கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சுமார் ஒன்றரை மாதங்கள் தனிமையில் இருந்து மீண்டு நேற்று பணியில் இணைந்த அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி IPSஐ சந்தித்து நலம் விசாரித்து உரையாடினர். நோய்த் தொற்றால் ஏற்படும் தனிமை எவ்வளவு அபாயகரமானது என்பதை உரையாடலின் போது குறிப்பிட்டது, அந்த தனிமையின் வேதனையை வெளிப்படுத்தியது. அச்சந்திப்பின் நினைவாக வெல்ஃபேர் கட்சியின் மாநில பொருளாளர் அலி அஸ்கர் துணை ஆணையருக்கு சீல்டு மாஸ்க் அணிவித்ததுடன் அவருடன் பணிபுரியும் சக காவலர்களுக்கும், வெல்ஃபேர்கட்சியின் சார்பாக “சீல்டு […]
Category: கீழக்கரை செய்திகள்
மதுவினால் தொடரும் உயிர் பலி.. மது மயக்கத்தில் கண் முன்னே மகனை பறிகொடுத்த தந்தை..
மதுரையை அடுத்த பெருங்குடி அருகே உள்ள ஐ நேந்தல் கண்மாயில் பிரமோத் என்ற ஒன்பது வயது சிறுவன் கண்மாயில் மூழ்கி இறந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஐநேந்தல் பகுதியை சார்ந்தவர் விருமாண்டி, அவர் தன் மகனுடன் அருகில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அச்சமயத்தில் விருமாண்டி குடிபோதையில் இருந்துள்ளார். அப்பொழுது குளிக்க சென்ற சிறுவன் ஆரமான இடத்திற்கு சென்று தத்தளித்துள்ளான். ஆனால் விருமாண்டி போதையில் நிலை இல்லாமல் இருந்ததால் அவரால் கண்மாயில் இறங்கி காப்பாற்ற இயலாமல், அவர் […]
மதுரையில் மீண்டும் தொடருமா சாலை பணிகள்??.. ஊரடங்கும்.. தடையும் நீங்கி நாட்கள் பல கடந்து விட்டது…
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வந்த சாலை போடும் பணிகள் நிறுத்தப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முட்பு ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு கட்டுபாட்டுடன் பணிகள் தொடரலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மாநில அரசும் மத்திய அரசும் உத்தரவு பிறப்பித்து நாட்களுக்கு மேலாகியும் சாலை பணிகள் தொடங்கப்படவில்லை. சாலை பணி பாதியில் நிறுத்தப்படரடதால் பல இடங்களில் மேடு பள்ளத்துடன், […]
ஹமீதியா தொடக்கப்பள்ளி (HPSAA) முன்னாள் மாணவர்களின் மனிதநேய பணி..
கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் இரண்டாவது படித்து வந்த மாணவன் சுகவீனமாக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிகவும் சுகவீனமுற்ற சிறுவனை ராம்நாடு GHல் இருந்து திருவனந்தபுரம் சித்ரா மருத்துவமனைக்கு மாற்றியே ஆக வேண்டிய சூழ்நிலையில், பெற்றோர்களால் திருவனந்தபுரம் செல்ல pass எடுக்க முடியவில்லை என்று 25/5/2020 தகவல் வந்தது. இந்த சூழ்நிலையில் காலை 10 மணியிலிருந்து ஆட்சியர் அலுவலகத்தில் முயற்சி செய்தும்,1:30 மணிவரை கிடைக்கவில்லை. பின்னர் சென்னை secretariat ல் தொடர்பு கொண்டு , ராமநாதபுரத்தில் உள்ள […]
இராமநாதபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் ..
இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு ரத்து செய்யும் வகையில் மின் மீட்டர் பொருத்தும் மின் வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முடிவை கண்டித்து, இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்,
உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கிருமி நாசினி, முகக்கவசம் விநியோகம்…
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பாக உச்சிப்புளி காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், என் மனங்கொண்டான், கீழநாகாச்சி, புதுமடம் ஊராட்சி தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசங்களை உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் வி.என். நாகேஸ்வரன் வழங்கினார். இதில் உச்சிப்புளி ரோட்டரி சங்கத் தலைவர் அபுதாகீர், உச்சிப்புளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கார்மேகம், கீழநாகாச்சி ஊராட்சி தலைவர் ராணி கணேசன், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், உச்சிப்புளி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் […]
ரஜினி மக்கள் மன்றம் பேரிடர் கால வாழ்வாதார உதவி..
இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் கமுதி ஒன்றியம் சார்பாக 200 குடும்பங்களுக்கு அத்தியா.வசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்றம் போகலூர் ஒன்றியம் சார்பாக திருவாடி கிராமத்தில் 120 குடும்பங்களுக்கு நலத்திட்டம் வழங்கப்பட்டது, ரஜினி மக்கள் மன்றம் ராமேஸ்வரம் நகர் கிளை சார்பில் வெளி மாநில யாத்ரீக பக்தர்கள் 200 பேருக்கு 30 நாளாக உணவு வழங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்றம மண்டபம் ஒன்றியம் சார்பில் உச்சிப்புளி அருகே தாமரைக்குளம், ரெட்டையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள், ஆதரவற்றோர், […]
கீழக்கரையில் ஒரு புறம் மின் தட்டுப்பாடு.. மறுபுறம் நகராட்சி மின் பணியாளர்களின் மெத்தனப்போக்கு..
கீழக்கரையில் மாதம் தோறும் பராமரிப்பு என அறிவிக்கப்பட்ட மின் வெட்டு இருந்தாலும், பராமரிப்பு என்பது ஓன்று உள்ளதா எனும் எண்ணும் வகையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது, அதையும் தாண்டி பற்றாகுறை நிலவும் நிலைதான் கீழக்கரையில். ஆம், மின் தட்டுப்பாடு காலத்தில் பகலில் சுடர் விடும் கீழக்கரை நகராட்சி மின் விளக்குகள் எரிந்து வருவதை பல இடங்களில் காண முடிகிறது. இது பொறுப்பில்லாமல் செயல் படும் கீழக்கரை நகராட்சி மின் பணியாளர்களின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. மினசாரம் […]
கீழக்கரையில் மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு……..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் இன்று கீழக்கரையில் பாரத ஸ்டேட் வங்கி, கிழக்கு தெரு, சாலை தெரு, அண்ணாநகர் பகுதிகளை பகுதிகளை ஆய்வு நடத்தினார். பின்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கரோனா வைரஸ் உள்ள பகுதியில் மட்டும் வங்கிகள் திறக்கப்படாது. மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து வங்கிகளும் எப்போதும் போல் செயல்படும் என்று கூறினார். இதில் கீழக்கரை தாசில்தார் வீர […]
நடுத்தெரு பள்ளி கழிவு நீர் பிரச்சினை.. ஜமாஅத் சார்பில் விளக்கமும்.. மறுப்பும்.. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனமே..
நடுத்தெரு ஜமாத் பள்ளி பின்புறம் கழிவு நீர் வழிந்தோடைவது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட ஜமாத்தினர் முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அப்பகுதி இளைஞர்கள் குற்றச்சாட்டை வைத்தனர். இது சம்பந்தமாக நடுத்தெரு ஜமாத்தை சார்ந்த அல்லாபக்ஸ் என்பவர் கூறுகையில், “ஜமாத் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சி ஆணையரிடம் தொடர்ந்து வலியுறுத்தி மனுவும் கொடுத்துள்ளோம். மேலும் பெருநாள் சமயம் என்பதாலும், பேவர் பிளாக் சாலை வேலை நடப்பதாலும், தற்காலிகமாக நிவர்த்தி […]
நிரந்தர தீர்வு காண முடியாத நடுத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் பின்புறம் ஓடும் கழிவு நீர் பிரச்சினை… மீண்டும் புகார் அளித்துள்ள நடுத்தெரு இஸ்லாமியா சகோதரர்கள்.. நகராட்சி விரைந்து செயல்படுமா??..
கீழக்கரை நடுத்தெரு ஜூம்மா பள்ளிவாசல் பின்புறம் அருகில் உள்ள கால்வாய் அடைப்பு காரணமாக தினமும் கழிவுநீர் வெளியேறி கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன் அதை சீரமைத்து தருமாறு COMMITTEE OF MIF சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சாலை பணி நடந்து வருவதால் தற்காலிகமாக சீரமைத்து தருகிறோம் என நகராட்சி ஆனையாளர் சார்பாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தற்காலிகமாக சீரமைத்து தந்தனர். ஆனால் தற்காலிக சீரமைப்பு அசல் நாட்கள் கூட தாக்குபிடிக்கவில்லை. மீண்டும் பள்ளியின் வாசலில் கழிவுநீர் […]
அணிலை பற்றி அறிந்து கொள்வோம்.. நாமும் நேசிப்போம்.. அணில் குஞ்சுகளை மீட்டு பாலூட்டும் மதுரையை சேர்ந்த கால்நடை மருத்துவர்!!
மதுரையில் சாலையோரம் கிடந்த இரட்டை அணில் குஞ்சுகளை மீட்டு பாலூட்டும் மருத்துவர் பிரத்யேக வீடியோ காட்சிகளை நமது (சத்திய பாதை மாத இதழ்)கீழை நியூஸ் பிரத்யேகமாக நமக்கு அனுப்பி வைத்துள்ளார். மதுரை பாசிங்காபுரம் பகுதியை சேர்ந்த பிரபல கால்நடை மருத்துவர் மெர்லின் ராஜ், இவர் பணி விஷயமாக வெளியே சென்றபோது பிறந்த சில நிமிடங்களே ஆன இரு இரண்டு அணில் குட்டிகள் ஒரு மாதத்திற்கு முன்பு சாலையோரம் கிடந்துள்ளது,அதனை மீட்டு மருத்துவர் வீட்டிற்கு எடுத்து வந்து உரிய […]
மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கினார்..
மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சோலை ராஜா தலைமையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இளைஞரணி நிர்வாகிகளுக்கு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்வில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட […]
தள்ளாத வயதிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யும் சதம் வைத்தியர்..
தள்ளாத வயதிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் மதுரையைச் சேர்ந்த சித்த வைத்தியர் முனிசாமி. மதுரை காளவாசல் அருகில் உள்ள சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் 85 வயதான சித்த வைத்தியர் முனிசாமி. இவர் தனது தள்ளாத வயதிலும் பல்வேறு சமூக சேவைகளும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தனது ஆரோக்யா தொண்டு நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர […]
மதுரையில் தனியார் நிறுவனம் மற்றும் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள்..
ராஜ் அசோசியேட்ஸ் (கட்டுமான நிறுவனம்) மதுரை நேரு யுவகேந்திராவின் பாலம் யூத் வெல்பேர் கிளப், எக்ஸோடஸ் அறக்கட்டளை சார்பாக கொரோணா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சுமார் 1000 ரூபாய் மதிப்புள்ள அரிசி பருப்பு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் 1000 நபர்களுக்கும் மற்றும் 7000 ஹார்லிக்ஸ் பாட்டில்களும் இன்று வழங்கப்பட்டது. இந்த விழாவினை மதுரை மக்களைவை உறுப்பினர் சு.வெங்கடேசன் திங்கள்(இன்று) காலை 11.00 மணி அளவில் யா.நரசிங்கம் சமுதாயக் கூடத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு […]
நோன்பு பிடித்த சிறுவர், சிறுமிகளை ஊக்கமூட்டும் வகையில் பரிசு வழங்கப்பட்டது…
கடந்த வருடம் ரமலானில் அனைத்து நோன்பையும் முழுமை செய்நு இரவு தொழுகை என அனைத்து கடைமைகளையும் சிறப்பாக நிறைவேற்றிய குழந்தைகளுக்கு மட்டும் பரிசு வழங்கப்பட்டது. இந்த வருடம் முதல் பரிசை தட்டி சென்ற குட்டீஸ் அஹ்சன். இந்த ரமலான் மாதத்தில் அனைத்து நோன்பையும் நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து ஊரடங்கு அறிவிப்பு வந்ததில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை மற்றும் ஜூம்ஆ உரையாற்றியது மற்றும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் அடுத்தடுத்த வாரங்கள் அருகில் நடந்த […]
கீழக்கரை சாலை வெல்ஃபேர் அஷோஸியேசன் சார்பாக நோன்பு பெருநாள் பொருட்கள் வினியோகம்..
சாலை வெல்ஃபேர் அஷோஸியேசன் சார்பாக வருடந்தோரும் ஏழை எழிய மக்களுக்கு ஈதுல் ஃபித்ர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த வருடமும் கீழக்கரை பகுதியில் தேவையுடையோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு நோன்பு பெருநாள் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கை வீணாக்காமல் பயனுள்ளதாக ஆகிய மதுரை கல்லூரி மாணவ, மாணவிகள்..
உலகையே அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை பயனுள்ளதாக ஆக்க மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளான பாலா, அட்சயா, சுகன்யா, செந்தில், சுயம்பு, விக்னேஷ், காயத்ரி, பத்மா ஆகியோர் தங்களுக்கு தேவையான வருமானத்தை உயர்த்த யூடியூப், சமூக வலைதளம் மூலமாக கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்து தெரிந்து கொண்ட பின் அதை கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து தனித்தனியாக அவர்களுக்குத் […]
கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை பாராட்டிய மதுரை மக்கள்…
24.05. 2020. மதுரை மாவட்டம். திருமங்கலம் உட்கோட்டம், சிந்துபட்டி காவல் நிலைய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக, தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் மதுரை லயன்ஸ் கிளப் சார்பாக SI முருகதாஸ் மற்றும் போலீசாருக்கு மரியாதை செய்யும் விதமாக சால்வை அணிவித்தும், கேடயம் வழங்கி சிறப்பித்தனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை அவனியாபுரத்தில் சம்பவம்: பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை…
மதுரை அவனியாபுரம் வைகை தெரு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற சுப்பிரமணியம் (வயது 26). இவர் நேற்று (23/05/2020) மதியம் மோட்டார் சைக்கிளில் வெள்ளக்கல்- திருப்பரங்குன்றம் ரோட்டில் சென்றார். அப்போது மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே வேகமாக வந்த கார் மோதியது. இதில் சுப்பிரமணியம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டி வீழ்த்திவிட்டு அதே காரில் தப்பி சென்றுவிட்டது. இதுதொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ […]
You must be logged in to post a comment.