கீழக்கரை பெத்தெரி தெருவில் திமுக கட்சி கோரிக்கையை ஏற்று நகராட்சி சுகாதார நடவடிக்கை…

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை பெத்தெரித்தெரு ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கீழக்கரை தி.மு.க நகரச்செயலாளர் பஷீர் அஹமது யிடம் பெத்தெரித்தெரு வளர்ச்சிக்காக. சில கோரிக்கையை மனு கொடுத்தனர்.  அதில் ஆதிதிராவிடர் மயானக்கரை, பெத்தெரித்தெரு,  கோயில் பகுதிகளில் தெருவிளக்கு மற்றும் ரோடு போட்டு தர வேண்டி குறிப்பிட பட்டிருந்தது. கொடுக்கப்பட்ட மனுவினை ஏற்றுக்கொண்டு உடனடியாக கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதியை தொடர்புகொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கையை சரி செய்து தருமாறு கூறினார் அதன் தொடர்ச்சியாக இன்று அப்பகுதியில் மயானக் […]

கீழக்கரை நகராட்சி சார்பில் கிருமி நாசினி மற்றும் புகை அடித்தல் பணி தீவிரம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கிருமிநாசினி மற்றும் புகை அடிக்கும் பணி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கீழக்கரையில் கடையை உடைத்து திருட்டு மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிக்கு வலைவீச்சு…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் முகைதீன் டெக்ஸ்டைல்ஸ் என்னும் ஜவுளிக்கடையில் நேற்று (29/06/2021) இரவு கடையின் பின்புறம் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பல்லாயிரம் மதிப்பிலான கைலிகளை (வேஸ்டிகள்) திருடிச் சென்றனர். காலையில் வந்து கடையைத் திறந்த உரிமையாளர் முகைதீன் கடையில் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்து கீழக்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் கீழக்கரை சரக குற்றவியல் சார்பு ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள் தலைமையில் போலீசார் […]

பல லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள் பறிமுதல் கீழக்கரை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு….

இராமநாதபுரம் மாவட்டம் கடலோர காவல் படையினருக்கு தூத்துக்குடி கடலோர காவல் படையிடம் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் கீழக்கரை சிவகாமிபுரம் பகுதியில் ரகசிய வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது திருச்செந்தூர் காயல்பட்டினத்தில் இருந்து வந்த (பொலேரோ பிக்கப்) TN 22 BL 8604 என்கின்ற வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் பதினைந்து மூட்டைகளில் தடை செய்யப்பட்ட சுறா பீலி ( சுறா இறக்கை) மற்றும் 5 வெள்ளை சாக்கு மூட்டைகளில் ஏலக்காய் இருந்தது. வாகனத்தின் ஓட்டுநரான […]

கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம்..

கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் இணைந்து  கொரோனா தடுப்பூசி முகாம் இன்று  (28/06/2021.திங்கள் கிழமை)  காலை சுமார் 10:00 மணி முதல் பகல் சுமார் 01:00 மணிவரை கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில்  COVID SHIELD தடுப்பூசி போடப்பட்டது.  இதனால.  வெளிநாடு போக கூடியவர்கள் ஊசி போட்டு 28 நாள் கழித்து தகுந்த. விசா டிக்கட் காட்டியவர்களுக்கு  2 வது ஊசி போடப்பட்டது.

கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் புத்தக வினியோகம்..

தமிழக அரசின் கல்விதுறை சார்பாக மாசவர்களுக்கு இவ்வருடத்திற்கான புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடு மதுரையில் மாணவர்களுக்கு விலையில்லா முதல் பருவப்புத்தகங்கள் வழங்கப்பட்டது

திருப்பரங்குன்றம் மலையில் இருந்த இஸ்லாமியர்களின் கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் 200-க்கும் மேற்பட்டோர் கைது…

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள தர்கா கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து பாப்புலர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி இணைந்து ஹார்வி பட்டியில் சாலைமறியல் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோன்று கோரிபாளையம் பகுதியிலும் சாலை மறியலில் 25 பெண்கள் உள்பட 125 பேர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் கோவில் மலை மேலுள்ள சிக்கந்தர் தர்கா உள்ளது. இங்குள்ள கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ […]

சமூக வலைதளங்களில் உதவி தேடிய கீழக்கரை சிறுவனுக்கு… நேச கரம் நீட்டிய சட்டமன்ற உறுப்பினர்..

இராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சில நாட்களுக்கு முன்பு மரணித்தார், அவருக்கு ஆறுதல் கூற வருகை தந்த  ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழகச் செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், அவருடைய  வீட்டிற்கு சென்ற பின்பு சமீபத்தில் சமூக வலைதளங்களில்  கீழக்கரை பெத்திரி தெருவைச் சேர்ந்த அல் நிதுசான் என்ற 10 வயது ஏழை சிறுவன் தன் உடலில் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்காக பணம் தேவை என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இசசெய்தி […]

கீழக்கரையில் பள்ளிகளில் புத்தக வினியோகம் துவக்கம்..

தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிப்பு செய்திருந்தது.  அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டது.  இதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தேவையான புத்தகங்களை பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக தேவையுடையோருக்கு உணவு பொருட்கள்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  மெரினா அசோசியேட்ஸ் கன்ஸ்ட்ரக்சன் சார்பாக இன்சினியர் கபீர் கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும்  கீழக்கரை அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்திற்கு உட்பட்ட கீழக்கரையை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் போது கண்ணன்,முனியசாமி, செல்வம், சாதிக்,ஹஸன், s.m.பாக்கர், ஹபீப், தங்கபாண்டி, சதக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை அன்பு நகரில் கொரோனா தடுப்பூசி முகாம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அன்பு நகர் பகுதியில் பொதுமக்கள் ஏற்பாட்டில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  இம்முகாமை வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தொடங்கிவைத்தார். ரோட்டரி சங்க செயலாளர் எபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் நாளை (24/06/2021) மின் தடை..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மின்சார வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை வியாழன் 24.06.2021 மாதாந்திர மின் பராமரிப்பு வேலை காரணத்தினால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் மின்சாரம் இருக்காது என கீழக்கரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கீழை நியூஸ்

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் கீழக்கரையிலிருந்து அளிக்கப்பட்ட மனுவுக்கு நடவடிக்கை..

