இராமேஸ்வரம் கடலில் இரட்டை வலை மீன்பிடி: 24 விசைப்படகுகள் மீது நடவடிக்கை..,

இராமநாதபுரம், ஜன. 9- ராமேஸ்வரம் மீன்பிடி தங்குதளத்தில் இருந்து 491 விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றன. இப்படகுகள் இன்று அதிகாலை முதல் கரை திரும்பின. அப்படகுகளில், ராமேஸ்வரம் உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி உத்தரவுப்படி மீன்வள ஆய்வாளர் ஆர்த்தீஸ்வரன், கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குமரவேல், கடல் வள மேற்பார்வையாளர் குத்தாலிங்கம், தலைமைக் காவல் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட படகுகள் […]

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலச்சட்டம் செயல்பாடுகள் பயிலரங்கம்..

இராமநாதபுரம், ஜன.9- இராமநாதபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலச்சட்டம் 2007 (ம) விதிகள் 2009 குறித்த செயல்பாடுகள் தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சி இன்று (09.01.2024) நடைபெற்றது. பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நல சட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதன் நோக்கம் மூத்த குடிமக்களை நன்றாக […]

இறால் ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை முகாம்..

இராமநாதபுரம், ஜன.9- பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் கீழ் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் தொழில் நிறுவன ஊழியர்களுக்கு தொற்றாநோய் பரிசோதனை முகாமை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் காணொலி காட்சி மூலம் இன்று துவங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இறால் ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களுக்கு தொற்றாநோய் இலவச பரிசோதனை முகாம் இன்று நடந்தது. மண்டபம் பேரூராட்சி தலைவர் டி. ராஜா தலைமை […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 – 10 மணி வரை 100.80 மிமீ மழை..

இராமநாதபுரம், ஜன.9- நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து பெய்யத் துவங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து கனமழையாக தீவிரமடைந்தது. ராமநாதபுரம் நகரில் ஒரு சில இடங்கள், கமுதி, கடலாடி, கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, வாலாந்தரவை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலை […]

இராமநாதபுரத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்..

இராமநாதபுரம், ஜன.9- ஊதிய உயர்வு, ஓய்வூதியருக்கு அகவிலைப்படி உயர்வு உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  2023 டிச.19ல் சிஐடியு, ஏஐடியுசி உள்பட 16 தொழிற்சங்கங்கள், டிச.20 ல் அண்ணா தொழிற்சங்க பேரவை  வேலைநிறுத்த நோட்டீஸ் விநியோகித்தன. இதைதொடர்ந்து  3 கட்ட சமரக பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து மக்களின் நலன் கருதி ராமநாதபுரம் புறநகர், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் ஆகிய 5 பணி […]

கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ! திரளாக கலந்து கொண்ட பொதுமக்கள் !!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில் கீழக்கரையில் அரசு மருத்துவமனை 10 கோடியில் புதிய கட்டிடம் , புதிய மீன் மார்க்கெட் அறிவு சாரா மையம் போன்ற திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்பதை தெரிவித்தார். முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித் துறை / தமிழ்நாடு மின் உற்பத்தி […]

கீழக்கரை நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை… இருவர் கைது.. 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முரளி. இவர் கீழக்கரை நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்தகாரர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், கீழக்கரை நகராட்சி மின் மோட்டார் பழுது சரி செய்தும், மின் பல்புகள், உபகரணங்கள் சப்ளை செய்த பணிகள் மேற்கொண்டிருந்தார். இது சம்பந்தமாக நகராட்சி ஆணையரை அணுகி தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.62 ஆயிரத்தை விடுவிக்குமாறு கேட்டார்.. இதையடுத்து இத்தொகைக்கான காசோலை விடுவிக்க இளநிலை உதவியாளர் உதயக்குமார், கணக்கர் சரவணன் ஆகியோரிடம்  நகராட்சி ஆணையர் […]

கொடி நிதி அதிகம் வசூலித்த அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்று விநியோகம்..

இராமநாதபுரம், ஜன.8 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.  வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு தொடர்பாக 485 மனுக்கள் அளித்தனர். முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் நிதி அதிகம் சேகரித்த மகளிர் திட்ட உதவி அலுவலர் சசிகலா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் […]

கீழக்கரையில் தரமான சாலைகள் அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கோரிக்கை மனு

கீழக்கரை நகரின் மிக முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான பட்டாணியப்பா பகுதியில் நீண்ட காலமாக சாலை அமைக்காமல் இருப்பதினால் அந்த பாதையை பயன்படுத்தி வரும் பொது மக்களுக்கும் பள்ளி சென்று வருகின்ற ஏராளமான மாணவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் சிரமமாக இருப்பதுடன் குண்டும் குழியுமாகவும் அந்த சாலை முழுவதிலும் மேற்பரப்பில் கிடக்கின்ற கற்களால் குழந்தைகள் முதியவர்கள் கற்களால் தடுக்கி விழுந்து காயம் அடையும் சூழலும் வாகனங்கள் கட்டுப்பாடின்றி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் மிகப் பெரும் அளவில் […]

குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது…

வீடுகளில் பயன்படுத்தும் மின்பயன்பாடு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. மின்கட்டணத்தை மின்நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாகவும், செயலி வழியாகவும் செலுத்துகின்றனர். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, செல்போனில் மின்வாரியம் மூலம் வரும் குறுஞ்செய்தியிலேயே (எஸ்எம்எஸ்) மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி வந்ததும் அதில் இருக்கும் இணைப்பை […]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு; அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம்..

தி.மலை மாவட்டம், செங்கத்தில் ,பிரபல நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான நடிகர் விஜயகாந்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சி சார்பாக மௌன ஊர்வலம்  தேமுதிக மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு தலைமையில் நடைபெற்றது . தேமுதிக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், நகர பொருளாளர் சிவபெருமாள் அனைவரையும் வரவேற்றார் தேமுதிக ஒன்றிய கழக செயலாளர் சிவா. வெங்கடகிருஷ்ணன், நகர செயலாளர் ராமமூர்த்தி . ஆகியோர் முன்னிலை வகித்தனர் செங்கம் செய்யாற்றங்கரை பாலத்தில் இருந்து நகரின் முக்கிய […]

நத்தம் ஊராட்சியை கமுதி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு..

இராமநாதபுரம், ஜன.8- நத்தம் ஊராட்சியை கமுதி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை  7 கிராம மக்கள் இன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா நத்தம் ஊராட்சிக்கு ஆண்டாள்புரம், முத்தாதிதபுரம், கள்ளிகுளம், மணி நகர் உட்பட 7 கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நத்தம் ஊராட்சியை அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். […]

இராமநாதபுரத்தில் முகவை சங்கமம் சார்பில் 6வது புத்தகத் திருவிழா பிப்.2ல் தொடக்கம்: கலெக்டர் தகவல்..

இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில் முகவை சங்கமம் 6.0 சார்பில் வாசிப்பை சுவாசிப்போம் எனும் 6 வது புத்தகத் திருவிழா பிப்.2 முதல் பிப்.12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசகர்கள் பார்வைக்கும், விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு புத்தகம் வாசிப்பு தொடர்பாக ஓவியக் கண்காட்சி, மூலிகைப் பொருட்கள் தயாரிப்பு கண்காட்சி இடம் பெற உள்ளது. இதை முன்னிட்டு தினமும் […]

