முதலமைச்சரை கீழ்தரமாக விமர்சித்தால் பெரிய ஆளாகி விடலாம் என எண்ணுகிறார்கள்… அமைச்சர் பேச்சு..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில்  255 மகளிர் குழுக்களுக்கான கடனுதவி 1 கோடி 74 லட்சம்   வழங்கும் விழாவை தொடக்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் கூறுகையில்,  கொரானவை கட்டுபடுத்தும் அரசாக, மத்திய மாநில அரசுகள் உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் கூட நாடகம் ஆடுகிறார்கள்.நாடு முழுவதும் குடிநீர் பிரச்சனை இல்லை – மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை இல்லை. முதல்வரை குறை கூறினால் நாம் பெரிய ஆளாகி விடுவோம் என நினைக்கிறார்கள் – குளிர் […]

இராஜபாளையம் பகுதியில் பழைய கிணறு மற்றும் குளங்கள் மற்றும் கண்மாய்களை தூர் வாரும் பணிகளை சாத்தூர் எம்எல்ஏ ஆய்வு…

இராஜபாளையம் அருகே சட்டிகிணறு, திருவேங்டபுரம், சத்திரப்பட்டி , உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பழைய கிணறு மற்றும் குளங்கள் மற்றும் கண்மாய்களை தூர் வாரும் பணிகளை சாத்தூர் எம்எல்ஏ ஆய்வு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி சட்டிகிணறு, திருவேங்கிடபுரம், கம்மாபட்டி ,சத்திரபட்டி , நல்லம நாயக்கன்பட்டி , கொருக்காம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ஊர் மத்தியில் உள்ள பாழடைந்த கிணறு ,குளங்கள், கண்மாய்களை தூர்வாரி நிலத்தடி நீரை சேமித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படும் […]

இராஜபாளையத்தை சுற்றி திரியும் சென்னையிலருந்து லாரி மற்றும் சரக்கு வாகனம் மூலம் வந்தவர்கள்..

சென்னையில் இருந்து லாரி மற்றும் சரக்கு வாகனம் மூலம் வந்த 5 பேர் இராஜபாளையம் பகுதியில் சுற்றித் திரிகின்றனர் கொரோணா அச்சத்தில் அப்பகுதி மக்கள் கண்டுகொள்ளாத நகராட்சி மற்றும் காவல்துறையினர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகர் இரண்டு, மற்றும் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சர்ச் தெரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் 5 பேர் சென்னையில் இருந்து […]

நெல்லையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்….

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நெல்லை நுழைவு பகுதியான கங்கை கொண்டான் வாகன சோதனை சாவடியில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திற்கு சமீபகாலமாக வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நெல்லையில் […]

இராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு..

இராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தளவாய்புரம் போலிசார் விசாரணை. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சார்ந்த புதிய தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 பேர் மீது […]

சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்து..

சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காய்கறி மார்கெட் பின்புறம் ரமேஷ் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் அந்த இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலிருந்த மார்க்கெட்டில் பரவியது கொரனோ நோய்த்தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூட கூடாது என்பதற்காக அண்ணா காய்கறி மார்க்கெட் சிவகாசியில் இரண்டு இடங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு […]

தெருவிளக்கு எரியாத காரணத்தினால் இருளில் மூழ்கிக் கிடக்கும் தெருக்கள் ….

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 75 மற்றும் 76 வது வார்டு பகுதிகளில் மாடக்குளம் மெயின் ரோடு நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.  இதனால் சமூக விரோத பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயலுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளதாகவும், ஆதலால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலமுறை […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கல் சூளைக்கு மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 2 வயது சிறுமி பலி…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கல் சூளைக்கு மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 2 வயது சிறுமி பலி. நகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்டது குலாலர் தெரு பகுதி. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலைக்கு செல்லும் பிரதான சாலையில் எட்டு மாதங்களாக பாலம் வேலை நடைபெறுவதால் கனரக வாகனங்கள் செங்கல் பணிக்கு செல்லும் வாகனங்கள் என சுமார் 1000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அருகில் உள்ள குடியிருப்பு வழியாக செல்கின்றன. […]

