நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்று சுழற்சி தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகரும் என்பதால் மார்ச் 11 முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 11 ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரை வடக்குத்தெரு நாசா சங்கத்தின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வடக்குத்தெரு சமூக நல அமைப்பான நாசா சங்கத்தின் சார்பில் இஃப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நாசா மர்கஸில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் வடக்குத்தெரு மக்களின் வளர்ச்சி குறித்தும் , சமூக முன்னேற்றங்கள் குறித்தும் நாசா சங்கத்தின் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக மக்கள் பணியாற்றிட நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து உங்களுடைய ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆன்லைனில் பிரபலங்கள் பெயரில் போலி விளம்பரம்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..
ஆன்லைனில் முதலீடு செய்ய பிரபலங்கள் பெயரில் செய்யப்படும் கவர்ச்சிகரமான போலி விளம்பரம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நடைபெறும் விளம்பர மோசடிகள் குறித்து சென்னை இணையவழிக் குற்றப் பிரிவு, தலைமையகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய செய்திக் குறிப்பில், தொழில் நுட்பம் உலகின் அனைத்து மக்களுக்கும் அதிநவீன வாழ்க்கையை வழங்கி உள்ளது. இருப்பினும், அளவுக்கு அதிகமான எதுவும் தீங்கு விளைவிக்கும் AI மற்றும் IoT ஆகியவற்றின் வருகை நாம் வாழும் முறையை மாற்றியமைத்து அதன் […]
அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா; முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு..
அச்சன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சிறப்பாக நடந்தது. தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளி 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் நூற்றாண்டு விழா தலைமை ஆசிரியர் ஜான் மைக்கேல் அந்தோணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு நிகழ்ச்சியை […]
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக SDPI கட்சியின் அகில தேசிய தலைவர் MKபைஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் பொது செயலாளர் முகம்மது சுலைமான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார் . இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன் மற்றும் கீழக்கரை […]
குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 1.5 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தென்காசி தலைமை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பின்வருமாறு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. தற்போது மருத்துவ மனையில் இறந்த குழந்தைக்கு கடந்த புதன் கிழமை அன்று 1.5 வயது நிறைவடைந்ததும் வழக்கமாக செலுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதன் பின் குழந்தைக்கு காய்ச்சல் மூன்று தினங்களாக இருந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் ஒரு […]
தென்காசி மாவட்டத்தில் வலுவான மழை; வெதர்மேன் ராஜா தகவல்..
தென்காசி மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் தரைக் காற்றுடன் கூடிய வலுவான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா அறிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் வலுவான மழையை சந்திக்கும். பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 01 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவாகும். சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி மாவட்டத்தில், சங்கரன் கோவில், […]
மதுரையில் பிஎம்சி மெகா பிஸ் விருது வழங்கும் விழா..
மதுரை திருமங்கலம் நான்கு வழி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பி.எம்.சி மெகா பிஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவை இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளை பேரன் சிதம்பரம் துவக்கி வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். உடன் சிறப்பு விருந்தினர்கள் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ராஜாக்கூர் சபி சிறப்புரையாற்றினார்கள். மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் 350 […]
ஆலங்குளம் ஒன்றியத்தில் மின்கல வாகனங்கள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு சுகாதார பணிகள் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக மின்கல வாகனங்கள் வழங்கும் விழா ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு மின் கலம் மூலம் இயங்கும் தூய்மைப் பணி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில், கடங்கனேரி, காவலா குறிச்சி, மாயமான் குறிச்சி, […]
கீழக்கரையில் பாஜகவின் தெருமுனை கூட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மத்திய அரசின் 2025 2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் கீழக்கரை நகர் தலைவர் K.C.V. மாட முருகன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் தரணி R. முருகேசன் மற்றும் ஓபிசி அணி மாவட்ட தலைவர் T. பாரதி ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மக்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டையை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் பொதுச் செயலாளர் கருங்கதாஸ் விளையாட்டுப் பிரிவு மாவட்டச் […]
மாற்றுத்திறன் படைத்தோருக்கு அரசு அடையாள அட்டைகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் ஆலங்குளம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வ மீனாட்சி, தென்காசி மாவட்ட மாற்றுத் […]
சிறுபான்மையினர் விரோத போக்குடன் செயல்படும் இராமநாதபுரம் நகராட்சி.! எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட தலைவர் கண்டனம்.!!
