கீழக்கரையில் புதிய தொழுகைப் பள்ளி திறப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடைத் தெரு, ஈசா தண்டையால் தெருவில் பெண்கள் தொழுகை பள்ளியை சின்னக்கடைத் தெருவை சேர்ந்த S.S. செய்யது ஜலீல்கான் என்பவர் தனது  தாய், தந்தையர் நினைவாக சுமார் 750 சதுர அடி அளவில் உள்ள வெண்நிலத்தில் கட்டிடம் கட்டி இன்று அதை திறந்து உள்ளார். இவ் விழாவில் அப்பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி…….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகம்மது திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நகர் தலைவர் எஸ் சேகு ஜமாலுதீன் தலைமை வகித்தார்,  மாவட்ட செயலாளர் ஏ.எல் முஹம்மது பைசல், மாவட்ப துணைத்தலைவர் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் ராமநாதபுரம் நகர செயலாளர் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்வில் கீழக்கரை அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

திமுகவில் இணைந்த முன்னால் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்..

திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வும் தற்போதைய அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முத்துராமலிங்கம் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, கம்பம் செல்வேந்திரன், திமுக நிர்வாகிகள் முன்னிலையில் முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார். கடந்த1996_ 2001. தேர்தலில்திமுக சட்டமன்ற உறுப்பினராக திருமங்கலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்து 2011 2016 திருமங்கலம் […]

கீழக்கரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (அதிமுக/பாஜக கூட்டணி கட்சிகள்) செயல்வீரர்கள் கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உசைனியா திருமண மஹாலில் இன்று (20.03.21) இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குப்புராமு அறிமுகம் மற்றும் செயல்வீரர்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியான அதிமுக நகர் செயலாளர் ஜகுபர் உசேன்,பொருளாளர் அரிநாரயணன்,து.செயலாளர் குமரன்,அம்மா பேரவை செயலாளர் வி.வி.சரவண பாலாஜி, பாமக நகர் செயலாளர் லோகநாதன், மாவட்ட தலைவர் ஜீவா, லத்தீப், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் கணேசன், பாஜக எஸ்.சி.எஸ்.டி அணி வாசசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து…அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆலோசனை..

இராமநாதபுரம் திமுக வேட்பாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் இன்று (16/03/2021) நிகழ்வின் தொடக்கமாக சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணிகளை தொடங்கினார். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக  கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு வருகை தந்தார். கூட்டமைப்பு ஜமாஅத் தலைவர் செயலாளர் நிர்வாகிகள், மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளிடமும்  ஆதரவு கேட்டு உரையாற்றினார். பின்னர் நகரிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் சென்று ஓட்டு சேகரிப்பதை தொடர்ந்து பல வேறு சங்க நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கோரினார். இவரவருகையின் போது கீழக்கரை விடுதலை […]

மதுரை அதிமுக திருப்பரங்குன்றம் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தை கோவிலில் இருந்து தொடங்கினார்..

திருப்பரங்குன்றம் தொகுதி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா சரவண பொய்கை அறிய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அதிமுக அரசு செய்த நலதிட்டங்களை கூறி ஓட்டு சேகரித்தார். திருப்பரங்குன்றம் தொகுதியில் பேருந்து நிலையம் கார் பார்க்கிங் அமைத்து தரவும், மயில்கள் பாதுகாப்பாக இருக்க சரணாலயம் ஏற்படுத்தித் தரவும், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி தரவும்,  3 ஆண்டுகளில் […]

கீழக்கரையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கீழக்கரை திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டனி கட்சிகளும் கலந்துகொண்டு தேர்தல் வியூகம் பற்றி விவாதித்தனர்.

கீழக்கரை அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்க கோரி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி பஞ்சாயத்திற்க்குட்பட்ட சிவகாமிபுரத்தில் ஊராட்சி கழக செயலாளர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீண்டும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை முன்னாள் அமைச்சரும்,சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் மணிகண்டனுக்கு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இராமநாதபுரம் திமுக வேட்பாளராக காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் அறிவிப்பு..

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா..

ஹமீதியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா பள்ளி தாளாளர் ஹாமிது இப்ராஹிம் மற்றும் முதல்வர் திருமதி பிரமிளா  மேற்பார்வையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பெற்றோர்களுக்கு சமையல் போட்டி நடத்தப்பட்டு பரிசும் வழங்கப்பட்டது. மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு வாழ்த்து மடலை வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். இந்த விழாவிற்கு மண்டபம் DEO  முருகவல்லி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மண்டபம் D I ராமமூர்த்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் கலந்துக் […]

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சகோதரர் மறைவு..

இந்திய திருநாட்டின் அக்னி நாயகன், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாமின் அண்ணன் ஏபிஜெ முத்து மீரா மரைக்காயர் மூப்பால் தனது 104 வது வயதில் இன்று (07/03/2021) இரவு ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் 1917 நவம்பர் 5 ஆம் தேதி பிறந்தவர் என்பது குறுப்பிடதக்கது.

