குற்றாலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு..

தென்மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்து உள்ளார். இது பற்றிய முழுமையான வானிலை அறிவிப்பில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், ஆகிய 4 தாலுகாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஆந்திரா ஒரிசா ஒட்டிய வங்க கடல் […]

தொண்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பாய்மரப் படகுப் போட்டி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டியில் உள்ள மகாசக்திபுரம் பகுதியில், அருள்மிகு கடல் சூழ்ந்த மாரியம்மன் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா மற்றும் கங்காதேவி பொங்கல் விழாவை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி 16 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பகுதியில் நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 25 படகுகள் பங்கேற்றன. மதியம் 2 மணிக்குத் தொடங்கிய போட்டி மாலை வரை நீடித்தது. போட்டியின் முடிவில், முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களுக்கு […]

பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்: விவசாயிகள் குற்றச்சாட்டு.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா புல்லந்தை கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் பூர்வீக விவசாய குடிகளாக இருந்து வருகிறார்கள் . கிராமத்தை சுற்றிலும் சுமார் 300 ஏக்கர் நெல் விவசாயம் செய்ததில் பருவமழை தவறி பெய்த காரணத்தினால் கடந்த 2023 24 மற்றும் 202425 25 ஆம் ஆண்டு நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்நிலையில் இவர்கள் பயிர் காப்பீடு செய்ததால் அதற்கான காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டது. இது அப்பகுதி விவசாயிகள் பெரும் அதிர்ச்சியை […]

கொலை வழக்கு குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் சிறை..

வாசுதேவ நல்லூரில் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அவரின் மனைவியான மகேஸ்வரி, மற்றும் பசும்பொன் தெருவை சேர்ந்த பொன்னையா என்பவர் மகன் மாரியப்பன் @ மாரிசாமி (70), இல்லத்துப் பிள்ளைமார் […]

கீழக்கரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை .!

 பக்ரீத் பண்டிகை தியாகப் திருநாள் கொண்டாட்டம். ! இஸ்லாமியர்கள் இறைவனை வணங்கி ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.!! ஹஜ் பெருநாள் அல்லது தியாகத் திருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. வசதியுள்ள முஸ்லிம்கள், ‘ஹஜ்’ செய்வது என்பது, இஸ்லாத்தின் […]

காவலர்களுக்கு கீழை நியூஸ் பாராட்டு..

விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு தடுப்பை முறைப்படுத்திய தென்காசி மாவட்ட காவல் துறையினரை கீழை நியூஸ் செய்தி நிறுவனம் பாராட்டுகிறது. தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில், (இ.விலக்கு ரவுண்டானா அருகில்) வைக்கப்பட்ட பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சாலையில் விழுந்து காணப்படுகிறது என்றும், விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கீழை நியூஸில் 06.06.2025 அன்று செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி சமூக ஆர்வலரால் தென்காசி மாவட்ட காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு […]

தென்காசி இ.விலக்கு பகுதியில் ஆபத்தான நிலையில் பேரிகார்டு..

தென்காசி இ.விலக்கு பகுதியில் விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சாய்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இ.விலக்கு ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு சாலையில் சாய்ந்து விபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. தென்காசி பகுதியில் இ.விலக்கு சாலை அதிக போக்குவரத்து நிறைந்த முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக அதிகமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் […]

தென்காசி மாவட்டத்தில் (ஜூன்-04) மின்தடை..

திருநெல்வேலி கிராமப்புற கோட்டம் மற்றும் தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஊத்து மலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஊத்து மலை, கீழக்கலங்கல், குறிஞ்சான் குளம், மேல மருதப்பபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலி யூத்து, கல்லத்திக்குளம், […]

வீரவநல்லூர் நூலகத்தில் பாராட்டு விழா..

