இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி ஹரிதா ஜீவா கல்வெட்டுகள் பற்றிய சில சுவையான தகவல்கள் என்ற தலைப்பில் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசியதன் காணொளியை ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் டிவிட்டரில் பார்த்திருக்கிறார். அவர் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு, பள்ளி மாணவ மாணவியருக்கு தொல்லியல், கல்வெட்டுகள், கோவில் கட்டடக்கலை பற்றி பயிற்சி அளித்து அவர்களை தொல்லியல் ஆர்வலர்களாக […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “கீழை ரேடியோஸ்”..
கீழக்கரையில் இன்று (11/06/2020) “கீழை ரேடியோஸ்” எனும் கீழை ஒலி, ஒளி அமைப்பகம் கிழக்குத் தெரு பட்டாணி அப்பா தர்ஹா பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இந்ந நிறுவனம் மூலம் வீட்டு விசேஷங்கள், பொது காரியங்கள், பொது கூட்டங்கள் மற்றும் இன்னபிற காரியங்களுக்கும் வண்ண விளக்குகள், ஒலி அமைப்புக்கு தேவையான விசயங்கள் செய்து தரப்படும் என இந்நிறுவனத்தின் உரிமையாளர் சாஹுல் ஹமீது கூறினார்.
முகக்கவசம் அணியாதவர்களிடம் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலிப்பு..
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது அதே போல் தமிழகத்திலும் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. குறிப்பாக அனைவரும் முகக்கவசம், கையுறை சமூக இடைவெளி ஆகியவை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பாக சுகாதாரத்துறை ஆய்வாளர் பூபதி, கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் தங்ககிருஷ்ணன் மற்றும் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி, உதவியாளர் பாலா, ஆகியோர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு […]
கீழக்கரைக்கு மின் பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்க… பற்றாகுறை.. தகவல் அறியும் உரிமை சட்டம்..
கீழக்கரையில் மின் வெட்டு என்பது தொடர் கதையாக இருந்தாலும், மின்பழுதை சரிபார்க்க ஊழியர்களை கண்டறிவது என்பது மிகப்பெரிய தடங்கலாகும். இது சம்பந்தமாக மக்கள் டீம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட விபரத்தில் மின் பணியாளர்கள் பற்றாகுறை உள்ளது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசும், மின்சார வாரியமும் கீழக்கரை மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் பெற்ற மக்கள் டீம் […]
பொதுமக்கள் நலனில் அக்கறையுடன் கீழக்கரை “CROWN TRADING”..
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனோ வைரஸால் தினம், தினம் இலட்ச கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த வைரஸிலும் மக்கள் நலம் பேணாமல் பலர் இருப்பதை நாம் காண முடிகிறது. இந்நிலையில் கீழக்கரையில் மக்கள் நலன் கருதி பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்தி வரும் CROWN TRADING AGENCY தங்களிடம் நேரடியாகயும், keeggi நிறுவனம் மூலமாகவும் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி வருகிறார்கள். மக்கள் நலனில் அக்கறையுடன் […]
கீழக்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் நீண்டகாலமாக தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கீழக்கரை இந்து பஜார் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டிடம் கட்டி பல மாதங்களாக திறக்காத நிலையில். இன்று 10.06.2020 வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை கீழக்கரை தாசில்தார் வீரராஜா, துணை மண்டல வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.மேலும் இதில் ஆர்.ஐ பார்கவி, வி,ஏ.ஓக்கள், ரமேஷ், மாரிமுத்து, காளிதாஸ், […]
கீழக்கரை அருகே சுற்றுச்சுவர் இடிந்து சிறுவன் பலி….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை கிராமத்தில் இன்று (10/06/2020) காலை தன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது வீட்டுச் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில பாலா என்ற வயது 10 சம்பவ இடத்திலேயே பலியானார், மேலும் இருவர் அன்பு வயது 10, வினிதா வயது 10 ஆகியோர் படுகாயமடைந்தனர். பின்னர் அவ்விருவரை மீட்டு காவல்துறையினர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். […]
கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் தோல்வி… திருநாவுக்கரசர் எம்பி குற்றச்சாட்டு…
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, நம்புதாளை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசர் வழங்கினார். அவர் கூறியதாவது: கொரானா பாதிப்பு என்பது தனி நபருக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. காங்., திமுக., உள்பட அனைத்து அரசியல் கட்சிகள், ரோட்டரி, லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதித்தோருக்கு பேரிடர் கால நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறது. […]
தீ விபத்தில் உடமைகளை இழந்த தங்கச்சிமடம் மீனவருக்கு திமுக., உதவிக்கரம்..
