விருதுநகரில் சாலையோரம் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் பிரசவம் பார்த்த செவிலியர்.. குவியும் பாராட்டு..

விருதுநகரில் சாலையோரம் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்து பிரசவம் பார்த்த செவிலியருக்கு குவியும் பாராட்டு. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உப்பத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் சாலையோரம் சுற்றித்திரிந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி என்பவர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக […]

நடுவப்பட்டி ஈஞ்சார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் குடி பராமரிப்பு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி  ஈஞ்சார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் 60  லட்சத்திற்கு குடி பராமரிப்பு பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டம் முழுவதும் 54 கண்மாய்கள் கொடி பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன இதில் அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுக்கடைகளை அரசு விரும்பி திறக்கவில்லை எந்த பாதிப்பும் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திறந்துள்ளோம். மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கைகளை […]

அரசு செயலாளர் என கூறி வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: டிப்டாப் ஆசாமி கைது..

இராமநாதபுரம் புளிக்கார தெருவைச் சேர்ந்தவர் ஜேசு உடையான் தனராஜ். இவரது மனைவி டெய்ஸி. இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள், மருமகனுக்கு  அரசு பணிக்கு முயற்சித்து வந்தனர். இதற்கிடையில் இவர்களுக்கு, ஜார்ஜ் பிலிப் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. தங்கள் மருமகனுக்கு அரசு பணிக்கு முயற்சிப்பது குறித்து ஜார்ஜ் பிலிப்பிடம் தெரிவித்தனர். தனது நண்பர் ஒருவர் ஐஏஎஸ் அந்தஸ்தில், அரசு துணை செயலராக டிஎன்பிஎஸ்சி., யில் பதவி வகிப்பதாகவும், அவரிடம், உயர் பதவிக்கேற்ப பணம் கொடுத்தால்  அரசு […]

கீழக்கரையில் எதிர்ப்பு சக்தி கபசுர குடிநீர் வினியோகம்……

கீழக்கரை அருகே உள்ள கோகுல நகரில் மூன்றாவது முறையாக இன்று அனைத்து மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் ஆலையம் நிர்வாகிகள் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கீழை நீயூஸ் SKV சுஐபு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து யானைகள் உண்டாக்கிய சேதத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம். உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மா, தென்னை உள்ளிட்ட விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மாங்காய் சீசன் என்பதால் மா மரத்தில் மாங்காய்கள் ஓரளவிற்கு விளைந்துள்ளது.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக் கோயில் பகுதியில் உள்ள விநாயகமூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டுயானைகள் மா […]

ஊரடங்கு உத்தரவால் வறுமையில் வாடும் திருநங்கைகள், மலைவாழ் மக்கள் என 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய முதன்மை நீதிபதி..

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஊரடங்கு உத்தரவால் வறுமையில் வாடும் திருநங்கைகள், மலைவாழ் மக்கள் என 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏராளமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழ்மையாைனவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை போக்க தமிழக அரசும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரங்கள் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் […]

ராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு..

ராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி தொண்டைமான் குளம் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன இந்த பகுதியில் மீனுக்காக வலை போட்டு இருந்தபொழுது அதில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமிக்கு தகவல் கொடுத்துள்ளனர் அவர் வனத்துறை மற்றும் […]

மதுரை மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக இன்று (30/05/2020) முதல் இரவு நேரங்களில் கிருமிநாசினி தெளிப்பு.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை சரவணக்குமார் மற்றும் மாவட்ட அலுவலர் மதுரை கல்யாணகுமார் ஆலோசனையின் பேரில் இன்று இரவு 9 மணிக்கு மேல் மதுரை திடீர்நகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய ஊர்தி ரயில்வே ஜங்ஷன், சேதுபதி பள்ளி, சிம்மக்கல் மற்றும் வக்கீல் புது தெரு வழியாக கிருமிநாசினி மருந்து தெளித்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் […]

மதுரை மாவட்டம் காவல்துறை அதிரடி!! சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 17 நபர்கள் கைது …

மதுரை மாவட்டம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர். .நெ.மணிவண்ணன் IPS உத்தரவுப்படி, மதுரை மாவட்டம் முழுவதும் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக சிறப்பு ரோந்து செய்ததில், மதுரை மாவட்டத்தில் 17 இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 17 நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 11 கிலோ 350 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ-1000, Pulsar இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு,மேற்படி கஞ்சா விற்பனை செய்த நபர்கள் மீது மதுரை மாவட்ட […]

உச்சிப்புளி அருகே வாகன சோதனையில் சிக்கிய வருமான வரி பெயர் பலகை தாங்கிய காரில் வந்த வாலிபர்..

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் சார்பு ஆய்வாளர் யாசர் மெளலானா தலைமையில் போலீசார் பெருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று (29.5.2020) மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியை இந்திய அரசு என எழுதப்பட்டு, வருமான வரி பெயர் பலகை தாங்கிய வாகனம்  கடக்க முயன்றது. உஷாரான போலீசார் அந்த வாகனத்தை வழி மறித்து  நிறுத்தினர். விசாரணையில், உச்சிப்புளி அருகே துத்திவலசை நாகேந்திரன் மகன் சதீஷ்கண்ணன் 20 எனவும், அவர் ஓட்டி வந்த கார் தொடர்பாக விசாரித்த […]

தொண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் மூன்று பேர் கைது. ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்..

