இன்று (06/06/2020) ஜித்தாவில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் விமானம்.. சென்னையில் தயார் நிலையில் தமுமுக ஆம்புலன்ஸ்..

இன்று (06/06/2020)  வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு 3 மணி அளவில் 140 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது ஜித்தா கவுன்ஸிலட் அதிகாரிகள்  ஹம்ரா மரியம் மற்றும் அம்ஜத் ஆகியோர் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம்  சிராஜூதீன் மற்றும் ஜித்தா தமுமுக நிர்வாகிகள் அனைத்து பயணிகளுக்கும் விமானத்தில் ஏறும் வரை உடன் இருந்து உதவிகள் செய்தனர். சென்னை செல்பவர்களில் உடலிலை குறைவான பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து உதவிகள் புரிய தமுமுக ஆம்லான்ஸ் தயார் […]

கீழக்கரையில் “கீழை தமிழ் இலக்கிய பேரவை” தொடங்க முயற்சி..

கீழக்கரைக்கு என தனித்துவமும், பல வரலாற்று சிறப்புகளும் உண்டு, ஆனால் அந்த வரலாற்று சிறப்புகளை வெளி உலகுக்கு கொண்டு வரவும், திறமையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக கீழக்கரையை சார்ந்த ஜஹுபர் அலி என்பவரால் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது இலக்கியம் என்று ஒரு வட்டத்திற்குள் இல்லாமல் அனைத்து வகையான திறமைகளையும் வெளி உலகத்துக்கு கொண்டு வந்து, இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் முயற்சியாகும். இது சம்பந்தமாக ஜஹுபர் கூறுகையில்’ “ இது பெரிய project என்பதால் இனி வரும் காலத்தில் கீழக்கரையில் அலுவலகம் […]

கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி..

கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னிட்டு 05/06/20 அன்று உலக சுற்றச்சூழல் தினத்தை முன்னிட்டு காலை 9:30 மணியளவில் கடற்கரை பள்ளி அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கீழக்கரை நகர் தலைவர் காதர் முகைதீன் தலைமையில் மற்றும் நகர் செயலாளர் அஃப்ரித் முன்னிலையிலும் நடைபெற்றது. கீழை கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவர்கள் பர்விஸ், ஜஹுபர், இப்ராஹிம் ஷா, முஜிப், அப்துர்ரஹ்மான் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் கடந்த (2019) வருடம் ஜனவரி […]

கீழக்கரையில் அறுந்து விழுந்த உயர் மின்சார கம்பி..

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில்  உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தது.  இச்சம்பவம் உடனடியாக கீழை நியூஸ் சார்பில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவித்ததின் அடிப்படையில் அங்கு மின்சார ஊழியர்கள் அறுந்த உயர்மின் கம்பியை சரி செய்யும் பணியை தொடங்கியுள்ளார்ள். கீழை நியூஸ் S.K.V சுஐபு

மஹ்தூமியா (MASA) சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவு….

ரமலான் நோன்பு மாதத்தில் கீழக்கரை மாசா சமூக நல சங்கம் மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய “சுதந்திரப்போரில் கீழக்கரையின் பங்கு”,  “அழகிய கீழக்கரை உங்கள் பார்வையில்”,  “மனிதநேய பணிகளில் கீழக்கரை” என்ற மூன்று தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.. இக்கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரத்தை இன்று (05/06/2020) MASA – மஹ்தூமியா சமூகநல  அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் வெளியிட்டுள்ளது. முதல் பரிசு 3000 இரண்டாம் பரிசு 2000 முன்றாம் பரிசு 1000 […]

கீழக்கரை “மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை” (MHCT) புதிய அலுவலக திறப்பு விழா..

மக்கள் பணி என்பது… மகேசனுக்கு செய்யும் பணி என்பதை உணர்ந்து செய்யும் பணியை சேவை மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செய்து வரும் குறிப்பிட்ட சில அமைப்புகளில் முக்கியமான அமைப்பு மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை (MHCT) ஆகும். கடந்த சில வருடங்களாக தற்காலிக அலுவலகத்தில் இயங்கி வந்த இந்த அறக்கட்ளை அலுவலகம்  நேற்று (04-06-2020) வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளிக்கிழமை இரவு மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை (MHCT) புதிய அலுவலக திறப்பு விழா மாலை நேர தொழுகைக்கு பிறகு […]

இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கீழக்கரையில் ஆய்வு….