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த மீனவர் ரொனால்ட். இவரது கூரை வீட்டில் 06.6.2020ல் ஏற்பட்ட மின் கசிவு தீ விபத்தில் குடிசை வீட்டில் கடன் வாங்கி வைத்திருந்த ரூ.1.03 லட்சம், தங்க மோதிரம் 6, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், இரு சக்கர வாகன ஆவணங்கள், ரேஷன் கார்டு , ஆதார் கார்டு, கல்வி அசல் சான்றுகள் மற்றும் ஆடைகள் உட்பட அனைத்தும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இது […]
மண்டபம் திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாம் முறை நிவாரணம்..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு கால கட்டத்தில், தொழில் முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதித்த தங்களுக்கு மீண்டும் உதவ வேண்டுமென திமுக., நகர் செயலர் ராஜாவிடம் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர். இதன்படி, திமுக., தலைவர் மறைந்த கலைஞரின் 97வது பிறந்த நாளையொட்டி நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி தொகுப்பை நகர் செயலர் டி. ராஜா, தனது சொந்த செலவில் வழங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா (முன்னாள் கவுன்சிலர்), […]
பாம்பன் குந்துகால் மீன்பிடி இறங்கு தள கட்டுமானப்பணி.. நவாஸ் கனி எம்பி நேரில் ஆய்வு ..
இலங்கை கடற்படையினரின் கெடுபிடியால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள், காரைக்கால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது., இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டும் தளத்துடன் கூடிய துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, மீன்பிடி இறங்கு தளத்தை […]
நடுத்தெரு COMMITTEE OF MIF சார்பாக தொடர் கபசுர குடிநீர் விநியோகம்..
கீழக்கரை நடுத்தெரு COMMITTEE OF MIF சார்பாக கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் நலன் கருதி கொரோனோ வைரசின் தாக்கத்தை குறைக்கும் வண்ணமாகவும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணமாகவும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ” கவன ஈர்ப்பு ” கண்டன ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் விடுதலை சேகரன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் தேன் அமுதன் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்யராசுவளவன் முன்னிலையில் ஓபிசி இட ஒதுக்கீடு தனியார் துறையில் இட ஒதுக்கீடு சிறப்பு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தலித் ஊராட்சி யாளர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் “கவன ஈர்ப்பு ” கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரை […]
கீழக்கரையில் காவல்துறை முன்னாள் D S P… கிருஷ்ணகிரி மாவட்ட ADSP யாக பதவி உயர்வு…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சரகத்தில் காவல்துறை துணைக்கண்கானிப்பளராக சுமார் இரண்டரை வருடம் சிறப்பாக பணியாற்றிய K.மகேஸ்வரி இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை வேப்பேரி காவல்துறை துணை ஆணையராக A C P யாக தமிழக அரசு பணியமர்தியது. தற்போது தழிழக அரசால் புதிதாக தொடங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக ADSP யாக பணி உயர்வு செய்து இருக்கின்றது. இவர் காவல்துறையில் நேர்மையோடும், துடிப்போடும் செயல் புரிந்து வருபவர். கீழக்கரையில் துணைக்கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அனைத்து […]
கடம்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேவையுடையோருக்கு பொருளுதவி…
