இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திருப்புல்லாணி ஒன்றிய குழு தலைவரிடம் மனு வழங்கினர். மனுவில் கூறியதாவது. 500 பிளாட் கிராமத்தில் அடிப்படை தேவையான தெரு விளக்கு சாலை வசதிகள் மற்றும் ரேஷன் கடைகள் புதிய கட்டிடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை பலமுறை முன் வைத்துள்ளோம் . ஊராட்சி மன்ற தலைவர் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் புதிதாக உயர்ரக குடிநீர் தொட்டி கட்டுமானப்பணி அமைப்பதற்கு தீவிரம் […]
Category: கீழக்கரை செய்திகள்
உயிரை பணையம் வைத்து அரசு சேவைக்காக காத்திருக்கும் கீழக்கரை மக்கள்… ஆட்சியர் மற்றும் கீழக்கரை நிர்வாகம் கவனிக்குமா??.. சமூக ஆர்வலரின் கோரிக்கை..
கீழக்கரை நகராட்சி 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டது ஆகும். ஆனால் இங்கு அரசு சேவைகளான ஆதார் கார்டு மற்றும் பிற சேவைகளுக்காக மக்கள் காத்திருக்கும் கட்டிடம் *ஹைதர் கால* கட்டிடம் என கூறும் அளவுக்கு மிகவும் பழமையாக எந்த சமயத்திலும் இடிந்து விழக்கூடிய சூழலில் உள்ளது, இந்த இடத்தில் தான் குழந்தைகள் பயிலும் பால்வாடியும் உள்ளது குறிப்பிடதக்கது. இந்த கட்டிடத்தில் மழை பெய்தால் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. பழமையான கட்டிடத்திலும் ஆதார் […]
சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருமண நிதி உதவி திட்டம் சார்பில் தாலிக்குத் தங்கம் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் 394 பயனாளிகளுக்கு 3152 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.1.53 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவித் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா […]
கடையம் ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன் கடைகள் வேண்டும்; மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைத்திட வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன், தமிழக உணவு (ம) உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராஜாங்கபுரம், வாகைக்குளம், பாப்பான்குளம், பெரியத்தெரு, […]
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மக்களின் குறைகள் மீது விரைவில் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் உறுதி..
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். பின்பு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பொதுமக்கள் குறைகளின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தை அறிவித்து அதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இனி ஒவ்வொரு […]
திருப்புல்லாணி வேளாண் துறை சார்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடல் !
இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் மாநில விரிவாக்க திட்டம் இணைந்து சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுதல் என்ற தலைப்பில் சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகளை அழைத்து வரப்பட்டு விவசாயிகளுக்கு சமுதாய அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் கலைச் செல்வன் தலைமை வகித்து பேசுகையில் : விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைப் பொருட்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் சேதத்தினை தவிர்க்க, பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை […]
தவறவிட்ட செல்போனை முப்பது நிமிடத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை..
கடையநல்லூர் பகுதியில் தவறவிட்ட செல்போனை 30 நிமிடத்தில் காவல்துறையினர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் துரைராஜ். இவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் கடையநல்லூர் வந்த போது வழியில் அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது தொலைந்து விட்டதாகவும், தொலைந்த செல்போனை மீட்டுத் தருமாறும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜா […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை நிலவரம்..
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 135.65 அடி, கொள்ளளவு: 5049.00, மி.க.அடி, நீர் வரத்து : 273.241 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 144.03 அடி, கொள்ளளவு: 1001.10 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 116.48 அடி, கொள்ளளவு: 5360.04 மி.க.அடி, நீர் […]
நெல்லை இராதாபுரம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; பிப் 01 இன்று துவங்குகிறது..
நெல்லையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் பிப். 01 இன்று துவங்கி பிப். 02 நாளை வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, மக்களைத் தேடி பல்வேறு அரசு திட்டங்கள் முறையாக சென்றடைவதை உறுதிசெய்ய அரசுத் துறை அலுவலர்கள் […]
சிவகிரி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு..
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, 31-01-2024 புதன்கிழமை நடைமுறைக்கு வந்தது. உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற […]
மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் மீட்பு; உதவிடும் பணியில் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர்..
தென்காசி பசியில்லா தமிழகம் அமைப்பினர் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு உரிய ஏற்பாடுகளை செய்து, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர் மீட்டு அவருக்கு உரிய முதலுதவி செய்து பாதுகாப்பான தங்குமிடத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இருப்பதாகவும், குடிகாரர்களால் அந்த […]
கீழக்கரை சட்ட விழிப்புணர்வு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு !
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் புதிய திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு சார்பில் நகர் செயலாளர் தாஜுல் அமீன் மனு வழங்கினார். அதில் கூறியதாவது கீழக்கரையில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருக்கின்றன கீழக்கரை தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் இருக்கின்றன தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் […]
தேசிய பேரிடர் மீட்பு தினத்தையொட்டி செய்யது ஹமீதா கலைக்கல்லூரியில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இரத்த தானமுகாம்..
கீழ்க்கரை செய்யது ஹமீதா கலைக்கல்லூரியில் 31/1/2024 அன்று காலை 10:00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை NCC,YRC, SHASC- Rotaract ஆகியோருடன் கீழக்கரை ரோட்டரி கிளப்பும் இணைந்து நடத்தியது. இதில் சதக் டிரஸ்ட் இயக்குனர் S.M.A.J.ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லாஹ் தலைமையேற்றார். S.பழனிக்குமார் தாசில்தார் மற்றும் Dr.ராசிக்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர். Dr.கபீர், செயலாளர்.Er. எபன்,செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக மாவட்ட சேர்மன், Dr.S.சுந்தரம், செயலாளர்.m.ரமேஷ்., ரோட்டராக்ட் தலைவர். முகம்மது சஃபி […]
கீழக்கரை வட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் திட்டத்தின் கீழ் ஆய்வு !
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் புதிய திட்டத்தினை அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் திட்டத்தின் துவக்கமாக இன்று 31.01.2024 காலை 9:00 மணி முதல் 01.02.2024 காலை 9:00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முகாமிட்டு அரசு துறை அலுவலகங்கள் ஆய்வு செய்தல் மற்றும் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு சென்று வேளாண் விரிவாக்க மையத்தின் இணையதளத்தில் உபகரணங்கள் […]
கீழக்கரை நகராட்சியில் பொதுமக்கள் மனு ! போதுமான இட வசதி இல்லாததால் தள்ளுமுள்ளு !!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ள, “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்னும் புதிய திட்டத்தின் கீழ் மனுக்கள் வழங்குவதற்கு நகராட்சி அலுவலகத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்குவதற்கும் நீண்ட நேரம் காத்திருந்தனர். நகராட்சி அலுவலகத்தில் போதுமான இட வசதி இல்லாமல் மிகுந்த நெருக்கடியில் பொதுமக்கள் காணப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் நகராட்சி அலுவலகத்திற்கு வரும்பொழுது போதுமான வசதி இல்லாத காரணத்தினாலும் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு […]
மகாத்மா காந்தி பற்றிய ஆளுநரின் சர்ச்சை பேச்சு; காந்திய அமைப்புகள் கடும் கண்டனம்; ஆளுநர் உரையை திரும்ப பெற வலியுறுத்தல்..
ஆளுநர் ஆர்.என். ரவியின் மகாத்மா காந்தி குறித்த சர்ச்சை பேச்சுக்கு காந்தியவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநர் தனது உரையை திரும்பப்பெற வேண்டும் என காந்திய அமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் செங்கோட்டை வி. விவேகானந்தன், N.M பெருமாள் I.A.S தென்காசி, பூ. திருமாறன் சமூக நல ஆர்வலர், வெங்கடாம்பட்டி, Dr. G.S. விஜயலட்சுமி சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மின்நகர், Dr. தி. ஏகலைவன் பல் மருத்துவர், […]
கீழக்கரையில் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 80 ஆவது ஆண்டு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (முள்ளுவாடி) தாளாளர் அனீஸ் அஹமது தலைமையில் 80 வது ஆண்டு விழா நடைபெற்றது. உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் ஹமீது ஃபாரூக், அகமது ரிஃபாய், சுலைமான், ஹமீது பைசல், தைக்கா அப்துல் கயூம் மற்றும் சிராஜ், ஆதம் சபீர், அஜ்ஹர், யூசுப் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஜவஹர் பாரூக் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக செய்யத் ஹமீதா கலை & மற்றும் அறிவியல் கல்லூரி […]
தென்காசியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்..
தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வலம் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த […]
கீழக்கரையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.விஜயகுமார் தலைமையில் உணவக கடைகளில் ஆய்வு நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 12 உணவாக கடைகளுக்கும் பள்ளி அருகே புகையிலை பீடி சிகரெட் போன்ற பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி […]
கீழக்கரையில் உங்களை தேடி, உங்கள் ஊரில் புதிய திட்டம் ! மாவட்ட ஆட்சியர் மக்களை நேரில் சந்திப்பு !!
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களை தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் படிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், “உங்களை தேடி உங்கள் ஊரில்” […]