இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான் தோப்பு பகுதியில் பாஜக சார்பில் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார் பின்பு அப்பகுதி குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..
கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கொரோனா சமயத்தில் களப்பணி ஆற்றிய ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களை கௌரவித்து பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் 75ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்களது உயிரைப் பணயம் வைத்து விபத்து காலங்களில் விரைவில் சம்பவ இடங்களுக்கு சென்று மனித உயிர்களைக் காக்கும் உன்னதமான செயல்களில் ஈடுபட்டு இருபத்தி நான்கு மணி நேரத்திலும் ஓயாது உழைத்துக் […]
கீழக்கரை SDPI கட்சி சார்பாக சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்ச்சி..
கீழக்கரை மேற்கு நகரின் சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகரதுணை தலைவர் செய்யது அபுதாஹிர் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் கீழைஅஸ்ரப் தொகுத்து வழங்கினார். முஹம்மது ஜலீல் நகர் துணை தலைவர்வ ரவேற்புரைநிகழ்த்தினார். நகர் இணை செயலாளர் முஹம்மது சலீம் தேசியகொடியை ஏற்றி வைத்தார். நகர் தலைவர் ஹமீது பைசல் கருத்துரை வழங்கினார்.. தமிழ்மாநில பொது செயலாளர் பி அப்துல் ஹமீது சிறப்புரை ஆற்றினார்கள்.. PfI_Cfi SDTU வர்த்தக அணியின் கிளைகள்,நிர்வாகிகள் .pfi. நகர் தலைவர் அஹமது நதீர் கிழக்கு […]
கீழக்கரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்…
கீழக்கரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக 75 வது இந்திய சுதந்திர தின தேசிய கொடி ஏற்றும் விழா கீழக்கரை முஸ்லீம் பஜார் சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது. கீழக்கரை முன்னாள் நகர் காங்கிரஸ் தலைவரும், தில்லையேந்தல் ஊராட்சி தலைவரும், மாவட்ட பொது செயலாளருமான கே.ஆர்.டி கிருஷ்ணமூர்த்திஅவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துனைத் தலைவர் சித்திக் ஹுசைன் முன்னிலை வகித்தார், மேலும் சிறப்பு அழைப்பாளராக இராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன்அலி அவர்கள் கலந்து கொண்டு […]
ஆட்சிகள் மாறினாலும்… காட்சிகள் மாறுவதில்லை… குடி தண்ணீருக்காக மைல்கள் நடக்கும் பொதுமக்கள்..
இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே “வறட்சி” என்ற நிலைதான் பல காலம் காலமாக நிலவி வருகிறது. ஆட்சிக்கு வருபவர்கள் பல குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றினாலும், அதை முறையாக பராமரிக்காத காரணத்தால் மக்களுக்கு பலன்கள் கிடைக்காமலே போய் விடுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவை சுற்றியுள்ள பகுதியான கீழ தில்லையேந்தல் ஊராட்சி சின்ன பாளையம் ஊர் பகுதயில் பொதுமக்கள் குடிநீருக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக நடந்தும், தள்ளுவண்டியிலும் சென்று குடிநீர் எடுக்கும் அவல நிலையே நீடித்து வருகிறது. ஆட்சிகள் […]
கீழக்கரையில் பத்திர எழுத்தாளர் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே லெட்சுமிபுரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் டிட்டோ இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த மர்மநபர்கள் 25 பவுன் நகை மற்றும் 1,50,000 ரொக்கம் பணத்தை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி கீழக்கரை காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்துவந்த கீழக்கரை காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன் அந்த மர்மநபர்கள் தேடிவருகின்றனர். கீழக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கீழக்கரை நகர் காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு தலைவர் நியமனம்…
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் பி.ஹபீப் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில்’ “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரது நல்லாசியுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை கமிட்டி தலைவர் J.அஸ்லம் பாஷா ஒப்புதலோடு இராம நாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகர சிறுபான்மை பிரிவு தலைவராக “வ.செய்யது ஹமீது ஆரிபீன்” நியமிப்பதாக தெரிவித்துள்ளார்.
