மதுரையில் சமூக பணி ஆற்றியவர்களுக்கு மனித நேய விருது..

கொரானா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு காலத்தில் மற்றும் அன்றாட காலநிலையில் சமூகப் பணி மற்றும் சமூக தொண்டு களப்பணி ஆற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாமனிதர் மனிதநேய விருது வழங்கப்பட்டது. இதில் செய்தியாளர் சரவணன் என்ற காளமேகம் மற்றும் பலருக்கு 19/01/2021 அன்று மாலை 06.00 அளவில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பாக வெங்கடேசன் எம்பி தலைமையில் மாமனிதர் மனிதநேயம் என்ற விருதும்,  நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

நத்தம் குளபதம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையில் விளைபயிர்கள் நாசம்… அரசு நிவாரணம் அளிக்குமா?..விவசாயிகள் ஆதங்கம்…

கீழக்கரை தாலுகா நத்தம் குளபதம் பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்காக காத்திருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமடைந்தது.  இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சார்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், எங்களுடைய விளைநிலம் எங்கள் தாயார் காளிமுத்து (வேலு என்பவரின் மனைவி) பெயரில் உள்ளது, சமீபத்தில் பெய்த மழையில் ஒரு ஏக்கருக்கும் மேலே நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளது.  இது சம்பந்தமாக கிராம நிர்வாக அதிகாரியிடமும் தெரிவித்துள்ளோம்.  எங்களுடைய […]

கீழக்கரையில் அரசு வழிகாட்டுதலுடன் தொடங்கிய பள்ளிகள்..

கொரோனா ஊரடங்கு தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இணைய தள வழியாக பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் தமிழக அரசு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் இன்று (19/01/2021) கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளகளும் திறக்கப்பட்டன.  இது தொடர்பாக இஸ்லாமியா பள்ளி குழும தாளாளர் எம்.எம்.கே இபுராஹிம் கூறுகையில், “அரசு வழிகாட்டுதலின் படி பள்ளி வளாகம், வகுப்பறைகள், வாகனங்கள் அனைத்தும் முறையாக தொடர்ந்து கிருமிநாசினி […]

திருமணவிழாவில் டிஜிட்டல் மொய் மதுரை ஐடி தம்பதியினரின் புதிய முயற்சிக்கு – கொரோனா காலங்களில் கூட்டங்களை தவிர்க்கும் புதிய முயற்சி…

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காதுகுத்து, கல்யாணம் இப்படி எந்தவொரு சுப நிகழ்ச்சிகள் என்றாலும் மொய் என்பது முக்கிய இடம் பிடிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்களின் உறவினர்களும் நண்பர்களும் தங்களால் முடிந்த பணம் , நகை உள்ளிட்டவற்றை மொய்யாக வழங்குவார்கள். இதனை சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இல்லங்களிலோ, மண்டபங்களிலோ நுழைவாயில் மொய் நோட்டு வைக்கப்பட்டு அதில் எழுதுவார்கள். மொய் செய்தவர்கள் மீண்டும் அவர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்பது கௌரவமாக பார்க்கப்படும். இதனால் எந்த ஒரு விசேஷத்தையும் தவறவிடமால் சென்று […]

கீழக்கரையில் முட்டை ஏற்றி வந்த லாரி மண்ணில் சிக்கி விபத்து………

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முட்டை வியாபாரிகளுக்கு நாமக்கல்லை சேர்ந்த ஏ.சி பாலா என்பவருக்கு சொந்தமான முட்டை லாரி நாமக்கல்லில் இருந்து கோழிமுட்டைகள் ஏற்றி வந்த லாரி கீழக்கரை பெரியகாடு மம்காசி அப்பா பள்ளிவாசல் அருகில் டிராக்டர் நின்ற காரணத்தினால் லாரி டிரைவர் வாகனத்தை ஒதுக்கிய பொழுது மழையின் காரணமாக மண் ஈரத்தன்மையுடன் இருந்த நிலையில் லாரி காம்பவுண்ட்டை உடைத்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் ஆனந்த் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பொதுமக்கள் […]

கீழக்கரை கள்ளர்குல பண்ணையார் உறவின்முறை இளைஞர் சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா..

