கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் செயலாளர் மற்றும் தாளாளராகிய எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் சென்னை புதுக்கல்லூரி விளையாட்டு கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை புதுக்கல்லூரியை நிர்வகித்து வரும் தென்னிந்திய முஸ்லிம் கல்வி சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினராகவும், ராமநாதபுரம் மாவட்ட குத்துச் சண்டை செயலாளராகவும் உள்ளார். இது பற்றி எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் கூறியதாவது, “மாணவர்களுக்கு கல்வி […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவியர்களின் இணைய வழி சந்திப்பு நிகழ்ச்சி………
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தாசீம் பீவி அப்துல் மகளிர் கல்லூரி 2020 ஆம் ஆண்டுக்கான முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி இணைய வழியாக நடைபெற்றது. 21, 22, மற்றும் 23.01.2021 ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு சுவையான நிகழ்வுகள் நடந்தேறியது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சுமையா முன்னிலை வகித்தார் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அஹமது புகாரி தலைமை ஏற்றார். அழகப்பா பல்கலைக்கழக மகளிர் கல்வி குழு […]
இராமநாதபுரம் மாவட்டம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்….
இராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் கிங் பேலஸ் மஹாலில் தகவல்தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய மு.கதிரவன் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் 4ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகையையொட்டி ஆலோசிக்கப்பட்டது இதில் தகவல் தொழில் நுட்ப அணி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று மாவட்டக் கழகப் பொறுப்பாளர் அறிவுறுத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் துணை […]
குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரையில் இரத்தான முகாம்…..
இந்திய நாட்டில் 72 ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரை அலைன்ஸ் மக்கள் நல்லிணக்கம் அமைப்பு, இராமநாதபுரம் ஏ.ஆர்.மருத்துவமனை இணைந்து நடத்திய தொடர் இரத்ததான முகாம் கீழக்கரை மிஷின் மருத்துவமனையிலும், இராமநாதபுரம் ஏ.ஆர்.மருத்துவமனையிலும் 26, 27 மற்றும் 28 தேதிகளில் தொடர் இரத்ததான முகாம் நடைபெற்றது. கீழக்கரையில் முதல் நாள் நடைபெற்ற முகாமை அலைன்ஸ் மக்கள் நல்லிணக்க அமைப்பு தலைவர் ஹபீப் முகம்மது தொடங்கி வைத்தார். அலைன்ஸ் மக்கள் நல்லிணக்க அமைப்பு செயலாளர் சபீக், இணைச்செயலாளர் […]
இளையாங்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் வெற்றி……
இராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடி புதூர் ஜிம் கானா வாலிபால் கிளப் நடத்திய மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது, அப்போட்டியில் பல மாவட்ட அணிகள் மோதின. இறுதியில் கீழக்கரையை சார்ந்த JVC கைப்பந்து கிளப் மற்றும் MAYF கைப்பந்து கிளப் அணியினர் மூன்றாம் பரிசாக ரொக்கம் ரூபாய் 20,000/- மற்றும் கோப்பை, நான்காம் பரிசாக ரொக்கம் ரூபாய் 15,000/- மற்றும் கோப்பையையும் பெற்றனர்.
It’s Me….BURGERS & BROASTED….It’s Me… ஆனால் இது உங்கள் உணவகம்…
It’s Me….. Broasted & Burgers…. பெயர் என்னுடையது என்பதை குறிக்கும். ஆனால் It’s Me என்ற பெயருக்கு பின்னாடியும் வாடிக்கையாளர் நலன் கலந்த பின்னனியே உள்ளது. ஆம் இது மக்களின் நலனை ஒவ்வொரு உணவு பொருட்களிலும் பேணப்படுகிறது என்பதை அதன் உரிமையாளர் ஹமீத் கூறிய பொழுதே புரிந்து கொள்ள முடிந்தது. It’s Me – BURGERS & BROASTED என்பது, தொழில் ரீதீயாக தொடங்கப்பட்டிருந்தாலும், இதற்கு பின்னால் பல வருட கனவுகளும், அனுபவங்களும் இருப்பதை அறியும் […]
புதிய மொபைல்ஸ் கடை “AR MOBILE” திறப்பு…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்வர் அலி மகன் மனாஸ் ஏ.ஆர் மொபைல் ஷோரூம் என்னும் புதிய கடை இன்று (27/01/2021) திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வழக்கறிஞர் வி.எஸ்ஹமீது சுல்தான், மஹ்தூமிய பள்ளி தாளாளர், எஸ். இப்திகார் ஹசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கு ஏராளமான புதிய மாடல்களில் மொபைல் போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்கும் மேலும் போன்களை சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படும் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் அன்வர் அலி […]
கீழக்கரையில் சசிகலாவை விடுதலை முன்னிட்டு அமமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..
