சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பா.ம.க.வினருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு…

நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில்  வைக்கப்பட்டுள்ள பாமகவினர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, பாமக சார்பில் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் மாலை அணிவித்து, வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. நெய்வேலியில்,  பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த என்.எல்.சி. போராட்டத்தில் பாமகவினர்  55 பேர் கைது செய்யப்பட்டனர். அதில்,  மதுரை மத்திய சிறையில் 17 பேர் நீதி மன்ற காவலில்  இருந்து வந்தனர் . இன்று  ஜாமினில் அவர்கள்  வெளிவந்தனர். […]

வெறி நாய் கடித்து குதறிய பள்ளி சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..

இராமநாதபுரம், ஆக.16 – இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் கவன்ராஜ். 7. நேற்று இவர் படிக்கும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா முடித்து வீட்டிற்கு திரும்பினார். வழியில் வெறிநாய் கவன்ராஜின் இடது கையை கொடூரமாத கடித்து குதறி தள்ளியது. அப்பகுதி பொதுமக்கள் அந்த மாணவனை வெறிநாயிடமிருந்து மீட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதே போல், ஆக.9 ஆம் தேதி முதுகுளத்தூர் அரசு பள்ளி மாணவர் மதிய […]

சுதந்திர தினத்தன்று காவல் பணி ராஜினாமா செய்த போலீஸ்காரர்?

இராமநாதபுரம், ஆக.16 – நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் இந்த மூகத்திற்கு விடுதலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய முதல் நிலை காவலராக பணியாற்றிய கார்த்திக்,  தனது காவல் பணியை ராஜினாமா செய்வதாக வெளியிட்ட வீடியோ பதிவு காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. போலீசில் பணியாற்றினாலும் தன்னால் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து வெளிப்படையாக பேச முடியவில்லை. இதனால், தான் புனிதமாக நேசிக்கும் காவல் பணியை ராஜினாமா செய்து […]

கீழக்கரையில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரி பேராசிரியர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி..

இராமநாதபுரம், ஆக.14 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரி பேராசிரியர்களுக்கு இடையே முதல்முறையாக கிரிக்கெட் போட்டி நடந்தது. 10 அணிகள் பங்கேற்ற போட்டியை கல்லூரி முதல்வர் ராஜசேகர் துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமார், பல்கலை உயிர் தகவலியல் பேராசிரியர் ஜெயகாந்தன் கலந்து கொண்டனர். அரை இறுதி ஆட்டத்தில் திருவாடானை அரசு கலைக் கல்லூரி, தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி, அழகப்பா […]

கீழக்கரை அருகே அரசு விரைவு பஸ் மோதல்: மூதாட்டி இருவர் பலி..

இராமநாதபுரம், ஆக.14- தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குச் சென்ற தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கீழக்கரை அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே சென்றது. அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து மீன்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் மீது மோதி, பாலிடெக்னிக் கல்லூரி முன் நின்ற மரங்களை முறித்துக் கொண்டு நின்றது. இதில் பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்கு காத்திருந்த மூதாட்டி 2 பேர் பரிதாபமாக பலியாகினார். முறிந்த மரக்கிளைகளை கல்லூரி மாணவர்கள் மீட்டனர். மேலும் காயமடைந்த 2 […]

இராமநாதபுரம் பகுதியில் ஆயிரம் கிலோ  ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது..

இராமநாதபுரம், ஆக.13 –  இராமநாதபுரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன், தலைமை காவலர்கள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி, தெய்வேந்திரன்  மற்றும் முதுகுளத்தூர் உணவு பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் கதிரவன் ஆகியோர் இணைந்து அத்தியாவசிய உணவு பொருட்கள் பதுக்கல் தொடர்பாக இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, மட்டியரேந்தல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூடை கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதன்படி அந்த வீட்டில் சோதனை செய்தனர். அங்கு […]

கீழக்கரையில் பராமரிப்பின்றி சுற்றி திரிந்த கால்நடைகள் ஏலம் ரூ.77 ஆயிரம் வசூல்..

