உலகை அச்சுறுத்தி வரும் இரண்டாம் அலை தமிழகத்திலும் கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. தற்சமயம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கீழக்கரை நகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து ரூபாய் 200 அபராதம் விதித்து வந்தநிலையில். தற்சமயம் காவல்துறையை மட்டும் வைத்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க சொல்லி மற்ற துறையினர் கட்டாயப்படுத்துவதால் காவல்துறையினர் விரக்தியில் உள்ளனர். இதுபற்றி காவல்துறையினரிடம் விசாரித்த போது […]
Category: கீழக்கரை செய்திகள்
சட்டமேதை டாக்டர்.அம்பேத்கருக்கு பாஜகவினர் மரியாதை..
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் புல்லந்தை கிராமத்தில் அமைந்திருக்கும் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மாநில செய்தி தொடர்பாளர் சுப நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மாநில செய்தி தொடர்பாளர் குப்புராம், மாவட்டத் தலைவர் முரளிதரன், வை.வாசசேகர் மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அணி, ஒன்றிய தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் பாபு மற்றும் மாநில […]
சின்ன மாயாகுளம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விசிக சார்பில் மரியாதை…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் கிராமத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் விடுதலை சேகரன் தலைமையில் முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளர் யோசபு திருவடனை தொகுதி பொறுப்பாளர் பழனிக்குமார் முன்னிலையிலும் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், பஞ்சநாதன், ஷாஜகான் உள்ளிட்ட பல விடுதலை சிறுத்தை […]
புனித ரமலான் மாதம் தொடக்கம்… கீழக்கரையில் இரவு நேர சிறப்பு தொழுகை…
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று (13/05/2021) தொடங்கியது. இதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ரமலான் மாத இரவு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இளைஞர்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
இன்று (11/04/2021) வெளியானது “KILAKARAI ANTHEM”…
கீழக்கரையின் பெருமையை விளக்கும் வண்ணம் மிகவும் நவீன யுக்திகளை கொண்ட இன்றைய இளைய தலைமுறையை கவரும் வண்ணம் “ராப்” வகையில் “KILAKARAI ANTHEM” இன்று (11/04/2021) காலை 11.00 மணியளவில் ACTIONKLK YOUTUBE CHANNELல் வெளியானது. இதில் கீழக்கரை பழக்க வழக்கங்கள், உணவு முறை, கலாச்சாரம், உடுத்தும் உடை முறை, நட்பின் ஆழம் என பலதரப்பட்ட விசயங்களை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் கூறியுள்ளனர். இந்த படைப்பை கீழக்கரையைச் சார்ந்த காதர் மற்றும் அப்துர் ரஹ்மான் […]
நவீன முறையில் கீழக்கரை பெருமை பேசும் “KILAKARAI ANTHEM”…. 11/04/2021 அன்று வெளியீடு..
கீழக்கரையின் பெருமையை விளக்கும் வண்ணம் பல வரலாற்று ஆய்வுகள், புத்தகங்கள் என வெளிவந்திருந்தாலும், இன்று இளைய தலைமுறையை கவரும் வண்ணம் “ராப்” வகையில் கீழக்கரை பழக்க வழக்கங்கள், உணவு முறை, கலாச்சாரம், உடுத்தும் உடை முறை, நட்பின் ஆழம் என பலதரப்பட்ட விசயங்களை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் கூறியுள்ளனர். இந்த படைப்பை கீழக்கரையைச் சார்ந்த காதர் மற்றும் அப்துர் ரஹ்மான் என இரு இளைஞர்கள் பல மாத உழைப்புகளுடன் முயற்சி செய்துள்ளனர். இது சம்பந்தமாக […]
கீழக்கரையில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வினியோகம்…..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இரண்டாவது கட்டப் பரவும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (10/04/2021) கீழக்கரை நகர் கழக செயலாளர் பசீர் அகமது தலைமையிலும் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான திமுகவினர் மற்றும் பொது மக்கள் பயனடைந்தனர்.
