தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்தச் சொல்லி வற்புறுத்தல்.. ஆட்சியரிடம் மனு..

தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்தச் சொல்லி வற்புறுத்துவதாக இந்திய மாதர் சங்கம் சார்பாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பல நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுவில் பெண்களுக்கு கடன் வழங்கி உள்ளார்கள். கடன் வாங்கிய அனைவரும் அந்தப் பகுதியை சுற்றி உள்ள பட்டாசு தொழில் தீப்பெட்டி தொழிற்சாலையை அன்றாட கூலி வேலை செய்பவர்கள் அதனை நம்பி கடன் […]

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு தனது வாகனத்தில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

அருப்புக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு தனது வாகனத்தில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர். விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி முத்தரையர் நகரைச் சேர்ந்த வீரவேல் அன்னலட்சுமி தம்பதியினர் தனது இரண்டு குழந்தைகளுடன் குள்ளூர்சந்தையில் தனது உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது பாலவனத்தம் அருகே இருசக்கர வாகனம் தடுமாறிக் கீழே விழுந்ததில் இரண்டு குழந்தைகள் மனைவி உட்பட 4 பேரும் காயமடைந்தனர். உதவிக்காக போராடிக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே […]

இராஜபாளையம் அருகே காந்தி தேசிய ஊரகத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேல்நிலை தொட்டி மற்றும் புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் துவக்கம்..

இராஜபாளையம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரகத் திட்டத்தின் கீழ் 80 லட்சம் மதிப்பிலான குடிநீர் மேல்நிலை தொட்டி மற்றும் புதிய பாலம் அமைப்பதற்கான பணிகளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேசிகாபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இராஜபாளையம் ஊராட்சி மன்ற பெருந்தலைவர் சிங்கராஜ் மற்றும் துணைத்தலைவர் துரை கற்பகராஜ், வட்டார […]

போக்குவரத்தில் சிரமம்.. தொழிலாளர்கள் வருவதில் சிக்கல்…பட்டாசு தயாரிப்பாளர்கள் கவலை..

விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இருந்தாலும் கடந்த ஒன்றாம் தேதி முதல், மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்துகள் துவங்கியது. இதனால் தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீராகத் தொடங்கியது. மாவட்டத்தின் பிரதான தொழிலாக பட்டாசுத் தொழில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. நேரிடையாக பட்டாசுத் தொழிலில் சுமார் இரண்டு லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். பொது போக்குவரத்து மண்டலங்களாக பிரித்த […]

நிச்சயதார்த்தப் பெண்ணிற்கு கொரோனா.. விழாவிற்குவந்தவர்களுக்கும் பரிசோதனை..

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிச்சாயதார்த்தம் நடைபெற்ற 25 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று. சிகிச்சைக்கு அழைக்க சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி. நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டோர் கூண்டோடு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். காரியாபட்டியில் தாலுகா அலுவலகம் முன்பு விதை உற்பத்தியாளர்கள் சங்கம் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் பணிபுரியும் காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்த பெண் (25 )ஒருவர் பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் கோவில்பட்டியை சேர்ந்தவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி […]

கொரோனா பாதித்த பிரபல இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை?-நெல்லையில் பரபரப்பு..

நெல்லையில் அல்வாவிற்கு புகழ் பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வாவிற்கு புகழ்பெற்றது. குறிப்பாக தென்னிந்திய சுற்றுலா பயணிகள் இங்கு அல்வா வாங்குவது வழக்கம். கடை ஆரம்பிக்கப்பட்ட நாளில் ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. மாலை நேரத்தில் தான் இது திறக்கப்படுவது வழக்கம் என்பதால் இருட்டாக காணப்படும். கடை என்பதே காலப் போக்கில் மாறி […]

ஆலங்குளம் காவல் நிலையத்தில் கொரோனா பாதிப்பு; காவல் நிலையம் மூடல்-தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்…

