சென்னை போன்ற நிலை மதுரையில் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. மதுரையை பொறுத்தவரை கொரோனோ சமூக பரவலாக மாறவில்லை என மதுரையில் மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்திற்கு பின் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. மதுரையில் கொரோனா கொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 3 அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை உலக […]
Category: கீழக்கரை செய்திகள்
குறுகிய பள்ளத்தில் விழுந்த மாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்…
மதுரை மாவட்டம் கே புதூர் அருகே கார்த்திக் தியேட்டர் அருகே குறுகிய பள்ளத்தில் தவறி விழுந்தது இந்த பள்ளத்தின் ஆலம் சுமார் 15 ஆழத்தில் இருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்து விட்டது. மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்களும் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர், எனினும் அவர்களால் மீட்க முடியவில்லை உடனடியாக மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் […]
கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது..
கடந்த 25.06.2020 – ம் தேதி கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் செல்வி ரோந்து பணியில் இருந்தபோது ராஜேந்திரா மெயின் ரோடு சந்திப்பு மற்றும் கரிமேடு மீன்மார்கெட் அருகில் கஞ்சா விற்பனை செய்த பூமி @ பூமிநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2.100 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் வாகனம் ஒன்று மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ. 10,300 […]
திருப்பரங்குன்றம் அருகே கொரானா பாதித்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் கதிர்வேல் நகர்ப்பகுதிகளில் சென்னையிலிருந்து வந்த இருவருக்குமே கொரான தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினர் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றுவதாகவும் இதனால் கொரானா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வில்லாபுரம் மாநகராட்சி 62வது வார்டு கதிர்வேல் நகர் 2வது தெருவினை சீல் வைத்து அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. […]
இராமநாதபுரத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்டிபிஐ கட்சி போராட்டம்!
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை துரிதமாக. தமிழகம் அழைத்துவர வேண்டும், தினமும் உயரும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும், மின் கட்டணம், டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா அபாயம் நீங்கும் வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ., கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் இன்று (27.6.2020) கோரிக்கை […]
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கீழக்கரையில் ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகளவில் வெகு தீவிரமாய் கரோனா வைரஸ் பரவி வரும் காரணத்தினால் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கீழக்கரை பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்தினார். கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள். கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கீழக்கரை பகுதி முழுவதும் கபசுர குடிநீர் வழங்கவும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இடத்தில் அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் அனைவருக்கும் சத்து மாத்திரைகள் வழங்குவும் அதிகாரிகளுக்கு மாவட்ட […]
கீழக்கரையை அ.ம.மு.க சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கும் கீழக்கரை காவல் நிலையத்திலும் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை நகர் துணைச் செயலாளர் மகேஷ், இளைஞரணி செயலாளர் சாகுல் ஹமீது, நகர் அம்மா பேரவை செயலாளர் ஜீவா, நகர் இளைஞர் பாசறை செயலாளர் மீராலெப்பை, அம்பா, நகர் சிறுபான்மை செயலாளர் முபாரக், நகர் அவைத்தலைவர் நூருல் ஹக், நகர மாணவர் அணி துணைச் செயலாளர் அப்சல்கான், மற்றும் பாண்டி, கழக […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் SDPI கட்சி மற்றும் மோர்க்குளம் கிளை SDPI கட்சியின் சார்பில் 5 அம்ச கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.
SDPI கட்சி 5 இடங்களில் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் SDPI கட்சி மற்றும் மோர்க்குளம் கிளை SDPI கட்சியின் சார்பில் மாபெரும் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது. ▪️வெளிநாட்டு தமிழர்களை தமிழகம் கொண்டு வா.! ▪️பெட்ரோல் – டீசல் விலையை குறைத்திடு.! ▪️மின் கட்டணம், டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்.! ▪️ரேசன் பொருட்களை கொரோனா முடியும் வரை இலவசமாக வழங்கிடு.! ▪️அனைத்து கல்வி கட்டணத்தையும் […]
கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்..
இந்தியா முழுவதும் கொரொனா தொற்று நோய் பரவும் நிலையில், அதற்கான மருத்துவ தீர்வும் இல்லாத நிலையில் கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் உயர்த்தும் வண்ணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் தங்ககிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி செயலாளர் வாசிம் அக்ரம்,துணைத்தலைவர் யாசர், இணைச்செயலாளர் ஆதில், துணைச்செயலாளர்- சபரி, பொருளாளர்-சாகுல் ஹமிது மற்றும் […]
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ” All That You Wanted to Know About Internet Of Things(IoT)” இணையவழி பயிலரங்கம்..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ” All That You Wanted to Know About Internet of Things” என்னும் தலைப்பில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் 24/06/2020 முதல் தெடங்கி 26/06/2020 வரை நடைபெற்றது. அரபித்துறை துறைத் தலைவர் M.ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிராபானு கமால் இன்றைய சூழ்நிலையில் இணையத்தின் வளர்ச்சியால் […]
ஆயக்குடி பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்…
சுரண்டை அருகே உள்ள ஆய்க்குடியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டம் ஆயக்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் .சு.பழனிச்சாமி, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் மற்றும் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் .ப.குற்றாலிங்கம் ஆகியோர்களின் அறிவுரையின் படி, கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் வீதிகளில் நடமாடும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் […]
போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக சபதம் எடுப்போம்-இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ..
