணி புரியும் பல் வேறு நாட்டை சேர்ந்த பணியாளர்கள்,  தங்கள் குடும்பங்களோடு கலந்து கொண்டு தேசிய தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இது போன்ற […]

வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருக்கும் கீழக்கரை கடற்கரை பகுதி…….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாக்கிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மண்டபம் கீழக்கரை, மூக்கையூர், தொண்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. பாம்பன் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் தெற்கு கடற்கரை பகுதியான கீழக்கரை, ஏர்வாடி, பெரியபட்டினம் போன்ற கடற்கரை பகுதிகளில் கடல் மிகவும் அமைதியாக காட்சியளிக்கிறது. வானிலை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!