கீழக்கரை அண்ணாநகர் முதல் தெரு கள்ளர்குல பண்ணையார் உறவின்முறை இளைஞர் சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ஜெயினுதீன், வீரகுல தமிழர் படை ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன், வீரகுல தமிழர் படை செயலாளர் பழனி முருகன் உட்பட ஏராளமான முக்கியஸ்தர்கள் கலந்துகொன்டு பரிசுகளை வழங்கினர். இளைஞர் சங்கம் தலைவர் சரத்குமார், செயலாளர் மதுகணேஷ் வரவேற்றார், இளைஞர் சங்க பொருளாளர் காளீஸ்வரன் […]

சிறப்பாக நடைபெற்று முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு..

தைத்திருநாள் இரண்டாம் நாள் பாலமேடு ஜல்லிக்கட்டு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு காரும்,  காளைகளுக்கு காங்கேயம் பசுமாடு பரிசாக விழா கமிட்டி வழங்கினார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது பாலமேடு. இந்த கிராமத்தின் மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் . காலை 8 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது 8 சுற்றுக்களாக வீரர்களும் காளைகளும் களமிறங்குகின்றனர். இதில் 651 வீரர்களும் 800 காளைகள் பங்கு பெற்றனர் […]

கீழக்கரையில் தொடர் மழையால் ஏற்பட்ட நீர் தேக்கம்… சுகாதார கேடு உண்டாகும் அபாயம்… உடனடியாக நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தை கட்சி அரசு நிர்வாகத்துக்கு கோரிக்கை..

கீழக்கரை முழுவதும் ஆங்காங்கே இருக்கக்கூடிய 21 வார்டுகளில், சாக்கடை கழிவு நீரில் குப்பைகளும் கலந்து ஒடுவதால் தூர்ணாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. ஆகையால் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்கள் நலன் காக்கப்பட வேண்டும் என கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு  கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகர செயலாளர் பாசித் இல்யாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

குதூகலத்துடன் தொடங்கிய மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று (14/01/2021) கோலாகல தொடங்கபட்டது. இந்நிகழ்வை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா துவக்கி வைத்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரையில் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. இதனைக் கண்டு ரசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனி விமானத்தில் மதுரைக்கு வருகை தந்தார். அதே போல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடன் பங்கேற்றார். உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, தைத்திருநாளை முன்னிட்டு, […]

மதுரை விமான நிலையத்தில் ராகுல்காந்தி பேட்டி.. பொங்கல் விழா மற்றும் ஜல்லிகட்டில் பங்கேற்பு..

தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டை காண்பதற்காக முதன்முறையாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழக மக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும், குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விளையாட்டில் கலந்து கொண்ட காளைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகள் விளையாடுவதைப் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. தமிழக மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளவே இங்கு […]

கீழக்கரையில் குதூகலத்துடன் தொடங்கிய பொங்கல் விழா விற்பனை… மாலை முதல் விடாத மழை..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மூன்று நாட்களாக காலை முதல் இரவு வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (13/01/2021) பொங்கல் என்பதால் இன்று (12/01/2021) காலை மக்கள் மழை இல்லாத காரணத்தினால் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மாலை முதல் மீண்டும் தொடர் மழை தொடங்கியது. இன்றைய செய்தி நிரந்தர வரலாறு கீழை நியூஸ்  

கீழக்கரை நகராட்சியில் உள்ள பிரச்சினைகளை தீரக்க திமுக சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் மனு.. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என திமுக எச்சரிக்கை…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிமுகவை நிராகரிப்போம் என்கின்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் 21-வார்டு பகுதியை சேர்த்து 10 இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்சனைகளை விளக்கினார்கள்,  அதை திமுக சார்பில் இன்று நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் நகராட்சி தலைமை பொறியாளர் முஹம்மது மீரான் மற்றும் சுகாதார ஆய்வாளர் பூபதி இடம் மனு அளிக்கப்பட்டது. இப்பிரச்சினைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் நிறைவேற்றித் தர கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் […]