இன்று 4.6.2020 ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி கீழக்கரையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு நடத்தினார். தடை செய்யப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் வாகனம் செல்வதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார். உடன் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கீழக்கரை நகர் செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி, திமுக மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான், மக்கள் டீம் காதர், ஹாசன்,பயாஸ், மற்றும் […]

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….

கீழக்கரையில் சமூக சேவையில் இருந்து மார்க்க செயல்பாடு வரைக்கும் முன்னிலையில் இருக்கும் அமைப்புகளில் முக்கியமான அமைப்பு  கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) அமைப்பாகும். இந்த அமைப்பு சார்பாக இந்த வருடம் சிறுவர்,  சிறுமியர்களின் தினத்திறமைகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் வகையில் ரமலான் மாதத்தில் பல்வேறு விதமான இஸ்லாமிய அடிப்படையிலான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் அதிகமான மக்கள் பங்கு பெற்றதே இப்போட்டியின் வெற்றிக்கு அடையாளமாகும். இந்நிலையில் இப்போட்டிகளுக்கான முடிவுகள் இன்று (3/6/2020) வெளியிடப்பட்டது. […]

மண்டபம் ஒன்றியத்தில் கலைஞர் பிறந்த தின விழா..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக சார்பில்  கலைஞரின் 97வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் குடியிருப்பு பகுதியில் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் திமுக., கொடியேற்றினார். மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியோருக்கு உணவு பொருட்கள், காய்கறிகள் தொகுப்பை வழங்கினார். சூசையப்பர் தேவாலய பகுதியில் 200 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை  மாவட்ட கவுன்சிலர்  ரவிச்சந்திர ராமவன்னி  வழங்கினார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஏ.சி.ஜீவானந்தம், தங்கச்சிமடம் ஊராட்சி […]

கீழக்கரையில் மறைந்த திமுக தலைவரின் கலைஞரின் 97வது பிறந்தநாள் கொண்டாட்டம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை நலத்திட்ட உதவியுடன் கொண்டாடப்பட்டது. இதில் வழக்கறிஞர் V.Sஹமீது சுல்தான் மாணவரணி அமைப்பாளர் தலைமையிலும் ஜமால் ஃபாரூக் துணைச்செயலாளர் முன்னிலையிலும், நகர் அவைத்தலைவர் மணிகண்டன்,  இப்திகார் ஹஸன் மாணவரணி துணை அமைப்பாளர், மாவட்ட பிரதிநிதி மரைக்கா,  SKV முகம்மது ஹாஜா சுஐபு, நகர இளைஞரணி அமைப்பாளர், மக்கள் டீம் காதர் நகர் வர்த்தக அணி அமைப்பாளர், ஹாஜாமைதீன் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர், சுல்தான், இளைஞர் […]

புதுமடத்தில் விபத்துக்குள்ளான மின்சார ஊழியருக்கு தமுமுக சார்பாக நிதி உதவி..

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம்  மின்சார ஊழியர் திரு பால்சாமி அவர்கள் மின்பகிர்மானம் பழுது பார்க்கும் பொழுது புதுமடத்தில் விபத்துக்குள்ளானார் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரான நோய் பரவும் இந்த இருக்கமான காவ காலகட்டத்தில் மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணி செய்யும் மருத்துவர் & செவிலியர் காவல்துறை துப்புரவு பணியாளர்கள் மின் பொறியாளர் & ஊழியர்களின் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது.  இதை கருத்தில் கொண்டு மின்சார ஊழியர் பால்சாமி  விரைவில் குணமடைய […]

கேரளாவில் அன்னாசி பழத்தை உண்ட கர்ப்பிணி யானை பரிதாபமாக உயிரிழப்பு…

கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானைக்கு சிலர் கொடுத்ததில், அதை உண்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அடையாளம் அறியப்படாத நபர்களின் இந்தக் கொடூரச் செயலுக்கு உள்ளான, அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்கு […]

உங்கள் உடல் நலத்துடன் பிறர் நலன் பேணுங்கள்…இராமநாதபுரத்தில் பிரபல மருத்துவரையும் விட்டு வைக்கவில்லை “கொரோனோ”..

