திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கையூட்டு; இருவரை சஸ்பெண்ட் செய்து மதுரை மாவட்ட நலப்பணி இணை இயக்குனர் அதிரடி நடவடிக்கை.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில், கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட நலப் பணி இணை இயக்குனர் செல்வராஜ், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், பிணவறையில் உடற்கூறு […]
Category: கீழக்கரை செய்திகள்
இராஜபாளையம் தொகுதியில் அரசு பள்ளிகளுக்கு 10000 நோட்டு புத்தகங்கள்; சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 71 வது பிறந்த முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு 10000 நோட்டு புத்தகங்கள்; சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். விருதுநகர் மாவட்டடம் இராஜபாளையத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் இராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளி & எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்களை […]
தேர்தலுக்காக எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை பாடி வருகிறார் மோடி; திருநாவுக்கரசு எம்.பி.பேட்டி..
எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை தேர்தலுக்காக பாடி வருகிறார் மோடி. ஓட்டுக்காக அவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவில் கூட்டணியில் இல்லை என்பதால் அவர்கள் இரண்டு பேரின் புகழைப்பாடி வாக்குகளை சேகரிக்க பார்க்கிறார் என திருநாவுக்கரசு எம்.பி. கூறியுள்ளார். இது குறித்த திருநாவுக்கரசு எம்.பி அளித்த பேட்டியில், தற்போது பொது மேலாளர் தலைமையில் ரயில்வே ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். இதன் மூலம் எம்பிக்கள் தங்களது தொகுதி சம்பந்தமான ரயில்வே கோரிக்கைகளை முன்வைக்க முடிகிறது. […]
மதுரை ரயில்வே மைதானம் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை; மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தகவல்..
மதுரை ரயில்வே மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப் படவில்லை என தெற்கு ரயில்வே மேலாளர் திட்ட வட்டமாக தெரிவித்து உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் ரயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் மதுரை ரயில்வே நிலைய அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், […]
தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்; தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி..
தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்; தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி.. சென்னை – போடி ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும், பொது மக்கள் நலன் கருதி மதுரை – போடி பாசஞ்ஞ்சர் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். திண்டுக்கல் – லோயர் கேம்ப் வரை 123 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை […]
அரசு பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் அசத்தல்..
தேசிய அறிவியல் தினத்தை ஒட்டியும், முதன் முதலில் தமிழகத்தைச் சார்ந்த அறிவியல் விஞ்ஞானி சர் .சி .வி . ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்த தினத்தை ஒட்டி, அரசு ஊராட்சி பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் அசத்தல்; சர். சி .வி . ராமன் உருவ முகமூடி அணிந்து மாணவ, மாணவிகள் பங்கேற்பு.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ. மாணவிகள் தேசிய அறிவியல் தினத்தை […]
கீழக்கரையில் கூடுதல் அரசு தாலுகா மருத்துவமனை கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ! மும்மத குருமார்கள் கூட்டுப் பிரார்த்தனை !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மும்மத குருமார்கள் பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை மருத்துவர் ஜவாஹிர் உசேன் வரவேற்புரை […]
தென்காசி மாவட்டத்தில் ரூ.12 கோடியே 34 இலட்சம் செலவில் புதிய மருத்துவ கட்டடங்கள்; அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்..
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக் கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தென்காசி மாவட்டத்தில் ரூ.12 கோடியே 34 இலட்சம் செலவில் புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் புதிய மருத்துவ உபகரண மையங்களை திறந்து வைத்து ரூ.10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக் கிணங்க 28.02.2024 அன்று தென்காசி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவ மனை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை […]
ஆதரவற்றோருக்கு உணவளித்து வரும் நெல்லை பாலுவிற்கு சிறப்பு விருது..
மதுரையில் ஆதரவற்றோருக்கு அட்சயப் பாத்திரம் மூலம் உணவு வழங்கும் நெல்லை பாலுவிற்கு சிறப்பு விருது; நடிகை ஹன்சிகா வழங்கினார் மதுரையில் அட்சய பாத்திரம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதினை பிரபல நடிகை ஹன்சிகா வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரை ஹோட்டல் மேரியாட் அரங்கில் நடைபெற்றது. டைம்ஸ் ஆப் இந்தியா மூலம் தேர்வு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரபல நடிகையும், சமூக சேவகியுமான […]
பிரபல நகைச் சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழா; சத்தியப் பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கல்..
