இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனர வைரஸ் தடுக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்க உத்தரவின்பேரில், கீழக்கரை நகராட்சி ஆணையர் பூபதி தலைமையில் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி கீழக்கரை நகர் பகுதி முழுவதும் நடைபெற்றது.
Category: கீழக்கரை செய்திகள்
காற்றில் பறக்கும் அரசாங்க வழிமுறைகள்… மருத்துவமனையா??.. டீ கடையா??.. சந்தேகத்தை கிளப்பும் மருத்துவமனையில் டீ அருந்துபவர்களின் கூட்டம்…நடவடிக்கை எடுக்க முயன்ற சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல்..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வது வார்டு திருப்பரங்குன்றம் சாலை பைக்காரா பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனையில் 24 மணி நேரமும் டீ கடையை திறந்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் வந்ததை அடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் சம்பவ இடத்திற்கு சென்றபொழுது அங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட நபர்கள் குழுமியிருந்துள்ளனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் கடையை அடைக்க வலியுறுத்திய பொழது, அங்கிருந்த ஒருவர் தான் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி “உன்னால் முடிந்ததை […]
கீழக்கரையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்…
கீழக்கரையில் இன்று (மே 18,2021) இந்தியா முழுவதும் கொரோனவைரஸ் இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் இந்திய அரசு 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்க செயலாளர் எபன் பிரவீன்குமார் ஏற்பாட்டில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் […]
தயார் நிலையில் இருக்கும் கீழக்கரை அரசு மருத்துவமனை சிறப்பு கொரோனோ சிகிச்சை படுக்கை வசதிகள்..எதிர்பாராத மருத்துவர்களின் மருத்துவ விடுப்பு… சட்டமன்ற உறுப்பினரின் உடனடி கவனத்தினால் அவசர கால மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு..
கீழக்கரை அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் காதர் பாட்சா இன்று (15/05/2021) ஆய்வு செய்தார். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று, வரும் நோயாளிகளுக்கு பிராணவாயு ஆக்சிஜன் உள்ளதா என்று மருத்துவரிடம் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கேட்டறிந்தார். பின்பு கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பூபதி இடம் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும் நகர்புறத்தில் எவ்வாறு […]
கீழக்கரையில் ரேஷன் கடையில் 2000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்..
தமிழக அரசு பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை புரிந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பொறுப்பேற்ற நாளன்று போடப்பட்ட 5 கையெழுத்தில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் முதல் தவணையாக 2 ஆயிரமும் அடுத்த தவணையாக 2 ஆயிரமும் தனித்தனியாக வழங்கப்படும் என அறிவிப்பை பதவியேற்பு அன்று வெளியிட்டார். ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்தநாளன்று இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்கி […]
புனித நகரமான மக்கா, மதீனா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நோன்பு பெருநாள் தொழுகை..
ஈகை திருநாளான நோன்பு பெருநாள் தொழுகை இன்று (13/05/2021) புனித நகரமான மக்கா, மதீனா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் அரசாங்க வழிகாட்டுதலின் படி திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்தவுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். கடந்த வருடம் தாக்கிய கொரோனோ வைரசின் தாக்கம் இந்த வருடமும் வீரியமாக தொடர்வதால் தமிழகத்தில் […]
மதுரையில் கொரோனா தீவிரம்… அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பபாடு… நோயாளிகள் அவதி..
மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ சிறப்பு வார்டில் ஒரு சில படுக்கை மட்டுமே காலியாக உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் படுக்கை நிரம்பியதால் கொரோனோ பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் நிலை. மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1024 பேர் கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று வினால் இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 6561பேர் தற்போது அரசு மற்றும் தனியார் […]
கீழக்கரையில் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம்..
கொரோனவைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலை உள்ளதால் கீழக்கரை காவல்துறை மற்றும் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு செய்வதற்காக கீழக்கரையில் உள்ள புதிய பேருந்து நிலையம், விஏஓ அலுவலகம், நகராட்சி அலுவலகம், இந்து பஜார், கமுதி பால் கடை மற்றும் முஸ்லீம் பஜார் பகுதியில் ஒலிபெருக்கி வைத்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்றும், கட்டாயம் முகக் கவசம் பயன்படுத்த வேண்டும், அடிக்கடி கைகளைக் கிருமி […]
கீழக்கரையில் காவல்துறை தலைமையில் கூட்டம்.. ரமலான் பண்டிகை சிறப்பு வழிபாடுகள்.. கொண்டாட்டங்களை தவிர்க்க வலியுறுத்தல்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதிகமாககொரோனா வைரஸின் தாக்கம் பரவிவருகிறது. அதனால் தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்தது அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு இன்னும் ஓரிரு நாள்களில் ரம்ஜான் பண்டிகை வர உள்ள நிலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவதற்காக அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் சார்பில் சிறப்பு தொழுகை […]
ஊரடங்கு… குறைக்கப்பட்ட நேரம்… பெட்ரோலுக்கு காத்து கிடக்கும் மக்கள்..
நேற்று முதல் (11/05/2021) பரவி வரும் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசாங்கத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனே விற்பனைதளங்களின் நேரம் மதியும் 12.00மணிக்குள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கீழக்கரை மற்றும் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்குவதற்காக அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்ததை பல்வேறு இடங்களில் காண முடிந்தது.