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சாலையோர வியாபாரிகள் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது தொடர்பாக எஸ் டி பி ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் வெளியிட்ட அறிக்கையில் ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள் உள்ளிட்ட வியாபாரப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில் ஏற்றி […]
கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க். முபாரக் மதனி INTJ கீழக்கரை நகர் தலைவர் ஹாஜா அனீஸ் , 1வது வார்டு கவுன்சிலர் முகமது பாதுஷா , தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லாஹ் கான் , KECT தலைவர் மன்சூர் Committee Of Mif நிர்வாகிகள் மற்றும் MYFA நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ISOUQ நிறுவனத்தின் தலைவர் அஹமது மற்றும் நிர்வாகிகள் யாசின் அக்ரம் […]
சத்திரக்குடி கலை ஸ்போர்ஸ் அகடாமியின் சார்பில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் செயல்பட்டு வருகிறது கலை ஸ்போர்ட்ஸ் அகடாமி இங்கு கராத்தே மாஸ்டரும் அகடாமியின் நிறுவனருமான கலைக்குமார் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிலம்பம், கராத்தே, செஸ், பரதநாட்டியம், பயிற்சி வழங்கப்படுவது வழக்கம் இந்த நிலையில் இன்று ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள உப்பூர் டோனி நர்சரி அண்ட் ப்ரைமரி பள்ளியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கராத்தேவில் குமித்தே சண்டை பயிற்சி, சிறப்பு கராத்தே கட்டா பயிற்சிகளும் மாணவர்களுக்கு […]
நெல்லையில் இலச்சினை வெளியீட்டு விழா..
நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழாவிற்காக புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழா வருகின்ற மார்ச் மாதம் 7-ஆம் நாள் அன்று பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடக்க உள்ளது. விழாவில், சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவிற்காக சிறப்பு இலட்சினை (லோகோ) ஒன்று […]
ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து.! 03 பேர் இறப்பு ஒருவர் காயம்..!!
இராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் விளக்கு பகுதியில் அரசு ஏசி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தும் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த குவாலிஸ் காரும் ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக வந்த தனியார் […]
மதுரை ரேடியோ மிர்ச்சியின் (தனியார் பண்பலை) “லவ் மாங்க்” நிகழ்ச்சி.!
மதுரை, பிப்ரவரி 14: காதலர் தினத்தையும், வானொலி தினத்தையும் முன்னிட்டு 98.3 ரேடியோ மிர்ச்சி தனது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “லவ் மாங்க்” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, அன்பை மட்டுமே பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, இதில் மிர்ச்சி RJ நிதீஷ், “காதல் ஞானி” ஆக தோன்றி, நேயர்களை ஆச்சரியப்படுத்தினார். காதல், அன்பு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வேடிக்கையான முறையில் விளக்கி, அனைவருக்கும் மனமகிழ்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை கேகே நகரில் உள்ள ரேடியோ […]
கீழக்கரையில் பட்டமளிப்பு விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் சின்னமாயாகுளம் அருகே அமைந்துள்ள இர்ஃபானுல் உலூம் எத்தீம்கானா & ஹிஃப்ளு மதரஸாவின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா & 19 ஆம் ஆண்டு விழா மதரஸா நிறுவனரும் வட்டார ஜமாத்து உலமா சபை தலைவருமான அப்பாஸ் அலி மன்பஈ தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை கௌரவ தலைவர் அஹ்மது இப்றாஹீம் மிஸ்பாஹி ஃபாழில் ரஷாதி ஜாமிஆ அருவிய்யா தைக்கா முதல்வர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஃபாழில் உமரி உட்பட […]
அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 4 கிலோ திமிங்கலத்தின் உமிழ் நீர் பறிமுதல்.! ஆறு பேர் கைது.!!
ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை ஆன்லைனில் விற்பனை செய்வதாகவும், அதனை ராமநாதபுரத்தை சேர்ந்த சிலர் வாங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்டவிரோதமாக […]
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல் .!
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..! ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த […]