இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (11/07/2021) இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, ஏர்வாடி பேரூர் கழக செயலாளர் அமிது அம்ஷா சாயல்குடி ஒன்றிய செயலாளர் ஜெயபால், கமுதி ஒன்றிய செயலாளர் சண்முகம்,கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
Category: கீழக்கரை செய்திகள்
மனிதநேய பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டுவின்ஸ் ஆம்புலன்ஸ் க்ரூப்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் பகுதியில் திருநெல்வேலியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் ஒருவர் சில தினங்களாக சுற்றித்திரிந்துள்ளார். இதனையறிந் கீழக்கரை ட்வின்ஸ் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அசாருதீன், நசுருதீன், மற்றும் அவர்களுடைய நண்பர்கள் இணைந்து அவரை சாலையோரத்தில் இருந்து மீட்டு முடி வெட்டி, முக சவரம் செய்து புத்தாடை அணிவித்து அவருக்கு உணவும், இருப்பிட வசதியும் செய்து கொடுத்தனர். இச்செயலை கண்டு அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் ஓட்டும் அசாருதீன், நசுருதீன் மற்றும் அவர்கள் நண்பர்களை வாழ்த்தினார்.
திமுக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று சுகாதார பணிகளை தொடங்கிய கீழக்கரை நகராட்சி..
கீழக்கரை கடற்கரை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளே கீழக்கரை மக்களுக்கு மாலை நேர பொழுது போக்கும் இடங்களாகும். இப்பகுதியை தூய்மையாக வைக்க நகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனங்களும் பல் வேறு முயற்சிகள் எடுத்தாலும் பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் குப்பைகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதே போல் கீழக்கரை கடற்கரையில் அமைந்துள்ள ஜெட்டி பாலத்தின் நிலையை சமீபத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பார்வையிட்டு சென்றார். இதன் தொடர்ச்சியாக கீழக்கரை திமுக நிர்வாகிகள் கீழக்கரை நகராட்சிக்கு […]
மதுரை மாநகராட்சி தொழில்முறை வரி நிர்ணயிக்க லஞ்சம் ; பில் கலெக்டர் கைது…
மதுரை மாவட்டத்தில் பாண்டியன் எரிவாயு நிறுவனத்தின் அருகே மதுரை மாநகராட்சி டிவிஎஸ் நகர் அழகப்பன் நகர், மண்டலம்-4 வார்டு எண் .93க்கு பில் கலெக்டர் ஜெயராமன் என்பவர் இரண்டு கடைகளுக்காக புகார்தாரரின் கொடவுனுக்கு தொழில்முறை வரியை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ரூ.4000/- கேட்டுள்ளார் என புகார் கொடுத்ததன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது ஜெயராமன் தமக்கு மீண்டும் பணம் கேட்டு, புகார்தாரரிடமிருந்து இன்று (09/07/2021) மாலை லஞ்சப் பணத்தை வாங்கும் பொழுது […]
கீழக்கரை நகர் திமுக சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு…..
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை கீழக்கரை நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது தலைமையிலும், இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் இன்று (09/07/2021) திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையை புதிய கட்டித் தரவும் மருத்துவ அடிப்படை கருவிகள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
கீழக்கரையுடன் தொடரும்… திமுக பாரம்பரியம்… அன்று தங்க மோதிரம் பெற்ற கைகளின் வாரிசு.. இன்று அறிவாலயத்தின் ஒளி வெள்ளத்தை வடிவமைக்கிறது…
கீழக்கரையுடன் தொடரும்… திமுக பாரம்பரியம்… அன்று தங்க மோதிரம் பெற்ற கைகளின் வாரிசு.. இன்று அறிவாலயத்தின் ஒளி வெள்ளத்தை வடிவமைக்கிறது. ஆம் முன்னொரு காலத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் தங்க மோதிரம் பெற்ற கீழக்கரையைச் சேர்ந்த திமுக வின் பிரமுகர் மற்றும் தொழிலதிபர் சதக் இல்யாஸ் புதல்வர் இஃப்திகார் இல்யாஸ் தற்சமயம் டில்லியில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் முத்துவேல் கருணாநிதியின் கலைஞர் அறிவாலயத்திற்கு (லைட் செட்டிங்ஸ்)ஐ வடிவமைத்துள்ளார். அன்று கட்சியின் பணிக்காக […]
கீழக்கரையில் (12/07/2021 – திங்கள் கிழமை) பெண்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்..