முறையாக குடிநீர் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை. தங்களது குறைகளை சொல்ல வந்த பொது மக்களை சந்திக்க மறுத்த ஆணையாளர்…

முறையாக குடிநீர் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை. தங்களது குறைகளை சொல்ல வந்த பொது மக்களை சந்திக்க ஆணையாளர் மறுத்தால் விரக்தியுடன் திரும்பிய பொதுமக்கள். தமிழகம் முழுவதும் கோடைகாலம் முடிந்தும் குடிநீர் பஞ்சம் அதிகளவில் நிலவி வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியில் சென்று தண்ணீர் சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குடிநீர் பஞ்சம் மறைமுகமாக தமிழகத்தை பாதித்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் […]

இராஜபாளையம் அருகே வறுமையில் வாழும் 230 குடும்பத்திற்க்கு அமமுக சார்பில் உதவி..

இராஜபாளையம் அருகே வறுமையில் வாழும் 230 குடும்பத்திற்க்கு  அமமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை மத்திய மாவட்ட செயலாளர் வழங்கினார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரபட்டி, சங்கரபாண்டியபுரம், சம்சிகாபுரம், ஆகிய பகுதிகளில் வறுமையில் வாழும் 230 குடும்பங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய […]

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத டாக்டர்களுக்கு நோட்டிஸ்..

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று (18.6.2020) திடீர் ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பிரிவு சென்ற ஆட்சியர் அங்கு டாக்டர் பணியில் இல்லாதது குறித்து கேட்டறிந்தார். புறநோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை அறை உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டார். அப்பகுதிகளில் சமூக இடைவெளி இல்லாமல் புறநோயாளிகள் இருப்பதை சரி செய்ய , மருத்துவமனை ஊழியர்களிடம் அறிவுறுத்தினார். வைரஸ் தொற்று கண்டறியும் நவீன ஆய்வகம் சென்ற ஆட்சியர் வீரராகவ ராவ், அங்கு போதிய […]

கீழக்கரையில் SKV Aquarium மற்றும் மொபைல் சர்வீஸ் சென்டர் வியாபார நிறுவனம் உதயம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எஸ்.கே.வி அக்வோரியம் மற்றும் மொபைல் சர்வீஸ் சென்டர் என்ற வியாபார நிறுவனத்தை இன்று (18/06/2020) வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் கீழக்கரை டி.எஸ்.பி முருகேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன், மஹ்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், இஞ்சினியர் கபீர், மக்கள் டீம் காதர், அதிமுக கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், திமுக மாவட்ட பிரதிநிதி மரைக்கா, தமுமுக முஜீப், பாக்கர், எபன், அஜ்மல் கான், […]

இராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இருவருக்கு கொரோனா.. தொடர்புடையவர்களுக்கு சோதனை..

இராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வரக்கூடிய சுதாகர் மற்றும் காளி ஆகிய இருவரும் இராஜபாளையம் பகுதிகளில் கொரோளா தொற்று உறுதி செய்யப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது சென்னையில் சொரோனா வைரசின் […]

விருதுநகரில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா.. கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது…

விருதுநகரில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பணிபுரிந்த போக்குவரத்து காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது. விருதுநகர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் கணேசன்இவர் ஊரடங்கு அமலில் இருந்த காலம் முதல் தற்போது வரை விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் முழு உடல் பரிசோதனைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் இவருக்கு கோரோனோ வைரஸ் […]

இராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது…

இராஜபாளையம் அருகே ரெட்டியபட்டி பகுதியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ரெட்டியபட்டி பகுதியில் 16 வயது சிறுமி 2 பேர் நேற்று இரவில் காணவில்லை என கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “தனித்திரு தன்னம்பிக்கையுடன் இரு” இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி …

