தமிழக அரசின் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நகர்புற இலவச பேரூந்துகள் திட்டம் நடத்துனர்களால் கொச்சைப்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் சமீபத்திய சம்பவங்கள் சந்தேகத்தை கிளப்புகிறது. நேற்று (27.07.2021)மாலை இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வந்த TN63-1236 பதிவு எண் கொண்ட நகர்புற பேரூந்தில் கீழக்கரையை சேர்ந்த பெண்கள் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளனர். அச்சமயம் அங்கு வந்த நடத்துனர் ஏம்மா….ஏறும் போதே டிக்கட் கேட்டு வாங்கனும்னு தெரியாதோ? செய்வது ஓசி பயணம்,இதுல உங்க இடத்தில் வந்து நாங்க டிக்கெட் கொடுக்கனுமோனு? அதட்டல் தொணியில் மரியாதையின்றி […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் அதிமுக சார்பில் கீழக்கரை நகர் கழக செயலாளர் ஜகுபர்உசேன் தலைமையில் இந்துபஜாரில் பெட்ரோல், டீசல், கேஸ் விலைவாசி உயர்வு, நீட் தேர்வு விவகாரம், குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 வழங்காத திமுக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர கழக துணை செயலாளர் குமரன், நகர கழக பொருளாளர் அரிநாராயணன், அம்மா […]
மக்கள் டீம் பதிவு செய்த அமைப்பின் முதல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்..
கீழக்கரையில் பல்வேறு சமூக நல அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மக்கள் டீம் அமைப்பு செயல்பட்டு வந்தாலும் சமீபத்தில் முறையாக அரசு பதிவை பெற்று முதல் நிர்வாக கூட்டம் இன்று (25/07/2021) மாலை குத்பா பள்ளி வளாக மேல் மாடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட நபர்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர்: ஜகுபர் அலி உப தலைவர் : முகம்மது அப்துல் காதிர் ( ஹாஜி ) செயலாளர் : […]
கீழக்கரை கிழக்குத்தெரு, கீழக்கரை முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக தமிழ்நாடு சுகாதார துறையினருடன் இணைந்து நடைபெற்ற தடுப்பூசி முகாம்..
கீழக்கரை கிழக்குத்தெரு, கீழக்கரை முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக தமிழ்நாடு சுகாதார துறையினருடன் இணைந்து அனைத்து சமுதாய இருபாலருக்குமான 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாம் (24:07:2021) அன்று காலை சுமார் 10:30 மணி முதல் பகல் சுமார் 2:00 வரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கீழக்கரையைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த நிகழ்வு டாக்டர். ராசிக்தீன் முன்னிலையிலும், இன்ஞினியர் கபீர் ஒருங்கிணைப்பிலும் KMT நண்பர்களால் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. முதலில் வந்த […]
மத்திய அரசின் மீன்வள மசோதாவை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்….
மத்திய அரசின் மீனவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் புதிய மீன்பிடி மசோதாவால் மீனவர்கள் எண்ணற்ற துயரங்களை சந்திக்க நேரிடும் என்பதால் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கீழக்கரை புதிய பாலம் கடற்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீனவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் மீனவர்களை நசுக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுவதாகவும் புதிதாக கொண்டுவர உள்ள ஒன்றிய அரசின் மீன்வளத் மசோதாவை ரத்து செய்யக் கோரி கீழக்கரை எஸ்டிபிஐ நகர் தலைவர் ஹமீது பைசல் மற்றும் எஸ்டிபிஐ […]
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக மாயாகுளத்தில் RTE கல்வி உதவி மையம்…
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக இன்று 23/07/2021 மாயாகுளம் கிளையில் RTE கட்டாயக் கல்வி உதவி மையம் நடைபெற்றது. இதில் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். RTE தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2021- 2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் […]
கீழக்கரையில் பெருநாள் மணல்மேடு குறையை நீக்கிய கடற்கரை…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களில் பெருநாள் தினத்தை முன்னிட்டு மணல்மேடு என்னும் பொருட்காட்சி நடைபெறும். ஆனால் கொரோனா பேரிடர் காலமென்பதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கீழக்கரையில் மணல்மேடு இன்னும் பொருள்காட்சி நடைபெறாததால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக கீழக்கரை கடற்கரை புதிய பாலத்தில் பெருநாளைக்காக ஒன்று கூடினார்.
