கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக நோன்பு தொடங்கும் முன்பு தேவையுனையோருக்கு நோன்பு நாட்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நோன்பு பெருநாளை முன்னிட்டு வடக்குத் தெருவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 80 குடும்பங்களுக்கு கிடா கறி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1/2கி வழங்கப்பட்டது.
Category: கீழக்கரை செய்திகள்
மீண்டும் திறக்கப்பட் முடிதிருத்தகம் மற்றும் அழகு நிலையங்கள்…
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முடி திருத்தும் நிலையம், அழகு நிலையங்கள் செயல்பட மட்டும் மத்திய மாநில அரசுகள் தடை விதித்த கடந்த 19ஆம் தேதி கிராமப்புறங்களில் உள்ள முடித்துவிட்டு நிலையங்கள் மட்டும் போதிய இடைவெளி விட்டு முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் மற்றும் அவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வரக்கூடிய […]
மதுரை கொரோனா தனிமை முகாமில் குஜராத் முதியவர் சாவு..
இந்தியா முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இதனால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி உன்ன உணவுக்கும் வழியின்றி தத்தளித்து வருகின்றனர். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உடன் சிறப்பு ரயில் ஒன்று நேற்று மாலை 4 மணி அளவில் மதுரைக்கு வந்தது. அதில் 115 பயணிகள் இடம்பெற்றிருந்தனர். […]
வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல். 2 பேர் கைது…
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல். 2 பேர் கைது, வனத்துறை நடவடிக்கை. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட சேத்தூர் பிரிவு பிராவடியாறு பீட் வனப் பகுதியில் இன்று அதிகாலை வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் தலைமையில் வனவர் குருசாமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பட்டா […]
கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 50,000 காசோலையை வழங்கிய புதுமண தம்பதியர்..
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்களை கடந்த நிலையில் தற்போது பல்வேறு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணம் போன்ற விசேச நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவில் மட்டுமே மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகரில் கபில்ராஜ் (எ) ஆதித்யா என்பவருக்கும் சப்தமி என்பவருக்கும் விருதுநகரிலுள்ள தனியார் மண்டபத்தில் வைத்து இன்று திருமணம் நடைபெற்றது. இத்திருமணமானது ஊரடங்கு உத்தரவை மீறாத வகையில் குறைவான நபர்கள் மட்டுமே […]
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 2ம் கட்டமாக புலம்பெயர்ந்த தொழிலார்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்..
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 2ம் கட்டமாக புலம்பெயர்ந்த தொழிலார்கள் 160 அவர்கள் சிறப்பு பேருந்து மூலம் மதுரை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன அங்கிருந்தவர்கள் சிறப்பு ரயில் மூலம் பீகார் புறப்பட்டுச் சென்றார்கள். இந்தியா முழுவதும் கடந்த 60 நாட்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க ஊரடங்கு அமலில் இருப்பதால் பல தரப்பினர் வேலையிழந்து வருகின்றனர் இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள […]
மதுரையிலிருந்து புளியங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் லாரியில் மோதி விபத்து..
மதுரையிலிருந்து புளியங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மார்க்கெட் அருகே மதுரையிலிருந்து சொந்த ஊரான புளியங்குடி இருசக்கர வாகனத்தில் தந்தை பக்ரூதின் மற்றும் அவரது 7 வயது மகன் இப்ராஹீம் என்பவரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது ராஜபாளையம் நோக்கிச் சென்ற லாரியில் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனங்கள் […]
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை மிதித்து ஒருவர் பலி அதிர்ச்சியில் பக்தர்கள்..
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானை மதம் பிடித்து காளிமுத்து என்ற பாகனை மிதித்தது – அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை பாகன் காளிமுத்து என்பவரால் குளிப்பாட்டும் போது திடீரென்று மதம் பிடித்தது. இதில் யானை பாகன் காளிதாஸ் தூக்கி வீசப்பட்டதோடு மட்டுமில்லாமல் மிதித்தது. இதில் மிகவும் படுகாயம் அடைந்து உயிருக்கு […]
மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்…
மதுரை முத்துப்பட்டியில் ஏழை,எளிய மக்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். மதுரை முத்துப்பட்டியில் மேற்கு 1ம் பகுதி இளைஞர் அணி செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் கராத்தே கார்த்திக் ஏற்பாட்டில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமை ஏற்று, ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கினார் இந்நிகழ்வில் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக […]
மதுரையில் தூர்வாரப்படும் கண்மாய்களை ஆட்சியர் ஆய்வு..
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கண்மாய்கள் மற்றும் ஓடை வாய்க்கால்களை தூர்வார உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை வடக்கு வட்டம் ஆணையூர் கண்மாய் நீர்வரத்து கால்வாயினை குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொறியாளர் சுப்பிரமணியன் உடன் உள்ளார். கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
கனத்த இதயத்துடனும்.. மன வலிமையையும் கொடுத்து கடந்து செல்லும் “ஈகை திருநாள்”…
இஸ்லாமியர்களின் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெருநாள்கள் ஈகை திருநாள் எனப்படும் நோன்பு பெருநாள், தியாகத் திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள். இந்த இரண்டு பெருந்தினங்களிலும் இஸ்லாமிய சமுதாய மக்கள் சொந்தங்களுடனும், பந்தங்களுடனும், நண்பர்களுடன் இணைந்து குதூகலாம சந்தோசங்களை பகிர்ந்து மகிழக்கூடிய தருணம். ஆனால் இந்த வருடம் கொரோனோ எனும் வைரஸ் ஈகை பெருநாளை புதிய அனுபவமாக மாற்றியுள்ளது. ஆம், மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருக்கும் புனித தலமோ, குறைந்த நபர்களுடன் காட்சியளிக்கிறது, நண்பர்களுடன் பொது வெளியில் தொழுகையை கொண்டாடும் நண்பர்களோ […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் திடீர் பணியிட மாற்றம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் 8 வருடத்திற்கு பிறகு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில், 3 வருடம் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பதை மாற்றி பல வருடங்களாக நடராஜன் மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக பணியில் இருந்தார்.பல வருடங்களுக்கு பிறகு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நடராஜன் நியமனம் […]
ஏழை மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு..