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக சிறந்து விளங்குபவர் ஏ.ஆர்.ரகுமான். பல்வேறு மொழிகளில் பரபரப்பான பாடல்கள் மற்றும் சார்ட்பஸ்டர் ஆல்பங்களுக்காக புகழ்பெற்றவர். இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஒரே சமயத்தில் வாங்கி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரகுமான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், (ஜூன்.26) போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத சிறுவர் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை (International day against drug abuse and illicit child […]
அருப்புக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று..
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி சேர்ந்த அரசு 108 ஆம்புலன்ஸ் EMT கார்த்திக் செல்வம் என்பர் பந்தல்குடி 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மெடிக்கல் டெக்னீசியன் ஆக பணியாற்றி வருகிறார். ஒரு வார காலமாக தொடர் காய்ச்சல் சளி காரணமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கடந்த 23ந்தேதி சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் சில தினம் முன் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியானதில் […]
இராஜபாளையம் அருகே வீட்டில் வைத்து மது விற்பனை.. ஒருவர் கைது..
இராஜபாளையம் அருகே வீட்டில் வைத்து மது விற்பனை செய்த ஒருவர் கைது அவரிடம் இருந்து 250 மதுபாட்டில்கள் பறிமுதல் தளவாய்புரம் போலிசார் நடவடிக்கை. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் மது பாட்டில் விற்ப்பனை செய்தது தெரிய […]
பிரச்சினைக்காக அமைச்சரை சூழ்ந்த பொதுமக்கள்.. விழாவை புறக்கணித்த அமைச்சர்..
ஸ்ரீவில்லிபுத்தூர் அமைச்சர் விழாவில் குழப்பம். .கோபமடைந்த அமைச்சர் வட்டாட்சியர் ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் நிகழ்ச்சி புறக்கணித்து சென்றதால் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளும் அதிர்ச்சி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்ட அரசு விழாவில் வேறு ஒரு பிரச்சினைக்காக பொதுமக்கள் அவரை சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்ததால் கோபமடைந்த அமைச்சர் நிகழ்ச்சியின் பாதியிலேயே புறப்பட்டு சென்றது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு உட்பட்டது வத்திராயிருப்பு தாலுகா இந்த உத்தரவை […]
சிவகாசியில் பட்டப்பகலில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன் கைது..
சிவகாசியில் பட்டப்பகலில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி இந்திரா நகரில் வசிக்கும் தம்பதியினர் சரவணகுமார்( 25) ஜெயலட்சுமி (22)இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆன நிலையில் கயல் என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது சரவணகுமார் பட்டாசு தொழிற்சாலையில் ஓட்டுனர் ஆகவும் ஜெயலட்சுமி பட்டாசு தொழிற்சாலையிலும் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவண குமார் தனது மனைவி ஜெயலட்சுமியின் நடத்தையில் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலருக்கு கொரோனோ தொற்று.. காவல் நிலையம் மூடல்..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதைடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த 50 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் பணிபுரிந்த காவலருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டதால் நேற்று இரவு நத்தம்பட்டி காவல் நிலையம் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 க்கும் மேற்பட்ட […]
மதுரை அரசு மருத்துவமனையில் கவனிப்பின்றி இருக்கும் கொரோனோவால் இறந்தவர்களின் உடல்கள்.. ??
கொரோனா சிறப்பு வார்டில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக அகற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் இடத்திலேயே இறந்தவர்களின் உடலையும் அங்கேயே வைத்திருப்பதால் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அவரை சமாதானப் படுத்திய மருத்துவ துறை அதிகாரிகள் கொரோனா வார்டில், வைக்கப்பட்டிருந்த பிணத்தை வெளியே கொண்டு சென்றனர். அதே போல், மதுரையில் கொரோனோ தொற்றின் வீரியம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், மதுரை […]
சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம்; கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்த வணிகர்கள்..
சாத்தான்குளத்தில் வணிகர்கள் இரண்டு பேர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உரிய நீதி வழங்கிட வேண்டியும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட சுரண்டை, சேர்ந்தமரம், சாம்பவர் வடகரை, அகரகட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 1500 கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். தினசரி சந்தை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே […]
மனைவியின் கள்ள காதலன் கல்லால் தாக்கி கொலை.. கணவன் கைது..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரனாபுரத்தை சேர்ந்தவர் விக்ணேஷ்குமார் (30) இவருக்கு அதே பகுதியில் உள்ள எம்.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த தனலட்சுமி (26) என்பவருக்கும் திருணம் ஆகி தற்போது கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த மாதம் தனலட்சுமி (26) சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அங்கு திருத்தங்கல்லை சேர்ந்த சதீஷ் (26) அடிக்கடி வந்து சென்றுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு சதீஷ்குமார் இறந்து விட்டதாக தனலட்சுமி, அவரின் உறவினருக்கு தகவல் […]
You must be logged in to post a comment.