கீழக்கரையில் 12/07/2021, திங்கள்கிழமை அன்று பெண்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் முத்து இபுராஹிம் தர்ம அறக்கட்டளை மற்றும் கீழக்கரை சுகாதார துறையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இம்முகாம் 12/07/2021 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை சேரான் தெரு, இப்ராஹிம் கிட்டங்கியில் (பழைய மீன்கடை அருகில்) நடைபெற உள்ளது. இம்முகாம் சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு 9944523691 மற்றும் 7397249609 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் இராமநாதபுரம் மாவட்ட வீரருக்கு கீழக்கரை உஸ்வதுன் ஹசனா சங்கம் சார்பாக பாராட்டு..
இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 2021 யல் ஜப்பான்-டோக்கியோவில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் நாகநாதன் பாண்டியை வாழ்த்தி ஊக்குவிக்கும் முகமாக கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பாக சென்னையில் உள்ள UHMS கம்யூனிட்டி ஹாலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைவர் யூசுப் சாகிபு, சதக் அன்சாரி, முஜீப் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நாகநாதன் பாண்டியின் பெற்றோரிடம் விளையாட்டுதுறை இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் […]
கீழக்கரையில் பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் காங்கிரஸ் சார்பில் நகர் தலைவரும் தில்லையேந்தல் ஊராட்சிமன்ற தலைவருமான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மத்திய அரசு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரை பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாவட்டத் துணைத் தலைவர் அஜ்மல் கான், நகர் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், முருகானந்தம், கார்த்திக், சித்திக், மூர் அசனுதீன், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திறக்கப்படுமா கீழக்கரை சேர்மன் சதக் சாலை அஞ்சலகம்??…அவதியில் பொதுமக்கள்..
பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மாதங்கள் பல கடந்தும் திறக்கப்படாமல் இருக்கும் கீழக்கரை சேர்மன் சதக் சாலை அஞ்சலகம். இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். ஹமீதியா பெண்கள் மேனிலைப்பள்ளி, ஹமீதியா மெட்ரிக் பள்ளி மற்றும் 500 பிளாட் உள்ளிட்ட சுற்றுபுற பகுதிகளின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலகுவாக இருக்கும் இந்த அலுவலகம் விரைவில் திறக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்? மாதாந்திர சேமிப்பு பணம் செலுத்துவதற்காக கீழக்கரை தலைமை அஞ்சலகம் சென்றால்…அங்கே இருக்கும் கணக்குதாரர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அங்குள்ள அலுவலர் […]
கீழக்கரை இளைஞர் கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை விரட்டி பிடித்த கீழக்கரை காவல்துறை…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சங்குவெட்டி தெருவை சேர்ந்த செய்யது முகம்மது கபீர் மகன் ரிஸ்வான் ஜூலை 4ஆம் தேதி இரவு கத்தியால் வயிற்றுப்பகுதியில் குத்தி குடல் வெளியே தள்ளிய நிலையில் மர்மமான முறையில் கொலை செய்து ரத்தவெள்ளத்தில் வீட்டு அருகில் கிடந்துள்ளார். இதை அதிகாலையில் கண்ட பொதுமக்கள் கீழக்கரை காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் ராமநாதபுர மாவட்ட குற்றவியல் துணை கண்காணிப்பாளர் திருமலை (கீழக்கரை பொறுப்பு) […]
கீழக்கரையை சேர்ந்த வாழ்வியல் நிபுணருக்கு “Inspiring Humanitarian” விருது…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்தவர் டாக்டர்.பஜிலா ஆசாத் தற்சமயம் துபாயில் வசித்து வருகிறார். இந்த கொரோனா பெரும் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் காலத்தில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் பயம், மன அழுத்தம், பொருளாதார நெருக்கடி என மனம் சம்மந்தமான அழுத்தங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளது. இப்படி பட்ட சூழ்நிலையில் மன அழுத்தங்களை எப்படி கையாளுவது குறித்து பேச்சு,கட்டுரை, மனபயிற்சி என பல்வேறு பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகளை இணையதளம் மூலம் ஆலோசனை வழங்கி வருகிறார். இவரின் முயற்சிகளை இனம் கண்டும் […]
ஆர்.எஸ் மங்கலத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்.எஸ் மங்கலத்தில் இன்று (06/07/2021) மனித நேய மக்கள் கட்சி மத்தியில் ஆளும் கட்சியான பா.ஐ கவை எதிராக கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல செயலாளர் க.முகம்மது யாசின் கண்டன உரையாற்றினார்க.. இசுலாமிய சனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சீனி முகம்மது சபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல். பாசித், வண்ணாங்குண்டு
உலக ஜூனோசிஸ் (Zoonoses) தினத்தை முன்னிட்டு விலங்குகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி..