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைநத்தம் பகுதியில் புதிய ஆண்கள் அழகு நிலையம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைநத்தம் பகுதியில் பஸ் நிலையம் அருகில் அலீஃப் ஆண்கள் அழகு நிலையம் ஒன்று புதிதாக  உதயம் ஆகியுள்ளது. இந்த அழகு நிலையத்தில் சிறப்பம்சமாக  திருமணத்திற்கு முன்பு ஆண்கள் அழகு மேம்படுத்துதல், முகத்தை சுத்தம் செய்தல் (Facial), தலை முடி கலரூட்டல் (Hair die) போன்றவை செய்யப்படுகிறது. மேலும் இந்த அழகு நிலையத்தின் நிர்வாகி’ “ எங்கள் அழகு நிலையத்திற்கு  ஒரு முறை வந்துதான் பாருங்கள்,  உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார். இந்த அழகு நிலையம்  நத்தம்பஸ் நிலையம் அருகில் […]

கீழக்கரையில் வீடியோ எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்கான நேர்முகத் தேர்வு…

கீழக்கரையை மையப்படுத்திய ஆவணப்படம் மற்றும் பாடல் ஆல்பம் YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு அதற்கான வீடியோ எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு கான நேர்முகத் தேர்வு இன்று மற்றும் நாளை (10,11/01/21) நடக்கவிருக்கிறது. இதில் மேலே குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பங்களில் திறன்வாய்ந்த கலைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இளைஞர்களுக்கும் கலைத்துறையில் புதிதாக தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நேர்காணலில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறுகிறார் ஆவணப்பட ஒருங்கிணைப்பாளர் காதர் இடம் : கீழக்கரை கடற்கரை bench பகுதி […]

கீழக்கரையில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிய சூரிய ஒளி விளக்குகள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மேம்பாட்டு நிதியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிதாக சோலார் மின்விளக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை பகுதிகளிலும் பல இடங்களில் சோலார் மின்விளக்கு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இப்பணியை கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, இளைஞரணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் கழக நிர்வாகிகள் அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்தினர். இன்றைய செய்தி நிரந்தர வரலாறு கீழை […]

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சார்பாக கொரோனோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி..

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் (VCK)சார்பாக நகர செயலாளர் பாசித் இல்யாஸ்,  சிதம்பரம் தொகுதியில் கொரனவால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல். திருமாவளவன்MP வசம் ஒப்படைத்தார்.

கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக “விவசாயிகளின் எதிரி மோடி”.. வேளாண் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம்..

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் விரோதி மோடி என்கிற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமை உரையாற்றினார்.  அதை தொடர்ந்து  வரவேற்புரையை பொருளாளர் தாஜுல் அமீன்,  தொகுப்புரை நகர் செயலாளர் பகுருதீன்,  கண்டன உரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர தலைவர் அஹமது நதீர் மற்றும் வீரகுல தமிழர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆற்றினார். அதை தொடர்ந்து  Sdpi […]

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அரசு ஆயத்தம் – கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம்..

தமிழக கல்வித்துறையின் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் ஏராளமான பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முஹைதீன் இப்ராஹிம் வழிகாட்டுதலில், பள்ளி முதல்வர் திருமதி மேபல் ஜஸ்டஸ் மற்றும் உதவி தலைமை ஆசிரியை திருமதி லினிமோல் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கருத்து கேட்பு கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் திறக்கலாம் […]

திருப்பரங்குன்றம் சாலை குண்டும் குழியுமான சாலையில் பிரேக் போட முயன்ற வாலிபர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்தில் வாலிபர் பலி …

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து டூவீலரில் ஆரப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் பாலசுப்ரமணியன் (வயது 22) (ஹெல்மெட் அணியவில்லை) என்பவர் பைக்கில் வந்து பைக்கரா அருகே குண்டும் குழியுமான சாலையில் பிரேக் போட்ட போது பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணியன் மரணமடைந்தார். இதுகுறித்து மதுரை தெற்கு நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலுத்தாய் மற்றும் திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்ரமணியன் உடலை […]

கீழக்கரையில் அதிமுகவை நிராகரிப்போம் திமுக மக்கள் சபை வார்டு வாரியான கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என திமுக மக்கள் சபை கூட்டம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி எதிரில் உள்ள இடத்தில் நடைபெற்றது. சேது பொறியியல் கல்லூரி சேர்மனும் கீழக்கரை மக்கள் சபை பொறுப்பாளருமான முகமது ஜலீல் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலும், கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!