இராமநாதபுரம், ஆக.10- இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை நகர் 21 வார்டுகளில் உரிய பராமரிப்பின்றி சுற்றி திரிந்த 46 கால்நடைகள் ஆக 2ல் பிடிக்கப்பட்டு நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் பாதுகாப்பான முறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.  இதில் ஆக.5 அதிகாலை 4:30 மணியளவில் 19 மாடுகள் அடையாளம் தெரியாதவர்களால் விடுவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, இரவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எஞ்சிய 27 கால்நடைகளில் அபராதம் ரூ 24 ஆயிரம் செலுத்தி 15 கால்நடைகளை […]

உசிலம்பட்டியில் ஓய்வுதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..

உசிலம்பட்டியில் ஓய்வுதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ 7850 வழங்கிட வலியுறுத்தி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வுதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓய்வுதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ 7850 வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வுதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்ற சூழலில் இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு […]

முதலமைச்சர் வருகை… இராமநாதபுரத்தில் அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு…

இராமநாதபுரம், ஆக.10- இராமநாதபுரம், அருகே பேராவூர் இசிஆர்., ல் திமுக பாக முகவர்கள் கூட்டம் ஆக.17ல் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். விழா நடைபெறும் இடத்தில் ஆயத்த பணிகளை திமுக துணை பொதுச்செயலரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான இ.பெரியசாமி, தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், டிஐஜி துரை, எஸ்பி  தங்கதுரை உள்ளிட்டோர்  ஆய்வு செய்தனர். மாவட்ட திமுக செயலாளர் காதர்பட்ஷா முத்துராமலிங்கம்   எம்எல்ஏ, மாவட்ட திமுக […]

கீழக்கரை இஸ்லாமியா பெண்கள் அரபிக் கல்லூரி “பசியாற்றுவோம் திட்டம்” இரண்டாம் ஆண்டு துவக்க விழா…

கீழக்கரை இஸ்லாமியா பெண்கள் அரபிக் கல்லூரி “பசியாற்றுவோம் திட்டம்” முதலாமாண்டு நிறைவு மற்றும்  இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  ஃபாத்தி சபரிமாலா  நாளை (11/08/2024) கீழக்கரை வருகை தர உள்ளார். இது தொடர்ந்து இரவு 6:30மணிக்கு இஸ்லாமியா ஸ்கூல் வளாகத்தில் பசியாற்றுவோம் திட்டம் பற்றி விளக்கும் வகையில் நாடகம் மற்றும் பட்டிமன்றம் 9மணி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தை கீழக்கரை மற்றும் பல இடங்களில் “பசியாற்றுவோம் திட்டத்தை* முன்னின்று நடத்தும் சுலைஹா கூறுகையில், ஒரு தனி […]

பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் ‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் 12ம் தேதி தொடக்கம்..

ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடக்கம்.  மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் 12-ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு பிரமாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது.   இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஆகஸ்ட் 9) […]

மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மூத்த நிர்வாகிகளை எடப்பாடியார் கௌரவிக்கிறார்….ஆர்.பி.உதயகுமார்..

மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்:- கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், மதுரையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் வண்ணம் கழக அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்று கொடுத்தும், வாகனங்களில் மாநாட்டிற்கான லோகோவை ஒட்டும் நிகழ்ச்சி சோழவந்தானின் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் லோகவை […]

ஏர்வாடி மனநல காப்பகத்தில் முதியவர் மயங்கி விழுந்து பலி..

இராமநாதபுரம், ஆக.9 –  இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவின் அரசு நிதி உதவியுடன் செயல்படும் மனநல காப்பகத்தில் 60 வயது முதியவர் சுரேஷ் என்பவர் தங்கியிருந்தார். ஜூலை 24 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவனை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மனநல காப்பக மேலாளர் மாடசாமி புகாரில் ஏர்வாடி […]

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரி விதிப்பு கொள்கைகள் தேசிய கருத்தரங்கு..

