இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ராமேஸ்வரம், பாமன் பகுதி என மொத்தம் மூன்று கலங்கரை விளக்கங்கள் உள்ளது. தனுஷ்கோடி பகுதியில புதிய கலங்கரை விளக்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது அது இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் கீழக்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு கடந்த 25 ஆண்டுகளாக பொது மக்கள் பார்வையிட அனுமதிக்காமல் மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை 26.2.2021 முதல் பொது […]
Category: கீழக்கரை செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் தேர்வு..
இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியின் பதவிகாலம் முடிவடைந்ததால் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கீழ் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க அறிவிப்பு செய்யப்பட்டு 12/2/21 மற்றும் 19/2/21 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பொது அறிவிப்பு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வக்ப் வாரிய கண்காணிப்பாளர் R.அன்வர்தீன், வக்ப் ஆய்வாளர் S செய்யது ஆலம் இப்ராகிம் ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் ஏர்வாடி தர்கா காவல் ஆய்வாளர் சண்முகநாதன் ஆகியோரின் மேற்பார்வையில் 22/02/21 அன்று வக்ப் […]
குற்றவியல் காவல்துறைக்கு பாராட்டு சான்று….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் கீழக்கரை சரகத்திற்கு உட்பட்ட குற்றவியல் காவல் சார்பு ஆய்வாளர் சரவணன் உள்ளடக்கிய குழுவினர் சிறப்பாக செயல்பட்டு அனைத்து குற்றவியல் சம்பவங்களில் உள்ள குற்றவாளிகளை கைது செய்தும், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வெற்றிகரமாக பணியாற்றி வரும் கீழக்கரை சரக குற்றவியல் காவலர்களுக்கு ராமநாதபுர மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
காஞ்சிரங்குடி ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சி லெட்சுமிபுரம் கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவா் முனியசாமி லெட்சுமிபுரம் முத்துமாாியம்மன் கோவில் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியினை தொடங்கிவைத்தாா் 2 வது வாா்டு உறுப்பினா் விஜயகுமாா் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.
கீழக்கரையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் புதிய அலுவலகம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடுத்தெரு வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப் தலைமை வகித்தார். கீழக்கரை அனைத்து ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலைவைத்தனர். அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் செயலாளர் சேக் உசேன் அனைவரையும் வரவேற்றார். அறிமுக உரையை கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி நிகழ்த்தினார். கீழக்கரை அனைத்து ஜமாஅத் […]
அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணியினர் வெற்றி….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்கள் அதிரமாம் பட்டினத்தில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை FB tailors அணியினர் மூன்றாம் இடம் பெற்னர். இந்த அணியினருக்கு கோப்பை மற்றும் ரூபாய் 9000 ரொக்கத்தை பரிசாக பெற்றனர் சிறந்த ஆட்ட நாயகனுக்கான பரிசை ஆதில் பெற்று கொண்டார்.
இராமநாதபுரம் போலீசாருக்கு உடலில் அணியும் கேமரா…
இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் பயன்பாட்டுக்கென உடலில் அணியும் புதிய நவீன ரக 21 கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் வழங்கினார். இந்த கேமராக்களை தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு கடமையாற்றும் போலீசார் அவர்களை சுற்றிய நிகழ்வுகளை எளிதாக பதிவு செய்ய முடியும். மேலும், வாகன சோதனை, பகல் மற்றும் இரவு ரோந்து, போக்குவரத்து கட்டுப்பாடு, மனு விசாரணை, கூட்டங்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ, ஆடியோ, […]
பெற்ற பிள்ளைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை…
இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் வடக்கு தெரு மாரிமுத்து, 33. டீ கடையில் வேலை பார்த்தார். இவருக்கு 10 வயது, 12 வயது மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு மாரிமுத்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் . இதனால், மாரிமுத்துவை அவரது மனைவி கண்டித்தார். போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவேன் மனைவி, பிள்ளைகளுக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது பற்றி தகவலறிந்த சைல்டு லைன் குழந்தைகள் நலக்குழு சார்பில் கீழக்கரை மகளிர் போலீசில் 01.02.2020 அன்று […]
கீழக்கரையில் இன்று (17/02/2021) பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றம்..
