கீழக்கரையில் இயங்கி வரும் சமுகசேவை அமைப்பான மஜ்ம- உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை(MHCT) சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கோரிக்கை மனுவில் இஸ்லாமிய கல்வி சங்கமும் வேண்டியிருப்பதாவது:- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயனடையும் வண்ணம் கடந்த 2004 ஆண்டு கீழக்கரை தனித்தாலூகா உருவாக்கப்பட்டு அதன் புதிய அலுவலகமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறப்புவிழா கண்டு கீழக்கரையில்செயல்பாட்டுக்கு வந்துள்ளது.ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல் இன்னும் சார்நிலை கருவூலம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களும்,ஆசிரியர்,அரசு […]
Category: கீழக்கரை செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் 400ஐ கடந்த கொரானா தொற்று…
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று பரவல் கடந்த இரண்டு வாரங்களாக இரட்டை இலக்கத்தில் தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் ஆயுதப்படை வீரர் 2 பேர், தொண்டி கடற்படை முகாம் பாதுகாப்பு பணிக்குச் சென்ற சிறப்பு போலீஸ்காரர் நெடுங்குறிச்சியைச் சேர்ந்த 23 வயது கர்ப்பிணி, கீழக்கரையில் 80 வயது முதியவர், நகரிகாத்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், 14 வயது சிறுமி, வெள்ளையாபுரத்தில் 10 வயது சிறுமி உள்பட 35 ஆண்கள், 22 பெண்கள் என […]
குற்ற சம்பவங்கள் தொடர்பாக காவல் துறை நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை..
இராமநாதபுரம் பஜார் காவல் போலீசில் 09.6.2020 ஆம் தேதி பதிவான வழக்கில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் 10.6.2020 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் பல கோடி ரூபாய் மோசடி தெரிய வந்ததையடுத்து, இவ்வழக்கு பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிமணி, ஆனந்த் மீது தொடர் புகார்கள் வந்தன. இதன்படி நீதிமணி, ஆனந்த் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து மோசடி தொடர்பாக விசாரித்து வாக்குமூலம் படி தமிழக டிஜிபி ஒப்புதல் பெற்று […]
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை..
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது. ஆனால் இந்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் மருந்து விளம்பரத்தை நிறுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மழை நீர் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி பலி சடலமாக மீட்ட தீயணைப்பு தீயணைப்புத்துறையினர்.
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட வசந்த நகர் மூன்றாவது தெருவில் வசித்து வரும் பத்மஸ்ரீ வயது 70 இவர் கணவருடன் வசந்த நகரில் தனியாக வசித்து வருகிறார்கள். இவருடைய மகள் வெளிநாட்டில் உள்ளார். இந்தநிலையில் வழக்கம்போல பத்மஸ்ரீ இன்று (24/06/2020( காலை வாசல் தெளித்து கோலம் போடும் பொழுது எதிர்பாராதவிதமாக மழைநீர் சேகரிப்பு போடப்பட்டிருந்த தொட்டியில் தவறி விழுந்துள்ளார். பல மணி நேரம் மனைவியைக் காணத காரணத்தால் அவருடைய கணவர் அக்கம்பக்கத்தில் தேடியதில் தொட்டியில் கிடப்பதை […]
பள்ளி மாணவி தூக்கு போட்டு சாவு ..
மதுரை நிலையூர் தனலட்சுமி நகரைச் சேர்ந்த சுரேஷ் குமார் மகள் மாரியம்மாள் (வயது 17). இவர் திருப்பரங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலி தொல்லை இருந்து வந்தது. இதனால் அவர் வீட்டில் வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்து வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாரியம்மாள் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் […]
மதுரையில் துவங்கியது முழு ஊரடங்கு ..வெறிச்சோடிய வீதிகள் … கிறீச் சத்தமிடாத வாகனங்கள் …
மதுரை நகராட்சி பகுதி, திருப்பரங்குன்றம் யூனியன், பரவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அந்த பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு இன்று (24/06/2020) முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கையொட்டி பல பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேநீர் மற்றும் நகைக் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. தேநீர் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், சைக்கிளில் சிலர் டீ விற்பனை செய்தனர். பால் மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் வழக்கம் போல செயல்பட்டன. பொருட்கள் வாங்க சிலர் சாலைகளில் நடமாடினர். இறைச்சி கடைகள் முன்பாக மக்கள் சமூக இடைவெளியின்றி […]
மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..
மதுரை திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் மற்றும் முருகன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தனர். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருப்பரங்குன்றம் வட்டக்கிளை சேர்மன் பாரதி அவர்கள் முன்னிலையில் அப்பகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. குருசாமி, பாண்டித்துரை, […]
திருப்பரங்குன்றம் அருகே சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் 4 பேர் கைது..
