கீழக்கரையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து SDTU சார்பாக ஆர்ப்பாட்டம்..

பெட்ரோல் டீசல்விலைஉயர்வை கண்டித்து SDTU இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு சார்பாக கீழக்கரையில் 30/11/2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  SDTU மாவட்ட தலைவர் காதர் கனி அவர்கள் தலைமையில் லெப்பை டீ கடை அருகில் காலை10 .30 மணிக்கு நடை பெற்றது. முன்னிலை SDTU மாவட்ட நிர்வாகிகள் கிளைகளின் நிர்வாகிகள்,  கீழை அஸ்ரப் மாவட்ட செயலாளர் SDTU தொழிற் சங்கம் தொகுப்புரை வழங்கினார். தலைவா யாஸீன் நகர் இணை செயலாளர் SDPIகட்சி வரவேற்புரை ஆற்றினார். அப்துல் சிக்கந்தர் மாநில செயலாளர் மற்றும் […]

கீழக்கரையில் வீரகுல தமிழர் படையின் சார்பாக தமிழீழ போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்..

கீழக்கரையில் வீரகுல தமிழர் படையின் சார்பாக தமிழீழ போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் வீரகுல தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் தலைமை தாங்கினார், மாநில அமைப்பு செயலாளர் பழனி முருகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட பொறுப்பாளர் சபீர், ஆதி தமிழர் கட்சி பொறுப்பாளர் சக்தி உள்ளிட்ட தோழமை அமைப்பினர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியை […]

கீழக்கரையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக சார்பாக விருப்ப மனு தாக்கல் துவக்கம்..

இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இன்று( 24-11-2021) இராமநாதபுரத்தில் உள்ள கிங் பேலஸ் மினி மஹாலில் கீழக்கரை திமுக நகர் செயலாளர் SAH.பசீர் அகமது மற்றும் இளைஞரணி பொறுப்பாளர் ஹமீது சுல்தான் முன்னிலையில் விருப்ப மனு பெறப்பட்டது. இதில் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த நசுரூதீன் மற்றும் மீரான் அலி ஆகியோர் போட்டியிடும் விருப்ப மனு அளித்தனர். அதே […]

கீழக்கரை நகராட்சி சுகாதாரத்துறை விழிக்குமா?? பொதுமக்களை பாதுகாக்குமா?? தொடரும் உணவகங்களின் அலட்சியம்..

கீழக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத உணவகங்கள் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் விற்று வருகின்றனர்.  ஆனால் அனைத்து நிறுவனங்களும் முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா அல்லது சுகாதாரத்துறை தொடர்ச்சியான ஆய்வு மேற்கொள்கிறதா என்பது என்றுமே கேள்விகுறிதான்.  காரணம் கீழக்கரையில் அடிக்கடி சுகாதாரமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கீழக்கரை வடக்குத் தெரு ரைஹானா என்ற பெண்மணி பிட்சா பேக்கரி எனும் நிறுவனத்தில்  வாங்கிய உணவு பண்டத்தில் […]

கீழக்கரை SDPI கட்சி சார்பாக நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை..

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் கிழக்கு மற்றும் மேற்கு நிர்வாகிகள் தலைமையில் நகராட்சி ஆணையர் அவர்களையும் சுகாதாரத் துறை ஆய்வாளர் பூபதி ஆகியோரை  சந்தித்து  கீழக்கரையில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும்,  இரவில் அதிகமாக நடமாடக் கூடிய மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதே போல் கீழக்கரை முழுவதும் உள்ள கால்வாய்களில் உடைந்த மூடிகள் அனைத்தையும் சரி செய்ய […]

கீழக்கரையில் வாக்காளர் சேர்ப்பு முகாம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு, முகவரி திருத்தம், நீக்கம் ஆகிய பணிகளை நகரில் உள்ள மொத்தம் 21 வார்டுகளிலும் தேர்தல் அதிகாரிகள் மூலமாக சரி செய்யும் பணி நடைபெற்றது.

கீழக்கரை கிரௌன் நிறுவனம் இப்பொழுது சென்னையில் “ CROWN MINI MART”..