கீழக்கரையின் தனித்துவத்தை வெளி உலகுக்கு அடையாளம் காட்டும் “MATRiX MEDIA” யூட்யுப் சேனல்…
கீழக்கரையில் எத்தனையோ சமூக வலைதளங்கள், யூட்யுப் சேனல்கள் இருந்தாலும், கீழக்கரை மற்றும் மக்களின் தனித்துவத்தை வெளி உலகுக்கு கொண்டு வருவதில் சமீப காலமாக MATRiX MEDIA சார்பாக செயல்பட்டு வரும் யூட்யுப் சேனல் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கீழக்கரை செய்திகள், முக்கிய நிகழ்வுகள், தனி மனித திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பாடல் நிகழ்வுகள் போன்றவற்றை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இவர்களின் செயல்பாட்டை நாமும் பாராட்டுவோம். MATRiX MEDIA யூட்யுப் சேனலை ஊக்கப்டுத்த நீங்களும் விருப்பத்தை கீழ்கண்ட […]
கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடர் கொரோனா தடுப்பூசி முகாம்..
கீழக்கரை நகரில் கொரனா தடுப்பூசி செலுத்துவதற்காக ஜமாஅத் மூலமாகவும், சமூக நல அமைப்புகள், மக்கள் நலச் சங்கங்கள், மற்றும் தனிநபர் ஏற்பாடுகளின் பேரிலும் ஊரில் பல இடங்களில் கொரனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 8 ஆயிரம் நபர்கள் வரை முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். இன்னும் இதுவரை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் 2ம் கட்ட தடுப்பூசி செலுத்துபவர்களுக்காகவும் கீழக்கரை நகராட்சியில் இன்று முதல் (09.08.2021) அலுவலக நாட்களில் தினந்தோறும் காலை 10.30 மணி முதல் […]
கீழக்கரை SDPI கட்சி இரண்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு…
கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சி பல் வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் பணிகளை இன்னும் வீரியமாக செயல்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு கீழக்கரை நகரை இரண்டாக கிழக்கு, மேற்கு என்று மாவட்டத்தின் பரிந்துரையால் பிரிக்கப்பட்டுள்ளது மேற்கு கிளையின் தலைவராக முன்னாள் தலைவர் ஹமீது பைசல், செயலாளராக கீழை அஷ்ரப் என்கிற செய்யது அஸ்ஹாப், பொருளாளராக அசார்தீன், துணை தலைவராக முஹம்மது ஜலீல் மற்றும் செய்யது அபுதாஹிர் இணைச் செயலாளராக முஹம்மது சலீம் மற்றும் யாசின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு […]
ஜவ்வு மிட்டாய்… 80களில் குழந்தைகளின் சிறப்பு இனிப்பு…
80களில் “ஜவ்வு மிட்டாய்” இந்த பெயரை கேட்டாலே குழந்தைகளுக்கு ஒரு உற்சாகம் பிறக்கும். இந்த மிட்டாயில் பல வகை பொம்மைகளை செய்து தருபவரை ஒரு பெரிய ஹீரோவாகவே பார்க்கப்படுவார். அவரை சுற்றி ஒரு கூட்டம், அவர் வைத்திருக்கும் பொம்மை மூலம் எழுப்பும் சத்தத்தை ஒரு கூட்டம் ரசிக்கும், மறுபுறம் அவர் ஜவ்வு மிட்டாயில் செய்து தரும் வாட்ச், சைக்கிள், நைக்லஸ், மயில், தேள் என விதவிதமான மிட்டாய்களை அவர் இலவசமாக தரும் மிட்டாய் வாங்க ஒரு வரிசை, […]
உணவில் விஷப்பூச்சி.. சிறுவன் மருத்துவமனையில் அனுமதி….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் என்ற சிறுவன் நேற்று (06/08/2021) அவருடைய உறவினர் ஒருவர் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் வாங்கி வந்த உணவு பொருளை சாப்பிடும் போது அதில் அரனை என்கின்ற விஷப்பூச்சி இருப்பது தெரிய வந்ததுள்ளது. உடனடியாக அச்சிறுவனை கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
கீழக்கரையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாள் நிகழ்ச்சி..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நகர் கழக செயலாளர் பஷீர் அஹமது தலைமையில் கீழக்கரை இந்து பஜாரில் கலைஞரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது கீழக்கரை நகர் நிர்வாகிகள் உடன் இருந்தனர் நடைபெற்றது.
