திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் பழிக்கு பழியாக வாலிபர் கொலை…

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் பழிக்கு பழியாக வாலிபர் கொலை. அவனியாபுரம் பெரியார் நகர் பத்ர காளியம்மன் கோயில் வாசலில் தலையை தனியாக வைத்த கொலையாளிகள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே பெரியார் நகர் உள்ளது .இங்கு இன்று மாலை ஐந்தரை மணி அளவில் அவ்வா என்ற முத்துச்செல்வம் (வயது 22 )என்ற வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது. ஏற்கனவே அவனியாபுரம் பாமக பிரமுகர் இளஞ்செழியன் கொலை வழக்கு மற்றும் அவரது தம்பி […]

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது.. ரூ.21,640 பறிமுதல்.. மதுரை மாவட்ட போலீசார் அதிரடி…

21.06.2020. மதுரை மாவட்டம். ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர், ஆனந்ததாண்டவம் தலைமையில், போலீசார் எஸ். எஸ் மஹால் மற்றும் ஐயப்பன் நகரில் ரோந்து செய்த போது, அங்கே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டுகள்- 52 பணம் ரூ- 21,640 பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

பல இடங்களில் கை வரிசை காட்டிய செயின் திருட்டு முதியவர் மன்னார்குடியில் வளைத்த போலீசார்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியைச் சேர்ந்தவர் தங்கமுத்து, 68. கடந்த 3 ஆண்டுகளாக மேலாக தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா பகுதிகளில் திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த இவர் மீது 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்த இவர் மன்னார்குடியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி, ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் அறிவுறுத்தல் படி சார்பு ஆய்வாளர் சித்ரா தலைமையில் திருவாடானை குற்றப்பிரிவு போலீசார் மன்னார்குடி சென்றனர். அங்கு […]

ராமேஸ்வரம் மீனவர் உடல்…மல்லிபட்டினத்தில் மீட்பு..

ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவரின் விசைப்படகில்  ராமேஸ்வரம் கிழக்காடு ரெஜின் பாஸ்கர் 43, பாம்பன் அக்காள்மடம் (தெற்கு) மலர் வண்ணன் 43, தங்கச்சிமடம்  சூசையப்பர் பட்டினம்(மேற்கு) சேசு 60, பாம்பன் அக்காள்மடம்  சேதுபதி நகர் நஸ்ரேன் மகன்  ஆஸ்டின் சுசீந்தர் 19 ஆகியோர் ஜூன் 13ல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஜூன் 14 ல் கரை திரும்ப வேண்டிய இவர்கள் ஜூன் 16 ஆம் தேதி வரை  திரும்பவில்லை. மாயமான மீனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்காத மீன்வளத்துறை, தேடும் பணியில் […]

திருவாடானை அருகே நூற்பாலை தொழிலாளர்கள் திடீர் முற்றுகை…

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே  சின்ன கீரமங்கலத்தில் தனியார் மில் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், 40 நிரந்தர தொழிலாளர்கள், 80க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரானா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு உத்தரவையடுத்து ஆலை மூடப்பட்டது. இதனால், இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஆலை தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே மாத ஊதியம் வழங்க  மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டது. ஊரடங்கு உத்தரவு நாளில் இருந்து இன்று வரை […]

தென்காசி பகுதி மருத்துவ முகாம்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…

தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்காசி நகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து அமைக்கப்பட்டுள்ள கீழப்புலியூர் முத்தையா சொர்ணம்மாள் திருமண மண்டபம், தாய் சேய் நல விடுதி மற்றும் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு பூங்கா பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார். கீழப்புலியூர் முத்தையா சொர்ணம்மாள் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ […]

கீழக்கரையில் தென்பட்ட சூரியகிரகணம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (21/06/2020) சுமார் 11 மணி அளவில் சூரிய கிரகணம் தென்பட்டது.  இதை பல்வேறு இடங்களில் வெறும் கண்களால் பார்க்க இயலாத காரணத்துனால் வெல்டிங்க்கு பயன்படும் கண்ணாடி மூலம் கண்டனர். கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் பன்னிரண்டாவது ஆண்டு துவக்க விழா..

