நெல்லையில் ரூ. 2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை ஜன.05 அன்று திறந்து வைத்தார். பொருட்காட்சி திடல் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் காணொலி காட்சி வாயிலாக […]

நெல்லையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா கவியரங்கம்; பாராட்டு சான்றிதழ்கள் வழங்கல்..

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளின் கவியரங்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவிதை வாசித்த அனைவரையும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கல்லூரி மாணவ மாணவிகளின் கவியரங்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இக்கவியரங்கத்தின் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி துவங்கி வைத்தார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ் பேராசிரியை […]

ஜன.9ல் பள்ளி, ஜன.10ல் கல்லூரி இராமநாதபுரம் மாணாக்கருக்கு பேச்சு, கவிதை, கட்டுரை போட்டி…

இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், தெரிவித்ததாவது: தமிழ் நாட்டிலுள்ள +1, +2 ஆம் வகுப்பு, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றல் உள்ளிட்ட படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டம் வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு +1, +2 மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஜன.9 காலை […]

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: பிரமாண்ட திரையில் ஒளிபரப்பு..

இராமநாதபுரம், ஜன.7 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார். இதை,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (டிச.7) கலெக்டர் விஷ்ணு சந்திரன், தொழில் முனைவோர் காணொலிக்காட்சி மூலம் பார்வையிட்டனர். இதுபோல் ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் செய்தித்துறை வாகனத்தின் பிரமாண்ட திரையில் ஒளிப்பரப்பிய நிகழ்வை பொது மக்கள் பார்த்தனர்.

கீழக்கரை சையது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா போட்டி பரிசளிப்பு…

இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சையது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலாடி பொதுமக்கள் சார்பில் தமிழர் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையொட்டி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம், ஊராட்சி தலைவர் ராஜமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பத்மநாபன் உட்பட […]

தென்காசியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட பூங்காக்கள்; நகர்மன்ற தலைவர் சாதிர் திறந்து வைத்தார்..

தென்காசியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட பூங்காக்களை நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் திறந்து வைத்தார். தென்காசி நகராட்சியில் வீட்டு வசதி வாரிய காலனி எல். பிளாக் பகுதியில் பூங்கா மற்றும் உழவர் சந்தை அருகேயுள்ள பூங்கா ஆகியவை கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா முன்னிலை வகித்தார். தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர். […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு:  கலெக்டர் அறிவிப்பு..

இராமநாதபுரம், ஜன.6 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தெரிவித்ததாவது:  2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு 1, ரூ.1000 ரொக்கம் நியாய விலைக்கடை மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை […]

கச்சத்தீவு திருவிழா பயணம்: உயர் நீதிமன்ற ஆணையை செயல்படுத்த ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை..

இராமநாதபுரம், ஜன.7 – வரும் பிப்ரவரி 23, 24 ல் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழா பயணத்திற்கு மீன்பிடி விசைப்படகில் அழைத்து செல்லக் கூடாது என்ற உயர் நீதிமன்ற ஆணையை செயல்படுத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23 ,24ல் நடைபெற உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் படி திருப்பயண திட்டத்தை மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில அரசுகள் நடப்பாண்டு செயல்படுத்த வேண்டுமென, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு […]

ராமநாதபுரத்தில்  டிஎன்பிஎஸ்சி தேர்வு  கலெக்டர் ஆய்வு..

இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரத்தில் டிஎன்பிஎஸ்சி எழுத்துத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ஏ.வி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முஹமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடந்தது. காலை, மாலை என இரு பிரிவுகளாக நடந்த தேர்விற்கு 2,211 பேர் விண்ணப்பித்ததில் 1,468 பேர் […]

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு ஓராண்டு வேளாண் விரிவாக்கசேவை பட்டயப்படிப்பு…

இராமநாதபுரம், ஜன.6- தேசிய வேளாண் மேலாண் விரிவாக்கப் பயிற்சி நிலையம், ஹைதராபாத் 2003-ம் ஆண்டிலிருந்து வேளாண் இடுபொருட்கள் பற்றிய அடிப்படை அறிவை இடுபொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில் வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டப்படிப்பை நடத்திவருகிறது. வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதுடன் மட்டுமல்லாமல் வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியை பெற்றிருப்பதில்லை. தற்போது மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் புதுவிதமான பூச்சி […]

கீழக்கரையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பேருந்து நிலையம் தனியார் கல்லூரிகள் போன்ற இடங்களில் உள்ள கடைகளை கீழக்கரை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் எம் ஜெயராஜ் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா சுகாதாரத்துறை சுகாதார ஆய்வாளர் சுரேந்தர், ராம்குமார் கீழக்கரை காவல் நிலைய காவலர் ராம்கி ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர். . ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து அபராதம் விதித்து மூடப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட […]

சுற்றுச்சூழல் கல்வி பயிற்சி பட்டறையில் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு…

இராமநாதபுரம், ஜன.6 – மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி தொடர்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறை ராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தலைமை வகித்தார். இதில் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாசிரியர்கள், மாணவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வியல் குறித்து செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. மஞ்சள் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேவிபட்டினம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதல்வர் தீனதயாளன், முஹமது […]

