நயினார்கோவில் ஒன்றிய மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு..

இராமநாதபுரம், நவ.15- இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பந்தப்பனேந்தல் ஊராட்சி சித்தனேந்தல் கிராமம், அக்கிரமேசி கிராம மக்களை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள், தங்கள் பகுதிகளின் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். சித்தனேந்தல் கிராமத்தில் கீழநாட்டார் கால்வாயில் பாலம் அமைத்து தரவும், தங்கள் பகுதிக்கு பொதுமயானம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அக்கிரமேசி கிராம மக்கள் தங்கள் […]

தேசிய குழந்தைகள் தின விழாவில் பங்கேற்க டில்லி சென்ற ராமநாதபுரம் சிறார்கள்..

இராமநாதபுரம், நவ.14 – புதுடெல்லி தேசிய பாலபவனில் நவ. 17 முதல் 19 வரை தேசிய குழந்தைகள் தினவிழா கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம், ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்பம் ஆசிரியர் தனசேகரன் தலைமையில் பங்கேற்கும் மாணவர்கள் தருண், வர்னேஷ், முனீஷ், சஷ்ஸ்ரீ ஆகியோர் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் வாழ்த்து பெற்றனர். வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் பகான் சுதாகர், சார் ஆட்சியர் அப்தாப் […]

மதுரை காமராஜர் பல்கலைகழக விடுதியருகே மின்மாற்றியில் தீ.. மாணவிகள் ஓட்டம்..

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மதுரையில்  மாலை முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இரவிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் மாற்றியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் தீயானது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது மின்மாற்றி அருகே […]

இராமநாதபுரம் அருகே உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம்  கலெக்டர் பங்கேற்பு..

இராமநாதபுரம், நவ.2 ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உள்ளாட்சி தின கிராம  சபைக்கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்று  பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக்கொண்டார். அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நவ.1 உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மிக முக்கியம் வாய்ந்த இக்கிராம சபை கூட்டம் என்பதால் அனைவரும் கலந்து கொண்டு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். இப்பகுதி பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையான மருச்சுக்கட்டி […]

விருதுநகர் மாவட்டம்   ராஜபாளையத்தில் 116வது தேவர் ஜெயந்தி விழா ..

ராஜபாளையம் நகர ஒன்றிய அதிமுக சார்பில் தென்காசி சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச்சிலைக்கு  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என்.எம். கிருஷ்ணராஜ் தலைமையில்  நகர செயலாளர்கள் பரமசிவம் (தெற்கு) வழக்கறிஞர் முருகேசன்(வடக்கு) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட  இணைச் செயலாளர் அழுகுராணி,   மற்றும்  பலர் கலந்து கொண்டனர். திமுக சார்பில்  ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் […]

கீழக்கரை முத்துச்சாமி புரம் பள்ளி மாணாக்கருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சீருடை..

இராமநாதபுரம், அக்.27- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் கீழக்கரை முத்துசாமிபுரம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகள் , காலுறைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலர் எபென் பிரவீன் குமார் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜுலு, கீழக்கரை வட்டாட்சியர் பழனிக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பொருளாளர் சுப்ரமணியன்,  செல்வநாரயணன், சபீக், வழக்கறிஞர் நாதியா, திமுக […]

இடிந்து விழும் நிலையில் சோழவந்தான் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் விபத்து ஏற்படும்முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனையானது தினந்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் இந்த மருத்துவமனை முன் நுழைவாயில் பகுதியில் உள்ள மரம் வளர்ச்சியடைந்து விடுவடைந்து சுற்றுச்சுவர் மீது சாய்ந்துள்ளது. இதனால் சுவரில்விரிசல் ஏற்பட்டுள்ளது  மருத்துவமனைக்கு […]

தேவர் குருபூஜை பசும்பொன்னில் கலெக்டர், எஸ்பி ஆய்வு..

இராமநாதபுரம், அக்.18- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்த நாள் விழா, 61 வது குருபூஜை விழாவையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் பசும்பொன்னில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்.30 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசு […]

விரகனூர்  ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர டெங்கு ஒழிப்பு முகாம் நடைபெற்றது.  மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர்  குமரகுருபரன் உத்தரவின் பெயரில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் டாக்டர் தனசேகரன் திருப்பரங்குன்றம் வட்டார  சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை பிரதமர் ஊராட்சி செயலாளர் ராஜாமணி சரவணன் வெங்கடேஷ்  மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் டெங்கு ஒழிப்பு துப்புரவு பணிவுகளில் ஈடுபட்டு வந்தனர் விரகனூர் பகுதியில் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் […]

மதுரைக்கு வந்த பொதிகை ரயில் என்ஜின் முன் இறந்த நிலையில் சிக்கி இருந்த மனித உடலைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி..