கீழக்கரை மேலத்தெரு புதுபள்ளியில் நாளை (09/04/2021) ஜும் ஆ நேரடி ஒளிபரப்பு…
கீழக்கரை மேலத்தெருவில் அமைந்துள்ள புதுப்பள்ளியில் நாளை, வெள்ளிகிழமை முதல் (09/04/2021) ஜும்ஆ பயான் நேரடியாக youtube மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி கீழக்கரை MATRIX MEDIA மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
கீழக்கரை வடக்குத் தெருவில் பெண்களுக்கான புதிய தொழுகை பள்ளி…
கீழக்கரையில் பல் வேறு ஜமாத் சார்ந்து பல தொழுகை பள்ளிகள் உள்ளன, ஆனால் பெணகளுக்கான தொழுகை பள்ளியின் தேவை அதிகமாகவே உள்ளது. இதை கருத்தில் கொண்டு கீழக்கரை ஷேகு அப்பா ஜங்சன் குழுமத்தின் சார்பாக வடக்குத் தெரு எண் 19/173 முகவரியில் இன்று (07/04/2021) மாலை மக்ரிபு தொழுகையுடன் தொடங்க உள்ளது. இத்திறப்பு விழா வடக்குத் தெரு ஜமாத் தலைமையில் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட உள்ளது. இத்திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்வத்துடன் வாக்களித்து வரும் இராமநாதபுர சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று (06/04/2021) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்த்து காலை 11.00மணி நிலவரப்படி 26.29% ஓட்டு பதிவாகியுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரையில் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகிறார்கள். இராமநாதபுர சட்டமன்ற வேட்பாளர்களும் தங்களுடைய பகுதிகளில் ஓட்டளித்து வருகிறார்கள்.
தயார் நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தேர்தல் மையம் மற்றும் அலுவலர்கள்..
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் தேர்தல் அலுவலர்கள் உள்ளனர். அதே போல் முதல்முறையாக கொரான நோயாளிகளுக்காக 6 முதல் 7 மணி வரை சிறப்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் அலுவலர்களுக்கு கவச உடை வழங்கப்பட்டுள்ளது. அதே போல் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு முக கவசம் மற்றும் சனிடைசர் வழங்கப்பட்ட உள்ளது. வாக்குச்சாவடி மையங்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் 108 ஆம்புலன்ஸ் […]
தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் திருமங்கலம் பணிமனை அரசு பேரூந்துகள்… நிர்வாகம் நித்திரையில் இருந்து விழிக்குமா??
மதுரை மாநகர் வட்டத்தில் மிகவும் அதிகமான வழித்தடங்களை கொண்ட பணிபனைகளில் ஒன்றாகும். ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் சமீபகாலத்தில் 15கும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அரசு பேரூந்தில் பயணம் செய்வதில் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். கடந்த 29/03/2021 அன்று TN58N1888 ஏற்பட்ட விபத்தில் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். அதே போல் இன்று (03/04/2021) இன்று மதியம் திருமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த திருமங்கலம் பணிமனைக்கு TN58N1541 […]
கீழக்கிடாரம் அல் மதரஸா நூருல் ஹிதாயா முதலாமாண்டு பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரம் அல் மதரஸா நூருல் ஹிதாயா முதலாமாண்டு பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மதரஸாவின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மார்க்க கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊர் ஜமாத்தார் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பட்டமும், பரிசும் வழங்கப்பட்டது. இதில் ஆலிமா மற்றும் முபல்லிஹா பட்டத்தை ஹாஜா முகைதீன் மகள் பெனாசிர் அஸ்மா பெற்றார். அதே போல் முபல்லிஹா பட்டத்தை லைலத்துல் கத்ரிய்யா […]
சென்னையில் கீழக்கரை எழுத்தாளர் மஹ்மூது நெய்னா எழுதிய “கீழக்கரை வரலாறு” நூல் வெளியீட்டு விழா..
தமிழ் மரபு அறக்கட்டளை பண்ணாட்டு அமைப்பு மற்றும் இப்போது டாட் காம் இனைந்து வெளியிட்ட எஸ்.மஹ்மூது நெய்னா எழுதிய “கீழக்கரை வரலாறு” நூல் வெளியீட்டு விழா 28.03.2021 ஞாயிறு காலை 10:00 மணியளவில் சென்னை, தி.நகர், தக்கர் பப்பா வளாகம், வினோபா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர். க.சுபாஷினி தலைமை வகித்து கருத்துரை வழங்கினார். சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் அறங்காவலர் பி.எஸ்.ஏ அஷ்ரப் புஹாரி முன்னிலை வகித்த இந்த […]
மதுரையில் கடன் பிரச்சினையால் கணவன் – மனைவி மற்றும் குழந்தை தற்கொலை…
மதுரை பந்தடி 5வது தெருவில் வசித்து வரும் விஜயகுமார் அவரது மனைவி வாணி மற்றும் இவர்களது ஒரே குழந்தை ஹாசினி. இவர் மதுரை நகைக்கடை பஜாரில் உள்ள கடைகளுக்கு விஜயகுமார் நகைகள் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக அவர் பல இடங்களிலும் லட்சக் கணக்கில் கடன் வாங்கி தொழிலில் போட்டுள்ளார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே விஜயகுமாரிடம் நகை வாங்கியவர்கள் அதற்கான உரிய பணத்தை சரிவர கொடுக்கவில்லை எனவும் இதனால் விஜயகுமாருக்கு சுமார் 20 லட்சம் வரை […]
மிருகமான மனித செயல்… காயங்களுடன் வளம் வரும் கால்நடைகள்…. மனிதநேயம் எங்கே போனது??..