ராமநாதபுரம் மாவட்டத்தின் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் – காரேந்தல் (நியாயவிலைக்கடை) / இராமேஸ்வரம் வட்டம் பாம்பன் – (அரசு உயர்நிலைப் பள்ளி) / திருவாடானை வட்டம் – கருங்காலகுடி (நியாய விலைக்கடை) / பரமக்குடி வட்டம் கங்கைகொண்டான் (நியாயவிலைக்கடை ) முதுகுளத்தூர் வட்டம் அலங்கானூர் (நியாயவிலைக்கடை கட்டிடம்) / கடலாடி வட்டம் ஓரிவயல் (நியாயவிலைக்கடை கட்டிடம்)/ கமுதி வட்டம் கேரிசல்குளம் (நியாயவிலைக்கடை), கீழக்கரை திருப்புல்லாணி வட்டம்- திருப்புல்லாணி (நியாயவிலைக்கடை) / ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் ஆய்ங்குடி (நியாயவிலைக் கடை) ஆகிய […]

பரமக்குடியில் ரூ.67.71 லட்சம் மதிப்பில் போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு…

இராமநாதபுரம், ஜன.6 – ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகர் போக்குவரத்து பணியில் 1 இன்ஸ்பெக்டர், 1 எஸ்ஐ., உட்பட 15க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இங்கு புதிய கட்டடம் கட்ட 2019ல் ரூ.67.71 லட்சம்  நிதி ஒதுக்கி பணிகள் நிறைவடைந்தன. போக்குவரத்து காவல் புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  பரமக்குடியில் போக்குவரத்து காவல் பிரிவு சுட்டடத்தை காவல் துறை துணைத் […]

கீழக்கரையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டத்தலைவர் காளிதாஸ் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் Digital Crop Survey பணி குறித்தும், அது சம்பந்தமாக கிராம நிருவாக அலுவலர்களுக்கு கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தம் குறித்தும் , Digital Crop Survey பணியை புதிதாக பணியில் சேர்ந்து தகுதிகாண் பருவம் நிறைவு பெறாத மற்றும் விளம்புகை செய்யப்படாத கிராம நிருவாக […]

மேலமடை கிராமத்தில் கீழக்கரை வட்டாட்சியர் ஆய்வு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் மேலமடை கிராமத்தில் வசிக்கும் ராக்கச்சி கோடாங்கி மனைவி கிழவி (வயது 89) என்பவரின் மண்சுவரினால் ஆன குடிசை வீடு திடீரென்று எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்துள்ளது. சம்பவத்தை அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆறுதல் கூறி நிவாரணம் பொருள் வழங்கினர். இதில் துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் […]

டிஜிட்டல் கிராப் சர்வே என்ற தொழில்நுட்ப பணி!வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..

டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என  வருவாய் நிர்வாக ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்து இருந்தது தொடர்பாக. இந்த உத்தரவை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கமும் இணைந்து, கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் அந்தந்த தாலுகா அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அனிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கிராம நிர்வாக […]

கீழக்கரையில் வீட்டுக்கு வீடு இலவச காவலர்கள்… ஆழ்ந்த உறக்கத்தில் நகராட்சி…. விழித்திருக்கும் வெறி நாய்கள்…

கீழக்கரை நகராட்சிக்கு வைக்கப்படும் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு நிலையே காரணம்.  ஊர் முழுவதும் தினம், தினம் நாய்களின் எண்ணிக்கை கூடிய வண்ணமே உள்ளது. பொதுமக்களும், சிறுவர்களும் வெளிய பெரும் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. தினம் தோறும் தெருக்களில் பள்ளி செல்லும் சிறார்களை வெறி நாய்கள் துரத்துவது அன்றாட நிகழ்வாகி விட்டது. கீழக்கரையில் உள்ள பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பல தருணங்களில் வெறி நாய்களை கட்டுப்படுத்த மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் […]

கீழக்கரை நகராட்சி 4வது வார்டு அனைத்து பொதுமக்கள் பாதுகாப்பு குழு கூட்டம்..

கீழக்கரை நகராட்சி 4வது வார்டு அனைத்து பொதுமக்கள் பாதுகாப்பு குழு கூட்டம் என்.சந்திரன் தலைமையில் 17 .11 .2023 மாலை ஆறு மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக என்.சந்திரன் நியமிக்கப்பட்டார் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன 1. 4வது வார்டு உட்பட்ட மறவர் தெரு, கிழக்கு நாடார் தெரு, கிருஷ்ணாபுரம், இந்து பஜார், தட்டார் தெரு பகுதிகளில் மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை […]

தென்காசி நகராட்சி பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம்; கல்வி அமைச்சர் வழங்கினார்..

தென்காசி நகராட்சி பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. அதற்கான கேடயத்தை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். ஆண்டு தோறும் சிறந்த கற்பித்தல், கற்றல், உள்கட்டமைப்பு, அதிக மாணவர்களின் சேர்க்கை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மாவட்டத்தில் மூன்று சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த வகையில் தென்காசி சரகத்தின் 7-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு சிறந்த பள்ளிக்கான கேடயம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு விளையாட்டுத்துறை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!