ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழையின் காரணமாக 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீடு இடிந்து 80 வயது மூதாட்டி உயிரிழப்பு. உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ராமலிங்காபுரம் பகுதியில் எல்லம்மாள் என்ற 80 வயது மூதாட்டி தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இன்று காலை தண்ணீர் எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றபோது திடீரென […]
Category: கீழக்கரை செய்திகள்
ஒன்றிணைவோம் வா அமைப்பின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பெறப்பட்ட 60ஆயிரம் மக்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு..
ஒன்றிணைவோம் வா அமைப்பின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பெறப்பட்ட 60ஆயிரம் மக்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் தெற்குமற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்களான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்தனர் தமிழகமெங்கும் பரவிவரும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தினை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் தமிழகமெங்கும் 18 லட்சம் அழைப்புகள் அத்தியாவசிய உதவிகள் கேட்டு […]
இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்படும் பலியை தடுக்க அமமுக மனு..
இராஜபாளையம் நகர் பகுதியில் தாமிரபரணி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தால் சாலைகள் சேதமடைந்து விபத்து ஏற்படுகிறது உயிர் பலி ஏற்ப்படும்முன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் அமமுக கோரிக்கை. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஒருபுறம் சாலைகளை தோண்டி குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது மறுபுறம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தி 42 வார்டுகள் மற்றும் அதை இணைக்கும் சாலைகளில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கும் […]
வத்திராயிருப்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க கோரியும், வழக்குகளை திரும்ப பெற கோரியும் ஆர்ப்பாட்டம்…
வத்திராயிருப்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 7500 வழங்க வேண்டும், ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களுடன் ஆர்ப்பாட்டம். ஆட்டோ ஓட்டுனர்களிடம் காவல்துறையினர் பெயர் கேட்டதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 60 நாட்களுக்கு மேலான சூழ்நிலையில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே […]
இராஜபாளையம் அருகே தென்கரை பகுதியில் மராமத்து பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்..
இராஜபாளையம் அருகே தென்கரை பகுதியில் 50 லட்சம் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள தென்கரை பகுதி் பெரியகுளம் கண்மாயில் மற்றும் கோட்டைப்பட்டி பகுதியிலுள்ள கண்மாய் என இரு பகுதிகளில் உள்ள கண்மாய்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பூஜை போட்டு துவங்கி வைத்தார் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் […]
மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை ராமநாதபுரம் ஆட்சியரிடம் திமுக., மனு…
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒன்றிணைவோம் வா செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருக்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம், இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இன்று (29.5.2020) மனு கொடுத்தார், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, ராமநாதபுரம் யூனியன் சேர்மன் கே.டி.பிரபாகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், நாடாளுமன்ற […]
கொரோனாவை விரட்ட அரசாலும் சட்டத்தாலும் எதுவும் செய்ய முடியாது மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும்… செல்லூர் ராஜு பேட்டி..
கொரோனாவை விரட்ட அரசாலும் சட்டத்தாலும் எதுவும் செய்ய முடியாது மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும். கூட்டுறவு துறை பெயருக்கு தான் பெரிய துறை ஆனால் நிதி ஆதாரமில்லாத துறை எனவும் அமைச்சர் செல்லூர் ராஜீ மதுரையில் பேட்டி. மதுரை பழங்காநத்தம் – ஜெய்ஹிந்த்புரம் – டி.வி.எஸ்.நகர் – ஆதிய பகுதிகளை இணைப்பதற்காக 2000ம் ஆண்டு 33 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் முடிவுறாத நிலையில் உள்ள பழங்காநத்தம் மேம்பாலத்தினை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ […]
இராமேஸ்வரத்தில் விடுபட்டோருக்கு பேரிடர் கால நிவாரணம்..
இராமேஸ்வரம் மாங்காடு, சம்பை கிராமங்களில் பேரிடர் கால உதவியின்போது விடுபட்ட 200 குடும்பங்களுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் படி வழங்கப்பட்டது. இதில், இராமேஸ்வரம் நகர் திமுக பொறுப்பாளர் கே.இ.நாசர்கான் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். வார்டு திமுக நிர்வாகிகள், சம்பைசேதுபதி, நாகராஜ், பாலு, நாகபாண்டி, மாங்காடு முனியாண்டி, மாரிமுத்து, முத்துமாரி, எம்எம்.கருப்பையா, எஸ்.சுந்தர்ராஜன், வே.பாண்டியன், ப.ஞானசேகரன், முத்துராமன், பெருமாள்ராஜ், துரைப்பாண்டி, பாரதி, வெங்கடேசன், பிரகாஷ், ஸ்ரீ, […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரானா தொற்று..
இராமநாதபுரத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இராமநாதபுரத்தில் ஒரு கர்ப்பிணி, கீழக்கரையைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண், முதுகுளத்தூர் அருகே வெங்கலச் குறிச்சி 13 வயது சிறுவன் உள்பட 3 ஆண்கள், மணலூரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் இருவர் உள்பட 5 பெண்கள், 4 ஆண்கள் என 15 பேருக்கு இன்று (29.5.2020) ஒரே நாளில் கொரானா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 80 […]
விவசாய இலவச மின்சாரம் ரத்து செய்யும் திட்டத்தை கைவிட விவசாயிகள் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்..