மதுரை மாவட்டம் விரிவாக்க பகுதியான அழகர்கோவில் சாலை சூர்யா நகர் பகுதியில் மாடுகள் காயங்களுடன் சுற்றித் திரிகின்றன. கடந்த ஒரு மாதமாக ரெண்டு காளைமாடு மற்றும் பசு மாடு மீது சமூக விரோதிகள் சிலர் மாட்டின் உடம்பின் மீது திராவமோ, வெந்நீரையோ ஊற்றியுள்ளனர். இதனால் அந்த மாடுகள் உடலில்தீக்காயம் ஏற்பட்டது போல் காயமடைந்து பரிதவித்து வருகிறது. இதனால் இந்த மாடுகள் சரியான தகுந்த சிகிச்சை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றது. மாடுகளின் நிலைமை அறிந்த அப்பகுதி குடியேற்றவாசிகள் பலமுறை தன்னார்வ […]
கீழக்கரை அல் மதரஸத்துர் ராழியாவின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா..
கீழக்கரை அல் மதரஸத்துர் ராழியாவின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று (26.03.2021) கடற்கரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அல் பைய்யினா அகாடமி முதல்வர் ஆலிம் செய்யது ஜமாலி தலைமையேற்று நடத்தினார். மேலும் சிறப்பு பேச்சாளராக மௌலவி ஹுசைன் மன்பஈ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கீழக்கரை அளவில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கும், மதரஸா மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மதரஸாவின் முதல்வர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி, தாளாளர் அஹமது சுஹைல், நிர்வாகிகள் அஜ்மல் கான், […]
கீழக்கரையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு நகராட்சி அபராதம்……..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் தமிழக அரசு கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது, அதே போல் முக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் வட்டார வள மருத்துவ அதிகாரி டாக்டர் ராசிக்தீன் […]
தில்லையேந்தல் கிராம பஞ்சாயத்திற்கு கீழக்கரை தனியார் நிறுவனம் சார்பாக சூரிய ஒளி விளக்கு..
செய்யது முகம்மது அப்பா (செய்யது அப்பா) தர்ஹா பகுதியில் சூரிய ஒளி தெரு விளக்குகள் பொதுமக்கள் நலன் கருதி M.S.A Land Promoters and Developers தில்லையேந்தல் கிராம பஞ்சாயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கீழக்கரை, தில்லையேந்தல் கிராமத்தில் உள்ள செய்யது முகம்மது அப்பா (செய்யது அப்பா) தர்ஹாவில் இருந்து காட்டு பள்ளி செல்லும் சாலையிலும், செய்யது அப்பா புது நகர் செல்லும் வழியிலும் விளக்குகள் இன்றி இருளில் இருந்து வந்த நிலையில் பொது மக்களின் இன்னல்களை கருத்தில் […]
மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் தலையில் ஏறி இளைஞர் பலி..
மதுரை எல்லீஸ் நகர் ரயில்வே மேம்பாலத்தில் இன்று (21/03/2021) இரவு 7 30 அளவில் மதுரை தெற்கு வாசலில் முகைதீன் ஆண்டவர் தெருவை சேர்ந்த சம்சுதீன். இவரது மகன் தாஜுதீன் 33 இவர் எல்லிஸ் நகர் 70 அடி ரோட்டில் பெரியார் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார், அதே சமயம் எதிரே திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் மகன் கிஷோர் 26 பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து எல்லீஸ்நகர் ரோடு வழியாக திருமங்கலம் செல்ல எல்லிஸ் நகர் ரயில்வே மேம்பாலம் […]
You must be logged in to post a comment.