இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண்துறை வல்லுனர் விஞ்ஞானி பத்ம ஸ்ரீ எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7, 1925).

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (M. S. Swaminathan) ஆகஸ்ட் 7, 1925ல், தமிழ்நாட்டின் கும்பகோணம் குடந்தையில் பிறந்தார். பெற்றோர்கள்,  அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.கே. சம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மல் சம்பசிவன். “சாத்தியமற்றது” என்ற வார்த்தை முக்கியமாக நம் மனதில் உள்ளது என்பதையும், தேவையான விருப்பத்தையும் முயற்சியையும் கொடுத்தால், பெரிய பணிகளைச் செய்ய முடியும் என்று சுவாமிநாதன் தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர் சம்பசிவம், கும்பகோணத்தில் “தனது வெளிநாட்டு ஆடைகளை எரிப்பதில்” முன்னிலை […]

இராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்..

இராமநாதபுரம், ஆக.6 இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம், சென்னை அப்பலோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.  சங்கத்தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலர் நாராயணன் முன்னிலை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை கட்டணமின்றி செய்யப்பட்டது. மேல்சிகிச்சைக்காக 4 குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்டனர். அப்பலோ மருத்துவமனை டாக்டர்கள் ஹரிதா, விஜய், கார்த்தி ஆகியோர் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய […]

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு குடும்பத்தினர் சார்பாக குடும்ப விழா ..

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு குடும்பத்தினர் சார்பாக குடும்ப விழா நடைபெற்றது மதுரை விமான நிலையத்தைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில்  சன்ரிஸ்கா  எனப்படும்   விழாவில்   மத்திய தொழில்  பாதுகாப்பு  படையினரின் குழந்தைகள் குடும்பத்தினர் பங்கேற்றனர். இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை  துணை  கமாண்டன்ட் விஸ்வ நாதன் தலைமையில் நடைபெற்றது. சிறுவர்களுக்கான ஒவிய போட்டி, சைக்கிள், ஒட்டப்பந்தயம் போட்டி, பெண்களுக்கான ஒட்டப்பந்தம்,  கோலம் போடுதல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. செய்தியாளர் […]

தவறான முறை தரும் விரைவான வெற்றி நீடிக்காது: கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லூரி மேலாண்மை கருத்தரங்கில் தகவல்..

இராமநாதபுரம், ஆக.6- இராமநாதபுரம் மாவட்டடம்  கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் சீ. ராஜசேகர் தலைமை வகித்தார். மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் வரவேற்றார். ஒரு தொழில் முனைவோர் தங்கள் தொழிலில் மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களை வெற்றியடையச் செய்ய முன்வர வேண்டும். சரியான திட்டம், உத்தி தொழில் முனைவோருக்கு முக்கியமானது. உங்கள் தொழிலில் எப்போதும் நேர்மையாக […]

கீழக்கரை மக்களுக்கு கிலி தரும் நாய்கள் விவகாரம்: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆக.11 ல் ஆர்ப்பாட்டம்::

இராமநாதபுரம், ஆக. 5- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் நாய்களால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் ஆக. 11ல் தெற்கு தெரு ஜமாத் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மின் ஹாஜ் பள்ளி ஜமாத் சார்பிலும் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழுகையில் பங்கேற்போர் போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலை […]

கண்காணிப்பில் இருந்த மாடுகள் விடுவிப்பு: கீழக்கரை நகராட்சி பணியாளர் சஸ்பெண்ட்?

இராமநாதபுரம், ஆக.5- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் உரிய பராமரிப்பின்றி சுற்றித்திரிந்த 46 மாடுகள் நகராட்சி பணியாளர்கள் பிடித்து நகராட்சி அலுவலகம் அருகே தனியார் இடத்தில் அடைத்து காவலாளி கண்காணிப்பில் பாதுகாத்து வந்தனர். கால்நடைகளின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 20 மாடுகள் அங்கிருந்து இன்று விடுவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர விசாரணை செய்யப்பட்டது. விடுவிக்கப்பட்ட 20 மாடுகள் நகராட்சி பணியாளர்களுக்கு சொந்தமானது […]

மணிப்பூரில் வன்முறையால்  பாதித்தோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்