இராமநாதபுரம், ஆக.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான வரிவிதிப்பு, அதன் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜ சேகர் தலைமை தாங்கினார். வருமான வரி, அதன் சட்டப்பிரிவு, தனிநபர் வருமான வரி, வருமான வரிச் சலுகை, வருமான வரி கணக்கீடு குறித்து வருமான வரி அலுவலர் பாலகுமார் பேசினார். இந்திய அரசு விதிக்கும் வரிகளில் 2 […]

குவாண்டம் இயந்திரவியல், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் பிறந்த தினம் (ஆகஸ்ட் 9, 1923)…

அல்லாடி ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 9, 1923ல் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை பிரபல வழக்கறிஞர் சர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ஆவார். அவர் அரசியலமைப்பு சபை உறுப்பினராக, இந்திய அரசியலமைப்பை மற்ற முக்கிய உறுப்பினர்களுடன் வரைவதில் முக்கிய பங்கு வகித்தார். மெட்ராஸில் உள்ள பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். மெட்ராஸில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பி.எஸ்சி. (ஹான்ஸ்) இயற்பியலில் பட்டம், கல்லூரியின் மாணவராக அவர் சர் சி.வி.ராமனின் கீழ் பணியாற்ற விரும்பினார். அவரது […]

சட்ட விரோதமாக மணல் கடத்தல்: டிராக்டரை விரட்டி பிடித்த தாசில்தார்…

இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் மணல் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு  தகவல் கிடைத்தது. இதன்படி கீழக்கரை தாசில்தார் பழனிகுமார், இன்று அதிகாலை திடீர் ரோந்து பணி சென்றார். அப்போது மணல் ஏற்றி கொண்டு வந்த டிராக்டரை நிறுத்த முயன்றார். மணல் கொள்ளையர் டிராக்டரை நிறுத்தாமல் சென்றனர். தாசில்தார் அரசு வாகனம் மூலம் விரட்டிச் சென்று மணல் ஏற்றி சென்ற டிராக்டரை பிடிக்க […]

எமனேஸ்வரத்தில் கைத்தறி துறை சார்பில் 9வது தேசிய கைத்தறி தினம்: 21 பேருக்கு ரூ.11.11 லட்சம் நலத்திட்ட உதவி..

இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் கைத்தறி துறை சார்பில் 9வது தேசிய கைத்தறி தின நிகழ்வு நடந்தது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தார். நெசவாளர்களுக்கான பொது மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் 1905 அன்று தேசிய இயக்கம் தொடங்கப்பட்டதை நினைவு கூறும் பொருட்டு […]

ஒழுக்கமில்லா கல்வி காகித பூ போன்றது அது மணம் தராது.. கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரசிரியர் பேச்சு..

இராமநாதபுரம், ஆக.7- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நன்னெறி கல்வி மற்றும் தீனியாத் அமைப்பு சார்பில் ஒழுங்குமுறை நுட்பம், நேர்மையான அணுகுமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.  கல்லூரி அரபிக் துறை தலைவர் கல்லூரியின் நன்னெறி கல்வி மற்றும் தீனியாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்மொகைதீன் அப்துல் காதர் வரவேற்றார். திருச்சி ஜமால் முஹமது கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் அமிருதீன் ஹசானி  பேசுகையில், செல்வந்தர் பலர் […]

பட்டணம்காத்தான், ஆர்.எஸ்.மடை உப மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: நாளை (ஆகஸ்ட் 8) மின் தடை…

இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் பட்டணம்காத்தன் உப மின் நிலையம் ராம்நாடு உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (ஆக.8) நடை பெற உள்ளது. இதனால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம், தேவிபட்டினம், கழனிகுடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம். காட்டூரணி, ஆர்.கே.நகர், எம்ஜிஆர் நகர், ரமலான் நகர், […]

தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி நினைவு தினம் இன்று  (ஆகஸ்ட் 7, 2018)…

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித்தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை. கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!