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழா; சத்தியப்பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கல்.. பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழாவிற்கான திருமண அழைப்பிதழ் நமது சத்தியப்பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபர் காளமேகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மதுரை தொடர்வோம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கார்த்திக், பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பிரியங்கா தம்பதியின் மகள் இந்திரஜா ஆகியோருக்கு மதுரை நாகமலை […]
கீழக்கரையில் சைபர் பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியல் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சுரேஷ் கண்ணன் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மணி பாரதி கருணாகரன் கலந்து கொண்டு கூறுகையில் . இன்றைய காலகட்டத்தில் மொபைல் மூலம் பல பிரச்சனைகளை இளைஞர்கள் பள்ளி பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர் .மொபைல் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது […]
மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடம் திறப்பு..
மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடம் திறப்பு.. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் 29 கோடி ரூபாய் செலவில், அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை, அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை […]
சாம்பவர் வடகரையில் தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு பேரணி..
சாம்பவர் வடகரை பகுதியில் தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்.சி.வி.ராமன் எனும் இந்திய அறிவியல் அறிஞரை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அறிவியல் கருத்துகளை மக்களிடையே பரப்புவது, அறிவியல் செயல்பாடுகள், கண்டு பிடிப்புகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவது, புதிய தொழில் நுட்பங்களைச் செயல்படுத்த வைப்பது போன்றவை இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு […]
மேலப்பாளையம் 50வது வார்டு பகுதியில் புதிய அங்கன்வாடி அடிக்கல் நாட்டு விழா..
மேலப்பாளையம் 50வது வார்டில் புதிய அங்கன்வாடி அடிக்கல் நாட்டு விழா நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 50வது வார்டுக்குட்பட்ட பூங்கா நகர், சித்திக் நகர், பாத்திமா நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாளை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய அங்கன் வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா 28.02.2024 அன்று பூங்கா நகரில் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரசூல்மைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் அடிக்கல் நாட்டி […]
தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; அமமுக டிடிவி தினகரன் கோரிக்கை..
தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; டிடிவி தினகரன் அரசுக்கு கோரிக்கை.. தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், நியாய விலைக் கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சியின் காரணமாக […]
அம்மா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்; நலத் திட்ட உதவி டோக்கன் வழங்கப்படாததால் முதியவர்கள் வேதனை..
ராஜபாளையம் விருதுநகர் கிழக்கு ஒன்றியம் சார்பில் அம்மா 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்; நலத்திட்ட உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்படாததால் முதியவர்கள் வேதனை.. விருதுநகர் மாவட்டம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என கூட்டத்தினை ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகள் தெரிவித்திருந்த நிலையில், கூட்டம் முடிந்த பிறகும் கூட […]
இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளிக்கூட கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..
சோழவந்தான் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்பட்டு வருகின்றனர். பள்ளியின் கட்டிடம் பழுதடைந்த நிலையில் கட்டிட சுவர்கள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதும் மழைக்காலங்களில் ஈரப்பதம் […]
திருவேடகம் பகுதியில் ஆசிரியர்கள் மேம்பாட்டு கருத்தரங்கு..
திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு.. திருவேடகம் மேற்கு விவேகானந்தர் கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு’ நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் ஜூனியர் சேம்பர் பயிற்சியாளர் ரங்கசாமி “சமுதாய வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், […]
தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 15 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் ரூ.15 கோடியே 84 இலட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ரூ.15 கோடியே 84 இலட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை 27.02.2024 அன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் கடைக்கோடியில் உள்ள தென்காசி மாவட்டத்திற்கென பல்வேறு திட்டப் பணிகளை […]
உயிருள்ள வரை மறக்க மாட்டோம்; மனம் மகிழ்ந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட தம்பதியினர்..
உயிருள்ள வரை மறக்க மாட்டோம்; மனம் மகிழ்ந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட தம்பதியினர்.. “உயிருள்ள வரை மறக்க மாட்டோம்” என மனம் மகிழ்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு தென்காசி மாவட்ட தம்பதியினர் நன்றி தெரிவித்தனர். உரிய நேரத்தில் நூற்றுக் கணக்கான உயிர்களை காப்பாற்றிய தென்காசி மாவட்ட தம்பதிகளுக்கு பொன்னாடை அணிவித்து ரூபாய் 5 இலட்சம் வெகுமதி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார். இது குறித்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சண்முகையா வடக்குத்தியாள் தம்பதியினர் […]