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி Jun 17, 2020 அன்று “தனித்திரு தன்னம்பிக்கையுடன் இரு” இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  அனைவரும் பாதுகாப்புக்கருதி, தனித்தனியாக இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பிரிந்திருக்கும் அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக இணையவழி கருத்தரங்கம் என்ற ஒன்றை கையில் எடுத்துள்ளது. IQACயின்சார்பாக 15/05/20″Gateway to Success”என்ற தலைப்பில் ,தம் கல்லூரி மாணவிகளுக்காக இணையவழி கருத்தரங்கை நடத்தியது. ஆங்கிலத்துறை 30/05/20″The Key to Effective […]

பணியில் இருக்கும் போழுது உயிரிழந்த R1 காவல் நிலைய ஆய்வாளர் குடும்பத்திற்கு 1.5 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு வெல்ஃபேர் கட்சி கோரிக்கை…

வெற்று அறிக்கையை வெளியிட்டு காவலர் குடும்பத்தை ஏமாற்ற வேண்டாம். முதல்வருக்கு வெல்ஃபேர் கட்சி கோரிக்கை. மனித உயிர்கள் மதிப்பற்றவை. அதிலும் பேரிடர் காலங்களில் முன்னிலையில் நின்று போராடும் வீரர்களின் மரணம் என்பது நாட்டிற்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய இழப்பு. கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த R1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு பாலமுரளி அவர்களுக்கு வெல்ஃபேர் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 17.06.2020 அன்று செய்தி மற்றும் தொடர்புத்துறை (செ.கு. எண்.095) சார்பாக […]

கீழக்கரை வங்கிகளில் அலைமோதும் பொதுமக்கள்.. சமூக இடைவெளி ??????…

கொரோனா தொற்று காரணமாக பல தினங்களாக கீழக்கரையில் மூடப்பட்டிருந்த வங்கிகள் இன்று (18/06/2020) மீண்டும் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு வங்கிகள் திறக்கப்பட்டதால், வங்கி பணிகள் மற்றும் அரசு ஓய்வூதியங்கள், நிவாரண உதவி பெறுபவர்கள் என மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.  ஆனால் வங்கிகள் போதிய முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தால் போதிய சமூக இடைவெளி இல்லாமலும், கொழுத்தும் வெயிலில் காத்து கிடந்தும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அரசு அதிகாரிகளும், வங்கி நிர்வாகமும் கவனத்தில் கொள்ளுமா??

கீழக்கரை உட்பட்ட பகுதியில் வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் பணி துவக்கம்..

கீழக்கரை தாலூகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வரிசை எண்கள் JRR •••• , WRM ••••, TN/34/202/ •••• ஆகிய வரிசையல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் TN/34/202/•••• எண்கள் கொண்டு ஆரம்பமாகும் பழைய கருப்பு வெள்ளை வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு அந்த எண்களை நீக்கி மாற்றம் செய்து புதிதாக வண்ண அட்டைகளாக வழங்க உள்ளனர். இதற்காக கீழக்கரை தாலூகாவிற்கு 27ஆயிரம் வண்ண அட்டைகள் வந்துள்ளது. இதனை அப்பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி […]

சீன எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு கீழக்கரை MASA அமைப்பு இரங்கல்..

சீனாவிற்கு எதிரான சண்டையில் நம் தாய்நாட்டிற்காக 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள் அதில் நம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி தொண்டி வீரசிங்கமடம் அருகேயுள்ள கடுக்கழூரைச் சேர்ந்த காளிமுத்து அவர்களின் மகன் பழனி (40) தனது 18 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் தற்போது ஹவில்தார் அந்தஸ்தில் இந்திய – சீன எல்லையான லடாக் கல்வார் பகுதியில் பணிபுரிந்துவந்தார், இந்நிலையில் ஜூன் 15 திங்கட்கிழமை அன்று இரு நாட்டிற்கு எதிரான சண்டையில் வீர மரணம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!