தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே. கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தற்போதைய தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் உயர் கல்வித்துறை இணை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் இயக்குனராக இருந்தவர் ஏ.கே. கமல் கிஷோர். இதேபோன்று தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கண்மருத்துவ சிகிச்சை முகாம்…
இன்று 27/1/2024 சங்கரா கண் மருத்துவமனையுடன் கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம், கீழக்கரையை அடுத்துள்ள கும்பிடு மதுரையில் உள்ள மகான் சேகனாப்பா தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது. தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் தலைமையில், முன்னாள் தலைவர்.டாக்டர்.ராசிக்தீன் மற்றும் தலைவர். முனைவர் கபீர் ஆகியோர் முன்னிலையில், செயலாளர். எபன் பிரவீன்குமார், முன்னாள் செயலாளர். கார்த்திக்,RK பில்டர்ஸ் கண்ணன், ரோட்டரி சங்கம் உறுப்பினர்கள் மற்றும், ஊர் முக்கிய பிரமுகர் வாஹித் மற்றும் சாதிக் ஆகியோருடன் […]
போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை; தலைமை காவலர் பொன். சிவபெருமானின் போதை விழிப்புணர்வு பாடல்..
போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை. புகை! புகை! புகை! இது மனிதனுக்கு பகை. தவறான வழியிலே நீயும் செல்கிறாய், தன்னைத்தானே அழித்து கொள்கிறாய். விளையாட்டாய் ஆரம்பித்த இந்த பழக்கம், நாளடைவில் உயிரிழப்பை ஏற்படுத்தும். போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை. பள்ளிப்படிப்பை பாதியில் விடுவாய், மூளை செயலிழந்து முட்டாளாய் அலைவாய். போதை என்பது மாயவலை, மீள முடியாமல் திணறுவாய் நாளை. போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை. -கடலூர் மாவட்டம் சிதம்பரம் […]
தென்காசி மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 75வது குடியரசு தினவிழா; நலத்திட்ட உதவிகள் மற்றும் நற்சான்றுகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜனவரி 26 அன்று நடைபெற்ற 75-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 242 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். சுதந்திரப் போராட்ட தியாகி கி. […]
கீழக்கரை கும்பிடு மதுரை பள்ளியில் குடியரசு தின விழா..
கீழக்கரை கும்பிடு மதுரை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கும்பிடுமதுரை ஜமாஅத் தலைவர் முன்னிலையில், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தில்லையேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமையாசிரியர் முகம்மது இபுராகிம் சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவி மற்றும் தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் கணித உதவி பேராசிரியை அப்ரின் ஆயிஷா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை […]
தென்காசி தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனை விருது; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநிலத்தில் சிறந்த மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில், மருத்துவ சேவை, முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதான மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய சேவைகளில் முதல் இடத்தில் சிறந்து விளங்கும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கப்பட்டது. விருதினை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றுக் கொண்டார். அப்போது இணை […]
தென்காசி தலைமை மருத்துவமனையில் இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா..
இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜெஸ்லின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும் நாட்டுப்பற்றுடனும், சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் தென்காசி மருத்துவமனை உறைவிட மருத்துவர் செல்வபாலா, குழந்தைகள் நல மூத்த மருத்துவர் […]
கீழக்கரை முஹைதீனியா பள்ளியில் குடியரசு தின விழா..
கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து டாக்டர்.ராசிக்தீன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கு MMS முகைதீன் இபுறாகீம் தலைமை தாங்கினார். விழாவிற்கு முதன்மை விருந்தினராக தாசில்தார கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க தலைவர் Dr.கபீர் சிறப்புரையாற்றினார். மேலும் ஜாஹிர் ஹூசைன் ஹாஜி, யூசுப் ஆலிம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். மாணவர்களின் கலை திகழ்ச்சிகளோடு விழா இனிதே […]
கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 75 வது குடியரசு தின விழா..
கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க உப தலைவர் எஸ் சதக் அப்துல் காதர் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்க உறுப்பினர் மக்தூம் ஈசா சிறப்புரையாற்றினார். விடுதலைப் போராட்ட வீரர்களாக மாணவர்களின் பங்களிப்பும் ,நடன நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் பள்ளித் தாளாளர் H.சிராஜுதீன் முன்னிலையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், பரிசளிப்பு தொகையும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை […]
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், தென்காசியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஊடகத்தினர் பங்கேற்று பத்திரிகையாளர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் […]
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நற்சான்று மற்றும் பரிசுகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
தென்காசி மாவட்டத்தில் 14வது தேசிய வாக்காளர் தினம் 2024 நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நற்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜன.24 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், மாவட்ட […]
கீழக்கரை வட்டாச்சியர் தலைமையில் தேசிய வாக்காளர் தின விழப்புணர்வு பேரணி !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 9.30 மணி […]
குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்..
தென்காசி ரயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள், பயணிகள் அறை, பார்சல் ஆபீஸ், மற்றும் தண்டவாள பாதைகளில் வெடிகுண்டு சோதனை மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசியில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் டி. செந்தில் குமார் உத்தரவின் பேரில், மதுரை உட்கோட்ட ரயில்வே பொறுப்பு திருநெல்வேலி துணைக் கண்காணிப்பாளர் […]
நெல்லை – தென்காசி அணைகளின் நீர்மட்ட நிலவரம்..
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 138.70 அடி, கொள்ளளவு: 5232.00 மி.க.அடி, நீர் வரத்து : 458.77 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 146.16 அடி, கொள்ளளவு: 1032.95 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.78 அடி, கொள்ளளவு: 5489.00 மி.க.அடி, நீர் […]
தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜன.24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம், பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் அனைவரும் தங்கள் முன்னேற்றத்திற்காக படிக்க வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடையலாம். […]
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (UDID) புதிதாக பெற்றுக்கொள்ளலாம்; நெல்லை மாவட்ட கலெக்டர் தகவல்..
நெல்லையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (UDID) புதிதாக பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் 17-12-2023, 18-12-2023 ஆகிய நாட்கள் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை தொலைந்து இருந்தாலும், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும் புதிதாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். 29-12-2023 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான […]
கீழப்பாவூரில் இலவச கண் பரிசோதனை முகாம்; 46 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு..
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் 60-வது இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 46 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேட்டூர் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர் குழு, பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம், ரெடி கல்வி மையம் இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புனித ஜோசப் […]
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை அருங்காட்சியகத்தில் சிறப்பு போட்டிகள்..
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதலாவதாக ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய கொடி வண்ணம் தீட்டுதல் போட்டியும், வகுப்பு மூன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேசபக்தி பாடல் போட்டியும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி துவங்கி வைத்தார். போட்டியில் கவிஞர் […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்..
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 139.15 அடி, கொள்ளளவு: 5259.00 மி.க.அடி, நீர் வரத்து : 389.22 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.98 அடி, கொள்ளளவு: 1062.52 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.83 அடி, கொள்ளளவு: 5494.00 மி.க.அடி, நீர் […]
லோக்சபா தேர்தல் ராமநாதபுரம் தொகுதியில் ராகுல் காந்தி போட்டி: மீனவர் காங். தீர்மானம்..
இராமநாதபுரம், ஜன.24 – வரும் லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ராகுல் காந்தி எம்பி போட்டியிட வேண்டும் என மீனவர் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது ராமநாதபுரம் மாவட்ட மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அகில இந்திய மீனவ காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை வைத்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், மாவட்ட ஊராட்சி துணைத் […]
You must be logged in to post a comment.