பெங்களுர் சிறையிலிருந்து சசிகலா விடுதலையானதையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அமமுக நகர் செயலாளர் முஜிப்ரஹ்மான் தலைமையில் அவைத்தலைவர் நூருல் ஹக் முன்னிலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் இதில் இளைஞரணி செயலாளர் அன்பழகன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் செய்யது கருணை,6 வது வார்டு செயலாளர் முனீஸ்வரன், 1 வது வார்டு செயலாளர் சங்கரபாண்டி, மாணவரணி செயலாளர் காளி ரெத்தினம்,மீனவரணி செயலாளர் குமார்,வர்த்தக அணி செயலாளர் சுல்தான் இபராஹிம், சிறுபான்மை செயலாளர் முபராக், இணைச்செயலாளர் அபுதாஹிர்,மாவட்ட பிரதிநிதி […]
கீழக்கரையில் SDPI கட்சி சார்பில் 72வது குடியரசு தின விழா..
இந்திய தேசத்தின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு SDPI கட்சி சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர் தலைவர் ஹமீது பைசல் கொடி ஏற்றினார். வரவேற்புரை நகர் பொருளாளர் தாஜுள் அமீன் மற்றும் தொகுப்புரையை நகர் செயலாளர் பகுருதீன், சிறப்புரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர் தலைவர் அஹமது நதீர் மற்றும் எஸ்டிபிஐ நகர் தலைவர் ஹமீது பைசல் ஆகியோர் வழங்கினர். நன்றியுரையை வர்த்தக அணி நகர் தலைவர் செய்யது யாசீன் கூறினார். முன்னிலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் […]
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பில் 72- வது குடியரசு தின விழா..
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பில் 72- வது குடியரசு தின விழா பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் தலைமையில் நடந்தது. கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத் தலைவர் உமர் அப்துல்காதர் களஞ்சியம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவர் எம்.ஏ. ஹாருன் ரஷீத் மற்றும் பொருளாளர் எம்.எஸ்.எம் புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-வது வகுப்பு மாணவி பசீஹா கிராஅத் ஓதினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, […]
கீழக்கரை மஹ்தூமியா பள்ளியில் 72வது குடியரசு தின விழா..
கீழக்கரை மஹ்தூமியா தொடக்க பள்ளியில் 72வது குடியரசு தின விழா பழைய குத்பா பள்ளி ஜமா அத் தலைவர் செய்யது அப்தாகிர் தலைமையில், மஹ்தூமியா தொடக்க பள்ளியின் தாளாளர் ஜனாப். மீரா சாகிபு தொடக்க பள்ளியில் தேசிய கொடியினை ஏற்ற மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளி தாளாளர் S.இப்திகார் ஹசன் மேல்நிலைப்பள்ளியில் கொடியேற்றினார். இவ்விழாவில் ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன் ஜமா அத் பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன், ஜமா அத் துணை செயலாளர் உபையத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். மஹ்தூமியா […]
கைராத்துல் ஜலாலியா மேனிலை மற்றும் தொடக்கப்பள்ளியில் 72வது குடியரசு தின விழா..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி மட்டும் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா நிகழ்ச்சி கிராத் வாஹிது ஆலீம் ஓதி தொடங்கிவைத்தார். பள்ளியின் முன்னாள் தாளாளர் S.M.ஜவஹர் சாதிக், பள்ளியின் தாளாளர் S.M.N.செய்யது அப்துல் மத்தின் முன்னிலையில். கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமா அத் தலைவர் ப.அ.சேகு அபுபக்கர் சாகிபு தலைமையில் மற்றும் ஜமா அத்தார்கள். நிர்வாகிகள் கல்விக்குழு உறுப்பினர்கள் தலைமையாசிரியர். ஆசிரிய ஆசிரியைகள். மாணவ மாணவிகள் முன்னிலையில் சன்சைன் டிராவல்ஸ், சன்சைன் ஹஜ் சர்விஸ், […]
கீழக்கரையில் 72வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாம்…..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்குகிளை சார்பில் 72வது இந்திய குடியரசு தினத்தன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் A.அய்யூப்கான் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.K.முருகேசன் துவங்கிவைத்தார். மாவட்டசெயலாளர் ஆரிப்கான் மற்றும் கீழக்கரை அனைத்துகிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பிறமத சகோதர,சகோதரிகள் உள்பட 45 நபர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினார்கள். இந்த சிறப்பான முகாமின் ஏற்பாடுகளை தெற்குகிளை துணைத்தலைவர் பதுருசமான் […]
கீழக்கரையில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணி..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 100 க்கு மேற்பட்ட. போர்கள் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியும், மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருத்தும் மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலின் மாண்பையும், நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எவ்வித தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழி […]
வரும் தேர்தலில் தேமுதிக இருக்கும் அணி வெற்றி இருக்கும் – மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..