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. பொதுமக்களிடையே கொரோனா குறித்த அச்சம் எழுந்துள்ளது. கொரோனா தடுப்பு,கண்காணிப்பு, சுகாதார பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையம் தற்போது மூடப்பட்டு தாசில்தார் பட்டமுத்து தலைமையில் சுகாதார துறையினர் கிருமி […]

விருதுநகர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தீ விபத்து…

விருதுநகர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத்துறை வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வட்டாச்சியர் அறையிலிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்தாக கூறப்படுகிறது. மேலும் அந்த அறையிலிருந்த மேஜை, நாற்காலி மற்றும் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. நேற்று இரவு அந்தப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மின்சாரக் கோளாறு ஏற்பட்டு விபத்து நடந்ததாக கூறுகின்றனர். விபத்து குறித்து போலீசார் […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் பூமி பூஜை..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி பகுதிகளில் புதிய சமுதாயக் கூடம், பயணிகள் நிழற்குடை, கலையரங்கம் உள்ளிட்ட கட்டிடங்கள் சிவகாசி சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, திமுக தலைவர் முக ஸ்டாலினை முதல்வராக தமிழக மக்கள் மட்டுமல்லாமல் புலம்பெயர் தமிழர், ஈழத்தமிழர்கள் என எந்த தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுகவில் உள்ளவர்கள் மட்டுமே மு.கஸ்டாலினை முதல்வர் என கூறிவருக்கிறார்கள், வாக்களிக்கும் மக்கள் அவ்வாறு […]

அருப்புக்கோட்டையில் மின்கசிவால் பட்டாசு கருந்திரிக் கட்டுகள் தீப்பற்றி விபத்து. கணவன், மனைவி படுகாயம்..

அருப்புக்கோட்டையில் மின்கசிவால் பட்டாசு கருந்திரிக் கட்டுகள் தீப்பற்றி விபத்து. கணவன், மனைவி படுகாயம் – வீடு முற்றிலும் சேதம் – தீ விபத்து குறித்து நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் மகன் கந்த வேலு (56). இவரது மனைவி மாரியம்மாள் (42). இத்தம்பதியர் தமது வீட்டிலேயே கூலிக்கு, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பட்டாசுத் கருந்திரிகளை தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தயாரித்த கருத்துக்களை தொழிற்சாலைகளுக்குத் அனுப்ப தயாராக கட்டுகளாகக் கட்டி […]

ஆன்லைனில் சீட்டு விளையாடி கடனானதால் காவலர் மாயம்….கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் மனைவி புகார்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைனில் சீட்டு விளையாடி கடனானதால் காவலர் மாயம்.தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் மனைவி புகார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் தமிழக அரசின் 11-வது பட்டாலியன் படைப்பிரிவு உள்ளது. அங்கு காவலராகப் பணி புரிபவர் சேரன் பாண்டியன் (26) அங்குள்ள காவலர் புதிய குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் சேரன் பாண்டியன் ஆன்லைனில் சீட்டு விளையாண்டு கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடனை அடைப்பதற்காக மனைவியின் நகையை வாங்கி […]

கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை, மகன் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்…

கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை, மகன் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் 200க்கு மேற்பட்ட செல்போன் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம். கோயில்பட்டியில் வியாபரிகள் மற்றும் காவல்துறையினருக்கு ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் வணிகர்கள் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக […]

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதா? மத்திய அரசின் அறிவிப்பிற்கு பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனம்…

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கண்காணிக்கப்படும் என மத்திய அமைச்சரவை, கொள்கை முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மத்திய அரசின் இந்த முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]

கொரோனா எதிரொலி-பான்,ஆதார் இணைக்க,வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..