ஏர்வாடி அருகே வகுப்பறை கட்டடம் இன்றி மாணவ, மாணவியர் அவதி: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஆதம்சேரி நடுநிலைப்பள்ளி ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன்வலசை கடற்கரை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 134 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 5 ஆம் வகுப்பறை கட்டடம் விரிசல் ஏற்பட்டதால் ராமநாதபுரம் பள்ளிக்கல்வி பரிந்துரையில் 2020 ஆம் ஆண்டு அப்போதைய கலெக்டர் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. இதற்கு மாற்று கட்டடம் மூன்று ஆண்டுகளாகியும் கட்டித்தரப்படவில்லை. இதனால் போதிய வகுப்பறையின்றி 5 […]

இராமநாதபுரம் எஸ்பி கிருஷ்ணகிரிக்கு பணியிட மாற்றம்…

இராமநாதபுரம், ஜன.7 – தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் 18 பேர் உள்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 48 பேரை பணியிட மாற்றம் செய்து, 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டது.  இதன்படி ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி தங்கதுரை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி., யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை நகர் காவல் துணை ஆணையராக பணியாற்றி வரும் சந்தீஷ் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் […]

கீழக்கரையில் தீராத கழிவுநீர் பிரச்சினை… ஆட்சிகள் மாறுகிறது… அவலம் மாறவில்லை..

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு சிஎஸ்ஐ சர்ச் திரும்பும் வழியில் மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தொட்டியின் மூடி உடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பல நகராட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கடந்து செல்லும் இந்த பாதையில் இந்த அவலம் கண்ணில் படாதது ஏனோ?? கண்டுகொள்ளுமா கீழக்கரை நகராட்சி??

தமிழ்நாடு முதலமைச்சர் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆற்றிய விழா பேருரையை பார்வையிட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றும் நிகழ்வை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் சிறு குறு நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு சேர்ந்து பார்வையிட்டார். தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் […]

இலக்கியங்களின் தொன்மை என்பது கவிதையே; நெல்லை இலக்கிய நிகழ்வில் கவிஞர் பேரா பேச்சு..

நெல்லை மாநகரில் நடந்த பொருநை இலக்கிய நிகழ்வில் “இலக்கியங்களின் தொன்மை என்பது கவிதையே” நவீன இலக்கியத்தையே இன்றைய இளைஞர்கள் விரும்புகின்றனர்” என தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளர் கவிஞர் பேரா குறிப்பிட்டார். பொருநை இலக்கிய வட்டத்தின் 2047-வது வார கூட்டம் 07.01.2024 ஞாயிறு அன்று நெல்லை மாநகரில் நடந்தது. வருகை தந்தோரை இளைய புரவலர் தளவாய் நாதன் வரவேற்றார். கவிஞர் பாமணி அறிமுக உரையாற்றினார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் […]

தூத்துக்குடி மாவட்டங்களில் (NASA) அமைப்பின் நிவாரண பணிகள்.. 

தூத்துக்குடி மாவட்டங்களில் கீழக்கரை வடக்குத் தெருவை சார்ந்த  (NASA- வடக்குத் தெரு சமூக நல அமைப்பு – North Street Association for Social Activities) அமைப்பினர்  நிவாரணப் பணிகளை திறம்பட நிறைவு செய்து திரும்பியுள்ளனர். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்றபட்ட துயர்களை போக்கும் வண்ணம் குழு அமைக்கப்பட்டு ,  அதன் மூலமாக ரூ.1,26,720 வரை  நிதி் திரட்டப்பட்டது. இந்த நிவாரண தொகை மூலம் நிவாரணப் பொருட்கள் அடங்கிய  மளிகை சாமான்கள் மற்றும் துணி […]

ராமேஸ்வரம், கமுதி பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு..

இராமநாதபுரம், ஜன.7- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி என்.கரிசல்குளம், பரளச்சி துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணி நாளை (08.01.24) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நீராவி, ராமசாமிபட்டி, KM கோட்டை, MM கோட்டை,  கரிசல்குளம், கோரைப் பள்ளம், TC புரம், முஸ்ட்டக்குறிச்சி, முதல்நாடு, மணக்கும், ஆசூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கமுதி உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் தாலுகா வேர்க்கோடு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!