சங்கரன்கோவிலில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே கேட் அருகே பயிற்சி சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது மதுபோதையில் இருந்த மூவரும் காவல்துறையினரிடம் தங்களை எப்படி நிறுத்தி சோதனை செய்யலாம் என்று பிரச்சனை செய்து அவர்களை […]
Category: கீழக்கரை செய்திகள்
அரியமானில் மாபெரும் கடற்கரை திருவிழா ! பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்திட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் !!
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரையில் இன்று (15.06.2024) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கடற்கரை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இவ்விழா இன்று துவங்கி 17.06.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் கடற்கரை கைப்பந்து போட்டிகள், கால்பந்து போட்டிகள், இரவு மின்னொளி விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், வகை வகையான உணவு கூடாரங்கள், படகு சவாரி, டிஜே மியூசிக், தண்ணீர் விளையாட்டுகள் போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இன்று 15.06.2024, 16.06.2024, […]
சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்; காவல் துறையினர் பாராட்டு.
சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு. சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரின் நற்செயலை காவல்துறையினர் பாராட்டினர். நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வேளாளர்குளம், ஆர்.சி சர்ச் அருகே செங்குளம், துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுக நயினார் (40) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது கீழே கிடந்த மணிபர்ஸை எடுத்து […]
தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு சரக்குந்து உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சீமான் வலியுறுத்தல்..
தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு சரக்குந்து உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.. தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சரக்குந்து உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், தென்காசி அருகே குத்துக்கல் வலசைப் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் சரக்குந்து மோதி ஒரு […]
தென்காசியில் குருதி கொடையாளர் தின விழா; குருதி கொடையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு..
தென்காசியில் உலக குருதி கொடையாளர் தின விழா; குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் பாராட்டு.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான கொடையாளர்களை பாராட்டும் விதமாக நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு அதிக ரத்த தானம் வழங்கிய குருதிக் கொடையாளர்களை பாராட்டி சிறப்பு சான்றிதழும் பதக்கமும் வழங்கினார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் […]
பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை !
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில் காண்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்ச பணம் பெறுவதாக இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கணக்கில் இருந்து வராத ரூ.1,38,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சுரேஷ்பாபு, மேலாளர் , ஹரிஹரன் , தற்காலிக பணியாளர் சதீஸ், இளநிலை உதவியாளர் , அருளானந்தம் அலுவலக கண்காணிப்பாளர் ஆகிய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு […]
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழப்பு
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்ததாக கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்துள்ள தகவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் பல ஆண்டுகளாக குவைத்தில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் குவைத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் […]
பெரிய பட்டினத்தில் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் ! அனைத்து மதத்தினருடன் திமுக எம்.எல்.ஏ பங்கேற்பு !!
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு மதநல்லிணக்க சந்தனக்கூடு கந்தூரி விழா 123 ஆவது ஆண்டு விழாவையொட்டி தொடக்க நிகழ்ச்சியாக இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டார். இதற்காக ஜலால் ஜமால் பள்ளி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. குதிரைகள் நடனம், வாணவேடிக்கையுடன் தர்காவை மூன்று முறை வலம் வந்த […]
கீழக்கரையில் ஜமபந்தி முகாமில் உடனடி தீர்வு !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி முகாம் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர் .முகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு வழங்கப்பட்டது.இதில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை சமுக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் சேகு ஜலாலுதீன் , தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மீனாட்சிசுந்தரம் , கீழக்கரை தலைமை நில அளவர் வினோத் மற்றும் வருவாய் துறை […]
தென்காசியில் கனிம வள வாகனம் பேருந்து மீது மோதி கோர விபத்து..
தென்காசி இலத்தூர் விலக்கு பகுதியில் அதி வேகமாக வந்த கனிமவள கனரக வாகனம் தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் நேரில் ஆய்வு செய்தார். குழந்தை உட்பட மூன்று பேர் இறந்ததாக தெரிகிறது. தென்காசி-மதுரை செல்லும் சாலையில் தனியார் பேருந்தும், அதிவேகத்தில் வந்த கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரியும் நேருக்கு நேர் மோதி தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த CNG-LNG பேருந்துகள்; போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்..
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (13.06.2024) மா.போ.க. மத்திய பணிமனையில், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த 6 பேருந்துகளை பரிச்சார்த்த முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை […]
தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள்..
தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள்.. இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 13.06.2024 இன்று முகாம் அலுவலகத்தில், தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் எம். முஹம்மது பஷீர், செயலாளர் எஸ். முஹம்மது பெய்க், பொருளாளர் எஸ்.ஏ. […]
வாகனம் திருடிய வழக்கு; குற்றவாளிகளுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..
புளியங்குடியில் வாகனம் திருடிய வழக்கு; குற்றவாளிகளுக்கு ஒரு வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு.. தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் திருட்டு வழக்கின் குற்றவாளிகளுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குடி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை திருடிய வழக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சென்னை பழைய […]
தென்காசி மாவட்ட காவல் துறையில் பணி நிறைவு பெற்ற காவலர்கள்; மாவட்ட எஸ்.பி. வாழ்த்து..
தென்காசி மாவட்டத்தில் பணி நிறைவு பெற்ற காவல்துறையினர்; மாவட்ட எஸ்.பி. சான்றிதழ் வழங்கி வாழ்த்து.. தென்காசி மாவட்டத்தில் பணி மூப்பின் காரணமாக காவலர்கள் ஓய்வு பெற்றனர். இந்நிலையில் பணி நிறைவு பெற்ற காவல் துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தார். தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர்கள் ஆறுமுகசாமி, சரசையன், ஜெயகுரு, இருளப்பன், சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுலா, சாலமன் […]
தென்காசியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு..
தென்காசியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு.. உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி உலக அளவில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு 12.06.2024 அன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம் தலைமையில் […]
பெரியபட்டணத்தில் எஸ்டிடியூ தொழில் சங்கத்தில் மாவட்ட செயலாளர் திருமண விழா !
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் எஸ்டிடியூ தொழில் சங்கத்தில் மாவட்ட செயலாளர் இஜாஸ் அகமது திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியில் மாவட்டத் தலைவர் ரியாஸ் அஹமது , மாவட்ட பொருளாளர் அசன் அலி , ஒன்றிய செயலாளர் பீர் மைதீன் , ராமநாதபுரம் மேற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் பொருளாளர் கீழை அஸ்ரப் , தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு சங்க மாவட்ட செயலாளர் பாரூக் ராஜா முஹம்மது , எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் முன்னாள் மாவட்ட […]
தாடை முடியில் கட்டி இழுத்த 60 வயது இளைஞரின் சாகசத்தை கண்டு வியந்த மக்கள் !
*சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 1700 கிலோ எடையுள்ள டாடா ஏஸ் வாகனத்தை தனது தாடியினால் 510 மீட்டர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.சோழன் உலக சாதனை முயற்சிக்காக இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயதான இளைஞர் செல்லையா திருச்செல்வம். இவருடைய தாடையில் உள்ள முடியில் ( தாடியில்) கயிற்றை கட்டி அந்த கயிற்றை 1700 கிலோ எடையுள்ள டாடா ஏஸ் வாகனத்தில் கட்டப்பட்டு சிங்கம்புணரி கிருங்காக்கோட்டை விலக்கு சாலையில் இருந்து தாடியினால் […]
கீழக்கரையில் ஜமபந்தி முகாம் ! பொதுமக்களுக்கு வட்டாட்சியர் அழைப்பு !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 11.06.2024 முதல் ஜமபந்தி முகாம் துவங்கப்பட்டது. இதில் திரு உத்திரகோசமங்கை உள் வட்டத்தை சார்ந்த எக்ககுடி , பனைக்குளம் , மாலங்குடி ,மள்ளல், ஆலங்குளம் , திரு உத்தரகோசமங்கை , நல்லிருக்கை போன்ற கிராமங்களுக்கு முகாம் நடைபெற்றது . ஜமாபந்தி, ஆண்டு தோறும் ஜுன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் . இதில் கிராம கணக்குகள் குறித்து தணிக்கை முறையாகும். இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், […]
தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்; பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் தீர்மானம்..
தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் அமைத்திட வேண்டும்; நெல்லையில் நடந்த பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் தீர்மானம்… நெல்லையில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் “தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்” அமைத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை பொதிகை தமிழ்சங்கத்தின் 9-வது ஆண்டு தொடக்கவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பாளையங்கோட்டை வீரபாண்டியன் மஹாலில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் […]
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ! 220 மனுக்கள் பெற்று மனுக்களை விசாரணை செய்த ஆட்சியர் !!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 220 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக […]