தமிழகம் முழுவதும் கொரோணா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டு அதன் அடிப்படையில் நாளை (06/05/2021) முதல் கீழக்கரையில் செயல்படும் அனைத்து காய்கறிகளிலும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும் என்று இன்று (05/05/2021)கீழக்கரையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் கீழக்கரை இந்து பஜாரில் உள்ள காய்கறி மார்க்கெட்டை நாளை முதல் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றுமாறு கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் நகராட்சி […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரையில் தடை செய்யப்பட்ட பகுதியை அதிகாரிகள் பார்வை…….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கரோனா வைரஸ் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியை கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டனர் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்று கீழக்கரை நகராட்சி ஆய்வாளர் பூபதி இடம் கேட்டறிந்தார். உடன் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
கீழக்கரையில் அரசு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள வர்த்தக சங்கத்தினருடன் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் பூபதி,காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தற்சமயம் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு விதிமுறைகளை பின்பற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு அறிவித்துள்ள படி 1.பால் கடை,மருந்தகம் முழு நேரமும் செயல்பட அனுமதி. 2.காய்கறிகடை,மளிகைக்கடை,டீக்கடை (தேநீர் கடை) ஆகியவை நண்பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி. 3.குறிப்பிட்ட நேரங்களில் ஹோட்டலில் பார்சல் உணவுக்கு […]
கொலை செய்த குற்ற உணர்ச்சி.. தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்..
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் யோகா ஆசிரியரை கொலைசெய்து, குற்ற உணர்ச்சியில் ஒருமாதம் கழித்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட வழக்கறிஞரால் பரபரப்பு. காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால் தான் தனது மகள் உயிர் பறிபோனதாக கொலையுண்ட சித்ரா தேவியின் தந்தை பரபரப்புப் பேட்டி. மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பகநகர் அருகே உள்ள ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்-(45) இவரது மனைவி விஜி-(35), இவர்களுக்கு ஹரி ஸ்ரீ (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் கருத்து […]
கீழக்கரை அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை பிரிவு தொடங்க விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்தல்..
கீழக்கரை அரசு மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பிரிவு அமைத்து மருத்துவர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளது. இது சம்பபந்தமாக கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளரும் சமூக ஆர்வலருமான பாசித் இல்யாஸ் கூறியதாவது, “கீழக்கரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு எதுவும் இல்லை என்றும், வெண்டிலட்டர், ஆக்சிஜன், வசதி எதுவும் கிடையாது என்பது வேதனை அளிக்கிறது. வெண்டிலட்டர், ஆக்சிஜன், வசதிகளுடன் குறைந்தது ஐம்பத்து படுக்கை வசதிகளுடன் கூடிய அதிகமருத்துவர்கள் போர்கால […]
மலைகிராம மக்களுக்கு மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிவாரண உதவி !
வேலூர் மாவட்டம் ஆவலரங்கப்பள்ளி மலை கிராம மக்களுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவும், மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையும் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வறட்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரத்துடன் துண்டிக்கப்பட்டு கிடக்கும் மலையடிவார கிராமமான ஆவலரங்கப்பள்ளி மக்களுக்கு அந்த பகுதியின் காவல் ஆய்வாளர் இலக்குவன் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை “அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் அந்த பகுதியில் முகாமிட்டு, சம்பந்தப்பட்ட கிராம […]
சாலை விபத்தில் மதுரையைச் சார்ந்த 5 பேர் பலி…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பழ வியாபாரி மற்றும் குடும்பத்தினர் 5 பேர் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி. ஏழு மாத பெண் குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இறந்தவர்களில் ஒருவர் கல்லூரி மாணவி. மதுரை மாவட்டம் திருமங்கலம் சவுக்கத் அலி தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். ( வயது 50). பழ வியாபாரி. இவர் தனது ஆம்னி காரில், திருமங்கலத்தில் இருந்து சிவகாசிக்கு, சிவகாசியில் வசிக்கும் தனது மகள் நஸ்ரின் பாத்திமா (வயது 25), பேத்தி இளான் […]
முழு ஊரடங்கு வெறிச்சோடிய வண்ணாங்குண்டு..
இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியில் கொரோனோ வைரசின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால் இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை அனைத்து பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வண்ணாங்குண்டு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. தகவல்:- SH.பாசித், வண்ணாங்குண்டு
முழு ஊரடங்கு வெறிச்சோடிய கீழக்கரை…
கொரோனொ வைரஸ் இரண்டாம் அலையில் வீரியமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு அதைக் கட்டுப்படுத்த இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதைப் பின்பற்றும் வகையில் கீழக்கரையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி உள்ளது.
கீழக்கரை நகர் சுகாதார சீர் கேடு…. விடுதலை சிறுத்தை கட்சி கண்டனம்…சீர் செய்ய கோரிக்கை..