உலக ஜீனோசிஸ் (Zoonoses) தினத்தை (06/07/2021) முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கால்நடை மருத்துவமனையில் கால்நடை உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ரேபிஸ் வைரசை தடுக்கும் தடுப்பூசியை இன்று அனைத்து கால்நடைகளுக்கும் போடப்பட்டது. இந்நிகழ்வின் போது வட்டார வள மருத்துவர் டாக்டர் செய்யது ராஷிதீன் கீழக்கரை மலேரியா கிளினிக் சுகாதார ஆய்வாளர் குணசேகரன், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் MASA அமைப்பு சார்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்..
பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் MASA அமைப்பு சார்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாம் இன்று (05/07/2021) மக்தூமியா பள்ளி வளாகத்தில் சுகாதார துறையுடன் இணந்து நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்து கொண்டனர்.
கீழக்கரை இளைஞர் படுகொலை போலீஸ் தீவிர விசாரணை..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சங்குவெட்டி தெருவை சேர்ந்த செய்யது முகம்மது கபீர் மகன் ரிஸ்வான் வயது 42 இரவு கத்தியால் வயிற்றுப்பகுதியை குத்தி குடல் வெளியே தள்ளிய நிலையில் மர்மமான முறையில் கொலை செய்து ரத்தவெள்ளத்தில் அவர் வீட்டு அருகில் கிடந்தார். காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் ராமநாதபுர மாவட்ட குற்றவியல் துணை கண்காணிப்பாளர் திருமலை (கீழக்கரை பொறுப்பு) கீழக்கரை ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, […]
மதுரையில் ஆதரவற்ற தாயிடம் இருந்து -குழந்தையை வாங்கிய தம்பதியினர் உள்பட 7 மீது வழக்கு பதிவு..
போலி சான்றிதழ் மூலம் 3 குழந்தைகளை சட்டவிரோதமாக தத்து கொடுத்த குழந்தைகள் மீட்பு. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விஜய் சரவணன் புகாரின் பேரில் மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் சாலையோரம் வசித்து வந்த சித்ரா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கிய பாலச்சந்திரன் மற்றும் கலாநிதி உள்பட 6 பேர் மன்றம் போலி சான்றிதழ் வழங்கியவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 6 குழந்தைகள் பிறந்ததாக மருத்துவர்கள் தகவல். இதில் […]
கீழக்கரை MKM செய்யது மீரா பீவி அறக்கட்டளை சார்பாக தடுப்பூசி முகாம்.. நவாஸ்கனி எம்பி தொடங்கி வைத்தார்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை MKM செய்யது மீரா பீவி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கீழக்கரை முக்கு ரோடு ECR சாலையில் அமைந்துள்ள மதரசாவில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம் முகாமை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது வட்டார வள மருத்துவர் டாக்டர் செய்யது ராசிக், கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன், கீழக்கரை மண்டல துணை வட்டாட்சியர் பழனி குமார், கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]
கீழக்கரையில் “வந்தா வெட்டுவோம்”.. முடி திருத்தகம்…. “மாத்தி யோசி” என்பதின் அடையாளம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோடு எம் எம் கே பெட்ரோல் பங்க் அருகில் நத்தத்தை சேர்ந்த யூசுப் ராஜா என்பவர் “வந்தா வெட்டுவோம்” என்கின்ற பெயரில் புதிய முடிதிருத்தும் கடை (ஆண்கள் அழகு நிலையம்) திறந்துள்ளா். இந்நிறுவனத்தை யூசுப் ராஜாவின் தாயார் திறந்துவைத்தார். இந்நிகழ்வின் போது கீழக்கரை ஆய்வாளர் செந்தில்குமார், அப்பா மெடிக்கல் சுந்தரம், தொழிலதிபர் கெஜி, தில்லை சீமை ரகுமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை மறவர் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்க செயலாளர் எபன் பிரவீன்குமார் ஏற்பாட்டில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர். இன்று (01/07/2021)இந்திய மருத்துவர் தினம் என்பதால் மருத்துவர்களுக்கு ரோட்டரி சங்க செயலாளர் எபன் பொன்னாடை அணிவித்துதார்.
You must be logged in to post a comment.