இராமநாதபுரம், ஆக.5 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் சந்தை திடலில் ஜனநாயக பாதுகாப்பு பொதுக்கூட்டம் இன்றிரவு நடந்தது. மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்,  மாவட்ட துணைச்செயலாளர்கள் மீரான், உஸ்மான், சித்திக் முன்னிலை வகித்தனர். இந்திய நாடும் முஸ்லிம்களும் குறித்து மாநில செயலாளர் அன்சாரி,  பொதுசிவில் சட்டம் பாதிப்பு யாருக்கு? என மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் பேசினர். […]

இருளில் மூழ்கி கிடக்கும் கீழக்கரை 7வது வார்டு (பழைய 20வது வார்டு) தெரு… கவுன்சிலர் கவனம் கொள்வாரா??

கீழக்கரை 7வது வார்டு (பழைய 20வது வார்டு) வடக்கு தெரு சித்தி காம்ப்ளக்ஸ் செல்லும் வழி,  அதிகமான. பள்ளி கூட மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் கடந்து செல்லும் வழி.  கீழக்கரையில் ஏற்கனவே நாய் தொல்லையால் வெளியே வர பயந்து கிடக்கும் நிலையில் கடந்த பல நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கூறுகையில் மின்சார வாரிய ஊழியர்களிடம் பல முறை கூறியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இப்பகுதி கவுன்சிலராவது கவனத்தில் கொண்டு […]

திருப்புல்லாணி வட்டார காங்., பூத் கமிட்டி ஏஜன்ட் பட்டியல் ஒப்படைப்பு..

இராமநாதபுரம், ஆக.5- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி முகவர்களின் பட்டியல் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோபால் (எ) பி.ஆர்.என் ராஜா ராம் பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் வண்ணாங் குண்டு ரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் பெரியபட்டினம் முஹமது உசேன், மாவட்ட செயலாளர்கள் சையது இப்ராஹிம், தியாகராஜன், திருப்புல்லாணி வட்டார பஞ்சாயத்து ராஜ் தலைவர் பழனி, பெரியபட்டினம் நகர் தலைவர் மைதீன், வட்டார துணைத் தலைவர் […]

வடகரையில் எஸ்டிபிஐ கட்சி பொதுக்கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள வடகரை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரத் செயலாளர் ஷாஜித் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்கமாக நகரத் துணை செயலாளர் சேக் முகம்மது அலி அனைவரையும் வரவேற்றார். நகரத் தலைவர் அப்துல் பாசித் துவக்க உரை நிகழ்த்தினார்.   பொதுக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் […]

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நாய் கடி அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு ஒரு தீர்வு இல்லாத நிரந்தர பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் பல சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக பொதுமக்களும் பல் வேறு அமைப்புகளுடன் இணைந்து போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் நாய் கடிக்கு ஆளானால் எந்த மாதிரயான உடனடி மருத்துவம் செய்ய வேண்டும் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக 04/08/2023 அன்று […]

கீழக்கரை அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை பறிமுதல் ! குற்றவாளி தப்பி ஓட்டம் !!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வன உயிரின காப்பாளர்களும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கீழக்கரை வனச்சரகர் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் கீழக்கரை வனவர் கனகராஜ் கடல் சார் உயிர் இலக்கு படை வனவர் ராமச்சந்திரன் வன பாதுகாப்பு படை வனவர் சுப்பிரமணியன் மற்றும் வன பணியாளர்கள் ஆகியோர் இணைந்து கீழக்கரை அருகே இருக்கக்கூடிய நத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த தோப்பினை ஆய்வு செய்யும் பொழுது அங்கு அரசால் தடை செய்யப்பட்டுள்ள பதப்படுத்திய கடல் அட்டை 600 […]

கீழக்கரை தாலுக்கா கிராம உதவியாளர்கள் பணியிடமாற்றம் ! கீழக்கரை தாசில்தார் அதிரடி உத்தரவு !!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்டு பணி புரியம் கிராம உதவியாளர்கள் பணியிடம் மாறுதலை கீழக்கரை தாசில்தார் பழனி குமார் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாறுதல் செய்யப்படும் வருவாய் கிராமம் உதவியாளர்கள் பணியிடம் விபரங்கள் அடங்கிய தொகுப்பு :- பாண்டி கீழக்கரை குரூப், சரவணக்குமார் மாயாகுளம் குரூப், பி.கோவிந்தன் வண்ணான் குண்டு குரூப், நைனா முகம்மது மாணிக்கனேரி குரூப் , விஜயராணி பனையடியேந்தல் குரூப், முருகேசன் ஏர்வாடி குரூப், கலைவாணி ஆலங்குளம் குருப், அபிநய […]

கீழக்கரையில் நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிக அளவில் நாய்களின் அட்டகாசம் உள்ள நிலையில் இன்று அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் P.R.L ஹாமிது இப்ராஹிம் மற்றும் கௌரவ தலைவர் P.R.L சதக் அப்துல் காதர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் நேரில் சந்தித்து கீழக்கரையில் நாய்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார்கள்.