கீழக்கரையில் சாக்கடை நீர் ஆங்காங்கே தொடர்ந்து வெளியில் ஓடி கொண்டு இருக்கின்கிறது. கீழக்கரை முழுவதும் குப்பைகள் உடனுக்குடன் தேங்கவிடாமல் எடுக்க வேண்டும் என்றும், வார் கால்களில் பல இடங்களில் மூடி இல்லை. கீழக்கரை முழுவதும் தெரு மீன் விளக்குகள் பல இடங்களில் ஏறியவில்லை. கீழக்கரையில் தொடர்ந்து ஊர் முழுவதும் ஆங்காங்கே சாக்கடை நீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது பொது மக்களுக்கு நோய் ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கு நிரந்தர திர்வு இல்லை. பல காலங்கள் ஓடி […]
கீழக்கரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது. இதில் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளி கடைபிடித்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “ சுட்ட கறி”… இயற்கை சூழலில் ஒரு உணவகம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை – ஏர்வாடி சாலை சந்திப்பில் (முக்கு ரோடு) ஐயங்கார் பேக்கரி எதிரில் புதிதாக “சுட்ட கறி” எனும் அரேபிய மணத்துடன், இந்திய உணவு வகைகளுடன் இயற்கையான சூழலுடன் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் இயற்கையான சூழலில் அமர்ந்து சாப்பிட வசதியாக தென்னை மரத்தில் மேசைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள் வாகனத்தில் இருந்த வண்ணம் ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு வசதியான இடம் உள்ளது. இங்கு அரேபிய உணவு வகைகளான மந்தி, சவர்மா, […]
கீழக்கரையில் புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அனஸ் காம்ப்ளக்சில் H.R FITNESS SPOT என்ற பெயரில் புதிய உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. இந்த பயிற்சி கூடத்தை கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திறந்துவைத்தார். உடற்பயிற்சிக் கூடம் உரிமையாளர் சாலை தெருவை சேர்ந்த ரியால் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியின் போது திமுக நகர செயலாளர் பஷீர் அகமது, திமுக மாணவர் அணி அமைப்பாளரும் மஹ்துமியா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன் மற்றும் கீழக்கரை […]
இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏப்ரல் 25முதல் விமானங்கள் ரத்து… உச்சம் தொட்ட டிக்கெட் விலை..
உலகம் முழுவதும் கொரோனோ தொற்றின் இரண்டாம் அலை கடுமையாக பாதித்துள்ளது. இதில் இந்தியா மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு 3லட்சத்தை தாண்டிய நிலையில் பல் வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து செல்லும் விமானத்திற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் வரும் ஏப்ரல் 25ம் தேதி முதல் நீடிக்கதக்க 10நாள் பயண தடையை இந்தியாவில் இருந்து வரும் விமானத்துக்கு தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் […]
கீழக்கரை MMK பெட்ரோல் வளாகத்தில் அனைவரும் பயன் பெறும் வகையில் நோன்பு திறக்கும் வசதி..
கீழக்கரை MMK.பெட்ரோல் பங்கில் அமைந்திருக்கும் “மஸ்ஜித் இப்ராஹிம்” பள்ளிவாசலில், கொரொனோவால் மக்கள் வாழ்வாதாரத்தினால் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் ரமலான் மாதம் முழுவதும் “இஃப்தார்” எனும் நோன்பு திறக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனோ காலம் என்பதால் அனைத்து விதமாக பாதுகாப்பு விசயங்களையும் கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கீழக்கரையில் முழு ஊரடங்கு பற்றி கலந்தாய்வுக் கூட்டம்….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அது பற்றி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அனைத்து ஜமாத் தலைவர்களுடனும், கீழக்கரை வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஹோட்டல் மற்றும் திருமண மண்டபம் உரிமையாளர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. அரசு அறிவித்த விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வராமல் அவர்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. […]
கீழக்கரை வடக்குத் தெரு “NASA” அமைப்பு சார்பாக ரமலான் மாத சிறப்பு போட்டிகள் அறிவிப்பு..
கீழக்கரையில் பல்வேறு அமைப்புகள் மார்க்க பணிகள் மற்றும் சமுதாய பணிகள் செய்து வருகின்றனர். இதில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மார்க்கம் மற்றும் சமூக நலப்பணிகளை செய்து வருகிறது. இப்பணிகளில் ஒரு பகுதியாக ரமலான் மாதங்களில் சிறுவர், சிறுமியர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல் வேறு போட்டிகள் நடத்தி வருகிறார்கள். இந்த வருடமும் ரமலான் மாதத்தை முன்னிட்டு பல் வேறு போட்டிகள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் கிராத் போட்டி, […]
இரவு நேர ஊரடங்கு… வெறிச்சோடிய கீழக்கரை சாலைகள்…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக அரசு பிறப்பித்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக இரவு 10மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு இன்று (20/04/2021) முதல் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் இரவு 9 மணி அளவில் கீழக்கரை காவல் துறையினர் அனைத்து கடைகளையும் அடைக்க கோரிக்கை வைத்தனர், இதனால் கடைகள் 9மணி முதல் அடைக்கப்பட்டது.
நாளை 20/04/2021 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. புதிய பேருந்து அட்டவணை.. மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு..
மதுரையிலிருந்து கோவை, நாகர்கோவிலுக்கு மாலை 5 மணி வரையே பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். அரசுப் போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு உத்தரவின்படி கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை முதல் இரவு நேர ( இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் மாட்டுத்தாவணி […]
கீழக்கரையில் கொரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்..
கொரொனோ இரண்டாம் அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அரசு பல் வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மலேரியா டெங்கு போன்ற கொசு மூலம் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் 21-வார்டு பகுதிகளிலும் புகை கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல் ஆய்வு செய்து வருகிறார்.
You must be logged in to post a comment.