இன்று 07-06-2020 இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் சிறுவயல் ஊராட்சிக்குட்பட்ட கடம்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கடம்பூர் கிளை உறுப்பினர்களின் சார்பாக கொரோனா தொற்று பரவுதலின் காரணமாக அன்றாட வாழ்வில் பாதிப்படைந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு- நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பரமக்குடி தொகுதி, நயினார்கோவில் ஒன்றியம், மற்றும் பல ஊராட்சிகளிருந்தும் வருகை புரிந்து உதவிகள் செய்தனர். அதே போல் இந்த சேவைக்கு நிதி உதவிகள் செய்திட்ட நாம் தமிழர் கட்சியின் கடம்பூர் கிளை […]
கொரோனா… ஊரடங்கு… பசி… வெளிநாட்டு வாழ்க்கை…
பசியோடு வந்தவர் பேரம் பேசினார், விலை படியவில்லை. அவரிடம் போதிய பணமும் இல்லை! ஆனாலும் பசி போக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு, செய்து வைத்த உணவை விற்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று காமெடி நடிகர் வடிவேலு தேங்காய் விற்பனை செய்வதைப் போன்று நான் உணவு விற்பனை செய்தேன். 7 ரியாலுக்கு விற்கும் வெஜிடேரியன் சாப்பாட்டை 5 ரியாலுக்கு வேண்டுமென்றார். அவரிடம் இருந்தது 5 ரியால் தானாம். நானும் அவரது சூழ்நிலையை […]
மக்கள் நீதி மய்ய இராமநாதபுரம் நகர் நிர்வாகி தற்கொலை..
இராமநாதபுரம் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் சரவணன்,40. மக்கள் நீதி மய்ய ராமநாதபுரம் நகர் துணை செயலாளராக இருந்தார். மேலும், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை ஏஜென்ஸியில் ஏசி மெக்கானிக் ஆக கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்தார். இவரது மனைவி கோமதி. இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்ப சண்டை ஏற்பட்டது. இதனால் சரவணனுடன் கோபித்து கொண்டு, கோமதி திருநெல்வேலி சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சரவணன், தனது வீட்டில் […]
தங்கச்சிடத்தில் தீ விபத்து நாசமான மீனவர் குடிசை..
இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ,அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த மீனவர் ரொனால்ட். இவரது கூரை வீட்டில் மின் கசிவால் இன்று (06/06/2020) மாலை ஏற்பட்ட தீ விபத்தால் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சம் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இது குறித்து ராமேஸ்வரம் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பாக் ஜல சந்தியில் இறந்து ஒதுங்கிய ஒன்றரை டன் எடை புள்ளி சுறா..
இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை வடக்கு கடல் பகுதியில் ராட்சத சுறா இறந்து கரை ஒதுங்கி கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமநாதபுரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்படி மாவட்ட வன உயிரின காப்பாளர் மாரிமுத்து, உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் உள்ளிட்ட வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆற்றாங்கரை கடற்பகுதிக்கு சென்றனர். இறந்து ஒதுங்கிய ராட்சத சுறாவை கயிறு மூலம் மீட்டனர். வாலாந்தரவை கால்நடை மருத்துவர் நிஜாமுதீன் உடற்கூறு ஆய்வு […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் 102 ஆக உயர்ந்த கொரானா பாதிப்பு..
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்று வரை 93 என சுகாதாரத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பெண், 3 ஆண்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 26 வயது கர்ப்பிணி என 6 பேருக்கு இன்று (06.6.2020) கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் கர்ப்பிணிக்கு கொரானா தொற்று உறுதியானதையடுத்து அப்பெண் வசிக்கும் ராமநாதசுவாமி நகர் சீல் வைக்கப்பட்டு அப்பகுதியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். துபாயில் இருந்து திரும்பிய […]
You must be logged in to post a comment.