தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி கூறி வந்துள்ளார். […]
Category: கீழக்கரை செய்திகள்
தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி; நகர்மன்ற தலைவர் சாதிர் பங்கேற்பு..
தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதில் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் மற்றும் துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா ஆகியோருடன் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்காசி நகர தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் தலைமையில் நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு […]
திருப்புல்லாணியில் வேளாண்மை துறையின் தொழில்நுட்ப வேளாண்மை முகாம் !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வேளாண்மை துறை சார்பில் சேதுக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பஞ்சதாங்கி கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப வேளாண்மை முகாம் திட்டத்தின் கீழ்பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) சுப்ரமணியன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில் நுட்பங்களான ரகம் தேர்வு செய்தல், உயிர் உர விதை நேர்த்தி, பூஞ்சான விதை நேர்த்தி செய்தல், மற்றும் கலை நிர்வாகம் பயிர் […]
வடகரையில் கல்வி மேதை சாகுல் ஹமீது மிஸ்பாஹி படிப்பகம் திறப்பு விழா; சிறப்பு அழைப்பாளராக செங்கோட்டை நூலகர் இராமசாமி பங்கேற்பு..
வடகரையில் கல்வி மேதை சாகுல் ஹமீது மிஸ்பாஹி படிப்பகம் திறப்பு விழா; சிறப்பு அழைப்பாளராக செங்கோட்டை நூலகர் இராமசாமி பங்கேற்பு.. தென்காசி மாவட்டம் வடகரையில் எஸ்டிபிஐ கட்சியின் தீ.ப. கிளை சார்பில் அரசுபோட்டி தேர்வர்களின் வசதிக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும், கல்விக்காக அரும்பாடுபட்ட வடகரை கல்வி மேதை சாகுல்ஹமீது மிஸ்பாஹி நினைவாக படிப்பகம் திறக்கப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக செங்கோட்டை நூலகர் இராமசாமி கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தார். இந்த படிப்பகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் […]
சிறை கைதிகள் படிக்க இலவசமாக புத்தகங்கள் வழங்கிய செங்கோட்டை நூலக புரவலர்; வாசகர் வட்டத்தினர் பாராட்டு..
சிறை கைதிகள் படிப்பதற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கிய செங்கோட்டை நூலக புரவலர்; வாசகர் வட்டத்தினர் பாராட்டு.. செங்கோட்டை நூலக புரவலர் அகஸ்டியன் சிறை கைதிகள் படிப்பதற்கு 154 புத்தகங்களை இலவசமாக வழங்கினார். நெல்லை புத்தகக் கண்காட்சியில் சிறை கைதிகள் படிப்பதற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கும் பெட்டியில், செங்கோட்டை நூலக புரவலர் மற்றும் சமூக நலத்துறை கண்காணிப்பாளருமான ஸ்ரீஅகஸ்டியன் தனது மகளுடன் சென்று ரூ. 14,500 மதிப்பிலான 154 புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வழங்கினார். சிறை […]
சுரண்டை காமராஜர் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம்; சீருடைகள் வழங்கல்
சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கல்.. சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 201 சார்பில் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறு சேமிப்பு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் […]
தென்காசி தலைமை மருத்துவ மனையில் குடற்புழு நீக்கத்திற்கு மாத்திரைகள் வழங்கும் முகாம்..
தென்காசியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடந்தது. இம்முகாமினை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தொடங்கி வைத்து குடல் புழுக்களின் தாக்கம் பற்றியும் அதன் பின்விளைவு பற்றியும் எடுத்துக் கூறி குடற்புழு நீக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வதின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் […]
கூட்டுறவு பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடி; தென்காசி கலெக்டர் திறந்து வைத்தார்..
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சி பகுதியில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடியை (சூப்பர் மார்க்கெட்) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் திறந்து வைத்தார். தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடியை (சூப்பர் மார்க்கெட்) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், திறந்து வைத்து பார்வையிட்டு தென்காசி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் தென்றல் தேங்காய் எண்ணெய், வசந்தம் பினாயில் ஆகியவற்றின் […]
தென்காசி நகராட்சி பகுதிகளில் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்..
தென்காசி நகராட்சி பகுதிகளில் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்.. தென்காசி நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி 20வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலரும், தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவருமான M.A. ரஃபீக் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார். தென்காசி நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறி நாய்க்கடியினால் ஏற்படும் பாதிப்பால் பெரியவர்கள், பெண்கள் குழந்தைகள் […]
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சுரண்டை பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.. தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சுரண்டை பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிலை 1 கனகவல்லி தலைமை வகித்து டிராக்டர் மற்றும் பின்பகுதியில் எச்சரிக்கை விளக்கு பொறுத்தாத வாகனங்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிதல் […]
சங்கரன் கோவிலுக்கு ஆலங்குளம் சுரண்டை வழியாக புதிய ரயில் பாதை; மீண்டும் வலுப்பெறும் மக்கள் கோரிக்கை..
திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம் சுரண்டை வழியாக சங்கரன் கோவிலுக்கு புதிய ரயில் பாதை; மீண்டும் வலுக்கும் மக்கள் கோரிக்கை.. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு மீண்டும் திருநெல்வேலியில் இருந்து சங்கரன் கோவிலை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழும்ப துவங்கியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைத்திட வேண்டும் […]
முதலியார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்..
முதலியார்பட்டி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி; வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்.. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய எழுத்தறிவு திட்டம் மூலம் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப்பேசினார். […]
கீழப்பாவூரில் ஆதார் சிறப்பு திருத்த முகாம்; பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்..
கீழப்பாவூரில் ஆதார் சிறப்பு திருத்த முகாம்; பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.. தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. குருசாமி கோவில் திருமண மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் பொருளாளர் பரமசிவம், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் ஜேக்கப் சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க […]
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்; இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்பு..
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்; இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்பு.. தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தென்காசியில் மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், ஆளுநரின் அரசியல் அத்துமீறல்கள் மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் பாரபட்சத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் […]
தென்காசி தலைமை மருத்துவமனையில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு..
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் ஏற்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் நாள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு […]
தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி; கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்..
தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி; கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழியினை 09.02.2024 அன்று அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியின் விவரம் பின்வருமாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் […]
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர்..
தென்காசி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு 55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 3015 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55 கோடியே 63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். தமிழ்நாடு இளைஞர் […]
கடையநல்லூரில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து..
கடையநல்லூரில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து.. உலக சாதனை படைத்த கடையநல்லூர் மாணவி ஷப்ரினுக்கு பாராட்டு விழா மசூது தைக்கா பள்ளியில் நடந்தது. இதில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவி ஷப்ரினை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மசூது தைக்கா மேல் நிலைப் பள்ளியைச் சார்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மை. ஷப்ரின். வேதியியல் […]
இளைஞர்களின் அரசு பணி கனவை நனவாக்க அறிவுசார் மையத்தை அமைத்த ஆற்றல்மிகு அரசு; தென்காசி மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி..
இளைஞர்களின் அரசு பணி கனவை நனவாக்க அறிவுசார் மையத்தை அமைத்த ஆற்றல்மிகு அரசு; தென்காசி மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி.. “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு” (குறள் 396,) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க மணலின் கண் உள்ள கேணியிலே ஆழமாகத் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும். அது போல மக்கள் நூல்களைக் கற்கக் கற்க அறிவு வளரும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக 05.01.2024 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் […]
அகில இந்திய துணைத் தேர்வு; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு..
அகில இந்திய துணைத் தேர்வு; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு.. அகில இந்திய துணைத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தேர்வு 2024- ல் […]