தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியதால் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிப்பதற்காக கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் சார்பில் அதன் நிர்வாக செயலாளர் சிஹாபு மற்றும் துணைத் தலைவர் முகம்மது அஜிஹர் ரூபாய் 36ஆயிரத்திற்கான காசோலையை கீழக்கரை வட்டாட்சியரிடம் முருகேசனிடம் அளித்தனர். இந்நிகழ்ச்சியின் போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி வட்டார வள மருத்துவர் டாக்டர் செய்யது ராசிதீன் உடன் இருந்தனர்.
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம்..
தமிழக சுகாதாரத் துறையின் உத்தரவுப்படி உத்தரவுபடி வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக் தீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கீழக்கரையில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் முகாம் நடத்தி வருகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று (26/05/2021) கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் வந்து தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் நகராட்சி […]
மனித நேயத்துடன் களத்தில் இறங்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிக அளவில் காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் அவசர தேவைக்காக வெளியில் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறியது. இதையறிந்து TWINS குழுமத்தை சார்ந்த கண்மணி சீனி தலைமையில் கீழக்கரை ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அசாருதீன், நசுருதீன், பிரவீன்குமார் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் இணைந்து வீதிகளில் விழுந்திருக்கும் மரங்களை மிஷின் மூலம் அறுத்து அப்புறப்படுத்தினர். இந்த நல்ல செயலை கீழக்கரை பொதுமக்கள் பாராட்டினர்.
கீழக்கரையில் திடீர் சுழற்காற்று.. மரங்கள் வேராடு சாய்ப்பு… வீடுகள் சேதம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திடீரென வேகமான சுழற்காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது, மின்சார கம்பங்களும் சேதமடைந்து மின்சாரம் பாதிப்பு உண்டானது, பல இடங்களில் வீட்டின் கூரைகளும் சேதமடைந்தது. கீழக்கரை 21வது வார்டு தட்டான் தோப்பு பகுதியில் வசிக்கும் பாண்டியன் மகன் ரகு என்பவரின் ஓட்டு வீட்டின் அருகே இருக்கும் மாடி வீட்டில் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட் காற்றில் பறந்து விழுந்ததால் ஓடு சேதாரம் ஏற்பட்டது. அதே போல் இந்து பஜார் […]
கீழக்கரையில் தொடரும் மனிதநேய அறக்கட்டளையின் மனித நேய பணிகள்..
கீழக்கரையில் கொரோனோ நோய் ஊரடங்கால் பலதரப்பட்ட மக்கள் அன்றாட உணவுக்கும், வாழ்வுக்கும் போராடி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மனிதநேய அறக்கட்டளை சார்பில் எளியோருக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்றும் பல நபர்களை கண்டறிந்து உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்த நற்பணிக்கு பல நல்லுல்லங்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று மக்கள் நல பாதுகாப்பு கழகம் முஹைதீன் இப்ராஹிமுக்கு நன்றிகள் கூறப்பட்டது.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் இன்று (25/05/2021) இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாஷா முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அகியேர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் மற்றும் 30 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் மற்றும் கீழக்கரை மருத்துவமனைக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய தூய்மை பணியாளர்களை ஆய்வு செய்தனர். மேலும் கீழக்கரை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிதாக இரண்டு மருத்துவர்கள் மற்றும் […]
இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் கீழக்கரை இளைஞர்கள்…
கீழக்கரை இளைஞர்கள் சார்பில் அரசு அறிவித்துள்ள உரிய விதிமுறைகள் பின்பற்றி கொரோனாவால் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் பல இளைஞர்கள் குழுவாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அதே போல் அவசர சிகிச்சைக்கு இரத்த தான பணியினையும் செய்து வருகிறார்கள். மேலும் தேவைகளுக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:- பாசித் இல்யாஸ் -9566686525 அக்பர் அலி- 6385660100 கபிர் – 9344430817 முஸ்தாக்-97919 79286 ஹபீப் நைனா-96776 15693 ஜாஸிம் -99943 14378 […]
கீழக்கரை T.N.T.Jசார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு….
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறை அமலில் உள்ளதால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை T.N.T.J சார்பில் அதன் நிர்வாகிகள் வீதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவளித்து வருகின்றனர். இதைப்பற்றி நிர்வாகிகளிடம் கேட்டபோது இன்று மட்டுமில்லாமல் இக்கொரோனா ஊரடங்கும் முடியும்வரை வீதியில் இருக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றனர்.
தேவையுடையவர்களை கண்டறிந்து உதவி கரம் நீட்டும் கீழக்கரை MASA அமைப்பினர்..
கீழக்கரை பகுதிகளில் சாலையோரம் அங்காங்கே தங்கி இருக்கும் ஆதரவற்ற மக்கள் மற்றும் ஏழை எளியோருக்கு கீழக்கரை MASA சார்பாக தினந்தோறும் உணவு பொட்டலங்களை வழங்கப்படுகிறது. இது போல் உணவு தேவையிடையோர்களை அறிந்தால் +91 95006 89459, 00 91 91508 02604 என்ற எண்களில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
கீழக்கரையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம்….
