கீழக்கரையில் கலைஞர் பிறந்த தின சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நலத்திட்டங்கள்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 98 -வது பிறந்தநாளை கீழக்கரை நகர் திமுக சார்பில் நகரச் செயலாளர் பசீர் அகமது தலைமையிலும், இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் […]

காவல் துறை சார்பில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கினர்…திவான் பங்களிப்பு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள சேதுக்கரை மற்றும் உத்தரகோசமங்கையில் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் முதுகுளத்தூர் துணை கண்காணிப்பாளர் (கீழக்கரை பொறுப்பு) ராகவேந்திரா ரவி தலைமையிலும் கீழக்கரை ஆய்வாளர் செந்தில் குமார் முன்னிலையில் சேதுக்கரை மற்றும் உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று (02/06/2021) உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது திருப்புலானி சார்பு ஆய்வாளர் சந்தான போஸ்ட், திருப்புல்லாணி சிறப்பு சார்பு ஆய்வாளர் தங்கச்சாமி, தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் செல்வராஜ், கீழக்கரை […]

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் கீழக்கரை நகர் சார்பாக தேவையுடையோருக்கு உணவு பொருட்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் கீழக்கரை நகர்  சார்பாகவும் மாவட்ட தலைவர் அருளாடும் பெருமாள் அறிவுறுத்தலின் படியும்,  மாவட்ட இணை தலைவர் செய்யது நியாஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துகுமார் முன்னிலையில் நகர் தலைவர் அப்சல் கான் தலைமையில் நகர் இளைஞர் அணி செயலாளர் அப்துல் ரசாக் மேற்பார்வையில் மற்றும் நகர் துனை தலைவர் ஆசிப் யாசீன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனு வசதி இல்லாத குடும்பத்திற்கு சமையலுக்கு தேவையான பொருகள் இருபது குடும்பத்திற்கு […]

கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அறவழி போராட்டம்…

மத்திய அரசு கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இந்தியா முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கும் மக்கள் எதிர்ப்பு அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் முழுவதும் பொதுமக்கள் திரளாக தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் பக்ருதீன் அலி முன்னிலை வகித்தார்.

தேவையுடையோருக்கு தினசரி உணவு… கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தொடர் பணி..

கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக கொரான இரண்டாம் அலையினால் ஏற்பட்ட  முழு ஊரடங்கு காரணமாக ஏராளமான மக்கள் அன்றாட உணவுக்கு திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் உள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக கடந்த ஒரு வாரமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மதிய உணவு மட்டும் சுமார் 350 பேர் பயன்பெறும் வகையில் தினமும் கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த  உணவு சேவை  முழு ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்று கீழக்கரை அனைத்து […]

கரும் புஞ்சை நோயால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் பணிகளை செய்த இஸ்லாமிய இளைஞர்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த கணேசன் வயது 72 என்பவர் கடந்த 10 நாட்களாக கொரோனோ பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவருக்கு திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்பு கரும்புஞ்சை நோய் தொற்று ஏற்பட்டது. பின்பு இன்று (01/06/2021) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரின் உடலை கீழக்கரை டிவின்ஸ் ஆம்புலன்ஸ் குரூப் அசாருதீன் நசுருதீன் தலைமையிலான குழுவினர் கீழக்கரை இந்து மயானக் கரையில் அவர்கள் முறைப்படி அடக்கம் செய்தனர்.

கீழக்கரையில் நடமாடும் மளிகை பொருட்கள் வியாபாரம் துவங்கியது..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடமாடும் மளிகை பொருட்கள் கொண்ட வண்டியை கீழக்கரை நகராட்சி கமிஷனர் பூபதி துவங்கி வைத்தார். மேலும் கீழக்கரை முழுவதும் 18 நடமாடும் மளிகை பொருட்கள் வாகனங்கள் செயல்படுவதாக தெரிவித்தார் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி மளிகை பொருட்களை வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்

முத்துசாமிபுரம் சுகாதார கேடுகளை சீர் செய்ய சட்டமன்ற உறுப்பினரிடம் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை..நகராட்சி ஆணையரிடம் மனு..0

கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழக்கரை முத்துசாமிபுரத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகளை செய்தியாக வெளியிட்டதுடன், இப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் போராட்டம் நடத்த கூடும் என கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (31/05/2021) கீழக்கரை வருகை தந்த இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் காதர்பாட்சாவிடம் முத்திசாமிபுரம் சம்பந்தமான கோரிக்கைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது நகர் செயலாளர் பாசித் இல்யாஸ், முன்னாள் மண்டல செயலாளர் […]

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் MASA அமைப்பு சார்பாக கொரானா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி மருத்துவ முகாம்…

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ் கனி எம்.பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர் பாட்சா முத்துராமலிங்கம் MLA ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பழைய குத்பா பள்ளி பரிபாலன கமிட்டி மற்றும் மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) இணைந்து நடத்திய மருத்துவ முகாம் இன்று 31/05/2021 திங்கட்கிழமை “மஹ்தூமியா பள்ளி வளாகத்தில்” நடைபெற்றது. மக்தூமியா மேல் நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திகார் உட்பட 135 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இந்த முகாமிற்கான ஏற்பாட்டினை MASA மற்றும் பழைய குத்பா பள்ளி […]

கீழக்கரையில் திறக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்திற்கு சில தரப்பினர் கடும் எதிர்ப்பு ….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு பகுதியில் ஹமீதியா தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க அலுவலகத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக ஆசி ஹோம் ஹெல்த் கேர் என்ற பெயரில் புதிய மருத்துவ அலுவலகம் திறக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சார்ந்த சில தரப்பு  மக்கள் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.

கீழக்கரையில் தொடரும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியிலிருந்து மாவட்ட காவல்துறை டெக்னிக்கல் டீம் மூலம் ட்ரோன் பறக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் ஊரடங்கு அமலில் உள்ளதால் தேவையில்லாமல் வெளியே வருபவர்களை கண்காணித்து வருகின்றனர். அப்பொழுது கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திலக ராணி கீழக்கரை காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.

கீழக்கரையில் ஆசி ஹெல்த் ஹோம் கேர் சென்டர் திறப்பு …..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா தோற்று அதிகளவில் பரவி வரும் காரணத்தினால் ராமநாதபுரம் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்மன் டாக்டர் ஆசிக் அமீன் கீழக்கரை சாலை தெரு பகுதியில் ஹமீதியா தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர் சங்க கட்டிடத்தில் ஆசி ஹெல்த் ஹோம் கேர் என்ற பெயரில் புதிய அலுவலகத்தை இன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்துவைத்தார். அப்போது பேசிய டாக்டர் ஆசிக் அமீன் கீழக்கரை பகுதிகளில் வயது முதிர்ந்தவர்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு […]

கீழக்கரையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் கீழக்கரை அடுத்துள்ள பழஞ்சிறை கிராமத்தில் கொரோனா நோய் தாக்காமல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்க மாவட்ட செயலாளர் இன்ஜினியர் அப்துல் பாசித் தலைமையிலும் மாவட்டத் தலைவர் அருள்ஆடும் பெருமாள் முன்னிலையிலும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் சுமார் 200க்கு மேற்பட்ட அவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கிப்ஸ் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து […]

கீழக்கரை ஹமீதியா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்புடன் (HPSAA) இணைந்து Aasi COVID Home Care Centre நாளை (31/05/2021) திறப்பு..

கீழக்கரை ஹமீதியா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்புடன் (HPSAA) இணைந்து Aasi COVID home care centre நாளை (31/05/2021) திறக்கப்பட உள்ளது.  இந்த மையம் மூலம்  கோவிட் நோய் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதற்கும், மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கும் கீழக்கரையிலேயே  HPSAA (ஹமீதியா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பு)  அலுவலகத்தில் மருத்துவர் ஆசிக் அமீன் (இராமநாதபுரம்) aasi COVID home care center  திறக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவரும், இரண்டு செவிலியர்களும் இருந்து ஆலோசனை வழங்குவார்கள். […]

கீழக்கரை நகராட்சியில் தொடரும் கிருமிநாசினி தெளிப்பு பணி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் அரசு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனத்திற்கு தினம்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது வருகிறது. இதன் தொடர்ச்சியாக  இன்று (30/05/2021) கீழக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கீழக்கரை வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் அனுமதி சீட்டு…

கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் இன்று (30/05/2021) தமிழக அரசு அறிவித்துள்ள. மளிகை பொருள் வாகனம் மூலம் மக்களுக்கு தடையின்றி வழங்க உத்தரவு பிறப்பித்தது,  அதன்படி கீழக்கரை வர்த்தக சங்கத்தினர் மற்றும் வியாபாரிகளை அழைத்து நாளை (31/05/2021) முதல் மளிகை பொருட்கள் வாகனம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல அனுமதி சீட்டு வழங்கினார்.

கீழக்கரையில் அரசு உத்தரவின்படி வட்டாட்சியர் மேற்பார்வையில் உணவு வழங்கல்…

கொரோனா ஊரடங்கு காலமென்பதால் அன்றாட உணவுக்கு சிரமப்படும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச உணவு வழங்கும் விதமாக கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதிகளில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினம்தோறும் 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படும் பணி தொடங்கப்பட்டது.

கீழக்கரையில் மத்திய அரசை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் லட்ச தீவில் கொடுமையான சட்டங்களை திணிக்கும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா பட்டேல் அதிகாரியை திரும்ப பெற வலியுறுத்தி நாடு தழவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகம் அருகில் இளைஞர் அணி மாநில செயலாளர் நெய்னா முஹம்மது முன்னிலையில் கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் […]

கீழக்கரை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன்,  செயலாளர் எபன்,  பிரவீன் குமார்,  முன்னாள் தலைவர் ஆசாத், சேக் உசேன், ஹாசன், சாகுல், மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கினர். இந்நிகழ்வின் போது கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உடனிருந்தார்.

திடீரென வெளிவந்த எலும்புக்கூடு… வாலிநோக்கத்தில் பதற்றம்..

வாலிநோக்கம் கிராமத்தில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூலித்தொழிலாளர்கள் மீன்பிடி தொழில் சார்ந்த நபர்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் புயல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரை அருகே புதைக்கப்பட்ட எலும்பு கூடுகள் வெளியே தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியினர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வாலிநோக்கம் போலீஸார் கொலையா, நரபலியா என   கடலாடி தாசில்தார் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!