முழு ஊரடங்கு அமல்… கீழக்கரையில் காவல்துறை தீவிர கண்காணிப்பு……….
தமிழகம் முழுவதும் இன்று (10/05/2021) முதல் இரண்டு வாரத்திற்கு முழு அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முழு ஊரடங்கு நடைமுறை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் 12 மணிக்கு மேல் வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
மின்வெட்டு இல்லா தமிழகம்… கீழக்கரையில் உள்ள பல பகுதிகளுக்கு பொருந்தாதா?… மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா??
புதிதாக பதிவியேற்று இருக்கும் திமுக அரசு, அதிரடியாக மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அறிவித்து மக்களின் மனதில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்றி வருவதோடு அல்லாமல் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே கடந்த காலங்களில் ஆட்சியை இழந்தமைக்கு தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதே போல் தற்பொழுது அரியனையில் ஏறி உள்ள நேரமும் கடுமையான கோடை காலம், ஆகையால் மின் தடை ஏற்பட அதீத […]
மதுரை அருகே உடல்நலம் குன்றிய ஓய்வு பெற்ற ரயில்வே காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சாலையில் வசித்து வருபவர் மாரி சாமி (வயது 72). இவர் மதுரையில் ரயில்வே துறையில் காவலராக பணியாற்றியவர் மாரிசாமி, கடந்த 2004ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், திருநகர் அருகே அமைதிசோலை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே சளிதொல்லை காரணமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் காலையில், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் திருநகர் பகுதியிலுள்ள மின்ஏற்றியில் தூக்கு மாட்டி தற்கொலை […]
ஒருபுறம் ஊரடங்கு… மறுபுறம் தேவைகள்… ஆனால் கீழக்கரையில் A.T.M மில் பணம் இல்லாமல் மக்கள் பரிதவிப்பு…….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கி A.T.M களில் பணம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். நாளை (10/05/2021) முதல் முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ATMமில் பணத்தை எடுப்பதற்கு மக்கள் அலை மோதினர. ஆனால் அனைத்து A.T.Mகளிலும் பணம் இல்லாததால் மக்கள் எதுவும் புரியாமல் மிகவும் திணறி வருகின்றனர் வங்கி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கு எதிரொலி… கடைகளில் அலை மோதும் மக்கள்..
தமிழகத்தில் நாளை (10/05/2021) முதல் முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் சில நாட்களில் ரம்ஜான் பண்டிகை வரும் காரணத்தினால் பொதுமக்கள் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகள் மற்றும் கடைகளில் பொருள் வாங்க அலைமோதி வருகின்றனர்.
கொரோனா காலத்தில் பணியாற்ற தன்னார்வலர்கள் தேவை…. கீழக்கரை நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சில நபர்கள் மருத்துவமனையிலும் சில நபர்களை அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுப்பதற்காக தன்னார்வலர்களை கீழக்கரை நகராட்சி எதிர்பார்க்கிறது. இது சம்பந்தமாக கீழக்கரை ஆணையாளர், “தொண்டு செய்ய விரும்பியவர்கள் காலை 10.00 மணி அளவில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். அவர்களுக்குத் தேவையான […]
நோன்பு நேரத்தில் தேவையுடையவர்களுக்கு உதவி கரம் நீட்டிய கீழக்கரை சாலை தெரு இளைஞர்கள்..
கொரோனாவினால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு பிரச்சினைகளால் பல் வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை சாலைத்தெருவைச் சேர்ந்த இளம் வாலிபர்கள் இந்த கொரோனா ஊரடங்கினால் வாலிநோக்கம் அருகே உள்ள கிருஷ்ணபுரம் என்ற கிராமத்தில் நோன்புக்கு தேவையான சஹர் சாப்பாடு கொடுத்து கரம் நீட்டியுள்ளனர். இதனால் அங்கு வசித்து வரும் முஸ்லிம் மக்கள் பல பேர் பலனடைந்தனர்.
இராமநாதபுரம்-கீழக்கரை தோணி பாலம் அருகே விபத்து… ஒருவர் பலி..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தோணி பாலம் அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 40 வயது மதிக்கதக்கவர் உயிரிழந்தார். இவர் ஒல்லியான தேகமும், மாநிறமும் கொண்டவர். இவரை பற்றி தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இவரது உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்படுள்ளது. இதுபற்றி கீழக்கரை காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் வழக்குபதிவு செய்து, ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புக்கு : கீழக்கரை காவல்நிலையம் – […]
கீழக்கரையில் விதிமீறல்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை……….
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2 வது அலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துவரும் நிலையில் தமிழக அரசு மே6 முதல் 20ம் தேதி வரை நண்பகல் 12 மணிவரை அத்தியாவசிய தேவைக்களுக்கும் மட்டும் பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல்ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் மார்கெட், மீன்கடை உள்ள பகுதியில் அரசு உத்தரவின் படி பகல் […]
மதுரை அருகே சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகறாரில் ஒருவர் படுகொலை..
மதுரை மாவட்டம் வலையங்குளம் கிராமத்தில் சீட்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் வலையங்குளம் கிராமத்தில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (05/05/2021) மாலை பல நபர்கள் சேர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறில் வலையங்குளம் அருகே உள்ள சோழங்குருணி கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் வீரணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் பிரேதத்தை அரசு ஆரம்ப […]
You must be logged in to post a comment.