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் பன்னிரண்டாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நகர தலைவர் ஹமீது பைசல் தலைமையில் கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும்  நகர் இணைச்செயலாளர் தாஜுல் அமீன் கொடியை ஏற்றினார். நகர் செயலாளர் பகுருதீன் உட்பட 5 கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தென்காசி மாவட்டத்தில் சென்னையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு பணிகள் தீவிரம்…

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நெல்லை,தென்காசி பகுதிகளில் வெளியூரில் உள்ளவர்கள் தனது சொந்த ஊருக்கு திரும்புவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் பங்களாச் சுரண்டை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த, சென்னை திருவல்லிக்கேணியில் போலீசாக பணியாற்றி வரும் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. சென்னையில் […]

இராமநாதபுரத்தில் குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்…

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி இராமநாதபுரம் ரெட் கிராஸ், ராஜெம் மோட்டார்ஸ், ராஜெம் கார்ஸ், அன்பு டிவிஎஸ்சார்பில் இராமநாதபுரம் ராஜெம் மோட்டார்ஸ் ஷோரூமில் இன்று (20.6.2020) ரத்த தான முகாம் நடைபெற்றது. ராஜெம் மோட்டார்ஸ் உரிமையாளர் நல்லமுத்து தலைமை தாங்கினார். ஏவிஎம்எஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி தாளாளரும்  ஜூனியர் ரெட் கிராஸ் துணைத் தலைவருமான எஸ்.ஜெயக்குமார்,  முன்னிலை வகித்தார். ரெட் கிராஸ் பொருளாளர் சி.குணசேகரன் வரவேற்றார். ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் தொடங்கி வைத்தார். ரத்த தானத்தின் அவசியம் […]

முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு… 3பேர் கைது..

இராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு. இந்த கொலை முயற்சி தொடர்பாக அண்ணன் தம்பி மூன்று பேர் கைது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் பகுதியில் கடந்த நான்கு முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சார்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் […]

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வத்திராயிருப்பு இளைஞர்கள் இயற்கை முறையில் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீர்…

கொரோனா தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வத்திராயிருப்பு இளைஞர்கள் இயற்கை முறையில் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீரை தாங்களே தயாரித்து வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுகுதி இளைஞர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேப்பிலை சாரை பிளிந்தும் , மஞ்சள் நீரை கலந்தும் தாங்களே இயற்கை […]

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 6 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல்…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 6 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் ஜெயபாலாஜி என்பவரை கைது செய்து அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை. கொரோணா ஊரடங்கை பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை வெளியூரிலிருந்து கடத்தி அதிகவிலைக்கு விற்பதற்காக அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பில் உள்ள ஒரு வீட்டில் மூடை மூடையாக பதுக்கி வைத்திருப்பதாக அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகலையடுத்து சிங்காரத் தோப்பில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்த போலீசார் அங்கு மூடைமூடையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த […]

பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து 9 பேர் காயம்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து 9 பேர் காயம் மல்லி காவல்துறையினர் விசாரணை. ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பட்டாசு ஆலைகள் தற்போது 5 சதவீத பணியாளர்களுடன் வேலையை தொடங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி பட்டாசு ஆலைக்கு வேலைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே […]

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் பெறுவது எப்படி.???