கொரோனோ எனும் கொடிய வைரஸ் எங்கோ தொடங்கியுள்ளது என்று எண்ணிய நிலையில் நம் நாட்டில் நுழைந்து, நம் ஊருக்குள் தொற்றி இன்று நம் நெருங்கிய சொந்த பந்தங்களையும் தொற்ற ஆரம்பித்துள்ளது.  நமக்கு வராது என்று எண்ணி இருந்த நிலையில் நம்மையும் பாதித்து விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது. மேலும் பல்லாண்டு காலம் குடும்ப மருத்துவராக இருத்த பிரபல மருத்துவரையும் நோய் பாதித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், இந்த நோய்க்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்தியுள்ளது.  இதனால் அம்மருத்துவமனையில் […]

பனங்காட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் கைதான 6 பேரிடம் ரூ.15,800 பறிமுதல்…

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி போலீஸ் எஸ்ஐ., வசந்தகுமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். நாகநாத சமுத்திரம் பனங்காட்டிற்குள் சீட்டாடிய கும்பலை பிடித்தனர். விசாரணையில், பெரியபட்டினம் ராம்குமார், முகமது நஸீர், முகமது மீராஸா, அப்துல் மஜீத், முகமது சீனி அல்தாப், அழகன்குளம் ராஜேஷ் ஆகியோர் பணம் வைத்து சீட்டாடியது தெரிந்தது. இவர்களிடமிருந்து ரூ.15,800 ஐ பறிமுதல் செய்து 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் இவர்களை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.

ராமேஸ்வரத்தில் சிக்கிய , மதுரை போலீஸ் தேடிய குற்றவாளி..

ராமேஸ்வரத்தில் சண்டை சேவல் விற்கப்படுவதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக அலைபேசி எண் 94899 19722 க்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., அறிவுறுத்தல் படி ராமேஸ்வரம் நகர் போலீஸ் தனிப்பிரிவு காவலர் துரித விசாரணையில் வெளியூர்களில் சேவல் சண்டைக்கு வீட்டில் வளர்க்கும் சேவலை சரவணன் என்பவர் விற்பது தெரிந்தது. இதன்படி சரவணனை பிடிக்க அவர் வீட்டிற்கு  போலீசார் சென்றனர். அப்போது, அங்கு அவரிடம் சேவல் வாங்க வந்தவரிடம் போலீசார் விசாரித்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த […]

தங்கச்சிமடம் மீனவ மக்களுக்கு மணிகண்டன் எம்எல்ஏ நிவாரண உதவி..

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் கடந்த 45 நாட்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை பேரிடர் துயர் போக்கும் நிவாரணமாக வழங்கினார். அதிமுக., நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள், ஊரடங்கு உத்தரவினால் வருவாய் இழந்த தினக்கூலி தொழிலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி தூய்மை காவலர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார். இந்நிலையில் விடுபட்ட பகுதிகள், மீனவ மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சட்ட மன்ற உறுப்பினர் […]

முதியவர்களை மனம் நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி..

புதுக்கோட்டை இருதய ஆண்டவர் தேவாலயம் வாசலில் மூதாட்டி உட்பட முதியவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, அந்த வழியாக நகராட்சி ஆய்வு மாளிகை திறப்பு விழாவுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், தேவாலயம் வாசலில் முதியவர்கள் அடுத்தடுத்து உட்கார்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உடனே காரில் இருந்து இறங்கி தேவாலயத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்களிடம் விசாரித்தார். ஒவ்வொருவரும் தங்களது நிலை பற்றி எடுத்துக்கூறவே, அவர்களின் கதையைக் கேட்டுக் கவலையடைந்த ஆட்சியர், முதியவர்கள் அனைவருக்கும் உடனே முதியோர் உதவித் […]

கீழக்கரையில் வேலை செய்த வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

வட மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தமிழகமெங்கும் வேலை செய்து வருகிறார்கள். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் அவர்கள் வேலை இன்றி உணவுக்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள். தமிழக அரசு சார்பில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக இன்று (01/06/2020) பீகாரைச் சேர்ந்த 25 நபர்களும் மேற்கை வங்காளம்தை சேர்ந்த 37 நபர்களும் கீழக்கரையில் இருந்து […]

இராமநாதபுர மண்டலத்தில் தொடங்கிய பேருந்து சேவை…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில்,  இன்று (01/06/2020) காலை முதல் அரசு பேருந்து இயக்கம் தொடங்கியது. கடந்த 68நாட்களாக பேருந்து இயங்காத நிலையில் இன்று 60சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது.

மதுரை கூடல் நகரில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை செல்லூர் ராஜூ வழங்கினார்…

மதுரை 1வார்டு கூடல்நகரில் அப்பகுதி பொதுமக்களுக்கு அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் சிலம்பரசன் மற்றும் வட்டச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஏற்பாட்டில், அரிசி மற்றும் நிவாரண பொருட்களை மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!