கடல் மீன் வள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி CITU சார்பாக கீழக்கரை கடற்கரை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பகுதியில் சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லியில் மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு அமல்படுத்த இருக்கும் புதிய மீன்வள மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதிய மீன்பிடி மசோதாவால் வரையறுக்கப்பட்ட எல்லையில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் மீனவர்கள் அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க வேண்டும் மீன் பிடிப்பதற்கான அனுமதிக்கு உரிய தொகை செலுத்தி மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் உள்ளிட்ட தமிழக மீனவர்களை நசுக்க கூடிய வகையில் ஒன்றிய அரசு […]
இராமநாதபுரம் அருகே பள்ளத்தில் கார் விழுந்து விபத்து..
இராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் கடந்த பல வருடங்களாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் இவ்வழிகளில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பல பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இந்நிலையில் இன்று (05/07/2021) அப்பகுதியில் RSமடையை சார்ந்த பால்சாமி என்பவர் வாகனம் ஓட்டி வந்த பொழுது திடீரென தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகனம் விழுந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக சிறு காயங்களுடன் ஓட்டுனர் மீட்கப்பட்டார். இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் சாலை பணிகளை மேற்கொள்ள […]
கொரொனோ தொற்று உயர்வு எதிரொலி.. கீழக்கரையில் மீண்டும் விழிப்புணர்வு பணிகள் துவக்கம்…
தமிழகத்தில் கொரோனோ தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரொனோ தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலூகாவிற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று (01/08/2021) காலை முதல் சுகாதார துறையுடன் இணைந்து கொரனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அரசு அலுவலர்கள். கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன், திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசீக்தீன், கீழக்கரை துணை வட்டாட்சியர் பழனிக்குமார், கீழக்கரை நகராட்சி பொறியாளர் […]
கீழக்கரையில் பழைய இரும்பு கடை கிடோனில் தீ விபத்து …….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் மணிகண்டன் என்பவர் பழைய இரும்பு கடை நடத்திவருகிறார். அவர் கடைக்குப் பின்புறம் கிடோன் உள்ளது அதில் பல ஆயிரம் மதிப்பிலான அட்டைகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஏர்வாடி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை காவலர்கள் ஜெயராமன், சிவக்குமார், கணேசன், ஜீவா, தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி […]
கீழக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் கரைஒதுங்கிய ராட்சச மீன்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரைப்பகுதியில் சுமார் 450 கிலோ கொண்ட அம்மான் வகையைச் சேர்ந்த உழுக்கை பெண்மீன் இறந்த நிலையில் இறக்கை வால் அறுக்கப்பட்டு கரை ஒதுங்கியது. இதுபற்றி வனத்துறை அதிகாரி பழனி குமார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு கிழக்கரை கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்து மண்ணில் புதைத்தனர்.
கீழக்கரையில் ஆக்கிரமிப்பு இடங்களை அரசு துறையினர் மீட்கும் பணி தீவிரம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகளுக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்துவந்தனர். அதை அகற்றும் பணியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன், கீழக்கரை மன்டல துணை வட்டாட்சியர் பழனி குமார், நெடுஞ்சாலை மற்றும் சமூக பாதுகாப்பு சட்ட வட்டாட்சியர் சீனிவாசன், ஏர்வாடி காவல் ஆய்வாளர் கஜேந்திரன், கீழக்கரை சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ், கீழக்கரை நகர் […]
கீழக்கரை மக்களின் உயிர் மீது அக்கறை கொள்ளுமா நகராட்சி நிர்வாகம்….?
கொரொனொ வைரஸ் இரண்டாம் அலை காரணமாக போடப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுதான் உள்ளதே தவிர இன்னும் நீக்கப்படவில்லை, ஆனாலும் பொதுமக்கள் கவனக்குறைவினால் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளது என அரசு எச்சரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் ஜிகா வைரஸ் மற்றும் கொரோனோ தொற்று அதிகமாக இருக்கும் மாநிலமான கேரளாவில் இருந்து அதிகமான யாத்ரீகர்கள் கீழக்கரைக்குள் எந்த சோதனையும் கட்டுப்பாடுகளும் இல்லாத வண்ணம் தினமும் வந்து செல்கிறார்கள். நகராட்சி நிர்வாக அதிகாரிகளின் பார்வை படாமல் நிச்சயமாக வெளி மாநில வாகனங்கள் […]
You must be logged in to post a comment.