வருமான வரி தாக்கல் செய்திட மற்றும் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 2020ம் ஆண்டு ஜூலை 31 வரை, ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இதேபோல, ஆதார் அட்டையை, பான் எண்ணுடன் இணைப்பதற்கான கால வரம்பையும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க, 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, […]

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும்-மாவட்ட ஆட்சியர் தகவல்…

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத் தொகை ரூ.1000 வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா வைரஸ் (கோவிட்-19) நோய் தொற்று பரவலினை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இக்காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. தற்போது 30.06.2020 […]

சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம்-கருப்புக்கொடி, சின்னம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள்..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு உத்தரவு நேரத்தை மீறி கூடுதலாக சில நிமிடங்கள் கடை திறந்ததால் போலீசாரின் தாக்குதலால் ஜெயராஜ் மற்றும் பென்னிஸன் என்ற இரு வியாபாரிகள் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், உரிய நீதி வழங்க வலியுறுத்தியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்டம் சுரண்டையில் நேற்று வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ் தலைமையில் செயலாளர் ஏடி நடராஜன், பொருளாளர் தனபால், துணை தலைவர் சிவசக்தி […]

பரவைபேரூராட்சியில் கொரோனா ஊடரங்கையொட்டி எல்லைகள் மூடப்பட்டது…

மதுரை மாவட்டத்தில் மதுரைநகர், திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு,மேற்கு மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ்நோய்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் மாவட்டநிர்வாகம் 23ந்தேதி இரவு12மணி முதல் 30ந்தேதிவரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அதனால் பரவை பேரூராட்சிக்குட்பட்ட எல்லைகள் அதலை சாலை, மதுரை சாலையில் பரவை கீழ்பாலம், துவரிமான் சாலை ஆகியவற்றை தடுப்புதகரங்களை கொண்டு அடைத்து மூடும்பணி நடந்தது. இந்த பணியினை செயல்அலுவலர் சுந்தரி தலைமையில் இளநிலை உதவியாளர் முத்துபாண்டி, பணிஆய்வாளர் கருப்பையா, குடிநீர்வழங்கல் மேற்பார்வையாளர் சுந்தரராஜன், சுகாதாரபணி மேற்பார்வையாளர் ராமு உள்பட சுகாதாரபணியாளர்கள் மேற்கொண்டனர். செய்தியாளர் வி காளமேகம் […]

கொரோனா சிகிச்சைக்கு ரயில்வே ஆஸ்பத்திரியை வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…

மதுரையில் கொரோனா தொற்று அதிகமானதை தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது ரயில்வே மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பல படுக்கைகள் கொண்ட மருத்துவப் பிரிவு தனித்தனி சிறு அறைகளாக மாற்றப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆக்சிசன் வழங்கல் தொடர்பு வசதி, காற்றோட்ட வசதி, அலைபேசி மின்னூட்ட வசதி, […]

பரமக்குடியில் 6 மாத ஆண் குழந்தை, எமனேஸ்வரத்தில் 2 வயது பெண் குழந்தைக்கு கொரானா தொற்று..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 6 மாத ஆண் குழந்தை உள்பட 10 ஆண்கள், 3 பெண்கள், எமனேஸ்வரத்தில் 2 வயது பெண் குழந்தை உள்பட 2 பெண்கள், 2 ஆண்கள், கமுதியில் 2 பெண்கள், முதுகுளத்தூரில் ஒரு ஆண் என 21 பேருக்கு சற்று முன் கொரானா தொற்று சற்று முன் உறுதியாகி உள்ளது.

கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில மலிவு விலையில் பனியன் துணியால் ஆன முக கவசம்..

கீழக்கரையில் பொதுமக்களிடம் நோய்பரவல் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்க தற்காப்பு அவசியத்தை வழியுறுத்தி இன்று (24/06/2020) மக்கள் டீம் சார்பாக முகக்கவசம் ₹5/க்கு கொடுக்கப்பட்டது. பனியன் கிளாத் முகக் கவசம் ₹5 என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். முகக் கவசம் கிடைக்கும் இடங்கள் : ESSAR அம்பலம் பில்லர்ஸ் பெட்ரோல் பங்க், மெயின்ரோடு (VSசாலை) லூலூ சென்டர். சின்னகடைத் தெரு தபுல் ஆலம் அல்இஹ்ஷான் சர்பத் கடை வடக்குத் தெரு, இடி மின்னல் ஹாஜா மளிகைக்கடை. தெற்கு தெரு, கேரிஃபோர் சூப்பர் மார்க்கெட் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!