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் கிழக்கு சுழற்கழகம் இணைந்து +2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வாசகர் வட்ட தலைவர் ஆதம் இல்யாஸ் தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். இசக்கி சரவணன், அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுழற்கழக தலைவர் நவமணி எழுச்சி உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். சுழற் கழக செயலாளர் (தேர்வு) பரமசிவன் […]

ஊரணியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கிராமத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தில், ஊரணியில் மூழ்கி ஒன்பது வயது ரோஷினி மற்றும் பதினொரு வயது பிரசன்னியா ஆகிய இரு சிறுமிகள் உயிரிழந்தனர். அருகருகே உள்ள வீடுகளில் வசிக்கும் இந்த இரண்டு சிறுமிகளும் குளிக்கச் சென்று வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களைத் தேடத் தொடங்கினர். ஊரணியின் கரையில் குளிப்பதற்கான பொருட்கள் (வாளி, துண்டு, சோப்பு டப்பா, செருப்பு) கண்டெடுக்கப்பட்டதால், ஊரணிக்குள் தேடுதல் வேட்டை […]

என் மனம் கொண்டான் மற்றும் கோரவள்ளி கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்.!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரவள்ளி மற்றும் என் மனம் கொண்டான் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை என்ற திட்டத்தினை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார் . இம்முகாம்  வேளாண்மை உதவி இயக்குனர் , தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா வரவேற்புரை வழங்கினார். உழவரைத் தேடி வேளாண்மை என்ற பெயருக்கு ஏற்ப அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அந்தந்த கிராமங்களில் மாதத்தின் இரண்டாம் […]

வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய 7 பேர்கள் துணை வட்டாட்சியராக பதவி உயர்வு..

தென்காசி மாவட்டத்தில் 7 வருவாய் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் பதவி உயர்வுடன் துணை வட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, தென்காசியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் ருக்மணி கோசலை ராணி வீரகேரளம் […]

திருவாடானை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் இருவர் காயம்.!

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷா,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சென்று மீண்டும் தேவகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னகீரமங்கலம் அருகே உள்ள வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் (43) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷா ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவ்வழியே வந்த இளைஞர்கள் காரில் […]

திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..!

திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ‘பனிச்சகுடி’ கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் அருள்மிகு கருப்பன் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் திருவிழாவை ஒட்டி பரபரப்பு நிலவி வருகிறது. கிராமத்தில் உள்ள 18 குடும்பங்களில், 7 குடும்பத்தினரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டப்பட்டுள்ள நிலையில், புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு […]

திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!

திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் முக்கிய சந்திப்புகளான பெரிய கோவில் மற்றும் நான்கு ரோடு சந்திப்புச் சாலைகளில் முகூர்த்த நாளான இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, முகூர்த்த நாட்களில் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..!

பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை: விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..! மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காததால், இந்த ஆட்சியராவது எங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஒன்று திரண்டு வந்த மீனவ மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் […]

வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை.! பொதுமக்கள் குற்றச்சாட்டு.!!

வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்..!     ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர். ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் நிர்வாகம் திடீரென […]

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளைகளின் சார்பாக ஒன்றிய அரசின் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாவட்டத் தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், புளியங்குடி பிலால் வடகரை சையது அலி, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாத் […]

போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்…

‘போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்… ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி தாலுகா பெருநாழியில் செயல்பட்டு வரும் சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கம் (பதிவு எண் – 137/2021) கல்விச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இன்று (மே 24, 2025) நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய தலைவராக K. பாலமுருகன், செயலாளராக P. முத்துக்குமார், மற்றும் பொருளாளராக A. ஜெகதீஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி […]

நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலி:5 க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம்..!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அண்ணாமலைநகரில், மணிமுத்து (65) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. இன்று காலை தனது ஆடுகளைக் கொட்டகையில் கட்டிவிட்டு வெளியே சென்றிருந்த மணிமுத்து திரும்பி வந்து பார்த்தபோது, நாய்கள் ஆடுகளைக் கடித்து குதறியதைக் கண்டார். அக்கம் பக்கத்தினர் விரட்டியடித்ததால் நாய்கள் ஓடிவிட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு ஆர்.எஸ். மங்கலம் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பகுதியில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!