திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் சார்பாக கீழக்கரை திமுக நகர செயலாளர் பஷீர் அகமது மற்றும் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் தலைமையில் இன்று (29/05/2021) நடமாடும் வாகனம் மூலம் கீழக்கரை அனைத்துப் பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதைப்பற்றி கீழக்கரை நிர்வாகிகளும் கேட்டபோது “இந்த கொரோனா பேரிடர் காலம் முடியும் வரை தினமும் ஆதரவற்றவர்களுக்கு ராமநாதபுரம் […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரை மஹ்தூமியா சமுக நல அமைப்பு சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கல்..
மஹ்தூமியா சமுக நல அமைப்பு சார்பாக கொரானா ஊரடங்கினால் வேலையின்றி வாழ்வாதரம் இல்லாமல் வாழும் நலிந்த 40 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு குடும்பங்கள் பயனடைந்தனர்.
அகர கீரங்குடி ஊராட்சியும், அன்பு அறக்கட்டளையும் இணைந்து உதவிக்கரம்…
கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழை மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன. அந்த வகையில் மூத்த பத்திரிகையாளரும் அன்பு அறக்கட்டளையின் நிறுவன தலைவரான கொ.அன்புகுமார், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறார். அந்த வகையில் அகரகீரங்குடி முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அப்பகுதியின் ஊராட்சிமன்ற தலைவர் கயல்விழி சரவணன் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகளுடன் சேர்ந்து வறுமையில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அன்பு அறக்கட்டளையின் […]
புறக்கணிக்கப்படும் கீழக்கரை முத்துசாமி புரம்… சீரமைக்க விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை..
கீழக்கரை முத்துச்சாமிபுரத்தில் அதன் சுற்றி உள்ள தெருக்களில் முறையாக வார்கால் அமைக்காததால் கழிவு நீர் நிரம்பி வழிகிறது. உடனடியாக நோய் தொற்று ஏற்படும் முன்பு சரி செய்ய வேண்டும் என்றும், அங்கு உள்ள கழிவு நீர்களை அகற்ற வேண்டும் என்றும் முறையான வார்கால் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கீழக்கரை முத்துச்சாமி புரத்தில் வார்களில் கழிவு நீர் நிரப்பி ஓடி கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திர்வு இல்லை என்று மக்கள் […]
கீழக்கரை “கமீட்டி ஆப் MIF” சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்..
கொரேனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாளே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது இதனை எதிர்க்கும் வகையில் எதிர்புசக்தி அதிகரிக்க அரசு பரிந்துறைசெய்த கபசுர குடிநீரை “கமீட்டி ஆப் MIF” நடுத்தெரு சார்பாக நடுத்தெரு மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் தெருவாசிகள் மற்றும் பொது மக்களுக்கு கமீட்டி நிர்வாகிகளால் வினியோகம் செய்யபட்டது. பொது மக்களும் ஆதரவு வழங்கி வாங்கி பருகினர். இதன் எற்பாடுகளை கமீட்டியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் மற்றும் NASA அமைப்பு சார்பாக கொரோனோ தடுப்பூசி முகாம்..
தமிழகத்தில் பரவி வரும் கொரோனோவை தடுக்கும் விதமாக தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (28/05/2021) கீழக்கரை தைக்கா வளாகத்தில் வடக்குத் தெரு ஜமாத் மற்றும் NASA அமைப்பு சார்பாக கொரொனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாத்தை சாரந்த அனைவரும் கலந்து கொண்டு முழு ஓத்துழைப்பு அளித்தனர்.
நாளை (28/05/2021) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பாக தடுப்பூசி முகாம்..
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பாக 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் மேலாண் இயக்குனர் உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி இணைந்து சார்பாக 18 வயது முதல் 44 வயது வரை உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்றும் பணியாளர்கள் மற்றும் […]
“இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு” … கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஏற்பாடு..
‘இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு ‘ கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா – இராமநாதபுரம் மாவட்டம் நடத்தும் வலைதள கருத்தரங்கு நாளை (28/05/21) வெள்ளிக்கிழமை காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் நடக்க இருக்கிறது. இந்திய நேரம் காலை – 11AM மணிக்கு காதர்.M. உரையாற்றுகிறார், அதை தொடர்ந்து இந்திய நேரம் மாலை – 7PM மணிக்கு அப்துல் ரகுமான்A உரையாற்றுகிறார். காலை வகுப்பில் இணைய https://meet.google.com/gki-twrx-jho என்ற தொடர்பிலும், மாலை வகுப்பில் http://meet.google.com/wey-kkzg-rxq என்ற தொடர்பிலும் இணைந்து கொள்ளலாம்.
கீழக்கரையில் உள்ள தனியார் அறக்கட்டளை சார்பாக முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்..
