தென்காசி மாவட்டத்தில் நேர்மை மிக்க தம்பதியர்; மாவட்ட எஸ்.பி. பரிசுகள் வழங்கி பாராட்டு..

சாலையோரம் கிடந்த தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை நிறைந்த தம்பதியர்; தென்காசி மாவட்ட எஸ்.பி. பாராட்டு.. தென்காசி மாவட்டத்தில் சாலையோரம் கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை நிறைந்த தம்பதியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் 15.02.2024 அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள கடைக்குச் […]

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்..

ராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் கிராமத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம். ராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் கிராமத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக புத்தூர் தளவாய்புரம் மற்றும் இனாம் கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவில் செல்லும் […]

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெருச்சாளி தொல்லை; பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்துவதாக பயணிகள் வேதனை

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெருச்சாளி தொல்லை; பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்துவதாக பயணிகள் வேதனை மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தென் மாவட்டங்களுக்கு பயன்படும் பகல் நேர ரயிலாகும். இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் முறையான பராமரிப்பு குறைபாடு காரணமாக ரயில் பெட்டியினுள் பெருச்சாளிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் ரயில் பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்தி இருப்பதாக ரயில் பயணிகள் குற்றம் […]

நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” எனும் தலைப்பில் ஓவியப் போட்டி..

நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” எனும் தலைப்பில் ஓவியப் போட்டி.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு ஓவியப் போட்டி நடந்தது. நெல்லை அரசு அருங்காட்சியகமும், சென்னை எப்சிபா அறக்கட்டளை மற்றும் ஹெப்சிபா பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு “தீமையை எதிர்த்து போராடு” என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை நடத்தினர். இப்போட்டியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தொடங்கி வைத்தார். எல்.கே.ஜி படிக்கும் மாணவர்கள் முதல் 12 […]

தென்காசி மாவட்டத்தில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; 206 பேருக்கு பணி நியமனை ஆணை..

தென்காசி மாவட்ட நிர்வாகம், வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி, ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி, ஸ்ரீ […]

சங்கரன்கோவிலில் புதிய தீயணைப்பு நிலையம்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

சங்கரன்கோவில் பகுதியில் புதிய தீயணைப்பு மீட்பு பணி நிலையம்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரூ.99 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் பிப்.17 அன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து […]

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் திறப்பு விழா..

நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.. திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி […]

கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி மாணவர்களுக்கான இண்டராக்ட் கிளப் துவக்க விழா..

கீழக்கரை,பிப்.20- கீழக்கரை முஹைத்தீனிய்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி மாணவர்களுக்கான இண்டராக்ட் கிளப் துவக்க விழாவில்,கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் கீழை கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்வியாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் முகமது அப்துல் காதர் மற்றும் ரோட்டரி சேர்மன். சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.பள்ளி கல்வி குழு தலைவர் முகைதீன் இபுராகிம் தலைமை தாங்கினார், […]

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு !

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதுடன் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மூன்றாம் தேதி மீன்பிடிக்க சென்று […]

கீழக்கரையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமை தாங்கினார் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்ஷா முன்னிலை வகித்தார். கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது வரவேற்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் […]

நாய் முகமூடி அணிந்து நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் வார்டு கவுன்சிலர்; தென்காசியில் பரபரப்பு..

நாய் முகமூடி அணிந்து கொண்டு நகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற வார்டு கவுன்சிலர்; தென்காசியில் பரபரப்பு.. தென்காசியில் வெறிநாய் தொந்தரவை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாய் முகமூடி அணிந்தும், நாய்போன்று குரைத்து கொண்டும் நகர்மன்ற தலைவரிடம் கவுன்சிலர் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நகர்மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். […]

இரட்டைகுளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.. தென்காசி மாவட்டம் இரட்டை குளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி சுரண்டையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் துணைத் தலைவர் கண்ணையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டை குளம் உபரி நீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் சுரண்டையின் கீழ் பகுதியில் இருந்து ஊத்துமலை வரை உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் […]

தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1886 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 77 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 16.02.2024 அன்று நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” முகாமில் 1886 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 77 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட […]

கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் !

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வேளாண்மைதுறை சார்பில் கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ்நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி மூன்றாம் கட்ட பயிற்சி நடத்தப்பட்டது. பண்ணை பள்ளி பயிற்சிக்கு சுப்ரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) விருதுநகர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதான் அவசியம் ,உழவியல் முறைகள் , கோடையில் ஆழமாக உழவு செய்வதால் , மண்ணிற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்கள் நூற்புழுக்கள் […]

கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அமைச்சரிடம் கோரிக்கை..

சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அமைச்சரிடம் கோரிக்கை.. தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இது குறித்து தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் நேரில் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டம், சாம்பவர் […]

தென்காசியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் மற்றும் எஸ்.பி. துவக்கி வைத்தனர்..

தென்காசி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிறைவு தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சி மற்றும் ஹெல்மெட் அணிந்து பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது. 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிறைவு தினத்தை முன்னிட்டு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம், தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல் மற்றும் ஸ்பீடு டீம் குரூப் ஆஃப் கம்பெனிகள் இணைந்து நடத்திய […]

கீழக்கரை அருகே சின்னாண்டிவலசை கிராமத்தில்  மக்கள் தொடர்பு திட்ட முகாம் !

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் சின்னாண்டிவலசை கிராமத்தில்  வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாளர்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் மனுக்கள் பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவு றுத்தியதுடன், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி போகையில் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்க அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை மக்களிடம் கொண்டு செல்லும் […]

திருப்புல்லாணியில் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்புல்லாணியில் நம்ம ஊர் திருப்புல்லாணி குழு மற்றும் ஐ சி ஐ சி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து பாலசுப்பிரமணிய சாமி கோயில் பகுதியில் ரத்தினகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராஜபாரதசாரதி ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 600 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி சிறப்பு அழைப்பதறாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும் நிழல் […]

கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க துவக்க விழா !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க உறுப்பினர் உமர்தீன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயா உஷாராணி இருவரும் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும் மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்க ஆணையருமான இரா .பிரின்ஸ் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்க செயலாளர் சிவா. செல்வராஜ் […]

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் உதவி உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் உதவி உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்.. தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 12.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!