கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட குடும்பமாய் இணைவோம் என்ற நிகழ்ச்சி நகர தலைவர் ஹமீது பைசல் தலைமையில் நடைபெற்றது இதில் துணைத் தலைவர் மூர் டிராவல்ஸ் உரிமையாளர்கள் ஜெயினுதீன் மற்றும் ஹாஜா அலாவுதீன், உமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி ஜெமிலுன் நிசா, செயலாளர் செய்யது ஜாபிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாஜுல் அமீன் வரவேற்புரையாற்றினார் செயலாளர் பகுருதீன் தொகுத்து வழங்கினார். நன்றியுரை நடுத்தெரு கிளை தலைவர் முஹம்மது ஜலீல் வழங்கினர். தலைமை உரையை நகர் […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரையில் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு.. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தொகுதி எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி தமிழகத்தில் இருக்கும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 ரொக்கத்துடன் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், முழு கரும்பு, ஆகியவற்றை தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக கீழக்கரை பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இத்திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் […]
25 வருடம் கழித்து ஒன்று கூடிய ஹமீதியா பள்ளி மாணவர்கள்..
1995 – 1996ஆம் ஆண்டு முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள் 10வது பயின்ற 25க்கும் மேற்பட்ட நண்பர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு கீழக்கரையில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒன்று கூடல் நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பள்ளி கால பசுமையான பல மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீனவர்களுக்கு என ஐந்து தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..
தமிழ்நாடு மீனவர் பேரவையின் பத்தாவது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழ்நாடு மீனவர் பேரவையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் ,காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பேரவையின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு மீனவர் பேரவையின் தலைவர் இரா.அன்பழகனார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் […]
கீழக்கரை மற்றும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட மக்களை சந்தித்தார் தமிழக முதல்வர்………
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி கீழக்கரை மட்டும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஜமாத் மற்றும் மீனவர்களை சந்தித்து கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பேசினார். கீழக்கரை உள்ள அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம், கீழக்கரை பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கீழக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்துத் தரவேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்திற்கு […]
கீழக்கரையில் ஆணி வேரோடு சாய்ந்து விழுந்த பழமை வாய்ந்த ஆலமரம்……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சனாகுடி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள எம்.எம்.கே பெட்ரோல் பங்க் எதிரில் ரஞ்சித் பஞ்சர் கடை அருகில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழக்கரை கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்த நசுருதீன் மகன் பதுரூஸ் வயது 18 அவர் இரு சக்கர வாகன கடையில் வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்ய வந்தவருக்கு தலையில் மரம் விழுந்து லேசான காயமும், இரண்டு […]
கீழக்கரை முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரை “TRAVEL ZONE INTERNATIONAL TOURISM LLC”..
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (01/01/2021) மாலை “TRAVEL ZONE INTERNATIONAL TOURISM LLC” என்ற நிறுவனம் கீழக்கரையைச் சார்ந்த SKV.ஷேக் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் கடந்த பல வருடங்களாக சேவை நோக்கில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரும் வகையில் உலகில் உள்ள பல் வேறு நிறுவனங்களின் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை பிரத்யேக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு பகிர்ந்து வந்தார். பின்னர் அதை தொடர்ந்து கீழக்கரையில் வெளிநாடு பயணம் செல்பவர்களுக்கு உதவும் வண்ணம் […]
கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “ Alam General Trading”..
கீழக்கரையில் இரண்டு இளைஞர்களால் இன்று/28/12/2020 மதார் அம்பலம் தெரு பகுதியில் Alam General Trading எனும் தண்ணீர் மற்றும் குளிர்பான வகைகளின் மொத்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 300ml, 500ml, 1லிட்டர், 2லிட்டர் மற்றும் பல வேறு கொள்ளவில் விற்பனைக்கு உள்ளது. இது சம்பந்தமாக இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் இர்சாத் மற்றும் ரியாஸ் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் திருமணம் மற்றும் வீட்டில் விசேஷ வைபவங்களுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் தரமான பொருட்கள் சப்ளை செய்யப்படும்” என்றனர். இத்தொழில் தொடர்பான […]
கீழக்கரையில் SDPI கட்சியின் வர்த்தக அணி கூட்டம்..