பிப்ரவரி 17-பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைநகர் சார்பாக இரண்டுஇடங்களில் நடைபெற்றது. அதன் முதல் நிகழ்ச்சியாக ஜூம்மா பள்ளி அருகில் கொடிஏற்றும் நிகழ்ச்சி நகர் தலைவர் அஹமது நதீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழைஅஸ்ரப், மக்கள்செய்தி தொடர்பாளர் தொகுப்புரை ஆற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், எஸ்டிபிஐ கட்சயின் தொகுதி துணை தலைவர் நூருள் ஜமான், நகர் துணை தலைவர் ஜெய்னுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 4 கோபுர வாசல்கள் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி – கோவில் உள் வளாகத்தில் பக்தர்கள் அமர தடை…
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்படுகளுடன் வழிபாட்டு தளங்களுக்கு பொதுமக்கள் செல்ல அரசு உத்தரவிட்டிருந்த கடைபிடிக்கபட்டு வந்த நிலையில், தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்தும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று (16/92/2021) முதல் அனைத்து வயதினையுடைய பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நாளை (17/02/2021) முதல் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சுவாமி தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு, தெற்கு, மேற்கு, மற்றும் வடக்கு நான்கு கோபுரங்கள் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அதன்படி பக்தர்கள் […]
கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சார்பாக போதை பொருட்களில் இருந்து பாதுகாக்கவும், தடுக்கவும் கோரிக்கை..
கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ கீழக்கரையில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாக பரவிவரும் சூழலில் அதை தொடர்ந்து அதை விட போதை தரக்கூடிய மெத்தம்பெடமைன் எனும் வேதிப்பெயருடைய (கிரிஸ்டல் மெத்)எனும் போதைப்பொருள் அயல்நாட்டில் தடை செய்யபட்ட ஒன்று தற்சமயம் கீழக்கரையில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தி மிகவும் வேதனையாக உள்ளது. கஞ்சா, கிரிஸ்டல் மெத், மது, சில நேரம் கிடைக்காத காரணத்தால் சுலபமாக மருத்துகடைகளில் கிடைக்க […]
மரம் மற்றும் வளங்களை காக்க ஊக்குவிக்கும் விதத்தில் இளம் பசுமை நாயகர்கள் விருது..
மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்ப்போம், வனங்களை பாதுகாப்போப் என்ற நோக்கத்தோடு துணிப்பை, விதைப்பென்சில் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விதைப்பென்சிலை செடியாக வளர்த்த குழந்தைகளுக்கு அவர்களின் இல்லம் சென்று மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் நிறுவனர் அழகுராஜா இளம் பசுமை நாயகர்கள் விருது வழங்கி அச்சிறுவர்களை கௌரவித்தார்.
குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதாள திட்டத்தினை கைவிடக்கோரி ஆலோசனைக்கூட்டம்..
குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதாள திட்டத்தினை கைவிடக்கோரி ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்பு தலைவர் G.T.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் 14/12/2021 காலை 11 மணி அளவில் கந்தபுரம் சுடலை மாடன் சாமி கோவில் முன் புறம் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் தொகுதியை சார்ந்த பெரும்பான்மையான கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முக்கியமாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டத்தைப் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. […]
மதுரை அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி…
மதுரை ஜெயந்திபுரம் ராமையா தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மகன் சஞ்சீவ் குமார் வயது 18, இவர் தாய் இல்லாத காரணத்தினால் பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர் திருப்பரங்குன்றம் பகுதியில் மூலக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று (14/02/2021) விடுமுறை என்பதால், மாலை 4 மணி அளவில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்கள். இவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் கிணற்றினுள் இறங்கி ஒரு ஓரமாக கம்பியை பிடித்தபடியே […]
கீழக்கரை ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வழிகாட்டு குழுஅமைப்பு…
கீழக்கரை தெற்கு தெருவில் உள்ள பல்வேறு நற்பணிசங்கங்கள் மற்றும் அமைப்புகளின் ஒன்றிணைந்தகூட்டம் 14.02.2021 ஞாயிற்றுக் கிழமை இஸ்லாமியாபள்ளி வளாகத்தில் நடைபெற்றது, இஸ்லாமியபள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன்இப்ராஹிம் தலைமை தாங்கினார். அது சமயம் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன 1. கீழக்கரையில் மாணவர்கள் மத்தியில் அதிகமாகபுழங்கப்படும் போதை பொருட்கள் பற்றிபெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 2. மாணவர் சமுதாயத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்து வரும் வியாபாரிகள் காசுக்காக விபச்சாரம் செய்து வருபவர்களை விட கீழ்த்தரமானவர்கள். எனவே […]
டிஜிட்டல் இந்தியாவில்…. ATM இயந்திரத்திற்கும் வேலை நேரம் உண்டோ?? இருந்தும் … இல்லாமல் தவிக்கும் கீழக்கரை மக்கள்…
டிஜிட்டல் இந்தியாவில் திரும்பும் இடம் எல்லாம் சுய விளம்பரம். ஆனால். ATM இயந்திரத்திற்கும் வேலை நேரம் உண்டோ என சிந்திக்கும் நிலையில் தான் உள்ளது.. அதாவது பல ATM எந்திரங்கள் இருந்தும் எதுவும் தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே உள்ளது கீழக்கரையில் அமைந்திருக்கும் அனைத்து வங்கிகளின் ATM இயந்திரங்களின் நிலையும். வெளிநாட்டில் வேலை பார்க்கும் கீழக்கரை வாசிகளை குறி வைத்து பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து டெபாசிட் வாங்கி பதவி உயர்வு பெற்று வெளியூர் செல்வதில் […]
சாத்தூர் வெடி விபத்து பலி எண்ணிக்கை 11… காயம் பட்டவர்கள் 35கும் மேல்… ,
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு 30க்கும் மேற்பட்டோர் காயம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன் குளத்தில் விஜய்கரிசல்குளத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கு மேற்பட்ட அறைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது இன்று (12.02.2021) […]
தை அமாவசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
இராமயணம் இதிகாசத்துடன் தொடர்புடைய சேதுக்கரை கடலில் நீராடினால் பாவங்கள்,தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது.மேலும் தை அமாவசை முன்னிட்டு இங்கு வந்து தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பித்துருகடன், சங்கல்பபூஜை நடைபெற்றது. சேதுக்கரை கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் அதிகாலை முதல் பிற்பகல் வரை அமாவசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி இங்குள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநோயருக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். மேலும் வெள்ளை பிள்ளையார்,அகத்தியர் ஆகியோரை தரிசனம் செய்து பசுக்களுக்கு அகத்தி கீரை வழங்கினர்.பின்பு ஆதிஜெகநாத பெருமாள் […]
தீ விபத்தினால் வீதிக்கு வந்த குடும்பத்திற்கு உடனடியாக உதவி கரம் நீட்டிய மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை..
விழுப்புரம் அருகே தும்பூர் பகுதியில் ஆற்றங்கரையோரம் வசித்துவந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட இருளர் இனமக்களின் குடிசைவீடுகள் மின்கசிவு காரணமாக பற்றி எரிந்து சாம்பலானது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எந்தவித அடிப்படை உரிமைகளும் கிடைக்காமல் இருந்த இருளர் இனமக்கள் உணவுக்கும், உடைக்கும் தவிப்பது அறிந்து, மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார், சம்பந்தபட்ட அனைத்து குடும்பத்திற்கும் தலா ஒருமூட்டை அரிசி வழங்கி உதவி செய்ய […]
கீழக்கரை தாலுகாவில் கொரோனா கோவிட் ஷீல்டு தடுப்பு ஊசி முகாம்……..
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க தடுப்பு ஊசி கோவிட் ஷீல்டு அனைத்து மாநிலங்களிலும் போடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் ஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட திருஉத்திரகோசமங்கை அரசு மருத்துவமனையில் கீழக்கரை உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் முதல் கோவிட் ஷீல்டு தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டார். மருத்துவர் கலைராஜன் உடன் இருந்தார்.
You must be logged in to post a comment.