மக்கள் குறையை தீர்க்க முடியாத கவுன்சிலர் பதவி தேவையில்லை… தீர்வு இல்லையெனில் கீழக்கரை 18வது வார்டு SDPI கட்சியை சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வேன் என மனு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக எஸ்.டி.பி.ஐ சார்ந்த ஜக்கினா பேகம் உள்ளார். கீழக்கரையில் நாய்களின் அட்டகாசம் அதிகரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்தும் அச்சிறுத்தும் வரும் காரணத்தினால் அதை கட்டுப்படுத்தவில்லை எனில் நான் நகர்மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நகர்மன்ற தலைவர் இடம் இன்று (04/08/2023) மனு அளித்தார்.

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சார்பாக நாய் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொடர்ந்து நாய்கள் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை கடித்துக் கொண்டிருப்பதால் நகராட்சி சார்பில் நாய்களை பிடிப்பதற்கு பல சட்ட பிரச்சனைகள் உள்ள நிலையில் இன்று (04/08/2023) மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் நாய்களை பிடிப்பது சம்பந்தமான கோரிக்கை மனு அளித்தனர்.

கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 73வது குடியரசு தின விழா..

இன்று26.01.2022. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடுமதுரையில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் வரவேற்புரை ஆற்றினார். ஜமாத் தலைவர் தேசியக்கொடியினை ஏற்றினார்.பள்ளி ஆலீம் அவர்கள் குடியரசு தினம் பற்றி சிறப்புரை யாற்றினார். ஊர் பிரமுகர்களும்.இளை ஞர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். பள்ளி உதவியாசிரியை நன்றி கூறினார்.சிறப்பு அழைப்பாராக ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ன மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் 73-வது குடியரசு தின விழா..

கீழக்கரை இஸ்லாமியா  கல்வி  நிறுவனங்களின்  சார்பில் 73-வது  சுதந்திர தின விழா இஸ்லாமியா மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் பள்ளி தாளாளர் எம். எம். கே. முகைதீன் இப்ராஹிம்  தேசியக்கொடி ஏற்றி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். எம்.எம்.கே. அலீப்தீன், நஜிம் மரைக்காயர் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். கீழக்கரை அளவிலான  பெண்களுக்கான கை எறிதல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் பரிசு வழங்கி பாராட்டினார். 10-வது வகுப்பு மாணவி எம்.ஜெ.ஷெஹினா மெஹ்னாஸ்.கிராஅத் ஓதி விழாவை […]

கீழக்கரை அருகே கழிவுநீர் கால்வாயில் விழுந்த மாடு மீட்கப்பட்டது….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது அதை கண்ட பொதுமக்கள் மற்றும் கீழக்கரை நாசா ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஓட்டுனர்கள் அபுதுல்லா, பிரவீன், அபுதாஹிர் முயற்சி செய்தும் மாடை மீற்க முடியாத காரணத்தினால் கீழை ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஓட்டுனர்கள் ஏர்வாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் பசு மாட்டை மீட்டனர். இதேபோல் கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் வாறுகாலில் மூடி போடாமல் இருப்பதால் பல விலங்கினங்கள் உள்ளே விழும் […]

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி தாளாளர் சார்பாக பயணிகள் நிழற்குடை..

கீழக்கரை ஊர் எல்லையான முக்குரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இங்கு பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை அமைத்து தர பல நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர், இந்நிலையில் கீழக்கரையில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்எம்கே முகைதீன் இப்ராகிமை அப்பகுதி பொதுமக்கள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அந்த பேருந்து நிறுத்தத்தை பார்வையிட்டு தனது சொந்த செலவில் பயணிகளுக்கு பந்தல் போட்டு கொடுத்தார், […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!