கீழக்கரை கலங்கரை விளக்கம்… பொதுமக்களின் அழகிய பொழுது போக்கு…. ஆனால் பாதுகாப்பு மிக முக்கியம்… கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கனிவான வேண்டுகோள்…

கீழக்கரை கலங்கரை விளக்கம் நிர்வாகம் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களை அனுப்ப வேண்டும். கட்டணம் வருவதால் கூட்டத்தை அதிக அளவில் அனுமக்க கூடாது பொது மக்கள் பாதுகாப்பு முக்கியம் என கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பொதுமக்கள் பார்வைக்கு கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டது.  அதனை காண சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக சென்ற வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில் கலங்கரை விளக்கத்தை காண சென்ற விடுதலை […]

கீழக்கரையில் நாளை (05/03/2021) தெற்கு தெரு ஜமாத் புதிய ஜும்ஆ பள்ளி திறப்பு..

கீழக்கரை தெற்குதெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் புதிதாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஜும்ஆ பள்ளி நாளை (05/03/2021) வெள்ளிக்கிழமை, பகல் 12.00 மணியளவில் ஜும்ஆ தொழுகையுடன் தொடங்கப்பட உள்ளது. இத்திறப்பு விழாவிற்கு பல் வேறு மார்க்க அறிஞர்கள், ஜமாஅத் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பல வேறு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவிற்கு கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கீழக்கரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் இதில் நகர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை “COMMITTEE OF MIF” ஒரு அறிமுகம்..

கீழக்கரை  “Committeeof MIF “சார்பாக அதன் அறிமுக கூட்டம் நடுத்தெருவில் கமீட்டியின் அமீர் ஆசிப்  தலைமையிலும், செயலாளர்.  பொருளாளர் மற்றும் கமீட்டி நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக  செய்யது ஜமாலி (அல் பய்யினா மதார்ஷா முதல்வர்) சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து கமீட்டியின் தொகுப்புரையே கமீட்டியின் நிர்வாக ஆலோசகர் .முகம்மது ஹாதில், பின்னர் நன்றியுரையை கமீட்டியின் நிர்வாக ஆலோசகர் சதக் வழங்கினார். மேலும் நடுத்தெரு ஜமாத்தார்களும், தெரு இளைஞர்கள் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல் […]

கீழக்கரை அரசு மருத்துவமனையில் அமரர் அறை (Mortuary Room) அமைக்க விடுதலை சிறுத்தை கட்சி ஆட்சியரிடம் மனு..

கீழக்கரை தாலுகாவாக மாறிய நிலையில், தினமும் பல நூறு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையில், எதிர்பாராத விதமாக உயிர் இழந்தவர்களின் உடலை பாதுகாக்க எந்த வித வசதியும் இல்லாத சூழலே உள்ளது.  அமரர் அறை என்ற பெயர் பங்கு வைத்த அறையோ குப்பைகளை கொட்டும் மோசமான நிலையிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.  சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தவரின் உடலை பாதுகாக்க வழி இல்லாமல் இறந்தவரின் உறவினர்களே உடலை பாதுகாக்க குளுரூட்டும் பெட்டி ஏற்பாடு செய்த அவலமும் நடைபெற்றது. […]

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கடத்திச் சென்ற உ.பி. யோகி அரசை கண்டித்து கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கடத்திச் செல்லப்பட்ட உ.பி. யோகி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக கீழக்கரையில் லெப்பை டீ கடை அருகில் மாலை 5/15 மணியளவில் நகர் தலைவர்_அஹமது நதீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை பாப்புலர் ஃப்ரண்ட் நகர் செயற்குழு உறுப்பினர்_சிராஜ் தொகுத்து வழங்கினார். பாப்புலர்ஃப்ரண்ட் செயற்குழு உறுப்பினர் மற்றும்  ஊடக பிரிவு மக்கள் செய்தி தொடர்பாளர் கீழைஅஸ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை எஸ்டிபிஐ கட்சியின் […]

கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “சாதுமா மளிகை கடை”..

மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது மளிகை கடைதான்.  எத்தனையோ ஆன்லைன் கடைகள் தோன்றினாலும் நம் வீட்டு அருகில் உள்ள கடைகளில் சென்று பொருளை வாங்கும் திருப்தி எதிலும் கிடைப்பதில்லை.  அதுவே பல்வேறு மளிகை கடைகள் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது. அதன் வரிசையில் தற்சமயம்  கீழக்கரை  தெற்குத் தெரு பள்ளி வாசல் எதிரில் புதியதாக  “சாதுமா மளிகை கடை”  திறக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து விதமான மளிகைப் பொருட்கள், ஸ்டேஷனரி மற்றும் மிட்டாய் வகைகள் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு…ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் தொடக்கம்..

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கான  16வது சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தமிழக சட்ட சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச்-12ம் தேதி தொடங்கி மார்ச் -19ம் தேதி முடிவடைந்து, வேட்புமனு பரிசீலனை மார்ச்-20ல் நிறைவு பெறுகிறது. மேலும்  வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச்-22 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஓரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி ஒட்டுப்பதிவு தொடங்கி, தேர்தல் வாக்கு எண்ணிக்கு மே […]

திமுக சார்பில் போட்டியிட கீழக்கரை இளைஞர் விருப்பமனு…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இளைஞரணி பொறுப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான  அண்ணா அறிவாலயத்தில் இன்று (24/02/2021) மாவட்ட கழக பொறுப்பாளர் முத்துராமலிங்க உடன் சென்று விருப்ப மனு அளித்தார். இந்நிகழ்வின் போது கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹமது மற்றும் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!