தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு.. தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், கொடிகுறிச்சி, USP தனியார் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா (08.03.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு […]
Category: கீழக்கரை செய்திகள்
இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம் “ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது” என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் பெருமிதத்துடன் கூறினார். கோவை ஈஷா யோக மையத்தில் 30ஆவது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு […]
கீழக்கரையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பொது கூட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தரி தெருவில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு (WIM) விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பெண்களின் வலிமை மற்றும் கண்ணியத்தை வலியுறுத்தி மாபெரும் பொது கூட்டம் விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவி முபினா முன்னிலையில் நடைபெற்றது. விம் நகர் செயலாளர் மசூதா வரவேற்புரை வழங்கினார். விம் நகர் தலைவி செய்யது ஜாபிரா தொகுப்புரை வழங்கினார். இக்கூட்டத்தில் பெண்கள் வலிமை பெற வேண்டும் முன்னேற்றம் பெற […]
நெல்லை அரசினர் அருங்காட்சியகத்தில் பன்னாட்டு தமிழ் இலக்கிய கருத்தரங்கம்; நினைவு பரிசு வழங்கல்..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பன்னாட்டு இலக்கிய கருத்தரங்கம் நெல்லை அரசு அருங்காட்சியகமும், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையும் இணைந்து உலக தாய்மொழி நாள் விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் விதமாக தாய் தமிழும் தமிழர் பண்பாடும் என்கிற பன்னாட்டு இலக்கிய கருத்தரங்கினை நடத்தினர். இந்நிகழ்வில் தொடக்க விழாவில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பிரியதர்ஷினி வரவேற்புரை ஆற்றினார். அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்கத்தின் மாநில தலைவர் கவிஞர் சுப்பையா தமிழ் மொழி […]
கீழக்கரை நகர் மன்ற தலைவர் பேச்சுரிமை பறிப்பு ! நகர்மன்ற உறுப்பினர் மகளிர் தின வாழ்த்து !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் 1 வது வார்டு உறுப்பினர் பாதுஷா கீழக்கரையில் வடக்கு தெரு டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து நெடுஞ்சாலை வரை 500 மீட்டர் புதிய சாலை அமைப்பதற்கு தில்லையேந்தல் பஞ்சாயத்து நிர்வாகம் புறக்கணித்து வருகிறது இதில் கீழக்கரை மக்கள் மற்றும் அவசர ஊர்திகள் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருவதால் உடனடியாக நகராட்சி […]
இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்லூரியில் பரிசளிப்பு விழா..
இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்லூரியில் பரிசளிப்பு விழா.. தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் செங்கோட்டை அரசு நூலகம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் அமிர்தம் செல்லத்துரை, அந்தோணி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் (பொ). தங்கம் வரவேற்றார். திருநெல்வேலி திருமண்டல உப தலைவர் ரெவ சுவாமிதாஸ் […]
தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல் போன்கள் மற்றும் ஆன்லைனில் இழந்த பணம் மீட்பு; மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை..
தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல் போன்கள் மற்றும் ஆன்லைனில் இழந்த பணம் மீட்பு; மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை.. தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக இழந்த பணம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில், காவல் ஆய்வாளர் வசந்தி, உதவி ஆய்வாளர் மற்றும் சைபர் கிரைம் […]
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்; மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்; மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு எனது வாக்கு! எனது உரிமை! எனது கடமை! என்ற செயல்பாட்டின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் […]
ஆண்கள் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் பேப்பர் திருத்திய மாணவிகள்; புகைப்படம் வைரல்..
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்கள் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் பேப்பர் திருத்திய மாணவிகள்; புகைப்படம் வைரல். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் அமர வைக்கப்பட்டு உதவி தலைமையாசிரியர் அறிவுறுத்தலின்படி பேப்பர் திருத்தும் காட்சி தற்போது வைரலாகி உள்ளது. திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் கர்ணன். கடந்த மாதம் நடந்த இடை தேர்வில் மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை தான் திருத்துவதற்கு […]
சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்த ஐவர் ! ரூ.3 லட்சம் மதிப்பிலான 185 கிலோ கடல் அட்டை பறிமுதல் !!