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். அதைத் தொடர்ந்தது துல்ஹஜ் 10 பிறையில் தியாகத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று (22/07/2021) இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. கீழக்கரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்று காரணமாக பொதுமக்கள் கூடுதலுக்கு தடையிருப்பதால், பொதுமக்கள் தன் குடும்பத்தாருடன் வீடுகளில் நண்பர்களுடன் சேர்ந்து பெருநாள் தொழுகை நடத்தினர்.
வளைகுடா நாடுகளில. ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கிய கடமையான ஹஜ் பெருநாள் இஸ்லாமிய மக்களால் இன்று (20/07/2020) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தர், பஹ்ரைன் மற்றும் பல வளைகுடா நாடுகளில் மிகவும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது. சவூதி அரேபியா ரியாத், தம்மாம் மாநகரிலும் கீழக்கரை மக்கள் பெருநாளை கொண்டாடினர். அதே போல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் கீழக்கரை மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் தொழுகையை நிறைவேற்றினர்.
கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சுங்க இலாகா அதிகாரிகள் திடீர் சோதனை….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் காஞ்சனகுடி சாலையில் இன்று (16/07/2021) இரவில் திடீரென சுங்க இலாகா கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் ஆய்வாளர் ரஜினிஸ் குமார் அதிகாரி, தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர் ஷேக்தாவூத் காவலர் ஸ்ரீராஜ் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனை பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது “இரவு நேரங்களில் ஈசிஆர் சாலை வழியாக பல கடத்தல் செயல்பாடூகளில் ஈடுபடுவதால , அதை கண்காணிக்க இதைப்போல் தினமும் பல இடங்களில் சோதனை செய்து வருகிறோம்” […]
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு..
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி 16.07.21 வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் ஜனணி செளந்தர்யா தலைமையில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உலக மக்கள் தொகை தினம் 1989-ம் ஆண்டு முதல் […]
கீழக்கரையில் புதிய உதயம் “JUBA SNACKS”…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோட்டில் ஐயங்கார் பேக்கரி எதிர்புறத்தில் ரமதான் பஜார் ஃபுட் கோர்ட்டில் ஜுபா 10 ரூபா ஸ்நாக்ஸ் கடை புதிதாக திறக்கப்பட்டது. இக்கடையில் சிறுதானியங்கள், காய்கறி ஊறுகாய், பேல் பூரி, பானி பூரி, டீ, காபி ஐஸ்கிரீம், பாப்கான் போன்றவை 10 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. என கடையின் உரிமையாளர் பாசித் தெரிவித்தார்.