ஊரடங்கு காலத்தில் கடனை செலுத்துமாறு ஏழை மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சட்ட மன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். வங்கி கடன் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை ஏழை மக்களிடம் உடனடியாக கட்ட வற்புறுத்தும் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் […]
மதுரையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு பல வேறு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை வழங்கினார்..
மதுரையில் இன்று (23/05/2020) பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் கபசுர குடிநீர் சூரணம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஜிங்க் மாத்திரைகளை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். மதுரை பெத்தானியாபுரத்தில் எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலைராஜா ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில் :- மதுரையில் வாழும் 4 லட்சம் குடும்பங்களில் இதுவரை ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மதுரை மாநகராட்சி சார்பில் […]
பண்டைய மதுரையின் தலைநகராக கருதப்படும் மணலூரில் இன்று அகழாய்வு பணி துவங்கியது…
கீழடி 6ம் கட்ட அகழாய்வின்ஒரு பகுதியாக இன்று (23/05/2020) மணலூரில் அகழாய்வு பணிகள் தொடங்கின. கீழடியில் இதுவரை 5 கட்ட அகழாயவுகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு பணிகள் 40 லட்ச ரூபாய் செலவில் கீழடியில் தொடங்கப்பட்டன. இம்முறை கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் என 4 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், மணலூர் தவிர்த்து மற்ற இடங்களில் தொடங்கப்பட்டன. கொரானோ பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட அகழாய்வு மே 20ல் […]
நமக்கான ரமலான் கூலியை அல்லாஹ்விடம் யாசிப்போம்.. ரமலான் சிந்தனை – 30..கீழை ஜஹாங்கீர் அரூஸி…
மனித சமூகத்தின் உடல் மற்றும் உள்ளங்களை சுத்திகரிக்க வந்த ரமலானின் நிறைவு நாளே ஈகைத்திருநாள் என்னும் நோன்பு பெருநாளாகும். அதிகாலையில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல்,பருகாமல் இறைவழிப்பாடுகளில் முழுமையாய் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முஸ்லிம்களின் உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணித்துவிடமுடியாது. நோன்பு பிறை முதல் நாளில் இருந்து அம்மாதத்தின் கடைசி நாள் வரை மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி கொள்கிறான். உரிய நேரத்தில் இறைவனை நினைத்து வாழ்ந்த மனிதன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இறைவனை நினைத்து […]
கீழை நியூஸ் எதிரொலி.. உடனடியாக மின்சார கம்பத்தில் இருந்து நீக்கப்பட்ட தனியார் பள்ளி விளம்பர பலகை..விதி மீறல் உயிர் சேதம் ஏற்பட்டால் பள்ளி பொறுப்பேற்குமா?..
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலை அக்ரஹாரம் மாடக்குளம் மெயின் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்கம்பங்களில் டால்பின் எனும் தனியார் பள்ளி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் மின்சார கம்பங்களில் அரசு ஊழியர்களை தவிர வேறு நபர்கள் ஏறுவது சட்டப்படி குற்ற செயலாகும், ஆனால் யாரும் இச்சட்டத்தை மதிப்பதும் இல்லை, மேலும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படும் போது மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுவதுடன், விபத்து ஏற்படுவதற்கும் […]
வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நோன்பு பெருநாள் பொருட்கள் வினியோகம்..
“தேவையுடையோரை தேவையில்லாதவர்களாக்குங்கள்” எனும் நபி மொழிக்கு ஏற்ப வருடம் தோறும் வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக பல நூறு குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் உதவிகள் செய்வது வழக்கம். அதே போல் இந்த வருடமும் 400 குடும்பங்கள் கண்டறியப்பட்டு இந்த வருடமும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதம் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
கோடை உழவு குறித்து விவசாயிகளுடன் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கலந்துரையாடல்…
ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுடன் கோடைஉழவு செய்வது குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி 21.05.2020 நடைபெற்றது. இந்த நிகழ்வில் விவசாயிகளின் கேள்விகளுக்கு இராமநாதபுரம் வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பாலசுப்பிரமணியன், இராம்குமார் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரிலையன்ஸ் நிறுவன மாவட்ட மேலாளர் ஸ்ரீ.கிருபா, இராமு மற்றும் மக்கள்பாதையின் தினேஷ் உட்பட 50ற்கும் மேற்ப்பட் விவசாயிகள் பங்குபெற்றனர்.
கீழக்கரையில் விண்ணை தொடும் ஆட்டிறைச்சி விலை..
கீழக்கரையில் ரமலான் மற்றும் முக்கிய விசேஷ காலங்களில் மக்கள் அதிகமாக வாங்குவது ஆட்டிறைச்சி தான். தற்சமயம் கொரோனா எனும் கொடிய தொற்று நோய் சூழ்ந்துள்ள நிலையில் பொருளாதார ரீதியாகவும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். இத்துடன் புனித ரமலான் மாதம் தொடக்கத்தில் ரூ.700/-கு விற்கப்பட்ட இறைச்சி இன்று (22/05/2020) ரூ.800/-கு கிலோ விற்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கீழக்கரையில் அனைத்து ஜமாஅத், சமூதாய கட்சிகள், இயக்கங்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் கீழக்கரை முக்கியஸ்தர்கள் ஓன்றுகூட நல்ல முடிவெடுத்து விலையே ஒரு […]
You must be logged in to post a comment.