செங்கோட்டை – சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் இன்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் மதுரை ரயில் நிலையம் வந்தபோது என்ஜினின் முன் பகுதியில் மனித உடல் சிக்கி இருப்பதை கண்ட பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதும்  ரயில்வே போலீசார் என்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் இச்சம்பவம்  மதுரை கப்பலூர் பகுதியில் […]

மதுரையில், இலவச மார்பக பரிசோதனை முகாம்..

மக்கள் நீதி மையம் ரோட்டரி மீட் டவுன் இணைந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  பிறந்த நாளை முன்னிட்டு, மாபெரும் இலவச மார்பக பரிசோதனை மருத்துவ முகாம் மதுரை மதி தியேட்டர் அருகில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. மகளிர் மட்டும் குழந்தைகள் நல அணி, மதுரை மண்டல பத்மா ரவிச்சந்திரன் மற்றும் மதுரை மேற்கு ஆறாவது வார்டு வேட்பாளர் கலையரசி வட அமெரிக்கா நார்த் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் தலைவர் பத்மாவதி ஆகியவர்களின் ஏற்பாடு பேரில், […]

தமிழக மீனவரை பாதுகாப்பதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி?  எஸ்டிபிஐ கட்சி..

இராமநாதபுரம், அக்.15- இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி  முகவர்கள் கூட்டம், வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ரியாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கீழை. ஜஹாங்கீர் ஆருஸி, டாக்டர் ஜெமீலுன் நிஸா உள்பட பலர் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலில் முகவர்களின் பணிகள், பணியாற்றும் விதம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. டிசம்பர் மாதம் […]

அப்துல் கலாம் பிறந்த நாள்: ராமேஸ்வரத்தில் அக்.15 ல் மினி மராத்தான் போட்டி..வீடியோ அறிவிப்பு வெளியீடு..

ராமநாதபுரம், அக்.13 – முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தை (அக்.15) யொட்டி ராமேஸ்வரத்தில் மினி மாரத்தான் போட்டி நடக்கவுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியுள்ளதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் அக்.15 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மினி மராத்தான் ராமேஸ்வரம் தீவு பகுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.rkhm2023.com என்ற இணைய தளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மதுரையில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை – 2 மணி நேர விசாரணைக்கு பின் செல்போனை பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்..

மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது தாஜுதீன் என்பவரை என் ஐ ஏ அதிகாரிகள் இன்று காலை அழைத்துசென்று காவல் கட்டுப்பாட்டு இடத்தில் விசாரணை நடத்தினர். கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சென்ற பொழுது பீகாருக்கு சென்றபோது சந்தேகத்துக்குரிய சிலரை  கைது செய்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக முகமது தாஜுதீனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2 மணி்நேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் […]

ராமநாதபுரம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டம்…

இராமநாதபுரம், அக்,11- ராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு அறிமுக கூட்டம்  சார்பில் காணொலி காட்சி மூலம் நடந்தது. மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலர் விஜயகதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் பகத்சிங், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் பிரவீன் முன்னிலை வகித்தனர். மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலரும், அமைச்சருமான டிஆர்பி ராஜா நிர்வாகிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் […]

சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா..

இராமநாதபுரம், அக்.11-  இராமநாதபுரம் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பொன் குழந்தைகள் தின விழா இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பரதம், நாடகம், கட்டுரை, பேச்சு போட்டிகளில் வென்ற மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் பரிசு வழங்கினார்.  தேசிய அறிவியல் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் மோகனா சோமசுந்தரம், சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் […]

வாடிப்பட்டி அருகே இளைஞர் தற்கொலை போலீசார் உட்பட 3 பேர் மீது உறவினர்கள் புகார்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் ராம்கி வயது 23 இவர் தனது வீட்டில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் பின்னர் ராம்கிஉடலை பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பாக ஒரு துண்டு சீட்டில் அதிபன் முருகேசன் ஜான் முருகன் என்று […]

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு  அரசு மரியாதை…

மதுரை நேதாஜி ரோடு பகுதியில் சேர்ந்த திருமதி சோலையம்மாள் அவர்கள்  வீட்டில் வேலை பார்க்கும் போது தவறி விழுந்து அதில் காயம் அடைந்து வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அன்னாரது உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மரியாதை […]

தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தென்னை கருத்தரங்கு…

இராமநாதபுரம், அக்.10-  இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய கூட்ட அரங்கில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் மாவட்ட அளவிலான தென்னை கருத்தரங்கு இன்று நடந்தது. இராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் வட்டாரங்களைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். தென்னை பயிருக்கான தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்களை குறித்து  தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர், அறவாழி தென்னையில் வேளாண்மைத்துறை திட்டங்கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் பாஸ்கரமணியன்,  தென்னையில் உர மேலாண்மை குறித்து  வேளாண்மை அறிவியல் […]

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணியில் முறைகேடு: பாமக கண்டன தீர்மானம்..

இராமநாதபுரம், அக் 10 – இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அக்கிம் தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலர் வெங்கடேசன் வரவேற்றார்.  தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டம், கடலாடி தாலுகா சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!