விவசாய இலவச மின்சாரம் ரத்து செய்யும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்-தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி வலியுறுத்தல். விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்கம் தலைவர் OA. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க OA.நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அந்த கோரிக்கை மனுவில் விவசாயிகள் […]
இராமநாதபுரம் ஆட்சியருடன் முதல்வர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை..
தலைமை செயலகத்தில் இருந்தவாறு, காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். நான்காம் கட்ட ஊரடங்கு நாளை (மே 31) மறுநாளுடன் நிறைவடையும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசித்தார். பொது போக்குவரத்து சேவைக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆட்சியர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இக்காணொளி காட்சி ஆலோசனை கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், கூடுதல் ஆட்சியர் […]
மதுரை அம்மன் சன்னதி அருகில் ஜவுளிகடை மீது இடிவிழுந்து பெரும் தீ விபத்து..
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள அம்மன் சன்னதியில் எதிரே உள்ள மூன்று மாடி ஜவுளிக் கடையில் மழையின் காரணமாக இடி விழுந்ததில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் நிலைய அதிகாரி தலைமையிலான குழுவினர்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அதிகமாக பரவிய காரணத்தால் தல்லாகுளம், அனுப்பானடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, சுமார் 50க்கும் மேற்பட்ட […]
மதுரையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை…
மதுரை மாவட்டத்தில் அக்கினி நட்சத்திர இறுதி நாளான இன்று (வியாழன்) இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், மக்கள் மனதும் குளிர்ந்தது. மதுரை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. ஆனால் மதுரை நகர் பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அனல் காற்று வீசி வந்தது. மதுரை நகர் பகுதியை தவிர, சோழவந்தான், வாடிப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், மம்சாபுரம், அலங்காநல்லூர், கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் கோடை […]
கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா பக்தர்களுக்கு அனுமதியின்றி தொடங்கியது…
மதுரை அழகர்கோவில் பகுதியில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி தொடங்கியது. விழாவின் முக்கிய நிழ்வாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பாடாகி பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பாக வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேவியர்களுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் […]
சாயல்குடி பெரிய கண்மாய் புனரமைப்பு பணி பூமி பூஜை..
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெரிய கண்மாய் ரூ.78 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை இன்று (27.5.2020) நடந்தது. இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி, நீர்வள ஆதாரத்து ரை குண்டாறு வடிகால் வட்ட உதவி பொறியாளர் கே.கண்ணன், உதவி செயற் பொறியாளர் கே.ராமமூர்த்தி, ஏ. உசிலங்குளம் ஊராட்சி தலைவர் செந்தூர், சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணப்பன், ஒப்பந்தகாரர் வி.கே. முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய நகர் காவல் நிலையம் கட்டிடம் தமிழக அரசின் சார்பில் 1கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜை..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய நகர் காவல் நிலையம் கட்டிடம் தமிழக அரசின் சார்பில் 1கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். தொகுதியின் சார்பில் தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் காவல் நிலையம் போதிய இடவசதிகள் இன்றி சிறிய கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.நகர் காவல்துறையினர் தங்களுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை […]
மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் மகளிர் குழுக்களுக்கு தொல்லை.. ஆட்சியரிடம் முறையீடு..
மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் மகளிர் குழுக்கள் கடன் தொல்லை தாங்காமல் வட்டாட்சியரிடம் மனு கொடுத்து முறையீடு செய்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இந்த நிதி நிறுவனங்களில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு மற்றும் இல்லத்தரசிகள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடன் வாங்கி உள்ளனர் தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் கடன் செலுத்த […]
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானை கூட்டம் அட்டகாசம்..மின்வேலி அமைத்து தர கோரிக்கை..
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானை கூட்டம் அட்டகாசம். தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை. மின்வேலி அமைத்து விவசாயிகளை காக்க வேண்டுமென என அரசுக்கு கோரிக்கை. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் அடுத்துள்ள விவசாய நிலங்களில் சுமார் 40 ஏக்கரில் தனிநபர் ஒருவர் மாமரம், தென்னை மரம், வாழை மரம் போன்ற போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது மாங்காய் […]
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்……
இராமநாதபுரம் மாவட்டம் த.ம.மு.க மாவட்ட செயலாளர் தில்லை சீமை ரகுமான் தலைமையில். ஏழு உட்பிரிவுகளை உள்ளிட்டு தேவேந்திர வேளாளர் என்று அரசாணை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று 200 நாட்களாக கருப்புச்சட்டை அணிந்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றன. கீழை நியூஸ் SKV சுஐபு
கீழக்கரையில் கொரோனோ தொற்று காரணமாக முக்கிய சாலைகள் அடைப்பு..
கீழக்கரையில் சில பகுதிகளில் தொற்று அறியப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என கண்டறியப்பட்ட கமுதி பால் கடை முதல் முஸ்லிம் பஜார் வரை சாலைகளும், சாலை தெருவிலும் சாலைகள் அடைக்கப்பட்டு தனி நபர் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் வாகனங்களில் செல்லும் நபர்கள் அப்பகுதியை தவிர்த்து மாற்று பாதையை உபயோகப்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
You must be logged in to post a comment.