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் செல்லும்போது “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்னும் திட்டத்தை தொடங்கி அதன் அடிப்படையில் பொதுமக்களிடம் பல மனுக்களை பெற்றார். அப்போது அவர் கூறுகையில், “திமுக அரசு பதவியேற்றவுடன் 100 நாட்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படும்” என்று உறுதியும் அளித்தார். பின்பு தேர்தல் முடிவு வந்தவுடன் திமுக ஆட்சி அமைந்து. முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு க ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதல்வர் […]

கீழக்கரையில் கொரோனா தடுப்பூசிக்கு பரிசு அசத்தும் பொது நல சங்கம் …

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் மக்கள்டீம் ஏற்பாட்டில் சுகாதார துறை சார்பில் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இம்முகாமை கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன்,திருப்புல்லாணி வட்டார அரசு மருத்துவர் ராசிக்தீன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது கொரோனா தடுப்பூசி போட வந்த 10 பெண்கள் சில்வர் பானை பரிசாக வழங்கப்பட்டது. இம்முகாம் இறுதியில் கொடுக்கப்பட்ட டோக்கன் இன் அடிப்படையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு 3நபர்களுக்கு மின்விசிறி வழங்கப்படுமென மக்கள் ஊழியர் முஸ்லிம் […]

கீழக்கரையில் ரமலான் மாதங்களில் இரவுத் தொழுகை நடத்திய மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா!..

கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை NASA-கீழ் செயல்படும் அல் மதரஸத்துல் முஹம்மதியாவில் பயிலும் மாணவர்கள் கடந்த ரமலான் மாதங்களில் வடக்குத்தெரு மற்றும் பிற தெருக்களில் இரவு தொழுகை நடத்தினார்கள். இம்மாணக்கர்களை பாராட்டும் விதமாக மதரஷா வளாகத்தில்  மதரஸா நிர்வாகத்தினரால் ஊக்கப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமபந்தி…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, கீழக்கரை, உள்வட்டத்திற்கு ஆட்பட்ட 29 குக்கிராமங்களுக்கான முதல் நாள் வருவாய் 1430 ஆம் பசலி ஆண்டு வருவாய் கணக்கு தணிக்கை நடைபெற்றது. இதணை தனித் துணை ஆட்சியர் (மண்டபம்) சிவக்குமாரி தலைமையில்  கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் பழனிகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் 11க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது இந்நிகழ்வின் போது கீழக்கரை வருவாய் ஆய்வாளர் பார்கவி. உத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் லூர்து […]

“அடிப்படை” வசதி இல்லாத மதுரை பைகாரா சுகாதார நிலையம்…கர்பிணிகளை தரையில் அமர வைக்கும் அவலம்…

“அடிப்படை” வசதி இல்லாத மதுரை பைகாரா சுகாதார நிலையம்…கர்பிணிகளை தரையில் அமர வைக்கும் அவல நிலையில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பைகாரா முத்துராமலிங்கபுரம் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு   சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களை தரையில் அமர வைத்து இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என புகார் எழுந்து உள்ளது. கர்பிணிப் பெண்கள் தரையல் உட்கார வைக்கப்பட்டால் சிரமத்துக்குள்ளாரவர்கள் என்ற அடிப்படையில் அமர்வதற்கான வசதிகள் இல்லாதது வேதனையான விசயம். அதையும் தாண்டி தொற்றுநோய் பரவும் காலத்தில் […]

கீழக்கரை வடக்குத் தெரு முஹ்யித்தீனியா பள்ளியில் கொரோனோ தடுப்பூசி முகாம்..

கீழக்கரை வடக்குத் தெரு  முஹ்யித்தீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  கொரோனோ தடுப்பூசி முகாம் சுகாதார துறையுடன் இணைந்து இன்று (21/06/2021) காலை 10.00 மணி முதல்  நடைபெற்றது. இம்முகாமில் இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தடுப்பூசி எடுத்து கொண்டனர்.  இந்த நிகழ்வில் பள்ளி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய பெருந்தகைகள் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா..

இன்று (19.06.2021) இந்திய தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி M.P  பிறந்த தினம் ஆகும். இதையொட்டி கீழக்கரை நகர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், மாவட்ட காங்கிரஸ் துனைத்தலைவருமான A. அமீது கான் Ex M.C தலைமையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள பெரிய ஜும்ஆ பள்ளி வாசல் முன்பு சுமார் 200க்கும் மேற்பட்ட தேவையுடையோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் K.R.D கிருஷ்ணமூர்த்தி இனிப்புகள் வழங்கினார்,  காங்கிரஸ் பேரியக்க மாவட்ட […]

கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை இயக்கம் சார்பாக நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி …

இந்தியா முழுவதும் கொரோனா தோற்றாள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை இயக்கம் சார்பில் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்களை அதன் நிறுவனத் தலைவர்  உமர் வழங்கினார். இதில் ஒரு பகுதியாக கீழக்கரை ஒப்பந்தத் மின், தொழிலாளர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்கள், மற்றும் மீனவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது கீழக்கரை மண்டல துணை வட்டாட்சியர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!