கீழக்கரை வர்த்தக அணியின் மாதாந்திர கூட்டம் நகர் தலைவர் யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் ஜமீல் மற்றும் இப்ராஹிம் செயலாளர் பகுருதீன் பொருளாளர் நிசார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தொகுதி துணைத்தலைவர் நூருல் ஜமான் அவர்களும் நகர் சார்பாக நகர் தலைவர் ஹமீது பைசல் செயலாளர் பகுருதீன் செயற்குழு உறுப்பினர் ஹுசைன் ரஹ்மான் ஆகியோர் கலந்து […]
வழக்கறிஞராக பதிவு செய்த கீழக்கரை வடக்குத்தெரு இளைஞரை NASA அமைப்பு சார்பாக பாராட்டி கவுரவிப்பு!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிகராக தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ள கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த சகோதரர் ஜஹுபர் அலி (சிங்கப்பூர் டிராவல்ஸ்) என்பவரின் புதல்வர் ஜாஹித் ரிபாயை கௌரவிக்கும் விதமாக கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக இன்று 27.12.2020 மாலை 5 மணியளவில் அல் மதரசத்துல் முஹம்மதியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அல் மதரசத்துல் முஹம்மதியாவின் முதல்வர் ஜனாப். அஹமது ஹுசைன் ஆசிஃப் , வழக்கறிஞர் […]
மதுரையில் கேஸ் சிலிண்டரின் தொடர் விலை உயர்வை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்..
மத்திய அரசே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறு! கொரானா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் மேலும் சிரழிக்காதே நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் கேஸ் சிலிண்டரின் தொடர் விலை உயர்வை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் டிசம்பர் 26 மாலை மாவட்ட தலைவி கதிஜா பீவி, தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சமீமா, வரவேற்புரை நிகழ்த்தினார். விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில […]
கீழக்கரையில் மழைநீர் தேங்கும் இடங்கள் சீரமைக்கும் பணிகள் தொடக்கம் ……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மழை பெய்தால் பல இடங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கிக் கிடக்கும் அவலநிலை உள்ளது. அதில் குறிப்பாக கீழக்கரை முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் கிராம அலுவல் அதிகாரிகள் அலுவலகம் அருகிலும், புதிய பேருந்து நிலையம் பின்புறமும் மழை பெய்தால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் அந்த இடத்திலேயே தேங்கும் நிலையில் இருந்தது. அதை சரி செய்யும் விதமாக இன்று (26/12/2020) கீழக்கரை நகராட்சி […]
கீழக்கரை JVC (Jadeed Volleyball Club) நடத்திய 29ஆம் ஆண்டு கைப்பந்து போட்டி……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குதெருவில் அல்ஜதீத் வாலிபால் கிளப் சார்பில் 29 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர். இராமநாதபுரம் எப்.பி டெய்லர் அணி முதலிடத்தையும், ஏ.ஆர் கன்ஸ்ட்ரெக்சன் அணி இரண்டாம் இடத்தையும், ஒப்பிலான் அணி மூன்றாமிடத்தையும், கீழக்கரை ஜே.வி.சி அணி நான்காம் இடத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையை Keeggi, கீழை மீடியா, கீழை நியூஸ் மற்றும் ஹாலா உணவு பொருட்கள் ஆகிய […]
கீழக்கரையில் வேலுநாச்சியாரின் நினைவுநாளை முன்னிட்டு வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பில் வீரவணக்கம்…
கீழக்கரையில் வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் நினைவுநாளை முன்னிட்டு வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பில் வீரவணக்கம் செலுத்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன், மாநில செயலாளர் பழனி முருகன் மாவட்டச்செயலாளர் மதுகணேஷ், அஜித்குமார்,பிரபு, வேலவன், திருமுருகன், ராஜேஷ், அஜய், கோபி, சரண் சந்துரு ஆகியோர் பங்கேற்றனர்.
