இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தேசிய கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தேசிய கொடியேற்றி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு வழியாக ஏற்றுக் கொண்டார். மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை சார்பில் […]
Category: கீழக்கரை செய்திகள்
தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் மதிமுக சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டடம் நடந்தது. ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்து ஆண்டு காலம் ஒன்றிய பா.ஜ.க., அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது, 18-ஆவது மக்களவைத் […]
தென்காசி மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 78வது சுதந்திர தின விழா; நற்சான்றுகள் வழங்கல்..
தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் 78 வது சுதந்திர தின விழா நடந்தது. தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சிறப்பாகப் பணியாற்றிய பல்வேறு துறைகளைச் […]
“தேசத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி” ஜெ.பி கல்லூரியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி..
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலக்கு இதழும், ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து “தேசத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்றது. இதில், ஜெ.பி.பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகி ப. ஹேம்லெட் தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ. மைக்கேல் மரியதாஸ், […]
தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும்; புதிய எஸ்பி உறுதி..
தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், ஜாதி மத மோதல்கள், ரெளடிகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒடுக்கப்படும் எனவும் புதிதாக பதவியேற்றுள்ள எஸ்.பி வி.ஆர்.சீனிவாசன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் 5வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர்.சீனிவாசன் இன்று (14.08.2024) பதவி ஏற்றுக்கொண்டார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் முன்னதாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையராகவும், திருவாரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை பெருநகர […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற 16வது அமைச்சரவை கூட்டம்; 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 16-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் துறை சார்பில் 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்: இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு […]
தென்காசியில் போதை தடுப்பு உறுதி மொழியேற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்கப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போதை தடுப்பு உறுதிமொழியினை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர். இதில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் மருத்துவர் மூலம் வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் […]
குற்றாலம் சுற்றுலா வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்; மஜக கூட்டத்தில் வலியுறுத்தல்..
குற்றாலம் சுற்றுலா வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் நெல்லை பிலால் கலந்து கொணடார். மாவட்ட பொருளாளர் சையது அலி மாவட்ட துணை செயலாளர்கள் சிக்கந்தர், சங்கை இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் […]
ஆன்லைன் ஷாப்பிங்க் தவிர்த்து உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கி பயன்பெற வேண்டும்; தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் வேண்டுகோள்..
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கி பயன்பெறுமாறு தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் பழக்கடை சுலைமான், துணைச் செயலாளர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச்செயலாளர் நவாஸ் கான் வரவேற்றார். கூட்டத்தில் உள்ளூர் வியாபாரிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான […]
தென்காசியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி; மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
தென்காசியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (12.08.2024) அன்று சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், […]
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற உறுதிமொழி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்கப்பட்டு, போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 12.08.2024 சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப் […]
சோழவந்தான் அருகே நெற்பயிர்கள் சேதம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..
சோழவந்தான் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது இதில் கிணற்று பாசனம் மூலம் அறுவடைக்கு தயாராக இருக்கக்கூடிய நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. சோழவந்தான் அருகே இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பேட்டை மற்றும் சோழவந்தான் பகுதியில் கிணற்று […]
தென்காசி மாவட்ட அனைத்து கிராம ஊராட்சியிலும் கிராமசபை கூட்டம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி.1) துறை, நாள் 19.11.1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3-ன்படி, சுதந்திர தினமான 15.08.2024 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கிராம சபை […]
நெல்லையில் அனைத்து கட்சிகள் மற்றும் வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு..
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஆன்லைன் சென்டர் நடத்தி வந்த இளைஞரை சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், சென்டருக்குள் புகுந்து மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்நிலையில், நெல்லை மேலப்பாளையத்தில் படுகொலை செய்யப்பட்ட செய்யது தாமீன் என்பவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரியும் இன்று (12.08.2024) மேலப்பாளையம் அனைத்து கட்சிகள் மற்றும் வியாபாரிகள், ஜமாத்துகள் சார்பில் கடையடைப்பு நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. அதனை ஏற்று நெல்லை மேலப்பாளையத்தில் […]
துணிச்சல் மிக்க செவிலியர் சபீனா; கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி தமிழக அரசு பாராட்டு..
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயர்மட்ட கயிறு வழியாக (Zip line ) ஆற்றைக் கடந்து சென்று தன்னலம் பாராமல் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காப்பாற்றிய கூடலூரைச் சேர்ந்த துணிச்சல் மிக்க செவிலியர் சபீனா மற்றும் மருத்துவ குழுவினரை பாராட்டி தமிழ்நாடு அரசு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கி கெளரவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, வயநாடு சூரல்மலை பகுதியில் கரைபுரண்டோடும் ஆற்றை கடந்து ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு சென்று அங்கு […]
தென்காசியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் செயல்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய […]
தென்காசி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் முக்கியச் செய்தி..
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தனக்கு இரு சக்கர வாகனம் வழங்கவில்லை எனவும், பலமுறை மாற்றுத்திறனாளி அலுவலரிடம் நேரில் சென்று கேட்ட போதும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் கூறியதாக தென்காசி மாவட்ட வாட்ஸப் குழுக்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தி வைரலானது. இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெட்ரோல் வாகனம் கேட்டு 20 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் அளித்துள்ளார். பெட்ரோல் […]
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம்; ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் துவங்கி வைத்தனர்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 09.08.2024 அன்று தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர், எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, […]
உயர்கல்வி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்..
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 09.08.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் […]
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்;
தென்காசி மாவட்டம் கடையாலுருட்டி இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சேர்ந்தமரம் நிலைய வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமயிலான சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள், கலந்து கொண்டு அனைத்து நோய்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பாக இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர். நீர், இரத்த பரிசோதனை, ஸ்கேன், ஈசிஜி, எக்ஸ்ரே, இயன்முறை மருத்துவம், தொற்றா நோய்களை கண்டறிதல், கண் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், தோல் […]