கீழக்கரையில் பல வருட பாரம்பரியத்தை உள்ளடக்கியது கிரௌன் நிறுவனம். இக்குழுமத்தினர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கீழக்கரையில் CROWN TRADING, CROWN STATIONERY, CROWN COSMETICS, CROWN SPORTS என பொதுமக்களுக்கு தேவையான பல நிறுவனங்களை தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கம் பகுதயில் 72/5 குமரப்பா சாலையில் 07/11/2021 அன்று CROWN MINI MART என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.  இங்கு மக்களுக்கு தேவையான மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரமான விலையில் விற்கப்படும் என நிறுவனத்தின் உரிமையாளர் […]

கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக விலையில்லா “தீபாவளி பரிசு” பொருட்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பாலாஜி பிளாஸ்டிக் என்னும் இரும்பு வணிகம் நடத்தி வரும் சரவணன் என்பவர் தீபாவளியை முன்னிட்டு சுமார் 250 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சேலை, கைலி, இனிப்பு, மற்றும் 200 ரூபாய் பணம் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். கீழக்கரை காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் திமுக கீழக்கரை நகர் அவைத்தலைவர் மணிகண்டன், பாலாஜி, நாராயணமூர்த்தி, வீரகுல தமிழர் படை தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

கீழக்கரை மேற்க்கு நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து 31/10/2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  தொகுதி பொருளாளர் சகுபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார். கிழக்கு நகர் தலைவர் நூருல் ஜமான்,  துணை தலைவர் ஹாஜா அலாவுதீன், செயலாளர் பக்ருதீன், அசாருதீன் கிழக்குநகர் மற்றும் மேற்கு நகர் நிர்வாகிகள் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் செய்யது இப்ராஹிம்,  Nrc  டிவிஷன் பிரசிடென்ட் ஹமீது சாலிஹ் அவர்கள் முன்னிலை […]

கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “நம் சேவை மையம்”…

இன்று 22/10 2021 வெள்ளிக்கிழமை நேரம் மதியம் 2 மணி முதல் முதல் வடக்குத்தெரு தைக்கா அருகில்  “நம் சேவை மையம்” என்ற சேவை மையம்  ஆரம்பிக்கப்பட்டது. அந்நிறுவனத்தை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி நிரவாக குழு உறுப்பினர் முகைதீன் இபுராஹிம் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் நண்பர்கள், வியாபார நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையத்தில் அனைத்து விதமான இணையதள சேவைகள் மற்றும் DTDC கொரியர் சேவையும் வழங்கப்படுகிறது.

செயின் பறித்த குற்றவாளி கைது……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள முஸ்லீம் மோர் குளத்தில் குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சின்ன ஏர்வாடி பகுதியை சார்ந்த பஞ்சவர்ணம் என்பவரை தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர் காதர் ஆகியோர் விரட்டி பிடித்தனர் அவனிடமிருந்து 5 பவுன் சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றினர்.

கீழக்கரையில் இரவு நேர ரோந்து பணியில் தனியார் பாதுகாவலர்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு இடங்களில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் நடக்கும் காரணத்தினால் மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பில் இரவு நேரத்தில் மேலத்தெரு, சின்னக்கடை தெரு, சாலை தெரு, சங்குவெட்டி தெரு 500 பிளேட் பகுதிகள் முழுவதையும் பாதுகாக்க தனியார் செக்யூரிட்டிகள் சுமார் 6 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதி முழுவதையும் சுற்றி கண்காணித்து வருகின்றனர். இவர்கள் தகவலை பரிமாறி கொள்ள வாக்கிடாக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது இன்னும் சிறிது நாட்களில் அதிகமான செக்யூரிட்டிகள் […]

கீழக்கரையில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருட்களுக்கு எதிரான பிரச்சார கூட்டம்…

கீழக்கரை நகர் தமுமுக – மமக சார்பில், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருட்களுக்கு எதிரான பிரச்சார கூட்டம் இன்று (24/09/2021) மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட நிகழ்வு நடைபெற்றது. தலைமை : ‌ S.முகம்மது நஃபில் தென்கிழக்கு மண்டல செயலாளர் – SMI. சிறப்புரை : மௌலவி உசேன் மன்பஈ அவர்கள் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் தலைப்பு– தீமைகள் ஒழிப்பே சமூகப்பாதுகாப்பு இந்த பிரச்சார கூட்டத்தில் தமுமுக மாநிலச் செயலாளர் S […]

இராமநாதபுரத்தில் அசாம் பாசிச நாஜி அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அசாமில் நேற்று (23/09/2021) காவல்துறையினரால் 4,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களை கண்டித்து மாவட்ட துணைத்தலைவர் சோமு தலைமையில் இன்று(24/9/21) இராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் மற்றும் எஸ்டிடி யூ மாவட்ட நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். […]

கீழக்கரை தாலுகா பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுத்தவர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா உட்பட்ட வேளானூர் பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதாக கீழக்கரை சரக குற்றவியல் காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற குற்றவியல்  சார்பு ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள், சிறப்பு சார்பு ஆய்வாளர் பொண்து முனியாண்டி, யாசர், ஜெய்கணேஷ், உள்ளிட்ட காவலர்கள் டிராக்டரை சுற்றிவளைத்து சட்டவிரோதமான மணல் அள்ளி வந்த ஓட்டுனர் முத்துக்குமாரையும் பிடித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்தனர்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் கேஸ் மானியத்தை ரத்து செய்ததை கண்டித்து இராமநாதபுரத்தில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்..

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் கேஸ் மானியத்தை ரத்து செய்ததை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் நூதன முறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு நாளுக்கு நாள் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி சாமானிய மக்கள் சிலிண்டரை பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. இதனை கண்டிக்கும் விதமாக இராமநாதபுரத்தில் மாவட்டத் தலைவர் ரியாஸ் கான் தலைமையில் சந்தைத் திடலில் இன்று(20/9/2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன […]

கீழக்கரையில் ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் மற்றும் தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

தமிழகம் முழுவதும் இன்று (20/09/2021) ஒன்றிய அரசை வேளாண் சட்டங்கள், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்டவையை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் திமுக நகர செயலாளர் S.A.H பஷீர் அகமது தலைமையில்,  வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திமுக இளைஞரணி அமைப்பாளர்  அறிவுறுத்தலின்படி திமுக மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் அசன் மற்றும் திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மீரான் […]

கீழக்கரையில் போதை வியாபாரிகளை ஒழித்து கட்ட காவல்துணை கண்காணிப்பாளரிடம் மனு… இது ஒரு துவக்கம் தான்..

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரிகளால் சமூக ஆர்வலர் கொடூரமாக கொல்லப்பட்டது பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கீழக்கரையில் போதை வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்ணும் என குரல் எழும்பியது. இதன் தொடர்ச்சியாக இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் தாளாளர் எம்்எம்.கே.முகைதீன் இபுராகிம் சமூக வலைதளத்தில் போதைக்கு எதிராக குரல் கொடுக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக கீழக்கரையை சார்ந்த பல்வேறு சமுதயா அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் […]

கீழக்கரை பெட்ரோல் பங்க் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்… குற்றவாளிகள் பிடிபட்டனர்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெட்ரோல் பங்கில் சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வந்து 2லட்சம் ரூபாய்கு மேல் பகிரங்கமாக கொள்ளையடித்து சென்றனர்.  இதை தொடர்ந்து கீழக்கரை குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, காவலர் யாசர், காவலர் ஜெய்கணேஷ் , காவலர் திருமுருகன், தனி பிரிவு காவலர் சேகர் உள்ளிட்டோர் தீவிர தேடுதலின் அடிப்படையில் இன்று (16/09/2021) கைது செய்தனர். இவர்கள் ராஜேஷ் (21) த/பெ காமராஜ்,   நிமல் […]

கீழக்கரையில் பல்வேறு இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்..

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (12/09/2021) நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமெ சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் சிறப்பு முகாமை துணை ஆட்சியாளர் அன்னம்மாள் தொடங்கி வைத்தார். இதில் கீழக்கரை தாலுகா தாசில்தார் முருகேசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கோகுல்நாத், வருவாய் ஆய்வாளர் பார்கவி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல  தொண்டு நிறுவன உறுப்பினர்கள், சமூக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!