தன்னம்பிக்கைக்கும்… விடா முயற்சிக்கும் அடையாளமாக கீழக்கரை இளைஞர்கள்.. ஒருவர் தொழில்முனைவோர்… மற்றவர் வழக்கறிஞர்…
“கனவு காணுங்கள்… வெற்றி பெறலாம்” என்ற இளைஞர்களுக்கு உற்சாக வார்த்தைகளை வழங்கிய முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமில் வார்த்தையை புதுப்பிக்கும் வண்ணமாக இன்று சாதித்து காட்டிய இளைஞர்கள்தான் TRAVEL ZONE INTL TRAVEL & TOURISM நிர்வாக இயக்குனர், மற்றொரு இளைஞர் பொறியியல் படிப்பை உதறிவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞராக உருவெடுத்து இருப்பவர். ஆம் கீழக்கரையை SKV Sheikh சில வருடங்களுக்கு முன்பு வேலை தேடுபவர்களுக்கு உதவும் வண்ணம் வேலை வாய்ப்பு […]
தனியார் விடுதியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த பூ கட்டும் தொழிலாளி – ஒத்தக்கடை காவல்துறையினர் விசாரணை..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இடையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் வயது 45 மதுரையில் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று (23/12/2020) ஒத்தக்கடையில் உள்ள தனது நண்பரான ஆனந்தன் என்பவரை பார்ப்பதற்காக கூறி சென்றிருக்கிறார் (ஆனந்தன் என்பவரும் பூக்கட்டும் தொழில் செய்து வருபவர்). இந்நிலையில் முருகன் மது அருந்தி இருப்பதால் நண்பரிடம் அனுமிதி கேட்டு அவருடைய அறையில் தங்ஙகியுள்ளார். இந்நிலையில் இன்று (24/12/2020) காலை வழக்கம்போல் ஆனந்தன், முருகனை சந்திப்பதற்காக கடைக்கு சென்றபோது அறை முழுவதும்தெரிந்த […]
கீழக்கரையில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவஞ்சலி அனுசரிப்பு …
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்க்கு கீழக்கரை நகர் அ.ம.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இதில் நகர் நிர்வாகிகளான இம்பலா சாகுல் ஹமீது, மகேஷ் , அம்பா (எ) அன்பழகன், ஜீவா, மீரான், ஹசன், அப்துல் சலாம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 33 ம் ஆண்டு நினைவஞ்சலி…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்து பஜாரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 33ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்க்கு கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் நகர் து.செயலாளர் குமரன், பொருளாளர் அரி நாராயணன், இம்பாலா உசேன், ஜி.கே.வேலன், விஜயகுமார், பாசறை செயலாளர் செல்வகணேசபிரபு, பூக்கடை சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம்.. தொடர் நிகழ்ச்சி…
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கையின் படி தமிழகம் முழுதும் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் பொதுமக்களிடம் விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (23/12/2020) இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு 20 வது வார்டு தெரு பகுதியில் அதிமுகவை நிராகரிப்பும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சேது கல்லூரி உரிமையாளரும், திமுக பிரமுகருமான முகம்மது ஜலில் தலைமையிலும் கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது மற்றும் இளைஞர் அணி பொருப்பாளர் வழகறிஞர் ஹமீது சுல்த்தான் […]
கீழக்கரையில் போராட்டத்தை தொடர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகள் துவக்கம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், கழிவுநீர் கால்வாய் உடைப்புகள் போன்றவற்றை சரிசெய்யக்கோரி வீரகுல தமிழர் படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கீழக்கரை நகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கால்வாய் உடைப்பு மற்றும் சாலை பணிகளுக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.
You must be logged in to post a comment.