ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்யக்கோரியும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க கோரியும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூபாய்1000 உடனே வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . இதில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் […]
Category: கீழக்கரை செய்திகள்
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற தங்கம் பறிமுதல் .! 3 பேர் கைது.!!
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற தங்கம் பறிமுதல் : 3 பேர் கைது இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கட்டதி வரப்பட்ட 11கிலோ 300 கிராம் தங்கத்தினை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். தமிழகம் அருகே இலங்கை இருப்பதால் கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள், பீடியிலைகள், பலசரக்கு பொருட்கள் கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. கடத்தல் குறித்து இந்திய, இலங்கை […]
மண்டபம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்து.!
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்து: நால்வருக்கு காயம்: அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தப்பினர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு யாத்திரையாக வந்த ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்ப போது மண்டபம் அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நால்வர் காயம் அதிர்ஷ்டவசமாக அனைவரும் […]
இலங்கை தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி ஆட்சியரிடம் மனு
இலங்கையில் தான் கஷ்டம் என்று தமிழகத்துக்கு வந்தால் இங்கே அதைவிட கஷ்டமாக இருக்கிறது. இலங்கை தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி கேட்கின்றனர். தங்களை இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பும்படி வேதனையுடன் ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை தமிழ் அகதிகள். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் யுத்த காலத்திலும், அந்நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்ட போதும் அங்கிருந்து அகதிகளாக தஞ்சம் வந்த […]
பள்ளி கட்டிடத்தை சரி செய்து தரக்கோரி பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்..!
ராமநாதபுரத்தை அடுத்த வித்தானூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த அரசு பள்ளிக்கு சரியான கட்டிட வசதி இல்லாததால் மகளிர்மன்ற கட்டிடத்தில் மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது பள்ளிப் பாடத்தின் பாடலை பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு மாணவ மாணவிகள் […]
மயானத்துக்கு போக வழியில்லாம வயலுக்குள்ள பொணத்தை தூக்கிட்டு போறோம்”- புகைப்படங்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் புலம்பிய பொதுமக்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவிலை அடுத்த நெடுங்குறிச்சி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு பகுதிக்கு செல்ல எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என, குற்றம் சாட்டும் அந்த கிராம மக்கள் போதிய சாலை வசதி செய்து தரப்படாததால் சுடுகாட்டிற்கு, இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாகவும், வேறு வழியின்றி உடல்களை வயல்வெளிக்குள் தூக்கிச் செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக […]
முதலுதவி தாமதத்தால் முன்னாள் பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு..
தென்காசி மாவட்டத்தில் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த சுரண்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் முதலுதவி தாமதம் ஆகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை சிவ குருநாதபுரத்தை சேர்ந்தவர் டி.கே.எம். மாதாள பாண்டியன்.வயது (70). இவர் சுரண்டை பேரூராட்சியாக இருந்த போது 10 ஆண்டுகள் பேரூராட்சி மன்ற தலைவராக பணியாற்றினார். இவர் கடந்த 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் அவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் […]
தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி பொறுப்பேற்பு..
தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி அரவிந்த் இன்று பொறுப் பேற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திருச்சி துணை கமிஷனராக பணியாற்றி வந்த அரவிந்த் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் 6-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக S.அரவிந்த் இன்று (06.01.2025) ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். இவர் 21.07.2005 ஆம் ஆண்டு காவல் பணியில் இணைந்து துணை எஸ்.பியாக திருவாரூர், கரூர், திருநெல்வேலி, […]
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் பெண்கள் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்தும் , பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் கொடுமைகளை கண்டித்தும் , திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமை தாங்கினார். விம் நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரசுக்கு எதிராகவும் பெண்களுக்கு […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.!
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் மண்டபம் வரையிலான கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது., என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பொங்கல் திருநாளை […]
பரமக்குடி அருகே வாளுடன் புகைப்படத்தை வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர் கைது .! வலைத்தளங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை .!! மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சிநேயர் என்பவர் சமூகவலைதளத்தில் (Instagram) சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக வாள் உடன் தனது புகைப்படத்தை ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 31.12.2024-ம் தேதி பார்த்திபனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு வைக்கப்பட்டுள்ளார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று சட்டம்-ஒழுங்கு மற்றும் இரண்டு மதங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை பதிவிடும் இளைஞர்களுடைய சமூக […]
தென்காசி வெதர்மேன் ராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை..
தானியங்கி மழைமானிகளில் ஏற்படும் பழுதுகளை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி வெதர்மேன் ராஜா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றிய அவரது செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் 1300-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டு குறு வட்டங்கள் அளவில் மழை அளவுகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டது. இந்நிலையில், 1300-க்கும் மேற்பட்ட தானியங்கி மழை மானிகள் மூலம் ஒரு மாவட்டத்தில் எந்த பகுதியில் அதிகமழை, எந்த பகுதியில் […]
வடகரை பேரூராட்சி பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்..
பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை எனக்கூறி வடகரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வரும் வடகரை பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால், தெரு விளக்கு, குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட […]
நான்கு பேருந்தில் மூன்று பேருந்து ‘கட்’ – கோவையில் 3 கிராம மக்கள் கடும் அவதி*
*நான்கு பேருந்தில் மூன்று பேருந்து ‘கட்’ – கோவையில் 3 கிராம மக்கள் கடும் அவதி* கோவை மாதம்பட்டி அருகே உள்ள மத்திப்பாளையம் கிராமத்திற்கு நான்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்குப் பிறகு ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. குறிப்பாக மத்திப்பாளையம், சென்னனூர், கிருஷ்ணராயம்புதூர் கிராமத்தில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து வசதி இல்லாததால் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இயக்கப்படும் ஒரு பேருந்தும் […]
நேர்மையுடன் செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த சலவை தொழிலாளி..
பொட்டல்புதூர் பகுதியில் சலவை தொழிலாளி ஒருவர் தனது நேர்மையான செயற்பாட்டால் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ஊர் பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி குமார். தினமும் ஊர் மக்களின் துணியினை சலவை செய்து இஸ்திரி போட்டுக் கொடுக்கும் பணியினை செய்து வருகிறார். இந்த நிலையில், அருகில் உள்ள வெங்காடம் பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூ.திருமாறன் பெரிய தொகையை தவறுதலாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து அதனை […]
கீழக்கரையில் புகாரி ஷரிப் 10 ம் ஆண்டு நிறைவு விழா.! உலக நன்மைக்காக இறைவனிடம் கண்ணீர் மல்க கூட்டுப் பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள் ..!!
இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குஃத்பா பள்ளிவாசலில் புகாரி ஷாரிப் பத்தாம் ஆண்டு நிறைவு விழா பழைய குஃத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன் , செயலாளர் சப்ராஸ் நவாஸ் , பொருளாளர் சுல்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகமது சதக்கத்துல்லா ஆலின் கிராத் ஓதி துவங்கி வைத்தார் . கீழக்கரை புகாரி ஷெரிஃப் டிரஸ்ட் அல்ஹாஜ் பி எஸ் எம் ஹபிபுல்லா கான் […]
கருப்பாநதி அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி..
கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஆணையின் படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பசலி பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் 31.12.2024 அன்று தண்ணீர் திறந்து வைத்தார். கருப்பாநதி பாசன திட்டத்தின் கீழுள்ள பெருங்கால், பாப்பான்கால், சீவலன் கால், இடைகால், கிளாங்காடு, ஊர்மேல் அழகியான் ஆகிய கால்வாய்களின் கீழ் […]
கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையின் அவலத்தை தீர்க்க 11/01/2025 அன்று ஜனநாயக வழி நடைபயணம்..
கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலை கடற்கரையோர முக்கிய ஊர்களை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையில் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நூற்றுகணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமை மற்றும் சமீபத்தில் பெய்த கடும் மழையாலும் நெடுஞ்சாலை குண்டும், குளியுமாக மாறி பல விபத்துக்களுக்கு காரணமாகி வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கீழக்கரையில் உள்ள பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தும் எந்த வகையான தீர்வும் கிடைக்கவில்லை. சமீபத்தில் கீழக்கரையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அமைச்சர்கள் […]
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உரத்த சிந்தனை -பாரதி உலா 2024..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சி பட்டு கிராமத்தில் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் உரத்த சிந்தனை 10ம் ஆண்டு பாரதி உலா 2024 நிகழ்வு கல்லூரி தாளாளர் அக்ரி. எஸ் .வெங்கடசலபதி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ரேகா ரெட்டி, உரத்த சிந்தனை பொது செயலாளர் உதயம் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பேச்சரங்கம் […]
நேர்மைமிக்க காவல் துறை டி.எஸ்.பிக்கு பதவி உயர்வு..
நேர்மை மிக்க காவல் துறை டி.எஸ்.பி குப்புசாமி ஏ.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்ஸ்பெக்டர், உளவுப் பிரிவு டி.எஸ்.பி, மின்வாரிய குற்றங்கள் தடுப்பு, என பல்வேறு பதவிகள் மற்றும் பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர் குப்புசாமி. மதுரை டி.எஸ்.பியாக உள்ள குப்புசாமிக்கு தீவிரவாத தடுப்பு ஏ.எஸ்.பி பதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரை உள்ள அனைத்து மாவட்டங்கள், நகரங்கள், முக்கிய பகுதிகள் அனைத்தும் இவரது நேரடி கண்காணிப்பில் வரும். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், […]
You must be logged in to post a comment.