தமிழக முதல்வர் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை கருதி தமிழகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார். இந்த நிவாரண நிதியை பெற மாற்றுத்திறனாளிகள்  அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரி  (V.A.O) மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து அவர்களுக்கு நிவாரண தொகை ரூபாய் ஆயிரம் பெறுவதற்கான ஒரு கூப்பன் வழங்குவார். இந்த கூப்பனை தங்கள் பகுதிக்கு உள்பட்ட […]

இருள் நீங்கி ஒளி பிறந்தது… கீழை நியூஸ் எதிரொலி..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 ஆவது வார்டு மற்றும் 76வது வார்டு தெரு விளக்கு பல பகுதிகளில் எரியவில்லை என நேற்று நமது கீழை நியூஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் எதிரொலியாக இன்று (19/06/2020) காலை மாநகராட்சி மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து எரியாத தெருவிளக்குகள் அனைத்தையும் அகற்றி விட்டு மீண்டும் புதிய எல்இடி ஆன தெரு விளக்குகளை அமைத்துக் கொடுத்தனர். பல நாட்களாக எரியாமல் இருந்த விளக்குகள் எரியத் தொடங்கியது. […]

இளம்பெண்ணை கடத்திய வழக்கில் அமமுக நிர்வாகி கைது..

இராமநாதபுரம் மாவட்ட அமமுக., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலர் கமுதி போஸ் செல்வா, 31. இவர் கமுதி பஸ் ஸ்டாண்டில் டீ டை நடத்துகிறார். இந்நிலையில் கடைக்கு வரும் வாடிக்கையாளரான ராணிபேட்டையை சேர்ந்தவரும் கமுதியில் வசித்து வரும் வடமலை மகன் சூர்யாவிடம் 25, நட்பு ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வேயில் உணவகம், டூவீலர் நிறுத்துமிட குத்தகை எடுத்து தருவதாக கூறி போஸ்செல்வாவிடம் சூர்யா ரூ.32 லட்சம் வாங்கியுள்ளார். கடந்த 6 மாதங்களாக எந்த கான்ட்ராக்ட் பெற்று […]

மதுரையில் அதிகரிக்கும் கொரோனோ.. ஒரே நாளில் 98 பேர் பாதிப்பு.. பீதியில் மக்கள்..

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது என்றும் இல்லாத அளவுக்கு இன்று (19/06/2020) முதன் முறையாக அதிகபட்சமாக 98 என்ற எண்ணை தொட்டுள்ளது. பொதுமக்கள் இடையே பெரும அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தினசரி 5 அல்லது 20 அதிகபட்சம் பாதிப்பானது இருந்து வந்த நிலையில் இன்று 98 என்பது மதுரை மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்ல வேண்டும். இதுவரை 498 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 350பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளறர். மேலும் பாதிப்பு […]

சொந்த வாகனத்தில் சென்னையிலிருந்து ஆட்களை அழைத்து வந்த சென்னை ஆயுதப்படை காவலரின் கார் பறிமுதல்.. துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை..

இ பாஸ் இல்லாமல் தனது சொந்த வாகனத்தில் சென்னையிலிருந்து ஆட்களை அழைத்து வந்த சென்னை ஆயுதப்படை காவலரின் கார் பறிமுதல்-துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் காவல்துறை பரிந்துரை. வெளியூரிலிருந்து வரும் வாகனங்களை கண்காணிப்பதற்காக விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சத்திரரெட்டியாபட்டி சோதனை சாவடியில் போலிஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தனியார் வாகனம் ஒன்று வந்துள்ளது. வாகனத்தை நிறுத்திய போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது சென்னை ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் பாரத் ராஜ் என்பவர் உரிய […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “21st CENTURY TEACHING SKILLS” தலைப்பில் நடைபெற்ற இணையவழி சர்வதேசப் பயிலரங்கம் நிழகழ்ச்சி…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ” 21st CENTURY TEACHING SKILL ” என்னும் தலைப்பில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம் 17/06/2020 முதல் தெடங்கி 19/06/2020 வரை நடைபெற்றது. இந்த பயிலரங்கம் அரபித்துறை துறைத் தலைவர் M. ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் தொடங்கியது.  இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் Dr. A. R. நாதிராபானு கமால் “ஒரு தலைவனின் கடமை” தனக்குக்கீழ் உள்ளவர்களின் தனித்திறமையைக் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!