கீழக்கரையில் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி ……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119 வது பிறந்த நாள் விழாவை வள்ளல் சீதக்காதி சாலை இந்து பஜாரில் நகர் காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.அஜ்மல் கான் தலைமையிலும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் KRD.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் அவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் ஹமீதுகான், முருகானந்தம், சந்திரசேகர், சித்திக் உசைன், நகர் நிர்வாகிகள். KRDK. கார்த்திக், முகம்மது அப்துல்காதர் (எ)பேங்க் […]
கீழக்கரையில் கொரோனா தடுப்பூசி முகாம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு, மற்றும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை ஏற்பாட்டில் சுகாதாரத்துறை சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள கண்ணாடி வாப்பா வளாகத்தில் (பழைய அப்சரா தியேட்டர்) கொரனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வட்டார வள மருத்துவர் டாக்டர் செய்யது ரசிக்தீன் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் செயலாளர் சேக் உசேன், கண்ணாடி வாப்பா அறக்கட்டளையின் சார்பில் சித்திக் கலந்து கொண்டனர். இதில் 292 நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என […]
கீழக்கரையில் தனியார் கட்டிடத்தில் திருட்டு..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லீம் பஜார் லெப்பை டீக்கடை அருகில் உள்ள கம்சான் காம்ப்ளக்ஸில் மூன்றாவது மாடியில் கஸ்டம்ஸ் ரோடு தெருவை சேர்ந்த சமையல் கலைஞர் நூருல் அமீன் என்பவர் அறை எடுத்து வசித்து வந்தார். அவர் அதிகாலையில் அறையிலிருந்து இருந்து வெளியேறிய பின்பு 11 மணி அளவில் அரைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அறையின் கதவு உடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்ததில் அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடு […]
மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக கீழக்கரையை சேர்ந்தவர் நியமனம்….
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்லதுரை அப்துல்லா பொறுப்பேற்றதை அடுத்து மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக, கீழக்கரை நகர காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அமீது கான்Ex Mc நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்லதுரை அப்துல்லா நியமன கடிதத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீழக்கரை […]
ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய அரசு மற்றும் தினமலர் பத்திரிக்கை கண்டித்து கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதியபேருந்து நிலையம் எதிரில் ஒன்றிய அரசுக்கு எதிராக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்வை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கர்நாடக அரசு காவேரி அணையின் குறுக்கே மேகதாது அணைகட்ட அனுமதி வழங்க கூடாது எனவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தமிழகத்தை துண்டாட நினைக்கும் தினமலர் பத்திரிக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தின்போது தினமலர் நாளிதழை எரித்தும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் உதயக்குமார் தலைமையயிலும் மாவட்ட […]
கீழக்கரை நகராட்சியின் அலட்சிய போக்கு… திறந்த நிலையில் வாறுகால் மூடிகள்….பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கழிவுநீர் வாறுகாலில் மூடி இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் தடுமாறி வாறுகாலில் விழுந்து விபத்து ஏற்படுகின்றன. அதேபோல் நடைபாதையில் செல்பவர்பளும் சில நேரங்களில் வாறுகாலில் விழுந்து பலத்த காயமடைகிறார்கள். இன்று (13/07/2021) ஒருவர் வாறுகாலில் விழுந்து பலத்த காயமடைந்தார். அதுமட்டுமின்றி வீடுகளில் இருக்கும் குப்பைகளை கொட்டுவதால் அடிக்கடி வாறுகாலில் அடைப்பு ஏற்படும் கழிவுநீர் வீதியில் ஓடி, நோய் பரவும் அபாயம் கீழக்கரையில் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் […]
கீழக்கரையில் பெணகளுக்கான தடுப்பூசி முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பெண்மணிகள்…
12/07/2021 அன்று கீழக்கரை பழைய மீன் கடை அருகிலுள்ள சேரான் தெருவில் இருக்கும் இப்ராகிம் கிட்டங்கியில் ராமநாதபுரம் தொகுதி எம் எல் ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கான இலவச கொரனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசீக்தீன் மற்றும் நகர் திமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான் முன்னிலையில் கீழக்கரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் M. நாதியா ஹனிபா துவக்கிவைத்தார். இந்த தடுப்பூசி முகாமில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசியை […]
கீழக்கரை மின்சார வாரியம் அறிவிப்பு …
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி பின்புறத்தில் மரம் முறிந்து மின் கம்பியின் மீது விழும் நிலை உள்ளதால் அம்மரத்தை அகற்றும் பணி தற்போது நடைபெறும் அதனால் இன்று 12.7.2021 கீழக்கரையை தவிர்த்து சுற்றியுள்ள கிராமங்களில் 2 மணி நேரம் 10.00 முதல் 12.00 வரை மின் தடை ஏற்படும் என்று கீழக்கரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment.