தென்காசி மாவட்டத்தில் புதிதாக ரயில் பயனாளர்கள் சங்கம் உதயமாகிறது. இச்சங்கம் ரயில் பயனாளர்கள் நலனை மையமாக கொண்டு செயல்பட உள்ளது. அதன்படி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலன் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் பாண்டிய ராஜா தலைமையில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனை பேணும் வகையிலும், தென்காசி மாவட்ட ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும், ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய சங்கத்தினை தோற்றுவிப்பது, […]
Category: கீழக்கரை செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்; தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் கடையநல்லூரில் பேச்சு..
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். கடையநல்லூர் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வைத்து பேசினார். அப்போது மறைந்த முதல்வர் டாக்டர் கலைஞரை போலவே தமிழ்நாடு முதலமைச்சரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என குறிப்பிட்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சமத்துவபுரம் பகுதியில் திமுக மாவட்ட விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் […]
திருப்புல்லாணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உழவர் திருநாள் கொண்டாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் இல்லத்தில் உழவர் திருநாாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கேக் வெட்டி கொண்டாடினர். எஸ்டிபிஐ கட்சி மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE.உமர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் […]
தென்காசியில் 6 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சை; இணை இயக்குனர் பாராட்டு..
தென்காசியில் உயிர் காக்கும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை ஆறு மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. மருத்துவ குழுவினரை இணை இயக்குனர் நலப்பணிகள் மரு. பிரேமலதா பாராட்டினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கீழப்பாவூர் பாரதியார் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சிவன் ராஜ் (23). இவருக்கு ஞாயிற்று கிழமை அன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இரவு 7 […]
நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 142.00 அடி, கொள்ளளவு: 5430.00 மி.க.அடி, நீர் வரத்து : 560.552 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.80 அடி, கொள்ளளவு: 1060.56 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.71 அடி, கொள்ளளவு: 5482.00 மி.க.அடி, நீர் […]
நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 142.30 அடி, கொள்ளளவு: 5451.00 மி.க.அடி, நீர் வரத்து : 698.773 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 147.34 அடி, கொள்ளளவு: 1083.59 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.57 அடி, கொள்ளளவு: 5468.00 மி.க.அடி, நீர் […]
தென்காசி மாவட்டத்தில் என்எம்எம்எஸ் (NMMS) தேசிய திறனறி மாதிரி தேர்வு; சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்..
பள்ளி கல்வித்துறை, தென்காசி மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தென்காசி மாவட்ட அளவில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவ செல்வங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் இரண்டாவது இலவச மாதிரி தேர்வு தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், இலஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 640 பள்ளி மாணவச் […]
தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்; மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்..
தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி. போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்ட பொங்கல் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு […]
ஆபத்தான நிலையில் உள்ள பாலங்களுக்கு பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும்; நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கம் வலியுறுத்தல்..
நெல்லையில் ஆபத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் பாலங்களுக்கும் பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் பெய்த கனமழை வெள்ளத்தின் காரணமாக நெல்லை டவுண் வேணுவன குமாரர் கோயில் தெரு, சற்று தூரத்திலுள்ள பெரிய தெரு ஆகிய இரண்டு பாலங்களின் பாதுகாப்பு சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது. பள்ளிக்கு சென்று வரும் மாணவ மாணவியர்கள், […]
புள்ளி மான்களை வேட்டையாடிய இருவருக்கு 1 லட்சம் அபராதம்; வனத்துறை அதிரடி நடவடிக்கை..
உள்ளார் கிராமத்திற்கு மேற்கே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடிய இருவருக்கு வனத்துறையினர் ரூ 1 லட்சம் அபராதம் விதித்தனர். இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் காவல் துறையினர் ஜன. 08 செவ்வாய் கிழமை இரவு 11.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிவகிரி காந்தாரியம்மன் கோவில் அருகே வெகு நேரமாக சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றினை சோதனை செய்ததில் காரின் உள்ளே மூன்று […]
தென்காசி தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா; மருத்துவர்கள் அனைத்து பணியாளர்கள் பங்கேற்பு..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர். பிரேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஜெஸ்லின் தலைமையில், உறைவிட மருத்துவர் செல்வபாலா, பல் மருத்துவர் லதா மற்றும் மூத்த மருத்துவர்களின் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை இயக்குனர் நலப் பணிகள் […]
தென்காசி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..
தென்காசியில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இலஞ்சி ட்ரிஸ்ஸில் ஹோட்டலில் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்டத் துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, சேக்தாவூது, […]
ராமநாதபுரம் அருகே லாரி-கார் மோதல் டாக்டர் உயிரிழப்பு..
இராமநாதபுரம், ஜன.13 – ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உமா கணேஷ், டாக்டரான இவர், ராமநாதபுரம், வண்ணாங்குண்டு பகுதியில் ஜெகன்ஸ் நுரையீரல் கிளினிக் நடத்தி வந்தார். நேற்று காலை மதுரை சென்ற இவர் தனது வேலைகளை முடித்து விட்டு சொந்த காரில் நேற்றிரவு ஊர் திரும்பினார். ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கலை கல்லூரி பகுதியில் வந்தபோது சாலை நின்ற லாரி மீது கார் எதிர்பாராவிதமாக மோதியது. இதில் உமா கணேஷ் உயிரிழந்தார். மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத […]
ஊத்துமலை பகுதி மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
ஊத்துமலை கிராம பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 2,44,975 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊத்துமலை கிராமத்தில் சாந்த மரகதம் மஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் 11.01.2024 அன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு மாதமும் மனுநீதிநாள் […]
மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் பொங்கல் திருவிழா..
தி.மலை அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா ஜெயந்தி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிரகாஷ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு முன்னிலை வகித்தனர் இதில் பாரத சாரணர் இயக்கம் இளம் செஞ்சிலுவை சங்கம் தேசிய பசுமை படை அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பாக வண்ண கோலம்மிட்டு செங்கரும்பு மஞ்சள் வைத்து […]
சி.எஸ்.ஐ பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா..
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் தலைவர் கபீர் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர் திரு.பெஞ்சமின் வசீந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.சங்க செயலாளர் எபன் வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கீழக்கரை சிஎஸ்ஐ குருசேகர தலைவர் அருட்திரு.டேனியல் சுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் பற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசிக்தீன், டாக்டர் சுந்தரம், உறுப்பினர்கள் மரியதாஸ்,முப்தா , பள்ளி […]
கீழக்கரை ஏர்வாடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி போன்ற ஊர்களில் இராமநாதபுரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் பொது இடங்களில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். இதில் ராமநாதபுரம் உதவி ஆணையாளர் (கலால்) சிவசுப்புரமணியன், ராமநாதபுரம் கோட்டா ஆய அலுவலர் (கலால்) முருகேசன் , கீழக்கரை தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சேகு ஜலாலுதீன் […]
தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் அரசு அலுவலர் ஒன்றியம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா..
தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் தென்காசி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா தென்காசி மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலும், இந்தியன் வங்கி மேலாளர் வினோத்குமார் முன்னிலையிலும் விழா நடந்தது. விழாவில் அலுவலக கண்காணிப்பாளர் திருமலை குமாரசாமி, வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் வெற்றிவேலன், உதவி மேலாளர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முகம்மது […]
ராமேஸ்வரம் கடலில் இரட்டை வலை மீன்பிடி: 47 விசைப்படகுகள் மீது நடவடிக்கை…
ராமநாதபுரம், ஜன.12- ராமேஸ்வரம் மீன்பிடி தங்குதளத்தில் இருந்து 477 விசைப்படகுகள் நேற்று முன் தினம் காலை தொழிலுக்குச் சென்றன. இப்படகுகள் நேற்று அதிகாலை முதல் கரை திரும்பின. அப்படகுகளில், ராமேஸ்வரம் உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி அறிவுறுத்தல் படி மீன்வள ஆய்வாளர் ஆர்த்தீஸ்வரன், கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குமரவேல், கடல் வள மேற்பார்வையாளர் குத்தாலிங்கம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட படகுகள் தொடர்பான […]
தமிழக அரசியலில் ஜன.20க்கு பின் மிகப்பெரிய மாற்றம்: ராஜ்யசபா எம்பி தர்மர் பேச்சு..
இராமநாதபுரம், ஜன.12- முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலரும், ராஜ்ய சபா எம்பியுமான தர்மர் பேசியதாவது: ராமநாதபுரத்தில் ஜன.20ல் நடைபெற உள்ள அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் உரையாற்ற வருகை தரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு பார்த்திபனூர், சத்திரக்குடி, ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பளிக்கப்படும். அவர் இங்கு வந்து பேசிவிட்டு திரும்பும்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். […]