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைகளில் இருந்து கடல் அட்டை, கடல் குதிரை, திமிங்கலம் துடுப்பு உள்ளிட்ட சில அரியவகை கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ள நிலையில் கடல் அட்டைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும், தேவையும் இருப்பதால் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை சிலர் பிடித்து பதப்படுத்தி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பழனிவலசை கடற்கரை பகுதியில் வனத்துறையினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசைப்படகு […]
உச்சிப்புளியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துறையில் உள்ள அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டால் அரசு நலத்திட்டங்களை பெற்றிடலாம் எனவும் அறிவுறுத்தினார். பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி குறித்து […]
வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து வடகரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும் 2 வது வார்டு கவுன்சிலருமான முத்து முஹம்மது என்ற அன்சாரி கண்டன உரையாற்றினார். நகர செயலாளர் சாஜித் ஒலி, மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் […]
தமிழ்நாடு காவல் துறை சைபர் கிரைம் சார்பில் ரீல் போட்டி; பொது மக்கள் மாணவ மாணவியர் பங்கேற்கலாம்..
தமிழ்நாடு காவல் துறை சைபர் கிரைம் சார்பில் ரீல் போட்டி; பொது மக்கள் மாணவ மாணவியர் பங்கேற்கலாம்.. பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் தங்கள் படைப்பாற்றல் புதுமை மற்றும் எல்லையற்ற திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு ரீல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. வழக்கமான கதை சொல்லல் மற்றும் காட்சி வெளிப்பாட்டின் எல்லைகளைத் தள்ளி, பங்கேற்பாளர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தப் போட்டியில் எப்படி பங்கேற்பது? பங்கேற்பாளர்கள் 04.03.2024 முதல் 14.03.2024 […]
பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து வந்த செவிலியர் கைது..
பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து வந்த செவிலியர் கைது.. கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள். அரசு பணியை உதறி தள்ளிவிட்டு செவிலியர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண் கரு கொலை மட்டுமே கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு ஏற்கனவே இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காயத்ரி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதைத் தொடர்ந்து வயிற்றில் இருப்பது பெண் குழந்தை தானா […]
ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த பக்தர்கள்..
பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த பக்தர்கள்; 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து நூற்றுக் கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் […]
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு ! சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை !!
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் செய்தியின் வாயிலாக தெரிவிக்கையில் :- சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. […]
ஈஷா மஹா சிவராத்திரி விழா: தடை விதிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு
ஈஷா மஹாசிவராத்திரி விழா: தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா குறித்து மனுதாரர் கோரிய நிகழ்நிலை அறிக்கைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை வரும் மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மஹா சிவராத்திரி விழாவிற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், ஈஷாவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தனது விவசாய நிலத்தில் கலப்பதாக […]
வாடிப்பட்டி அருகே கத்திக்குத்து காயங்களுடன் டிரைவர் படுகொலை; போலீசார் விசாரணை..
வாடிப்பட்டி அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் படுகொலை; தாலுகா அலுவலகம் பின்புறம் அழுகிய நிலையில் பிணம் மீட்பு. போலீசார் விசாரணை.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கத்தி குத்து காயங்களுடன் படுகொலை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிணம் தாலுகா அலுவலகம் பின்புறத்தில் மீட்கப்பட்டது. கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் காம்பவுண்டு சுவர் அருகில் செடி கொடிகள் அடர்ந்த புதருக்குள் சுமார் 30 வயது […]
பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்திற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்; சுரண்டையில் பரபரப்பு..
பிரபல பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்திற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்; சுரண்டையில் பரபரப்பு.. சுரண்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு திடீரென அதிகாரிகள் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் நகராட்சிக்கு கடந்த 2008 ஆம் வருடம் முதல் செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ 2,90,840, செலுத்தவில்லை. இது குறித்து நகராட்சி தரப்பில் பல முறை அறிவிப்பு வழங்கியும் கட்டாததால் இன்று காலையில் நகராட்சி மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் […]
பாலியல் சீண்டல் காட்டு ராஜா போக்சோ சட்டத்தில் கைது..
புளியங்குடியில் நான்கு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக நடந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் மூன்று பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு அவ்வப்போது மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்து சென்று சிறுமிகளின் உடலில் உள்ள அந்தரங்க உறுப்புகளில் தவறான முறையில் தொட்டுள்ளார். இந்நிலையில் 05.03.24 […]