ஜெயலலிதா, கலைஞர் இல்லாத – இரு பெரும் தலைவர்கள் இல்லாத வருகின்ற தேர்தல் எல்லாக் கட்சிகளுக்கும் புதுத் தேர்தல்தான் – முதல் தேர்தல் தான். எல்லோர்க்கும் மிகப் பெரிய சவால்கள் காத்து இருக்கின்றன. சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி. அப்போது அவர் கூறுகையில், எங்களது செயற்குழு, பொதுக் குழு கூடி முடிவெடுத்த பிறகு தேமுதிக தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கும். தற்போது 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்து, ஆலோசனைக் […]
சத்திரக்குடி அருகே கர்நாடகா சுற்றுலா வேன்- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதல் கீழக்கரையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிலர் சென்னைக்கு ஆம்னி காரில் இன்று (23/01/2021) காலை புறப்பட்டனர். சத்திரக்குடி அருகே தபால் சாவடி பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் கீழக்கரையைச் சேர்ந்த ஹாஜா செய்யது அகமது 60, அகமது ஹசன் 32, ரூபினா 58 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திமுக மகளிர் அணி செயலாளர் இராமநாதபுரம் வருகை… கீழக்கரை நிர்வாகிகள் சந்திப்பு…
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திமுக மகளிர் அணி செயலாளரும், பாராளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி எம்பி யை விடியலை நோக்கி எனும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சிக்கு கலந்து கொளரள வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவரை கீழக்கரை திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
மதுரையில் சமூக நல்லிணக்கத்தை குழைக்க நினைக்கும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க SDPI, PFI, TMMK, TNTJ, VCK, ஜமாத்தினர் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம்..
மதுரையில் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்துவரும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் மத மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய நினைக்கும் பாஜகவினர் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் பள்ளிவாசல் பகுதியில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தி வந்த பாஜக கும்பல் ஜனவரி-10- 2021 தாமரை பொங்கல் என்ற பெயரில் மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெரு வழியாக மேல தாளங்களுடன் சென்றும் வெடிகளை வெடித்தும் […]
கீழக்கரையின் புதிய ஆண்கள் ஆடைகளின் அடையாளம் “BOW & BUTTONS”…
கீழக்கரையில் வெளிநாடுகளின் தரத்திற்கு ஏற்ப பல்வேறு ஆடையகம் இருந்தாலும், மக்களின் ரசனைக்கும் தேவைக்கும் ஏற்ப புதிய புதிய ஆடையகம் திறக்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில் சமீபத்தில் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சா்லையில் உள்ள இம்பாலா காம்ப்ளக்ஸில் திறக்கப்பட்டு உள்ள ஆண்கள் ஆடையகம் “BOWS & BUTTONS”. இந்நிறுவனத்தின் உரிமையாளர் பாசில் கூறுகையில், “கீழக்கரை இளைஞர்கள் எப்பொழுதுமே, புதுமையுடன் அழகிய ரசனை உடையவர்கள், அவர்களின் ரசனையை திருப்தி செய்யும் வகையில் புதிய டிசைன் ஆடைகள் குறைந்த விலையில் இங்கு […]
நீதி கேட்டு சாலை மறியல்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாக்கு உட்பட்ட திருப்புலாணி ஒன்றியம் தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த. செல்வம் மகன் செந்தில்குமார் வயது 32 என்பவர். இவர் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18.1.2021 தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த திருக்குடும்பம் மகன் ஆரோக்கிய சேசு வயது 50 என்பவருக்கு சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவுஎண் கொண்ட விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர் செந்தில் குமார் உட்பட தங்கச்சிமடம் அந்தோணி ராஜ் மகன் மெசியா வயது 30, வட்டவளம் உச்சபுளி வெள்ளைச்சாமி மகன் நாகராஜ் வயது52, மண்டபம் நேச பெருமாள் மகன் சாம் […]
You must be logged in to post a comment.