இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் கொம்பூதி கிராமத்தில் மக்களிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் குறைகள் கேட்டறிந்தார். அரசின் பல்வேறு துறை நலத்திட்ட உதவிகளை தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். கிராமப் பகுதிகளில் பிள்ளைகள் +2 வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடாமல் பிள்ளைகளை பட்டமேற்படிப்பு வரை படிக்க பெற்றோர் வைக்க வேண்டும். அரசு தொழிற்பயிர்ச்சியுடன் வேலைவாய்ப்புகளையும் தனியார் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பணி போட்டிதேர்வுகளுக்கு வழங்கும் பயிற்சி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரேஷன் […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரை JVC கைப்பந்து கழகம் சார்பாக ,18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி..
கீழக்கரை வடக்கு தெரு ஜமாத், மணமேட்டில், JVC கைப்பந்து கழகம் சார்பாக ,18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் கலந்து கொண்டு விளையாடின அனைத்து கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கும் அல் ஜதீது கைப்பந்து கழகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. கீழே விபரங்கள்:- 1 PRIZE -ஏர்வாடி EIFA 2 PRIZE-கீழக்கரைJVC 3 PRIZE- ஏர்வாடி RASITH FRIENDS 4PRIZEகீழக்கரைJVC-B 5 PRIZE […]
கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம்..
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் இன்று 01/10/2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. முகாமை சங்கத்தின் தலைவர் ஆலிம் முஹம்மது தவ்ஹீத் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ஜூல்ஃபி, காதர், ஃபஹத், சஃப்வான், சுஹைல், ரிதுவான் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலை 10:00 மணி முதல் மதியம் 02:30 மணி வரை நடைபெற்ற முகாமில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு […]
பிறந்து 15 நாட்களே ஆன நல்ல பாம்பு குட்டி படமெடுத்து ஆடிய வீடியோ காட்சி; சமூக வலைதளத்தில் வைரல்..
மதுரை மாநகர் பழங்காநத்தம் அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் குட்டி நல்ல பாம்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் பாம்பு பிடி வீரரான சிவா பாண்டிக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர் குட்டி நல்ல பாம்பை பிடிக்கும் முற்பட்ட பொழுது அந்த பாம்பு பிடி கருவியுடன் அந்த குட்டி நல்ல பாம்பு சண்டையிட்டு வேகமாக ஓடியது. தொடர்ந்து அதனை மடக்கிப்பிடித்த பாம்புபிடி வீரர் வனப்பகுதியில் சென்று விட்டார். இந்த நல்ல பாம்பு […]
மதுரை மத்திய சிறை ஒரே நாளில் இரண்டு தண்டனை சிறைவாசிகள் உயிரிழப்பு..
மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியைச் சேர்ந்த தர்மர் (வயது 52) இன்று பிற்பகலில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக சிறை வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக சிறை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உயிரிழந்த தர்மரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு […]
கீழக்கரை துணை நிலையத்தில் இன்று (26/9/2023) மின் பராமரிப்பு பணி..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (செப்.26) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காஞ்சிரங்குடி மின் பாதையில் வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல் நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம் பஜார், சங்குவெட்டி தெரு, இந்து பஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன் மார்கெட், பைத்துமால், சின்ன மாயாகுளம் மின் பாதையில் 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு, […]
மதுரை வைகையாற்றில் அடையாளம் தெரியாத நபரை கொலை செய்தவர்களுக்கு போலீசார் வலை வீச்சு..
மதுரையில் கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகம், கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவத்திற்கு வந்த கரிமேடு போலீசார் இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தி பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு […]
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆக்கத்தில் உருவான “வான்” திட்டம், “ஒருங்கிணைந்த தையற் தொழில் கூடம் திறப்பு விழா”
மதுரை: உலக மக்கள்தொகையில் சரி பாதியாக பெண்கள் இடம்பிடித்துள்ள நிலையில் அவர்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார உருவாக்கம் குறித்து உலகம் முழுவதும் பரவலாகப் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆயினும்கூட, தொழில் மற்றும் வணிகத்தில் அவர்களின் பங்கு குறைவாகவே உள்ளது. அதிலும் முக்கியமாக தொழில்முனைவோரை விட தொழிலாளர் சக்தியாக கீழ் அடுக்கிலேயே பெண்கள் பெருமளவில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்தியாவில் பண்பாடு, மரபு & சமூக-கலாச்சார சூழல் காரணமாக பெண்கள் வணிக சூழ்நிலையில் ஒப்பீட்டளவில் தாமதமாகவே நுழைந்துள்ளனர். இதற்கான தொலைநோக்குத் […]
சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில்12ம்ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாணம் நடந்தது …
சோழவந்தான் 8வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது விழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாள் ஹரே கிருஷ்ணா நாம பாராயணம் இதைத் தொடர்ந்து அஷ்டபதி பஜனை இரவு குரு கீர்த்தனைகள் நடந்தது இரண்டாம் நாள் காலை உற்சவ விருத்தி பஜனை பெண்கள் சீர் எடுத்து வந்தனர் தொடர்ந்துராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்று ஆஞ்சநேய உற்சவம் மங்கள ஆராத்தி […]
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மூலம் பாஜக அரசை விரட்டியடிப்போம் ராமநாதபுரம் எம்எல்ஏ பேச்சு..
இராமநாதபுரம், செப்.25 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இன்று இணையும் நிகழ்ச்சி நகர் திமுக சார்பில் நடந்தது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2021 சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை 2021 மே 7 ல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து நிறைவேற்றினார். அன்றைய தினத்தில் இருந்து அரசு நகர் பேருந்துகளில் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் […]
கீழக்கரை முத்துச்சாமிபுரத்தில் சமுதாயக்கூடம் திறப்பு..
இராமநாதபுரம், செப்.23 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 5 வது வார்டு முத்துச்சாமிபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடத்தை திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ இன்று திறந்து வைத்தார். நகர்மன்ற தலைவர் எஸ்.செஹனாஸ் ஆபிதா, நகராட்சி ஆணையர் செல்வராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் வி.எஸ்.ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் சர்ஃப்ராஸ் நவாஸ், முஹமது ஹாஜா சுஐபு, நகராட்சி பொறியாளர் அருள், சுகாதாரத்துறை […]
டைனமோவை கண்டுபிடித்த, நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் சிறந்த சோதனையாளர், மைக்கேல் பாரடே பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 22, 1791).
மைக்கேல் பாரடே (Michael Faraday) செப்டம்பர் 22, 1791ல் தெற்கு லண்டனிலுள்ள, இன்றைய எலிபண்ட் அண்ட் காசில் என்னுமிடத்துக்கு அருகாமையிலுள்ள நியுயிங்டன் பட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப் பட்ட நிலையில் இருந்தது. இவர் தந்தையான ஜேம்ஸ் பரடே ஒரு கொல்லர். பரடே தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. தனது 14 ஆவது வயதில் புத்தகம் கட்டுபவரும், விற்பவருமாகிய ஜோர்ஜ் ரீபோ என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு […]
கீழக்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது..
இராமநாதபுரம், செப்.18- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி, தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு, வீடுகளில் இருந்து தேங்கும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான், ஆணையர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா முன்னிலை வகித்தனர். மரக்கன்று நடுதல், மனித சங்கிலி, […]
தென்காசி மாவட்டத்தில் தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தமிழ் வளர்ச்சித் துறையில் 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருது வழங்க விண்ணப்பங்களை பெற்று அனுப்ப வேண்டியுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்துவதற்காக தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் […]
மதுரையில் குப்பைக் கிடங்கில் தீவிபத்து. 10 அடி தூரத்தில் இருந்த பெட்ரோல் பங்க்!
மதுரை பழங்காநத்தம் அருகே திருப்பரங்குன்றம் நெடுஞ்சாலையில், சாய்பாபா கோயில் அருகே வசந்த நகர் பகுதியில் மதியம் தீ விபத்து ஏற்பட்டது. வசந்த நகர் 1 வது தெருவில், பேக்கரி கடை ஒன்றின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பைக் கிடங்கில், சிலரது அஜாக்கிரதையான செயலால் குப்பையில் தீப்பற்றி அது அருகில் இருந்த காய்ந்த வேப்ப மரத்தில் தொற்றி, வானுயர எரியத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குத் தெரிய வர, […]
மதுரையில் 3 இடங்களில் அதிநவீன வசதியுடன் தொடங்கப்பட்ட சோதனைசாவடி.,
மதுரையில் 3 இடங்களில் அதிநவீன வசதியுடன் தொடங்கப்பட்ட சோதனைசாவடி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். மதுரையில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையிலும்., பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தமிழக காவல்துறை அறிவுறுத்தலின்படி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை புறநகர் பகுதிகளில் அதிக அளவு நடைபெறும் வழிப்பறி., கொலை., கொள்ளை., கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் வாகன சோதனைச் சாவடி மையங்கள் […]
வாடிப்பட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது…
வாடிப்பட்டி ஆகஸ்ட் 27 மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை தேமுதிக வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பில் நடத்தப்பட்டது இந்த இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது பேரூர் செயலாளர்.பாலாஜி தலைமை வகித்தார். தெய்வேந்திரன் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர்.கோபால் சோமநாதன் வரவேற்றனர். மதுரை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பாலச்சந்திரன் துவக்கி வைத்தார்த ங்கராஜ், கர்ணன், சோனைமுத்து ,சத்யலிங்கேஸ்வரர் ,கிருஷ்ணன், குமார் சிறப்பு விருந்தினராக […]
கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் குழந்தைகள் மருத்துவ கழகம் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம்..
கீழக்கரை ரோட்டரி சங்கம், இராமநாதபுரம் சுகாதாரப்பிரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் ரோட்டரி சங்கம் தலைவர் டாக்டர் கபிர் தலைமை தாங்கினார்.செயலாளர் எபன் வரவேற்றார். தட்டம்மையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடுப்பூசியால் போடுவதால்ஏற்படும் நன்மைகள் பற்றிய கருத்துக்களை கீழக்கரை தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன், திருப்புல்லாணி வட்டார மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் ஆகியோர் தலைமை […]
மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு…சேவை ரத்து..
மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைப்பு பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் பெங்களூரில் இருந்து மதுரை வந்த indigo விமானம் காலை 8:30 மணி அளவில் மதுரை வந்தடைந்தது மதுரையில் இருந்து 68 பயணி களுடன் பெங்களூர் செல்ல வேண்டிய விமானம் பயணிகள் ஏறி புறப்பட தயார நிலையில் இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பயணிகள் மாற்று வழியாக […]
சிவகாசி அருகே, தகாத உறவால் இளம் பெண் கொலை… 12 நாட்களுக்கு பின் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன் (34). இவரது மனைவி ஷீலாராணி (25). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. சுசீந்திரன் பட்டாசு மற்றும் அச்சகங்களுக்கு முகவராக வேலை பார்த்து வருகிறார். ஷீலாராணி அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்தார். ஷீலாராணிக்கு, திருமணம் செய்வதற்கு முன்பாகவே முகமதுயாசீப் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையிலும் இந்த தகாத பழக்கம் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4ம் […]