கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழிக் கல்வி உதவித் தொகை திட்டத் தேர்வு வழிகாட்டல் -NMMS-வழங்கும் நிகழ்ச்சி 11.1.2024 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தாளாளர் சுஐபு தலைமை தாங்கினார், ரோட்டரி தலைவர் டாக்டர் கபீர் முன்னிலை வகித்தார், உறுப்பினர். செல்வநாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். நன்றியுரை. சபீக் கூறினார். பொருளாளர்.சுப்பிரமணி , ஜமாத்தார்கள் மற்றும் ஆசிரியர் பொறுப்பாளர்களுடன் 8ஆம் வகுப்பில் பயிலும் சுமார் […]
Category: கீழக்கரை செய்திகள்
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலப்பெருங்கரையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணி: ஆட்சியர் ஆய்வு..
இராமநாதபுரம், ஜன.11- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலப்பெருங்கரையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சுற்றுப்பயணத்தின்போது, பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேலப்பெருங்கரைப் பகுதியில் இரும்பு குழாய் பதிக்கும் பணியை பார்வையிட்டு பணியின் தன்மை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதைதொடர்ந்து செய்யாமங்கலம், அச்சங்குளம் பகுதியில் […]
கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய இளைஞர் தினம்..
கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியும், தேசிய மாணவர் தரை படையும் இணைந்து “தேசிய இளைஞர் தினம்” கல்லூரி அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் சுந்தரம், இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.சேக் தாவூது, இயந்திரவியல் துறைத் தலைவர் ஜெ.கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய மாணவர் தரைப்படை செயலர் ப்பி.மருதாச்சலமூர்த்தி் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜே.எபன் பர்வீன் நன்றியுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து கல்லூரியின் தேசிய தரைப்படை மாணவர்கள், சிறப்பு […]
யானை பாகருக்கு உதவிக்கரம் நீட்டிய கடையநல்லூர் எம்எல்ஏ..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மக்தூம் ஞானியார் தர்ஹாவில் இருந்த ஜெய்னி என்ற யானை சமீபத்தில் சான்றிதழ் குறைபாடு காரணமாக வனத்துறையால் மீட்கப்பட்டு காப்பகத்தில் உள்ளது. யானை பாகர் பாதுஷா என்பவர் யானை இல்லாத காரணத்தால், தான் மிகுந்த வறுமையில் உள்ளதாக கடையநல்லூர் எம்எல்ஏவிடம் மனு அளித்தார். அதை தொடர்ந்து, கடையநல்லூர் எம்எல்ஏ C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து யானை பாகர் பாதுஷாவிற்கு அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்து, யானையை மீட்க […]
கீழக்கரையில் மது மற்றும் போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் !
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் கல்லூரி வளாகத்தில் இராமநாதபுரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் முஹம்மது சதக் கல்விக் குழுமம்இணைந்து மதுபானம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ராமநாதபுரம் உதவி ஆணையாளர் (கலால்) சிவசுப்புரமணியன், ராமநாதபுரம் கோட்டா ஆய அலுவலர் (கலால்) முருகேசன் ராமநாதபுரம் மதுவிலக்கு மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ ஆகியோர் போதைப் பொருட்கள் பற்றிய தீமைகளை எடுத்து கூறினார். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சேக் […]
இராமநாதபுரம், முதுகுளத்தூரில் பொங்கல் பொருள் தொகுப்பு விநியோகப் பணி: மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு..
இராமநாதபுரம், ஜன.11- இராமநாதபுரம், முதுகுளத்தூரில் பொதுவிநியோகத் திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருள் பரிசு தொகுப்பு விநியோகப் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இராமநாதபுரம் செட்டிய தெரு, சேதுபதி நகர், மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி பாரதி நகர் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, […]
தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்..
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழக மக்கள் வரும் பொங்கல் 2024-ஐ மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க தமிழக முதலமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை […]
தென்காசி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் உட்பட இருவர் கைது..
தென்காசி மாவட்டத்தில் வீடு கட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சத்யராஜ் (வயது 39). இவர் குத்துக்கல் வலசை பஞ்சாயத்து பகுதியில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றன. இந்நிலையில் குத்துக்கல் வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டும் […]
பல்கலை இடையே செஸ் போட்டி: 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி..
இராமநாதபுரம், ஜன.11 – அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி இடையே ஆடவர் செஸ் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி 4 ஆம் இடம் பிடித்தது. அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்ககிடையேயான ஆடவர் செஸ் போட்டி பரமக்குடி அரசு கலை கல்லூரியில் நடந்தது. இதில் அழகப்பா பல்கலை இணைப்பு பெற்ற 20 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி சுற்று நிறைவில் 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு […]
ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்: கலெக்டர் துவக்கி வைத்தார்..
இராமநாதபுரம், ஜன.10 -இராமநாதபுரம் நகராட்சி 8வது வார்டு ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகுப்பை கலெக்டர் விஷ்ணு சந்திரன், முருகேசன் எம்எல்ஏ ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி தலைவர் கார்மேகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் தமீம் ராஜா, தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், பொதுவிநியோகத்திட்ட துணை பதிவாளர் கோவிந்தராஜன், […]
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி.. வீடியோ செய்தி..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (10.01.2024) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி முன்னிலையில் கொடியசைத்து தூங்கி வைத்தனர். இப்பேரணியில் மாவட்ட காவல்துறை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் ராமநாதபுரம் நகர் முழுவதும் அணிவகுப்போடு […]
கீழக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நியாய விலை கடை 1-யில் இன்று (10.01.2024) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களாக ரூ.1000/- ம், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இவற்றுடன் முழு கரும்பு கொண்ட தொகுப்பு பொருள்கள் கீழக்கரை நகர மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் திமுக நகர் செயலாளர் பஷீர் ஆகியோர் இணைந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கினர். நியாய விலை […]
தென்காசி மாவட்டத்தில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தின் கீழ் தூய்மை பணி; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு..
தென்காசி மாவட்டத்தில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊர்மேலழகியான் கிராம அரசு மேல் நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் 09.01.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் […]
சாலை ஓரம் நின்ற லாரி மீது ஆந்திர பஸ் மோதல்: ஐயப்ப பக்தர் பலி-14 பேர் காயம்..
இராமநாதபுரம், ஜன.10- கர்நாடகம் மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர், கண்டக்டர், டிரைவர் உள்பட 49 பேர் சபரிமலை, திருச்செந்தூர் சென்று விட்டு ஆந்திர பதிவெண் கொண்ட தனியார் பஸ்சில் ராமேஸ்வரத்திற்கு நேற்றிரவு வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே புல்லந்தை சர்ச் பகுதியில் வந்தபோது சாலையின் இடது ஓரம் நின்ற திருச்செங்கோடு பதிவெண் கொண்ட லாரி மீது ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இதில் பெல்லாரி கண்ணப்பா மகன் சந்தீப் 25 […]
வெள்ள நிவாரண நிதி ரூ.12.12 லட்சம் தவ்ஹீத் ஜமாத் ஒப்படைப்பு..
இராமநாதபுரம், ஜன.10- தமிழகத்தில் கடந்த 2023 டிச.16, 17, 18, 19 தேதிகளில் கனமழை பெய்தது. இதனால், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு)மாவட்டம் சார்பில் நிவாரண நிதி ரூ.12.12 லட்சம் வசூலிக்கப்பட்டது. இந்நிதியை சிவகங்கையில் நடந்த நிகழ்வின்போது . மாநிலத்தலைவர் சுலைமான், மாநில துணைத்தலைவர் பாருக், மாநில செயலர்கள் காஞ்சி சித்திக், யாசிர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர், மாவட்ட செயலர் […]
மழையினால் வீடு இழந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை… வீடியோ செய்தி..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பாம்பூர் கிராமத்தில் வசிக்கும் பத்மா என்பவரின் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த நிலையில் கனமழை பெய்ததால் வீட்டின் மேல் கூரை இடிந்து கீழே அருகில் விழுந்ததால் மயிரிழையில் உயிர்த்தப்பினார். உடனே எழுந்து சத்தமிட்டதால் அக்கம் பக்கம் உள்ள மக்கள் முதலுதவி செய்தனர். மேல் கூரை விழுந்ததில் வீட்டில் உள்ள உபயோகப் பொருள் உடைந்த சிதறி கிடந்தன . அதனைத் தொடர்ந்து கனமழை காரணமாக அதிகாரிகளுக்கு பத்திரிக்கையின் வாயிலாக தகவலை தெரிவித்தனர். […]
இராமநாதபுரத்தில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
இராமநாதபுரம், ஜன.9- வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை தொடர்ந்து பெய்தது. ராமநாதபுரம் நகரில் பல் மணி நேரம் நீடித்த கனமழையால், பேருந்து நிலையம், பாரதி நகர், கேணிக்கரை, காய்கறிமார்க்கெட் கறிக்கடை சந்து உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கறிக்கடை சந்து பகுதியில் தேங்கிய தண்ணீரால் அப்பகுதியில் […]
மண்டபம், கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதிகளில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..
இராமநாதபுரம், ஜன.9 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி, ராமேஸ்வரம் நகராட்சி, கீழக்கரை நகராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (10.01.2024) நடைபெறுகிறது. இதன்படி மண்டபம் பேரூராட்சி வார்டு 1 முதல் 18 வார்டுகளுக்கு மண்டபம் பேரூராட்சி திருமண மஹால். ராமேஸ்வரம் நகராட்சி 3, 8, 13,14, 15 வார்டுகளுக்கு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரி. கீழக்கரை நகராட்சி […]
இராமேஸ்வரத்தில் மீனவ மக்களின் கோரிக்கை ஏற்பு : போராட்டம் ஒத்திவைப்பு…
இராமநாதபுரம், ஜன.9 ராமேஸ்வரம் நகராட்சி சேராங்கோட்டை, தெற்கு கரையூர், சேதுபதி நகர் கிராம மக்களுக்கு 3 தலைமுறைக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒப்படைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார். ராமேஸ்வரம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணண், காவல் துணை கண்காணிப்பாளர் உமாதேவி, சார்பு ஆய்வாளர் ஸ்ரீராம், கடல் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்ட […]
கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கக் கோரி சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு..
கடையம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் வராமல் உள்ள 43 மகளிருக்கு உரிமை தொகை வழங்கக் கோரி சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மொத்தமாக மனு அளிக்கப்பட்டது. கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம், முதலியார்பட்டி, பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, வீராசமுத்திரம், மாலிக் நகர், சம்பன்குளம், மந்தியூர், சிவசைலம், கடையம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இருந்தும் […]
You must be logged in to post a comment.