இராமநாதபுரம்  மாவட்டம், தொண்டி அருகே நரிக்குடி விலக்கு  ரோட்டில்  இரு சக்கர வாகனத்தில் வாலிபர் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக  அலைபேசி எண் 94899 19722க்கு வீடியோ ஆதார தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் கண்காணிப்பாளர்  வருண் குமார் அறிவுறுத்தல் படி தொண்டி காவல் சார்பு ஆய்வாளர் சரவணன், திருவாடானை தனிப்பிரிவு சார்பு  ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் தலா ஒரு தனிப்படையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்னர். வீடியோவில் தெரிந்த […]

இராமநாதபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்வில்  நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ  பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இருவருக்கு  நிவாரணத் தொகை ரூ.4 லட்சத்திற்கான காசோலையை  ஆட்சியர் கொ வீரராகவ ராவ் இன்று  (30/05/2020) வழங்கினார். அவர் கூறியதாவது:  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3,64,874 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 உதவித்  தொகை, அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டுள்ளன. […]

தமிழக கேரள எல்லை பகுதியில் வாத்து ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு..

தமிழக கேரள எல்லைகளில் ஒன்றான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் சுமார் 1000 வாத்துக்கள் மற்றும் வாத்து முட்டைகளை கேரளாவிலிருந்து ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது. புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிக்காக தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையினர் கடந்த 90 நாட்களாக பணியில் அமர்ததப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களில் கோழி கழிவுகள், முட்டைகள், கோழிகள், […]

கீழக்கரையில் கபசுர குடிநீர் நகராட்சி சார்பாக வழங்கல்..தமுமுக பிரமுகர் முன்னிலை..

இன்று (30/05/2020) கீழக்கரை சாலைதெரு மற்றும் வடக்குதெரு பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் அளவில் வீடு வீடாக வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் தமுமுக உடன் இணைந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு பத்து நாட்கள் முகாம்  இன்று தொடங்கியதை. இதன் முதல் கட்டமாக இன்று (30/05/2020) வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக (தமுமுக) மாவட்ட துணைத்தலைவர் எஸ். முகம்மது சிராஜூதீன் தலைமையில் இன்றைய […]

திமுக தலைவரை கண்டித்து ஜூன் 1ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் உயர் பதவிகளில் உள்ள பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவாக பேசிவரும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களின் தரக்குறைவான பேச்சைக் கண்டிக்காத தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கண்டித்து அதிமுக., சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜூன் 1 காலை 10:30 மணி முதல் 11 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், மக்கள் அதிகம் கூடுமிடங்கள் என 4 அல்லது 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டுமன […]

மக்களின் மனுக்களை கொண்டு வந்து அரசிடம் சேர்க்கும் கொரியர் சேவை எதற்கு?..வருவாய்துறை அமைச்சர் திமுகவுக்கு கேள்வி..

தமிழக அரசு தமிழக மக்கள் அனைவரின் தேவையை பூர்த்தி செய்து வரும் நிலையில் மக்களின் மனுக்களை கொண்டு வந்து அரசிடம் சேர்க்கும் ஸ்டாலினின் கொரியர் சேவை எதற்கு, அது விளம்பர நாடகம் தான் அதை மக்கள் விரும்பவில்லை எனவும்,  ஊரடங்கில் மக்களுக்கு தேவையான தளர்வுகளை தேவையான நேரத்தில் முதல்வர் அறிவித்து வருகிறார். அதே போல மக்களின் வாழ்வாதாரமும், தொழில் துறையின் வாழ்வாதாரமும் முழுமையாக கிடைக்கும் வகையில் முதல்வர் அறிவிப்பார் எனவும் மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி. மதுரை […]

மதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் அமைச்சர் வழங்கிய பின் பேட்டி..

மதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது, கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி முதலமைச்சர் உத்தரவுப்படி எளிமையாக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய் வரை கடன் யார் வேண்டுமாலும் வாங்கிக்கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி கடனை பெற்றுக்கொள்ளலாம். திமுக தலைவரின் ஒன்றிணைவோம் திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது. திமுக அளித்த புகார் மனுக்களில் ரேஷன் கடை புகார் சம்ந்தமாகவோ, உணவு கிடைக்கவில்லை என்று […]

வேதாளை தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்..

இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மண்டபம் ஒன்றியம் வேதாளை கிளை சார்பில் ஊராட்சி தூய்மை காவலர் 20 பேருக்கு பேரிடர் கால நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறி தொகுப்பை ஊராட்சி தலைவர் ஜெ.அல்லாபிச்சை தலைமையில் மாவட்ட செயலர் கே.செந்தில் செல்வானந்த் இன்று (30.5.2020) வழங்கினார். மாவட்ட மகளிரணி துணை செயலர் கோகிலா தமிழ் குமரன், மாவட்ட வர்த்தக அணி செயலர் எஸ்.முருகானந்தம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் வி.ரஜினி, ராமேஸ்வரம் நகர் செயலர் எஸ்.முருகன் மற்றும் […]

ஜூன் 1 முதல் தமிழகத்தில் ரயில் சேவை…

ஜூன் 1 முதல் தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இது சம்பந்தமாக   ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கோவை -மயிலாடுதுறை-கோவை இடையே இயக்கப்படும் ஜன்சதாப்தி சிறப்பு ரயில் (செவ்வாய் கிழமை தவிர) மற்ற நாட்களில்  இயக்கப்படும். கோவையில் காலை 7:10 மணிக்கு புறப்படும் இந்த  ரயில் மதியம் 1:40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு கோவை சென்றடையும் மதுரை-விழுப்புரம்-மதுரை அதிவிரைவு சிறப்பு ரயில், மதுரையில் இருந்து காலை […]

சாலையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…

சோழவந்தான் காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே கண்டெடுத்த 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல் நிலையத்தில் கொடுத்து நகையின் உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜா (21) என்பவரை பாராட்டி DCB DSP விநோதினி Good Citizen Award சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கினார். காவல் ஆய்வாளர் .ராமநாராயணன் மற்றும் சார்பு ஆய்வாளர்  விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!