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட முத்துச்செல்வம் கொலைவழக்கில் 4 பேர் கைது . தலைமறைவாக உள்ள நீதியை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் அவா என்ற முத்துச்செல்வம் (வயது 22) முத்து செல்வத்தின் மீது அவனியாபுரம், பெருங்குடி, மதுரை மாநகர் பகுதிகளில் பல்வேறு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த வருடம் மார்ச் 29ம் தேதி கொள்ளப்பட்ட […]
முழு ஊரடங்கு காரணமாக மதுரை நகருக்குள் வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் மாவட்ட எல்லையில் நிறுத்தம் மதுரை மாவட்ட ஆட்சியாளர் தகவல்…
மதுரை மாவட்டத்தில் மாநகர எல்லை பகுதி கிழக்கு மேற்கு திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு 24ஆம் தேதி அதிகாலை முதல் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் முழுமையாக பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் சிவகாசி ராஜபாளையத்தில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் திருமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படும். அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் காரியாபட்டி வரை மட்டுமே இயக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து […]
சாத்தூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சுமார் 300 பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அதில் பணிபுரியும் ஆண் பணியாளர்கள் தங்களின் உடல் அசதியை குறைக்க மது மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். சாத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபட்ட கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யபடுவதாகவும் அதை இளைஞர்கள் பெரியளவில் வாங்கி பயண்படுத்தி வருவதாக சாத்தூர் நகர் காவல் உதவி ஆய்வாளர் ராமசாமிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சாத்தூர்-சிவகாசி சாலையில் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள். தமிழகத்தில் கொசோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அனைவரும் பாதுகாப்பான முறையில் பணி புரிய வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல், முக […]
அரசு கல்லூரி மாணவியர் விடுதியை கொரோனா பரிசோதனை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு..
அரசு கல்லூரி மாணவியர் விடுதியை கொரோனா பரிசோதனை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நென்மேனி சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. தற்போது கொரோனாவினால் விடுதி செயல்படவில்லை இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் நகர் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்களை அமைக்க உள்ளனர், நகராட்சி பணியாளர்கள் இன்று மாணவிகள் விடுதியை சுத்தம் படுத்தும் பணியினை ஆரம்பித்து செய்து […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை போட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், நூதன போராட்டம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை போட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், இருசக்கர வாகனத்தை மனிதன் இழுத்து செல்வது போன்றும் நூதன போராட்டம்… கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி ஏராளமான பொதுமக்கள் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் உயர்ந்து வருவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் […]
சேலத்தில் இருந்து புகையிலை பொருள் கடத்தி வந்த இருவர் கைது…
இராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் சாலையில் முதுகுளத்தூர் போலீசார் நேற்று (22.6.2020) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பரமக்குடியில் இருந்து காக்கூர் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூடை அரிசியுடன், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 20 பெட்டிகளை சட்ட விரோதமாக கடத்தி வந்தது தெரிந்தது. இதை பறிமுதல் செய்த முதுகுளத்தூர் போலீசார் வாகன உரிமையாளரும், ஓட்டுநருமான சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் மாதையன் மகன் அய்யனார் (எ) அய்யாத்துரை (33), ராஜமாணிக்கம் மகன் நடராஜன் (28) […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளருக்கு பேட்டி…
கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற எடப்பாடி அவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை எள்ளி கையாடும் பணியை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடி மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்தால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நரேந்திர மோடி எடுக்கும் நடவடிக்கைகளைகளுக்கு , எடப்பாடி அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை சிப்பாயாக பாதுகாத்து வருகிறார். அடுத்த ஆட்சி கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த ஸ்டாலின் கோபத்தின் வெளிப்பாடாக இந்த ஆட்சி மீது புழுதிவாரித் […]
படகு மூழ்கி பலியான மீனவர் குடும்பங்களுக்கு ராமநாதபுரம் எம்.பி., நிவாரண நிதி..
இராமேஸ்வரத்தில் இருந்து 13.6.2020 இல் ஹெட்ரோ என்பவரது விசைப்படகில் ராமேஸ்வரம் கிழக்காடு ரெஜின் பாஸ்கர் 43, பாம்பன் அக்காள்மடம் (தெற்கு) மலர் வண்ணன் 43, தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம்(மேற்கு) சேசு 60, பாம்பன் அக்காள்மடம் சேதுபதி நகர் நஸ்ரேன் மகன் ஆஸ்டின் சுசீந்தர் 19 ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் படகு மூழ்கியதால் மீனவர் 4 பேரும் மாயகினர். இவர்களில் ஜேசுவை, மல்லிபட்டினம் மீனவர்கள் மீட்டு மணல்மேல்குடி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ரெஜின் பாஸ்கர், ஆஸ்டின் சுசீந்தர், மலர் […]
அதிகார பறிப்பை தடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கமுதி வட்டார ஊராட்சி தலைவர்கள் மனு..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம், கமுதி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் வி.பெரியசாமி, செயலர் கே.நாகரத்தினம், பொருளாளர் கே.டி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் அளித்த மனு: கடந்த 2016 முதல் 2019 வரை தனி அலுவலர்களால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், 14 வது நிதிக்குழு மானிய நிதி உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் திட்ட பணிகள் தேர்வு செய்தல், ஒப்பந்த புள்ளி கோருதல் உள்ளிட்ட பணிகளை கிராம ஊராட்சிகள் […]
இராமநாதபுரத்தில் கொரானா தொற்று பாதித்தோருக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திமுக., கூட்டணி ஆட்சியரிடம் மனு..
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொரானா தொற்று பாதித்தோர் 100 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய குடிநீர், முகக் கவசம், அளவில்லா சாப்பாடு வழங்கவில்லை. சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து தர வில்லை என கூறி கொரானா தொற்று பாதித்தோர் கடந்த சில நாட்களுக்கு முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம், திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் […]
லடாக்கில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு கவர்னர் சிறப்பு நிதி ரூ.20 லட்சம் இன்று வழங்கப்பட்டது…
இந்திய-சீன எல்லை கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ ஹவில்தாரான தமிழக வீரர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்களூர் காளிமுத்து மகன் பழனி உள்பட 20 பேர் வீர மரணம் எய்தனர். சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட பழனி உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க 18.6.2020 காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சத்திற்கான […]
You must be logged in to post a comment.