முன்கள பணியாளர்களாக சேவை செய்து வரும் கீழக்கரை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்காக கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் சார்பில் அதன் பொதுசெயலாளர் M.K.E.உமர் வழிகாட்டுதலோடு 75 கிலோ அரிசியை நகராட்சி ஆணையர் பூபதி வசம் கீழை ஜஹாங்கீர் அரூஸி வழங்கினார். அதே போல் மின்சார துறை மற்றும் பிற துறை முன்கள பணியாளர்களுக்கும் அரிசி நிவாரண பொருளாக வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
கீழக்கரையில் தடையை மீறி திறந்த கடைக்கு பூட்டு…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தடையை மீறி திறந்த கடைக்கு அபராதம் விதிப்பட்டது. கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் இறைச்சிக்கடை நடத்தியதால் அக்கடைக்கு கீழக்கரை மண்டல துணை தாசில்தார் பழனி குமார் தலைமையில் அதிகாரிகள் கடையை பூட்டி சாவியை கைப்பற்றி அக்கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.
பெரியபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு..
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் நிவாரண உதவி மையம் 27.05.2021 அன்று காலை 11.30 மணி அளவில் திறந்து வைக்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவிட் நிவாரணப் பணிகளுக்காக சேவையாற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, அதில் ஒரு பகுதியாக பேரிடர் உதவி மையம் பெரியபட்டினம் ஊராட்சியில் தொடங்கப்பட்டது. இதில் மருத்துவ உபகரணங்கள், கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு, உணவுப் பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தல், […]
அதிக விளைச்சல்… ஆனால் வாங்க ஆட்களுமில்லை.. விற்க இடமுமில்லை………
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் கழுகுஊரணி கிராமத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணிப் பழங்கள் விளைச்சலுக்கு வந்துள்ளது. ஆனால் அதை பறித்து விற்பனை செய்வதற்கு இடமும் இல்லாமல் வாங்குவதற்கு ஆட்களும் இல்லாமல் விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
ஆட்கள் இல்லாமல் அமைதியாக காட்சி அளிக்கும் கோயில்……..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இருக்கும் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில். கொரோனா ஊரடங்கு முன்னிட்டு பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இரத்த தானத்தை தொடர் பணியாக செய்து வரும் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள்..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் தொடர்ந்து கீழக்கரை இளைஞர்கள் ரத்ததானம் செய்து வருகிறார்கள். இதை ஒரு குறிப்பிட்ட சிறப்பு திகழ்வாக இல்லாமல் தொடர் நிகழ்வாக கடந்த மூன்று மாதங்களாக தொடங்கபட்டு, இதுவரை 70நபர்களுக்கு மேலாக ரத்தம் கொடுத்துள்ளனர். கபிர், அக்பர் அலி ஆகியோர் இதன் முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உடனடி ரத்த தேவையுடையவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். கபிர் -9344430817 அக்பர் -6385660100 பாசித் -9566686525
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு அன்பு அறக்கட்டளை நிவாரணம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறவர் இன மக்கள் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் அந்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் ஏற்பாட்டின் பேரில், அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான முனைவர் நடராஜன், கார்த்திக், அன்புராஜா, பிரபு உள்ளிட்டோர் வீடுவீடாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர். தமிழம் முழுவதும் பல்வேறு […]
காவல்துறையினருக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கிய அன்பு அறக்கட்டளை…
மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் N 95 முகக்கவசம் மற்றும் சேனிடைசர் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நலத்திட்ட பணிகளில் பம்பரமாய் சுழன்று வருகின்றன . அந்த வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையின் நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இன்று (26/05/2021) மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள், மாவட்ட மகளிர் காவல் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் […]
கீழக்கரை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருள்கள்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கால் தன் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, மசாலாத்தூள், கிருமி நாசினி, மற்றும் முகக்கவசம் சுமார் 900 குடும்பத்திற்கு வழங்கப்பட்டன. அதனை கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் டாக்டர் அலாவுதீன் துவக்கி வைத்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் நிவாரண உதவி மையம்…
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் நிவாரண உதவி மையம் 25.05.2021 அன்று காலை 11.30 மணி அளவில் Dr.S.பொற்கொடி, M.B.B.S.,D.P.H., மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரால் திறந்து வைக்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவிட் நிவாரணப் பணிகளுக்காக சேவையாற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக பேரிடர் உதவி மையம் நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்க உள்ளது. இதில் மருத்துவ உபகரணங்கள், கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு […]
கீழக்கரையில் முன்களப்பணியாளர்களுக்கு முகக்கவசம்….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முன்களப்பணியாளர்களான பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், நகராட்சி துறையினர் ஆகியோர்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர்.சுந்தரம், செய்யது முகம்மது ஹசன்,சதக்கதுல்லா ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.
கீழக்கரை பகுதியில் வீசிய சூறைக் காற்றில் படகுகள் சேதம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று (25/05/2021) அதி வேகமான சூறைக்காற்று வீசியதால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் காற்றின் வேகத்தினால் பாறையின் மீது படகு மோதி முழுமையாக சேதம் அடைந்தது. அதைப்போல் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான படகுகளுக்கும் சிறிது சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.