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உத்தரவின்பேரில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக் தீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கீழக்கரையில் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தி வருகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று (24/05/2021) கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் கீழக்கரை மேலத் தெரு பி.எஸ்.எம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் வந்து தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் […]
கீழக்கரை சாலை தெரு 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண நிதி..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை சார்பாக தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 20000 திற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் தலைவர் ஜாஹிர் ஹுசைன் தலைமையில் பொருளாளர் சீனி முஹம்மது, செயலாளர் சாகுல்ஹமீது மற்றும் அறக்கட்டளையின் அலுவலக மேலாளர் சுஹைப் முன்னிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சியான நியூஸ் […]
கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக இலவச கபசுர குடிநீர் முகாம்..
இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக இன்று 24/05/2021 இலவச கபசுர குடிநீர் முகாம் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 10 மற்றும் 11 வது வார்டுக்குட்பட்ட பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, மதார் அம்பலம் தெரு, அத்திலை தெரு, NMT தெரு, சேரான் தெரு, லெப்பை தெரு, ஆடருத்தான் தெரு, சாலை தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த முகாமை சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் […]
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு கீழக்கரை கிழக்குத் தெரு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை காசோலை..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெரு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை சார்பாக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 51 ஆயிரத்தை அறக்கட்டளையின் தலைவர் அகமது ஆரிபின் துணைத்தலைவர் சேக்னா லெப்பை. நிர்வாககிகள் செய்து பாரூக், தாஜீல்ஆரீபின் மற்றும் தியேட்டர் ஜபருல்லா ஆகியோர் இராமநாதபுரம் சார் ஆட்சியர் சுகபுத்ராவிடம் காசோலையை வழங்கினார்.
கீழக்கரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்..
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் சூழலில் வைரஸை கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நாம்தமிழர் கட்சி சார்பாக முஸ்லிம் பஜார், வள்ளல் சீதக்காதி சாலை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், முன்களபணியாளர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் நகர்செயலாளர் வாசிம் அக்ரம், நகர் தலைவர் மன்சூர்தீன், பொருளாளர் சாகுல், இணைச்செயலாளர் ஆதில், […]
கீழக்கரையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம்…
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உத்தரவின் பேரில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக் தீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கீழக்கரை தெற்குத் தெரு பகுதிகளில் இன்று (22/05/2021) கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடத்தினர். இதில் ஏராளமானோர் வந்து தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி, பொறியாளர் மீரான், கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தெற்கு […]
கொரோனோ தொற்று ஒரு புறம்… சுகாதார கேடு ஒரு புறம்.. நடவடுக்கை எடுக்க கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை..
கீழக்கரையில் கொரொனா அதிகரித்து வரும் சூழலில் பல் வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதில்லை, பல இடங்களில் கழிவு நீர் ஓடிகொண்டு இருக்கிறது. சரியான முறையில் சுத்தம் செய்ய வருவதில்லை குற்றச்சாட்டு தொடர்கிறது. மேலும் கீழக்கரையில் மின் கம்பங்கள் பல இடங்களில் உடையும் தருவாயில் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர், மக்களின் அச்சத்தை நீக்கும் வகையில் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும், அதே போல் குப்பைகளை அன்றாடாம் எடுக்காமல் பல இடங்களில் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் […]
கொரோனா காலத்தில் உதவும் நல்லுள்ளம்..
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையானது வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் உணவிற்க்காக பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் எஸ்.டி முருகன் அவர்களது மகன் விக்னேஷ் என்பவர் தானாக முன்வந்து உணவு தயாரித்து கீழக்கரை வி.ஏ.ஒ.அலுவலகம் எதிரில் வைத்துள்ளார் உணவு கிடைக்காமல் தவிப்பவர்கள் எடுத்துகொள்ளலாம். இதை இன்னும் அதிகப்படுத்த உள்ளோம் என்றார்.மேலும் இதை ஒரு விளம்பரத்திற்க்காக செய்யவில்லை என்றார்.போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் […]
காவல் துறையினருக்கு முக கவசம் மற்றும் கை கழுவும் திரவம் கீழக்கரை மருந்து வணிகர் சங்கம் சார்பாக வழங்கல் …
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மருந்து வணிகர் சங்கம் சார்பாக கீழக்கரை காவல் துறைக்கு தேவையான முககவசங்கள் மற்றும் கை கழுவும் திரவம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மருத்துவ சங்க தலைவர் சுந்தரம் , கௌரவ தலைவர் அகமது மைதீன், செயலாளர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்று இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கீழக்கரையில் கொரோனோ சம்பந்தமான நடவடிக்கைகளை சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு..
தற்சமயம் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள எம்.பி நவாஸ்கனி, எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் ஆகியோர் வருகை புரிந்து பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்நிகழ்வின் போது திமுக நகர் செயலாளர் பசீர் அகமது,துணைச்செயலாளர் கென்னடி, இளைஞரணி அமைப்பாளரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் ஆகியோர் கீழக்கரை நகராட்சியில் பொறுப்பு ஆணையாளர் பூபதி, வட்டாட்சியர் முருகேசன், துணைவட்டாட்சியர் […]
கீழக்கரையில் ஊரடங்கு சமயத்தில் அவசியமின்றி நடமாடும் நபர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு….
தற்சமயம் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஊரடங்கை முன்னிட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்களை கண்காணிக்க கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை நகராட்சியில் பொறுப்பு ஆணையாளர் பூபதி, கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் செயலாளர் ஷேக் உசேன், மூர் அசனுதீன்,நவாஸ் ஆகியோர் தலைமையில் ட்ரோன் கேமரா இயக்கப்பட்டு வெளியில் நடமாடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து […]
You must be logged in to post a comment.